Friday, 25 November 2016

தமிழ் அக்கு பா.தி/ படைப்பு அளிப்பு

தமிழும் திருக்குறளும் ஆய்ந்த
த.ச.தமிழனார் அய்யா அவர்கட்கும்
தமிழும் திருக்குறளும் உணர்வால் தாங்கிய
தந்தையார் அரு.ஆறுமுகம் அவர்கட்கும்
தமிழ் பயிற்றுவித்த திருவாரூர்.வ.சோ.ஆண்கள்
உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்கள்
புலவர்கள் திரு இரத்தினசாமி,திரு ஞானச் செல்வன்,
திரு சண்முக வடிவேல்  அவர்களுக்கும்
தமிழ்த்தொண்டை தவறாது மாதந்தோறும் நிகழ்த்தும்
புலவர் எண்கண் மணி,திரு மோகன்தாசு அவர்களுக்கும்
தமிழ்ப் புத்தகங்கள் உலகெலாம் பரவப் பாடுபடும்
எழுத்தாளர்,பதிப்பாளர் யாணன் அவர்கட்கும்
-------அடி பணிந்து அளிப்பது.
        ஆசான் ஆ மதியழகன். சனவரி 2017.

Thursday, 24 November 2016

.தமிழ் அக்குபங்சர் பா.தி./பின் அட்டை.

              இந்த புத்தகத்தில்...
உடல்,மனம்,உயிர் காப்பாற்றும் அக்குபங்சர் மருத்துவமும்
திருக்குறளும் தலைப்புவாரி ஒப்பீடு செய்தல்
அக்குபங்சரின் ஐந்துபூதத் தத்துவம் தமிழரின் அறம்,பொருள்,இன்பம்,
காதல்,வீரம் இவற்றோடு இனிதே பொருந்துவதை அறியலாம்.
அக்குபங்சர் அறிந்தவர்கள் திருக்குறள் அறிந்து,இரண்டின் நுட்பத்தையும்
தெளியலாம்.திருக்குறள் படித்தவர்கள் அக்குபங்சர் மருத்துவ அடிப்படை
அறியலாம்.
எடுத்துக்காட்டு ஒப்பீடு:தெரிந்து வினையாடல்.
ஒரு செயலில் திறமை மட்டுமன்றி, ஈடுபட்டு செய்பவனையே,தலைவர்
தேர்ச்சி செய்ய வேண்டும்.அக்குப் பார்வை : சிறுநீரக வலிமை வேண்டுமெனில்
வழிகள் (1) சம்மணம் இடல், இயல்பான தன் வலிமை (K10,UB66) (2) கைப்பணி 
செய்ய தூண்டு வலிமை (Lu5) (3) சிறுநீரகக் கல்நீக்கி,மருந்துப் புள்ளி இயக்கல்
(K7) .கடைசிப் புள்ளி,திறன் புள்ளி ஆயினும் தேவை குறைவே.ஈடுபாட்டுடன்செய்ய,
சம்மணம் இடல் போதும்.
ஒப்பீட்டுடன்,ஒருவரிப் பொருள்தரும் குறள்சாறும் உள்ளது. 

ஆசான் ஆ மதியழகன் 

          இவரது (1) தமிழ் முறையில் அக்குபங்சர் (2) தமிழ்முறையில் மன அக்குபங்சர் 
எனும் நூல்கள் ஏற்கெனவே சந்தையில் பெரும் வெற்றியைச் சந்தித்து வருகின்றன.
இவர்,திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான்.த.ச.தமிழனார் ஊக்கம் தந்த படைப்பாளி
மற்றும் பேச்சாளர். அறிவியல்,கணிதம் பயிற்றும் ஆசிரியப் பயிற்சி பெற்ற ஸ்டேட் வங்கிக் 
காசாளர்.(ஓய்வு). விஞ்ஞானச் சுடரில் ' அறுமுகி [CUBE] ஆய்வும், தீர்வும் ' என ஆய்வுக் க.டுரை வடித்தவர். 'குறள் சாறு' படைத்தவர்.

Monday, 21 November 2016

தமிழ் அக்கு பா.தி. முகவுரை/ நன்றியுரை.

நன்றியுரை:

இந்நூல் சிறப்புற வெளிவரத் துணைபுரிந்து, ஆக்கமும்,ஊக்கமும் தந்து துணை நின்ற மனைவி
வளர்மதிக்கும் , வரைகலைப் படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளையநிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர உதவி புரிந்த மறைந்த திருவாரூர் .த.ச.தமிழனார் அய்யா அவர்கட்கும் ,நட்பில் உள்ள இயற்றமிழ்ப் பயிற்றகம்,தமிழ் இலக்கியக் கழகம், திருவாரூர் கலை இலக்கியக் கழகம் நண்பர்களுக்கும், அக்குபங்சர் நண்பர்களுக்கும், குடவாசல்,திருவாரூர்,தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி நண்பர்களுக்கும்,முந்தைய அக்குபங்சர் நூல்களுக்கு உளங்கனிந்த பாராட்டுக்களை அலைபேசியிலும், முகநூலிலும்,மின் அஞ்சலிலும், உங்கள் காணொலி (You tube) மூலமும் தெரிவித்து வரும் நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
             இந்நூல் கருக்கொள்ள உதவிய தமிழ்ப் பணியைத் தலைமேல் கொண்டுள்ள த.ச.குறளேந்திக்கும்,இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான் இளையநம்பிக்கும்,பிற பயிற்றக நண்பர்களுக்கும் எனது நன்றி.
           தமிழ்ப் புத்தக வெளியீட்டுக்காகவும்,கண்ணகி வழிபாடு பெருகவும், தன் வாழ்வையே அறப்பணியாகக் கொண்ட , நண்பர் யாணன் அவர்கட்கும், வெளியீட்டுக்கு உதவிய 'பிளாக் ஹோல்' நிறுவனத்தாருக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்ததாகும்.
அன்புடன்,
ஆசான்  ஆ மதியழகன்.
----------------தமிழ் வாழ்க --------------

Saturday, 19 November 2016

தமிழ் அக்குப் பா.தி. முகவுரை மேல் தொடர்ச்சி.

உண்மை 7: இன்பத்துப் பால்.

             களவு,கற்பு எனும் இருநிலையிலும் உணர்வுகளை,ஆண்,பெண் மன வெளிப்பாடுகளை நாடக வடிவில் திருவள்ளுவர் கூற, அதை தமிழ்முறையில் மன அக்குபங்சர் வழி, மேலும் நுட்பமாக விளக்கி உள்ளோம்.
      இன்பத்தில் எதிர்பார்க்காதே! அது துன்பம்!
      இன்பத்தில் கொடுக்க முடியுமானால் அதுதான் இன்பம்!
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும்  வன்க ணவர்.-அறம்/ ஈகை/228.
       ஆக, ஈத்துவத்தல் ( கொடுத்து மகிழ்தல்) இன்பத்துப் பால் சுருக்கம்.
காண்க: அக்குச் சக்கரத்தில் 5-1 -நீலக்கோடு -வாதக்கோடு - இன்பக்கோடு.
அறம் அடைய, மேல் மனம்,  அடிமனம் உங்கள் கட்டுப்பாட்டில். பொருள் அடைய, பிரபஞ்ச மனம் என்ற வெளி சக்தி தேவை. இன்பம் அடைய, ஆழ்மனம் என்கின்ற உயிர்சக்தி தேவை.
இன்பம் அடைய இரு வழிகள் : 
      உயிர் முனை வழி: இன்பம் ஆழ்மனத்தில் இரூந்து தொடங்க இடம், காலம்,நம்பிக்கை போன்ற உயிர் தூண்டும் நிகழ்வுகள்  வேண்டும். தனி இடம்,மற்றும் மாலை, இரவு, விடியல் நேரங்கள் இவற்றோடு நம்பிக்கை முதன்மை யானது.இந்த முழுமையை இருமனம் ஒத்த களவு வாழ்க்கையும், கற்பு வாழ்க்கையும் மட்டுமே தர முடியும்.
          அடிமன முறை வழி: மனம் உணர்வால் அமிழும் இடம்.அறிவு குறைந்து மறைந்து விடும்.
கற்பனை உணர்வோடு இன்பம் தேடும் தன் மனம்,தன் உடல் சார்ந்த வாழ்வு. இருவர் மனநிலை ஒத்துழைக்க, இருவரும் ஆழ்மனம் தொட்டால்,உயிரியல் சுரப்புகள் எளிதாகும். சிற்றின்பமும் பேரின்பமாகும். தனி முயற்சியில் பிரபஞ்ச வழி(யோகா) ஆழ்மனம் தொட்டு நின்றால் சதா- சிவம்.அது பேரின்பம்.
  இன்பம் கெட வரும் காதல் நோய்கள் : கல்லீரல் நோய்கள் - உறக்கமின்மை.பின் இதய, மன நோய்கள்- உணவு செல்லாமை- உடல் இளைப்பு.பின் நுரையீரல் (இருமல்,சளி) .பின் சிறுநீரக நோய்களில் முடியும். 
காண்க: You tube : tamil muraiyil. acupuncture ALSO mana acupuncture. நோய்களைப் பற்றி முழுமையாக அறிய, அவ்விரு புத்தகங்களும் படிக்கவும்.
               இந்த புத்தகத்தில் அக்குபங்சர்,திருக்குறள் ஒப்பீடு முதல் பகுதியாகவும்,குறள்சாறு இரண்டாம் பகுதியாகவும் தரப் பட்டுள்ளது.
 அன்புடன், ஆசான்  ஆ மதியழகன். 19/11/2016.

Friday, 18 November 2016

தமிழ் அக்கு பார்வையில் திருக்குறள்/முகவுரை தொடர்ச்சி

உண்மை 5: அறத்துப்பால்

            தனிமனிதனின் அறமே  சமுதாய அறமாக மலர முடியும் என்பதால், தனிமனித அறமே முதன்மை. திருக்குறள் முழுமையுமே அது 'உங்களுக்கு' எனக் கூறப் படுவதாகும். இதை யாருக்கும் கட்டாயப் படுத்த முடியாது. இது தனிமனிதன் தன்னைத் தானே உரைத்துப் பார்க்க வேண்டிய கட்டளைக் கல்.
         ' மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
         ஆகுல நீர பிற.'     -அறம்/குறள் 34.
மனத்தூய்மை தான் அறம் என்பது அறத்துப் பால்  சுருக்கம். இதை இல்லறத்திலும் (முதல் வாழ்வு) , துறவறத்திலும் (இரண்டாம் வாழ்வு)  கடைப் பிடிக்க வேண்டும்.
            அறம் என்பதை மூன்று நிலைகளில் கடைப் பிடிக்க வேண்டும். அவை எண்ணம், சொல், செயல். (1) எண்ணம் : தூய்மையான எண்ணம் அடிமனம் இருத்தல் உண்மை.இது கல்லீரல் வெளிப்பாடாகிய. கண்கள் மூலம் நன்கு வெளிப்படும்.
               (2) சொல்: பிறருக்குத் தீங்குதராத சொல் மேல்மனம் கூறல், வாய்மை. இது நுண்மனமாகிய வாயின் மூலமும், மேல் மனமாகிய நாக்கின் மூலமும் தெளிவாக வெளிப்படும்
            (3)செயல்: பிறருக்கு இன்பம் தரும் செயல் உடல் வழி,பொருள்வழி, மன உணர்வு வழி, உயிர் ஈர்க்கும்படி வெளிப்படல் வேண்டும்.இது மெய்ம்மை.ஐம்புல வெளிப்பாடு.
காண்க : தமிழ் அக்கு சக்கரத்தில் 1-2-பச்சைக் கோடு-பித்தக் கோடு-அறக் கோடு.

நோய்கள்:கல்லீரல், தீ ஈரல் (இதயம்+ மனம்) தொடர்பான நோய்கள், அறம் தவறுவதால் உண்டாகும்.

உண்மை 6 : பொருட்பால்

            மனவிருப்பம் செயல்பட்டால்தான்  உணவு செரிமானத்திற்குரிய சுரப்பு நீர்கள் சுரந்து, உடற்கட்டான உறுப்புகள் வளர்வதற்கான நுண்சத்துக்கள், நீர்ம வடிவில் நுரையீரலுக்குப் போய்ச் சேரும்.பிறகு அது சிறுநீரகத்துக்குப் போய் நீர் வடிவில் சேர்ந்து பிரிக்கப் பட வேண்டும்.இடையில் வரும் தடைகள் எல்லாம் மண்ணீரல்,நுரையீரலுக்கான நோய்கள்.இவை வயிற்றின் பசியிலும்,மூச்செடுப்பதிலும் தெரியும்.
          பொருளுக்கான மனத் தூண்டல்: 'துணை' விருப்பம்  , 'தொழில்' விருப்பம் செயல்பட்டால்தான் தனிமனிதன் குடும்பமாகி,குடும்பங்கள் சமுதாயமாகி, சமுதாயம் தனக்கு வேண்டியவற்றை சாதிக்கக் கூடிய நல்லாட்சியும், நல்ல நாடும் அமையப் பெறும். 'பொருள்' எனும் செல்வம் கைவர வேண்டுமானால் ' ஊக்கம் ' என்பது  மனத்தின் உடைமை ஆக வேண்டும்.
           'உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
          நில்லாது  நீங்கி  விடும்.'   - பொருள்/குறள் 592
'மன ஊக்கம்' தான் பொருள் என்பது பொருட்பால் சுருக்கம்.பிற செல்வங்கள் பின்னே வரும்.
பொருள் தவறியோர் அறம் முரண் பட்டார் எனக் கூற முடியாது..அறம்  மாறுபட்டாரே! நல்லோரோ, தீயோரோ யாம் அறியோம்.
         காண்க:தமிழ் அக்குச் சக்கரத்தில் 3-4 - மஞ்சள் கோடு -கபக்கோடு - பொருள்கோடு.

 நோய்கள் : முதல் அடையாளம் மண்ணீரல் (கணையம்  உட்பட) , நுரையீரல் நோய்கள். அதன் பின் கல்லீரல், இதயம்,மனம் தொடர்பான நோய்கள்.அன்புடன், ஆசான் ஆ மதியழகன். 18/11/2016.

Wednesday, 16 November 2016

தமிழ் அக்குபங்சர் பார்வையில் திருக்குறள்/முகவுரை.

முகவுரை: திருக்குறளுக்கு சுருக்கமாகப் பொருள்கூறும் விதமாக ஒருவரிப் பொருள் உரையை
' குறள் சாறு ' என வடித்திருந்தேன்.இதை அப்படியே மக்களுக்குக் கொண்டு சென்றால், பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று என்ற விதத்திலேயே அமையும் என்பதால் புதுமை சேர்க்க எண்ணினேன்.
                   முதல்ப் புத்தகம் ' தமிழ் முறையில் அக்குபங்சர்' எழுதிய போது, மருத்துவம் என்பதோடு ' மருந்து ' என்ற திருக்குறள் அதிகாரம் மட்டுமே பொருந்தும் என நினைத்திருந்தேன்.
எனது இரண்டாவது புத்தகம் ' தமிழ் முறையில் மன அக்குபங்சர் ' எழுதிய போது மனம் என்பதைக் கொண்டு அறம்,பொருள்,இன்பம் எனும் முப்பாலை விளக்க முடியும் என உணர்ந்தேன். மன அக்குபங்சர் புத்தக வெளியீட்டு உரையை நிகழ்த்தியபோது,ஐம்பூதச் சக்கரத்தின் மூன்று முனைகள் அறம்,பொருள், இன்பம் போக, எச்சம் இரண்டு முனைகள் காதல்,
வீரம் எனப் புரிந்து கொண்டு வெளிப் படுத்தினேன்.See you tube: mana acupuncture.
                    ஆக (1) கல்லீரல் (ஆகாய பூதம்) -அடிமனம் நீட்சி மேல்மனம் வரை -அறக் கோடு-
ஆகையால் அடிமனம் என்பது அறம் முனை.
                            (2) தீ ஈரல் (இதயம்+மனம்)-மேல்மனம் நீட்சி நுண்மனம் வரை-விருப்பக் கோடு-
படைக்கும் சக்தி.ஆகையால் மேல்மனம் என்பது காதல் முனை.
                             (3) மண் ஈரல்(கணையம் உட்பட)-நுண்மன நீட்சி பிரபஞ்ச மனம் வரை -பொருள் விளையும் கோடு.ஆகையால் நுண்மனம் என்பது பொருள் முனை.
                              (4 ) நுரை ஈரல் (காற்று பூதம்) -பிரபஞ்சtt மனம் நீட்சி ஆழ்மனம் வரை -வீரம்,வீர விளையாட்டு, மூச்சுப் பயிற்சி களின் கோடு.ஆகையால் பிரபஞ்ச முனை என்பது வீரமுனை           (5) நீர் ஈரல் (சிறுநீரகம்)- ஆழ்மனம் நீட்சி அடிமனம் வரை- ஐம்புலன் இன்பங்களின் கோடு.ஆகையால் ஆழ்மன முனை என்பது இன்ப முனை.
                     இதற்குரிய அட்டைப் படம் பல உண்மைகளை நமக்கு  விளக்கும்.
        உண்மைகள் (1) அறமும், பொருளும் நீடித்து நிற்க வேண்டுமானால் வாழும் விருப்பக் கோடு எனும் காதல் முனை, அது துணை மீதாயினும் சரி,தொழில் மீதாயினும் சரி வாழையடி வாழையாக,தொடர்ச்சியாகத் துடிப்புடன் இருக்க வேண்டும்.
                             (2) பொருளும் இன்பமும் நீடித்து நிற்க வேண்டுமானால், இரண்டிற்கும் காப்பாகிய வீரம் விளையாட்டு வடிவிலேனும் இருந்தால்தான் நல்ல உடற்கட்டும், நீண்ட வாழ்நாளும் பொருள், இன்பத்தைத் துய்க்கக் கிடைக்கும்.
                    (3) அறம், பொருள்,இன்பத்தை அடைந்து,வீடு பேறு எனும் நிறைவை, ஒரு சுற்றாகிய முழுமையை, அடைய வேண்டுமானால் காதலும்,வீரமும் வாழ்வில் தேவை.அதனால்தான் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்கள் என்றனர்.
(இன்று பெரும்பாலான இளைஞர்கள் காதலையும், வீரத்தையும் சின்னத் திரை,பெரியத் திரையிலேயே காண்கிறார்கள்.)
             (4)இன்பத்தின் முழுமையில் பிற உயிரினங்கள்,மனிதன் வேறுபாடு : இன்பமும், அறமும்
அடிமனம் வழியாக நேரடியாக இணைவதைக் காணலாம். மரங்களும் , மிருகங்களும் மேல்மனம்,அடிமனத் தடையின்றி நேரடியாக ஆழ்மனத்தோடு இணைக்கப் படுகின்றன.இந்த உண்மையான பிரபஞ்சத் தியானத்தில் இன்பமும் வளர்ச்சியும் தங்குதடையின்றி அவற்றுக்கிடையே நடைபெறுகின்றன.மனிதர்களுக்கு கற்பிக்கப்படும் அறம், சிறு வயதில் இருந்து அடிமனத்தில் பதிவதால் இன்பத்தின் முழுமை, அறத்தைப் பொறுத்ததே!
----தொடரும்---ஆசான்  ஆ மதியழகன். 16/11/2016.

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL/ ÑEWS

தமிழ் அக்குபங்சரமதியழகன் தி பார்வையில் திருக்குறள் / செய்தி

 திருக்குறளின்  பிற அதிகாரங்களின் ஒப்பீடு 53 முதல் 133 வரை Kural saaru.com-ல் 
உள்ளது.
அக்குபங்சரில் மனம் பற்றி அ றிய உதவும் படம்.

அன்புடன் ஆ. மதியழகன்.16/11/2016.

Friday, 10 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 48-52

48. வலியறிதல் -அரசியல் 

        வலிமைக்கான கணக்கீடு செய்வதே வலி அறிதல். செய்யும் செயல் வலிமை முதலில். தான், தன் வலிமை கூட்டுக. கெடுக்கும் சூழல், கெடுப்பார் வலிமை எதிர்நிலை ஆக்கும். நிகர வலிமை க் கணக்கீடு  வேண்டும். 
அக்குப் பார்வை : நிகர வலிமைக் கணக்கு இங்கும் பூதங்களுக்குத் தேவை.
எ. கா. கல்லீரல் பூதம்.
கூட்டல் பகுதி : (1) தன் வலு Liv 1- ( கால் கட்டை விரலில் )
                            (2) தூண்டும் வலு  K 1 - (முன்னங்கால் மையம் )
                      (3) கேட்கும் வலு Liv 8 - ( சம்மணமிடலில் கால் முட்டி மடிப்பருகே )
முறையே ஒருமடங்கு, இருமடங்கு, நான்மடங்கு வலிமை .
கழித்தல் பகுதி : இரவு 11 மணி முதல் 3 மணி வரை ஓய்வு, உறக்கம் எடுக்காது கண் விழித்தல்.
அழியாத, மற்றும் மறையாத சினம், குடிப் பழக்கங்கள் . இரவு வேலை வாய்ப்பு ஒப்புதல்.
        நிகரக் கணக்கே கல்லீரல் மற்றும் அந்த மனிதனின் வலிமை. 
49. காலம் அறிதல் - அரசியல்.
     இரவு, பகல் எனக் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஓடும் பொழுதுக்குத் தக்கபடி வெற்றி, தோல்வி அமைக்கப் பட்டு உள்ளது. காலம் சீர்தூக்கி அறிதல், வினைபுரியும் தலைமைக்குத் தேவை. 
அக்குப் பார்வை : அக்குப் பங் சரிலும் பூதங்கள் இயங்கும் காலத்திற்கேற்ப செயல்பட பயன் அதிகம். எ. கா. உணவு உண்ணல் : காலை உணவு 8.00 A .M  (வயிறு இயக்கம் உச்சம் )
நண்பகல் உணவு 2.00 P . M  ( இதய இயக்கம் உச்சம் ) . இரவு உணவு 8.00 P . M . ( இதயத்தின் துணை மனம் உச்சம் ) .  இதுபோல் உடல்ப் பயிற்சி செய்ய, மருத்துவம் செய்ய எனக் கால அளவுகள் உண்டு. 
50. இடன் அறிதல் - அரசியல் 
     சேற்று நிலத்தில் யானையை நரி வெல்லும். கடலில் தேர் ஓடா. நிலத்தில் கப்பல் ஓடா. 
ஆக, வெற்றி சொந்த  இடத்தில் கிட்டும். எதிரி இடரும் இடத்திலும் கிட்டும். இவையே இட நுட்பங்கள்.
அக்குப் பார்வை : (1) சொந்த மண்ணில் விளைபவை உடலில் நன்கு  ஒட்டும் . கெடுதல் இரா. 
(2) நடனம் ஆடுபவர் தொடர்ந்து ஆட, வலி இடரும் இடம் கணுக்கால். அந்த இடத்தில் சலங்கை மணிகள் மோத வலி தடுக்கப் படும். 
51. தெரிந்து தெளிதல் - அரசியல் 
      ஒருவரை ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேர்ந்து எடுக்க  (1) நற்குணங்கள் தெரிய வேண்டும். (2) நல்ல குணம், கெட்ட குணம் இவற்றில் மிகுதிப் பண்பு தெளிய வேண்டும். (3) தெளிந்தபின் நம்பி செயல்பட வேண்டும்.
அக்குப் பார்வை : எ. கா. நோய் தெரிவு (1) சளி ஏற்பட்டு உள்ளது.
 (2) பண்பு நிலையில் மண்பூத நீர்ச்சத்து நுரையீரல்  சேர்வதில் கோளாறு. (3)  நோய் தீர்ப்பதில்  தெளிவு . முதல் ஊசி, நுரை மண் சத்து வாங்க Lu 9 . இரண்டாம் ஊசி நுரையில் நீர் தங்காது செலுத்த Lu 5. மூன்றாம் ஊசி பெருங்குடலில் மண் வலிமை பெற்று நீர் உறிஞ்ச LI 11.
 இவை போதும் என நம்பி செயல்படு. 
52. தெரிந்து வினையாடல் - அரசியல் 
     ஒரு செயலில் திறமை  மட்டுமின்றி, ஈடுபட்டு செய்பவனையே, தலைவன் தேர்ச்சி செய்ய வேண்டும். 
அக்குப் பார்வை : சிறுநீரக வலிமை வேண்டும் எனில், 
    (1) சம்மணம் இட மிக இயல்பாய் ( K 10, UB 66 )  தன் வலிமை கிட்டும்.
    (2) கை மடங்கி வேலை செய்ய தூண்டு வலிமை (Lu 5 ) கிட்டும்.
    (3) மருந்திப் புள்ளி K 7 ( கேட்கும் வலிமை ) திறன் புள்ளி ஆயினும் தேவை குறைவே.
 ஈடுபாட்டுடன் செய்ய ஒன்றே போதுமே.
 தொடரும்.

Wednesday, 8 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 43-47

43. அறிவுடைமை - அரசியல் 

கற்றது அல்லாமலும் , நடைமுறைக் கல்வி தாண்டியும், இயல்பான நுட்ப அறிவும், தேவையானது திரட்டி , திறமையுடன் செயல்பட முன்னேற்பாடுடன் இருத்தலும் அவசியம். இந்த அறிவுடைமை ( WISDOM ) தலைவனுக்குத் தேவை. 
அக்குப் பார்வை : கற்ற அறிவு, பெற்ற அறிவு அனைத்துமே கல்லீரல்  ஆகிய அடிமனம் வரை இருப்பது மேம்போக்கே. ஆழ்மனம் ஆகிய சிறுநீரகம், உயிர்களின் கடந்த கால வரலாறு உடையது. அதனுள்ளும் நுழைந்து (ஆழ்ந்த செயல் விருப்பத்தால்  முடியும் ) அகன்ற அறிவுடையராதல் வேண்டும். 
44. குற்றம் கடிதல் - அரசியல் 
       ஒரு தலைவனுக்குக் காப்பு, தன் மீது குற்றம் இலாது நடந்து கொள்வது. குற்றமே கூற்றம் ஆகலாம். குற்றம் படியாது கடிந்து காக்க வேண்டும். 
அக்குப் பார்வை : 
                  அச்சத்தால் அழியும் அரிய சிறுநீரகம் 
                  சினத்தால் அழியும் சீர்மிகு கல்லீரல் 
                   பெருமையால் அழியும் பீடுறு இதயம் 
                   கவலையால் அழியும் கவின்மிகு மண்ணீரல் 
                   துக்கத்தால் அழியும் தூய நுரையீரல் - என்று 
ஐம்பூதம் பற்றி கூறலாம் - ஆசான் ஆ மதி யழகன் .
இதுபோல் கூறலாம் " குற்றத்தால் அழிவான் கொள்கை மறவனும் "
45. பெரியாரைத் துணைக்கோடல் - அரசியல் 
       தம்மினும் பெரியார் தம்முடையராய்த் துணை கொள்வது தமக்கு பாதுகாப்பு என இயங்க வேண்டும் . இது தலைவனுக்குத் தலையாயத் தேவை. 
அக்குப் பார்வை :  தாய் சிறுநீரகம் உதவியின்றேல் மகன் கல்லீரல் சூடாகி மஞ்சள் காமாலை நோய் வரை செல்லும்.  தாய் கல்லீரல் குறைபாடு, மகன் இதயத்திற்கு இரத்த அழுத்த  நோய். 
இந்த நிலை தொடரும் ; முன்னேற்றம் இடறும் . சுழற்சி முறையில் தாயும் தேவை ; தாயின் தாயும் தேவை. எனவே அடுக்கில் பெரியார் ஆவாரின் துணை தேவை.
46. சிற்றினம் சேராமை - அரசியல் 
      சூழ்ந்த இனம் எதுவோ, அதன் பண்புகள் தலைமைக்கு  ஒட்டும் . சிற்றினம் எனின், சேர்மானம் தருவது சீரழிவு ஆகும். 
அக்குப் பார்வை : மனப் பாம்பின் தலை மேல்மனம். ( பெரி கார்டியம் ). மனப் பாம்பின் வால் பிரபஞ்ச மனம் நுரையீரல். வாலின் தூண்டலுக்கு ஏற்பதான்  தலையாடும்.  சேரினம் அறிந்து சேர். சிற்றினம் வேண்டாம். 
47. தெரிந்து செயல்வகை - அரசியல் 
         செயலின் தன்மை முழுக்க அறிந்த பிறகே , செயலில் இறங்க வேண்டும்.  செயல்தன்மை, உதவியாளர், கிட்டும் ஊதியம், உலகம் ஏற்கும் தன்மை அறிந்து செயல் தொடங்க வேண்டும். 
அக்குப் பார்வை : ஒவ்வொரு உணர்வும் உள்ளே வரும் முன் இதுவந்து உட்கார்ந்தால் எனக்கு - என் உடலுக்கு ஆவதென்ன ? என அறிந்து மனமுள்ளே, உணர்வு நிலைகளாகிய சினம், கவலை,, .. போன்றவற்றை விடாது ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
தொடரும்.

Sunday, 5 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL 39-42

திருக்குறள் - பொருளியல் 

39. இறைமாட்சி - அரசியல் 
       அன்று : மக்களை ஆளும் தலைவன் அரசன்.
       இன்று : ஒவ்வொரு தலைமைப் பொறுப்பு உள்ளவரும் மன்னர்தான்.
குடும்பத் தலைவன் முதல் குழுவின் தலைவர்கள் வரை உள்ள அனைத்தோர்க்கும்  உரியவை இங்கு உள்ள ஆளுமைப் பண்புகள். அறம் , பொருள், இன்பக் கூற்றுக்கள் உங்களுக்கு (தனி மனிதனுக்கு ) க் கூறியவை. அடுத்தவரிடம் எதிர் பார்க்கவோ , குறை கூறவோ வேண்டாம்.  
அக்குப் பார்வை : அறத்தில் கூறப்பட்ட அனைத்து நற்குணங்களும் அரசனுக்கும் வேண்டும். 
ஐந்து பூதங்களுக்கும் ஐந்துவிதமான குணங்கள் உண்டு. கல்லீரல் குணம் அருள் (நேர்மறை ) . 
தீ ஈரல் தெளிவு, மண்ணீரல் நல்லெண்ணம் , நுரையீரல் பகிரும் மகிழ்வு உணர்ச்சி. நீர் ஈரல் நம்பிக்கை. இந்த ஐந்தும் தொகுப்பு பூதமாகிய பெரிகார்டியத்துக்கு உண்டு. மனம் வலிமையாக இருந்தால்தான் உணர்வுத் தொகுப்பில் நன்று வெளிப்படும். மன மாட்சி இறைமாட்சி ஆகும். 
40. கல்வி - அரசியல் 
      நடத்தை என்பது நன்றே ஆயினும், தீதே ஆயினும், முதலில் கற்றலில்தான்  நிகழ்கிறது. 
' ஒரு நாட்டின் தலை எழுத்தே வகுப்பறையில்தான் எழுதப் படுகிறது.' என்பது கோத்தாரி கமிஷன் அறிக்கை. எப்படி செயல் படுவது எனக் கற்பித்து, ஒரு மனிதனின் சிறந்த திறன்களை க் 
கல்லி  (பிடுங்கி ) எடுத்துப் பயன்படுத்த உதவுவதே கல்வி. தலைமை ஏற்போருக்கு கல்வி முதன்மை. 
அக்குப் பார்வை : கல் என்பது கல்விக்கும் வேர்ச்சொல் ,  கல்லீரலுக்கும் வேர்ச்சொல் . மண்ணில் இருந்து திரட்ட கல் உருவாகும். மண்ணீரலில்  இருந்து சக்தி பெற்று கல்லீரல் சக்தி பெறுகிறது. 
கல்லீரல் செய்வது உடல் சேமிப்பு மட்டும் அல்ல, மன சேமிப்பும் ஆகும். உங்கள் கால வளர்ச்சி, மனம் உடல் இணைந்தே கல்லீரல் வெளி உறுப்பு கண்ணில் பதிவாகிறது. இன்னொரு பதிவு மூளையில் நடக்கிறது. எண் , எழுத்து க்  கல்வி இரு கண்கள் என்ற ஒப்பிடு காண்க. ஒரு மனிதனின் தொடக்கமும் இங்குதான். ஒரு தலைவனின் தொடக்கமும் இங்குதான். கல்வி அடிப்படை. கல்லீரல் அடிமனம்.
41. கல்லாமை - அரசியல் 
        துறைதோறும் துறைதோறும் அறியக் கூடிய இயல்கள் விரிவடைந்து கொண்டிருக்கின்றன . சாகும்வரை தேவையானது கற்க வேண்டும். கல்லாதிருக்கும் தன்மைதான் கல்லாமை. இது காலத்தால் தகுதியின்மை ஆகி விடும். 
அக்குப் பார்வை : கல்லீரல் முதல் பூதம். இதில் முதல் குறை ஏற்பட்டால் கண்ணிலிருந்து குறைபாடு தோன்றும்.  இதனால் ஆளுமையாகிய கண்ணோட்டம், கண்டுணரும் நுட்பங்கள் கண் இழப்பால் கிட்டாது. கல்லாமையிலும் கிட்டாது. 
42. கேள்வி - அரசியல் 
      காதுகளால் கேளுங்கள். நீங்கள் பத்து மணி நேரம் படித்து அறிய வேண்டிய புத்தகத்தின் சாரத்தை அரைமணியில் ஏன் அரை நொடியில் கூற வல்லவர்கள்  இருக்கிறார்கள். இது  தலைமைத் திறனை மிகுதியாக்கும். தவற விடக் கூடாது. கேள்வி ஒரு செல்வம். 
அக்குப் பார்வை : கல்லீரல் பூதத்தின் தாய் சிறுநீரகம். அது நீர் பூதம். இதன் வெளியுறுப்பு காது . 
கண் இயக்கம் மனத்தால் ஏவி இயங்கும். ; ஏன் மூடும் வசதி உண்டு. காது  இயக்கம் உயிர்க் காவந்துக்கு இயங்குகிறது. நீங்கள் தடைதான் உண்டாக்கலா ம் .  இதன் அரி ய தேவையால் 
திறந்தே உள்ளது. கேள்வியால் தாய் போல் உதவி கிடைக்கும். 
தொடரும். 

Wednesday, 1 June 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL-35-38

35. துறவு - துறவறவியல் 

   '   நான் ' எனும் கர்வமும், 'எனது ' எனும் உடைமையும் துறக்க வேண்டும். அது புலனடக்கத்தால் நிகழ வேண்டும். அதுவே துறவு. 
அக்குப் பார்வை : தான் என விளையும் இடம் கல்லீரல் (ஆகாயம் ) எனும் முதல் பூதம் . அதுவே மனிதனின் முதல். கல்லீரலின் வெளிப்பாட்டுப் பதிவு , ஒன்று கண்மணிப் பாப்பாவிலும் , மற்றொன்று மூளை செல்களிலும் பதிவாகிறது. கல்லீரல் பூதமே அடிமனம் -ஆசாமி - நந்தி. 
இதன் தாய் சிறுநீரகம் , ஆழ் மனம் - சாமி - பதி . நந்தி நீங்க பதி தெரிவார். இதுவே பசுபதி தத்துவம். காணொளி காண்க: YOU Tube :  tamil muraiyil acupuncture . 
36. மெய்யுணர்தல் - துறவறவியல் 
      காணும் பொருள்கள் தம் அழகின் சிறப்பால் கவரும். இது மாயை. இயற்கையும் விளையாடும் . மனிதனும் தன் பங்குக்கு அழகு சேர்ப்பான். இதனால் விளைவது அதிக விருப்பு . ( காமம் ) . கிடைக்காவிடின் சினம் ( வெகுளி ) . நிகழ் காலம் எனும் இருப்பு மறைவதால் தடுமாற்றம் (மயக்கம் ) . பெரும் சுழல்கள் தாம் இந்தத் தோற்றங்கள் என உணர்தல் 'மெய் ' உணர்தல்.
அக்குப் பார்வை : கண்ணால் காணும் காட்சிகள் ஆண் மனதைக் கெடுக்கும். அடிமனம் கல்லீரல் .அதன் வெளி உறுப்பு கண். காதில் விழும் சொற்கள் பெண் மனதைக் கெடுக்கும். ஆழ்மனம் சிறுநீரகம் . அதன் வெளி உறுப்பு  காது . இவை இல்லறவியலார் முரண்பாட்டுத் துன்பங்கள்.
கண்ணால் காண்பதும் பொய் ; காதால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப்பதே மெய். இதுவே நடுவு நிலை மற்றும் துறவு நிலை. 
37. அவா அறுத்தல் - துறவறவியல் (இறுதித் தலைப்பு )
       அவா அல்லது ஆசை அல்லது விருப்பம் , ஒருவரை அடுத்த பிறப்புக்கு இட்டுச் செல்கிறது. பிறப்பு, இறப்பு , இன்ப துன்பம் எனும் சுழற்சி உருவாகிறது. அவாவை அறுத்தல் துறவை நிலைப் படுத்த உதவும். 
அக்குப் பார்வை : யின் யாங் குறியீடு காண்க. அவா பெரு வெளிச்சமாய் இருந்தால் , இருள் சிறிது இருக்கும் . பிறகு இருள் பெரிதாகும். வெளிச்சம் சிறிதாகும். மறு முயற்சி செய்தாலும் சுழற்சி நிற்காது. அவா, பேரவா எனத் தொடரும். அவாவைப் பற்றாதே . விலகு. துறவும் இலகு. 

38. ஊழ் - ஊழியல் 

     மனிதன் எல்லாப் பாகுபாடுகளையும் இரண்டாகப் பிரித்து, தனது இருப்பை விரும்பியதில் நிறுத்த முயன்றாலும்  விதி ( ஊழ் ) இடத்தாலும், காலத்தாலும் மாற்றிப் போடும். " ஊழ் காட்டாறு போல - மனித முயற்சி ஒரு துரும்பின் அசையும் முயற்சி." இது கணியன் பூங்குன்றனார்  உவமை. 
அக்குப் பார்வை :  உச்சந் தலைப்புள்ளி Du 20 வழியே பிறப்பின் போது நுழையும்  பிரபஞ்சம் மனிதனின் இயக்கத்திற்கு (உயிர்) காரணம் ஆகிறது. சிறுநீரகத்தை இயக்குவதும் இதுவே.  சிருண்றீரகம் permanant  Battery .  அதன் சக்தி வாங்கி இயங்கும் கல்லீரல் ஒரு Rechargable  Battery . கல்லீரல் நீங்கள் ; அதைத் தீர்மானிப்பது மரபாகிய சிறுநீரகம் - ஆதி செல் . அதன் இயக்கத்தைத் தீர்மானிப்பது - வெளிச்சுழலில் இயங்கும் நுரையீரல் - பிரபஞ்ச மனம். ஆக, மரபும், சூழலும் உங்கள் விதியைத் தீர்மானிக்கின்றன. மரபு, சூழல், நீங்கள் மூன்றும் அறிந்து உணரும் விழிப்புணர்வே 'அறம் ' எனும் பயணம் சிறக்க உதவும்.
----------அறம்  முற்றிற்று --- பொருள்  தொடரும் ---

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL -30-34

30. வாய்மை - துறவறவியல் 

        வாயால் பேசுவது தீங்கு இல்லாததாக வெளிவர வேண்டும். அதுவே வாய்மை. 'உண்மை ' உள்ளத்தில் உள்ளது. அதனினும் தீங்கு இல்லா உரையாகிய "வாய்மை " யே  போற்றப் படும்.
அக்குப் பார்வை : இயற்கை நிகழ்வுகள் அன்றி மனிதர் சார்ந்த உண்மைகளும் நிகழ்வே. அது இரு மனங்கள் மற்றும் இரு உயிர்களின் மோதலில் நிகழ்வது. இந்த"  உண்மை " மேலும்  பரப்பற்கு உரியது அன்று. தீங்கு தராத வாய்மை பேசினால், பிற உயிர், தன் உயிர், சமுகம் காப்பாற்றப் படும். உண்மை, வாய்மை, மெய்ம்மையில்  மெய்யான (உடல்) நடத்தைக்கு வாய் (மண்பூத நலன் ) மை யே முதன்மை. 
31. வெகுளாமை - துறவறவியல் 
       சினம் கொள்ளாது இருக்கும் பண்பு. பெரியோரிடத்தில் சினம் வந்தால் ஒரு கணம் கூட நிற்காது. சினமற்றத் தன்மையே துறவுக்குத் தேவை . 
அக்குப் பார்வை : ' நான் ' எனும் உணர்வு விளைவது, அடிமனமாகிய கல்லீரல் (ஆகாயம் ) பூதத்தில் தான். இந்த கர்வமே மேல்மனத்தில் ( இதயம் + மனம் ) இயங்கி வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கிறது. தான் என்பதைக் காப்பாற்ற , தனக்குப் பயன் வர சினம் கொண்டால் காப்பும் வராது. பயனும் தேடியது  வராது. இழிவு, அழிவு வரும். சினம் துறவிக்குக் கூடாது. சமுகம் காக்க வரும் சினம் விதி விலக்கு .
32. இன்னா செய்யாமை - துறவறவியல் 
       பிறருக்கு மனதாலும், உடலாலும் துன்பம் செய்யாது இருத்தல். 
அக்குப் பார்வை : பிறர் என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களே ஆவர். எந்த ஒரு துன்பம் பிற உயிருக்குச் செய்யினும் அது சுழற்சி முறையில் திரும்பி வரும். மனதின் பிறர் துன்பக் கற்பனை 
 முதலில் உங்களுக்குள் நிகழ்வதால் , நீங்கள் பிரபஞ்ச விதிப் படி தப்ப முடியாது. தலை வெட்டும் எந்திரம்  செய்தவன், அதனாலேயே செத்தான்  என்பது வரலாறு. 
33. கொல்லாமை - துறவறவியல்  
     பிற உயிர்களைக் கொல்லாதிருக்கும் மாண்பு. 
அக்குப் பார்வை : பேருயிரையே  ஆதி செல்லாக நம் உடம்பில் சிறுநீரகத்தில் 50:50 தாய் தந்தையர் மூலம் பெற்று வாழ்கிறோம். நம் இன்றைய வாழ்வு, பிரபஞ்சத்தில் பல கோடி ஆண்டுகளாய் புல்லாய், பூண்டாய் , புழுவாய் இருந்து இன்று அடைந்த வரம். எனவே உயிர் போற்றல் பேருயிர் போற்றும் உயர் பண்பு. 
34. நிலையாமை - துறவறவியல்  
      செல்வம் வந்தால் அது போகும். நாள் என்பது வந்தால் அதுவும் போகும். உடல், உயிர் என்பது வந்தால் அதுவும் போகும். இதுதான் நிலையாமை . துறவின் நோக்கம்  நிற்கும் தன்மை, செயல் அறிவது. 
அக்குப் பார்வை : யின் யாங் இரண்டு முரண்பாடுகளால் சமநிலைப் பட்ட து , அண்டமும், பிண்டமும். சமநிலை குலைந்தால் முதலில் நோய், பிறகு அழிவு. பின் அடுத்த பிரபஞ்சத் தோற்றம். ஆக்கத்திலிருந்து அழிவும், அழிவிலிருந்து ஆக்கமும் நிகழ்வது தொடர்ச்சி செயல். இயக்கம் ஒன்றில் மட்டும் நிலைக்காது. சம நோக்குத் துறவிக்குத் தேவை. சமநோக்கில் மையம் கிடைக்கும். அது நிலைப் பொருள். 
தொடரும்.

Tuesday, 31 May 2016

TAMIL ACUPUNCTURE VISION TO THIRUKKURAL- 25-29

25. அருள் உடைமை - துறவறவியல் 

        இல்லறம் நடத்துபவருக்கு மன உணர்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். துறவறத்தை இல்லறம் பின் துறவறம் என மேற் கொள்ளும்போது முதல் தேவை இரக்கம் எனும் அருளுடைமை ஆகும்.
அக்குப் பார்வை : உடலின் முதல் பூதம் கல்லீரல் (ஆகாயம் ) . இதன் நேர்க்குணம்  அருளுடைமை ( இரக்கம் ). அழிக்கும் எதிர்க்குணம்  சினம்  மற்றும் பிறர் செயல் மீது வெறுப்பு. இரக்கம் அல்லது அருளால் தீர்வு செய்ய மனம், உடல் நலம் உடனே கிடைக்கும்.
26. புலால் மறுத்தல் - துறவறவியல் 
       போர்க்குணம் தரும் புலால் உணவு, அருள் ஆளும் துறவிக் குணத்திற்கு எதிர்த் தன்மை ஆகும்.  துறவில் முன்னேற புலால் மறுத்தல் இரண்டாம் நிலை . 
அக்குப் பார்வை : மனதைப் பக்குவப் படுத்தினால் மட்டுமே, உடலைப் பக்குவப் படுத்த முடியும். மனதிலிருந்து உடலும், உடலிலிருந்து மனமும் என பண்பு சுழற்சி நடைபெறுவதால், உடலுக்குத்  தரும் உணவிலிருந்து மனக் காப்புத் தொடங்குகிறது. 
                ஒரு மனிதனின் சிறுநீரகம் வடித்தெடுக்கும் செங்கற்கள், கல்லீரலில் சேமிப்பு ஆகி, மனித மரபு உருவம் , பண்பு கிடைக்கிறது. மிருகங்களின் சிறுநீரகத்தால் பக்குவப் படுத்த ப் பட்ட 
உணவே மிருக உடல். அதன் செரிமானத்தின் செரிமானம் குண இறக்க நிலையாகும். 
27. தவம் - துறவறவியல் 
      துன்பம் பொறுத்தலும் , தான் எனும் செருக்கு விடலும் தவம்.
அக்குப் பார்வை : மனம் துன்பமுற்றே உடல் துன்புறுகிறது. மனம் இன்பத்தில் இறங்கும் போது துன்பத்தை சேர்த்து வாங்குகிறது. தான் விடத் தன்னால் வரும் துன்பம் தீரும். பிறர் அறியாது செய்யும் துன்பம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இது தவ வாழ்வின் அடிப்படை. 
28. கூடா ஒழுக்கம் - துறவறவியல் 
    தன்னை கவனிக்க. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் தவறு. இந்த நிலையிலேயே விழிப்புணர்வு கொண்டு மனதின் சுழற்சியிலிருந்து விலக வேண்டும். புற வேடம் கூடா ஒழுக்கம் ஆகும். துறவைக்  கலைத்து விடும். 
அக்குப் பார்வை : மன நலமே முதல். உடல் நலம் அடுத்த நிலை. மன, உடல் ஒழுக்கம் இணைந்து முன்னேற வேண்டும். 
29. கள்ளாமை - துறவறவியல் 
     களவு என்பது திருட்டுத் தனமாய் பொருளை அடைவது.  இன்னொரு பொருள் திருட்டுத் தனமாய்க் காதல் கொள்வது. பழமொழி காண்க. "களவும், கற்று மற " ஆக திருட்டுத்தனமாய் பொருள் அடைதல், துறவிக்குத் தீங்கு.
அக்குப் பார்வை : பொருளின் மீதான மிகு விருப்பம், தீ பூதம் ( மனம் + இதயம் ) கெடுத்து பரபரப்பாக்கும். மன அமைதி கெட, தவ வாழ்வு கெடும். எதிர்மறை எண்ணம் விடுக்க.
தொடரும்.

Monday, 30 May 2016

Tamil acupuncture vision to Thirukkural-19 - 24

19.புறங்கூறாமை - இல்லறவியல் 

      அடுத்தவர் இல்லாதபோது அவர்தம் குற்றம் பிறருக்கு எடுத்துக்  கூறுவது. இதுவே நேரிற் கூறாது புறத்தில் கூறுதல். இது தவிர்க்க வேண்டும்.
அக்குப் பார்வை : மூன்றாவது நபரின் புகழ் கூறலாம். குற்றம் கூறல், கேட்கும் பிறர் அவர்தம் கற்பனையால் (மேல் மனம் + அடிமனம் ) மெருகு ஏற்றப் படும்போது புறங் கூறுவார்க்குப் பழி உண்டாகும். எனவே, புறங் கூறாமை செம்மைப் பண்பு (+).
20.பயனில சொல்லாமை - இல்லறவியல் 
        பயன் தராச் சொற்கள் பேசாது இருத்தல் . 
அக்குப் பார்வை : பேசும்போது இருவருக்கும் பயன்படாத சொற்கள், நிகழ்சிகளை விவரித்துப் பேசுவது . இது இருவரின் நேரம், காலம் இவற்றைக் கொல்வதற்குச் சமம். சொற்கட்டு வர, எண்ணம் , செயல் கட்டுப்பாடு வரும். மன எண்ணங்களின் கட்டுப்பாடு, உள்ளீடு சொற்களில் வெளியாகும். 
21. தீவினையச்சம் - இல்லறவியல் 
       பிறருக்குத் தீங்கு செய்வதில் அச்சம். 
அக்குப் பார்வை : எண்ணக் கட்டுப் பாட்டிலேயே பிறர் தீங்கு விட வேண்டும். அதை உள்விட , உள்ளமே முதலில்  தீப் பற்றி எரியும். பின் தன் உடலும் கெடும். எனவே, தன்னைக் காக்க , பிறர் தீங்கில் அச்சம் கொள்க. 
22. ஒப்புரவு அறிதல் - இல்லறவியல் 
     அடுத்தவர்க்கு உதவுதல் 
அக்குப் பார்வை : சுற்றி உடையவர் மகிழ்வது , தன் நெஞ்சு மகிழ்வதாய் மாறும். நுரையீரல் பூதம் உயிர்ப்பு அடைவதால் தன் உடல்நலம், பொதுநலம், சமூகநலம்  எனத் தொடர் செழிப்பு நிகழும். 
23. ஈகை - இல்லறவியல் 
    இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுதல் 
அக்குப் பார்வை : நாமே, ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு வந்தவர்கள் அல்லவா ? இல்லாதவர்க்கு நாம் உதவுவது கடவுள் நிலை மற்றும் இருப்பைப் போற்றுவது ஆகும். ஈகைதான் வாழ்வு. இது பிரபஞ்ச விதி. 
24. புகழ் - இல்லறவியல்  
     உயிருக்கு ஊதியம் என்பது புகழ் பெற்று வாழ்வதே. 
அக்குப் பார்வை : ஐம்பூதம் அடக்கி வாழ பெரியோர் ஆகலாம். செயற்கரிய செயல் செய்து புகழும்பெறலாம். மனம் அடக்கும் மகா வீரமே புகழ் தரும். 
தொடரும்.  

Sunday, 29 May 2016

TAMIL ACUPUNCTURE VISION TO TIRUKKURAL-14-18

14. ஒழுக்கமுடைமை - இல்லறவியல் 

   உலகத்தார் ஏற்கும் ஒழுக்கம் அறிந்து அதன் வழி ஒழுகல்.
அக்குப் பார்வை : பொது ஒழுக்கம் மீற , மேல் மனம்  ஆகிய தீ பூதமும் , அடிமனம் ஆகிய கல்லீரல் பூதமும் சிக்கலில் மாட்டும். பித்தம் தொடர்பான நோய்கள் வரும். இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள்  உண்டாகும். வாழ்நாள் குறையும். 
15. பிறனில் விழையாமை - இல்லறவியல் 
  ஒழுக்கத்தின் ஒருபகுதி , அடுத்தவர் மனைவியை  விரும்பாதிருத்தல் - சமூகக் கோடு தாண்டாமை . 
அக்குப் பார்வை : மனிதன் அமைத்த கோடுகள் மேல்மனம் , அடிமனம் இவற்றில் வலுவாகக் காலுன்றி நிற்கும். இவை நேர் மற்றும் எதிர்த் தன்மை (+ , - ) உடையவை. எதிர்த் தன்மையில் இறங்க வாழ்நாள் அமைதி கெடும். ஆழ்மனம் செயல்படும்போது கனவு, நனவு இவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு விருப்பு, வெறுப்பு இவற்றைப் பற்றாமல் கடந்துபோக விடு.
16.பொறையுடைமை - இல்லறவியல் 
         பிறர் இகழும் சொல், செயல் பொறுத்தல்.
அக்குப் பார்வை : எந்த ஒரு சொல்லும் பிறர் கூற, அதைக் கவசமிட்டுத் தடுத்து, ஆய்ந்தபின் உள்ளே விட வேண்டும். புகழ்ச்சியை ஊக்கமாக ஏற்கலாம். இகழ்ச்சியைத் திருப்புக. பொறுமை காக்க. ஒவ்வொரு சொல்லும் ஆழ்மனம் செல்லும் என்பதால் தடுப்பணை அவசியம்.
17. அழுக்காறாமை - இல்லறவியல் 
        பிறர் வாழ்வு கண்டு  பொறாத உணர்வு . 
அக்குப் பார்வை : பொறாமை எதிர்மறை (-) உணர்வு . தீ பூதத்தை நஞ்சாக்கும். மேல் மனம் கெடுக்கும். சொல், செயல் கெடுக்கும். தொடர்க் கெடுதல் உண்டாகும். 
18. வெகாமை - இல்லறவியல் 
      பிறர் பொருளை நடுவுநிலை தவறி அடைய நினைத்தல் 
அக்குப் பார்வை : நடுவு நிலை தவறிய விருப்பம் எதிர்மறை உணர்வு. (-) . மனதில் ஏற்றப்படும் நஞ்சு பிறகு உடலில் நோயாக விளையும். 
    தொடரும்.  

Thursday, 28 April 2016

katturaip padangal





நன்றி 
தமிழ் முறையில் அக்கு பங் சர் ,
பிளாக் ஹோல் பப்பிளிகேசன் , சென்னை.

Tha.Ilakkiyak kazhakam katturai-thodarchi-2

பன்னிரண்டு விளக்கம் 

ஆகாயம் (கல்லீரல் ):
"அ " எனும் வடிவம் கல்லீரல் வடிவம் - கல்லீரல் பூதம் 
"ஆ "வின் சுழி பித்தப்பை குறிக்கும் - கல்லீரல் துணை உறுப்பு.
தீ (இதயம் +பெரி கார்டியம் எனும் மனம் ):
"இ " எனும் வடிவம்- இதய வடிவம் - நான்கு துண்டு பிரிவு, விசிறு வடிவம் ( பெருந்தமனி )
"ஈ " (பழைய வடிவம் இ மேல் சுழித்தல், தீ எழுத்து போல.)
சிறுகுடல் பல சுருட்டலுக்குப் பின் வயிற்றுப் பையில் மேலாக இணைதல்.
"ஐ " என்பது தீயோடு -இதயத்தோடு சேர்ந்து இயங்கும் பெரி கார்டியம் இடம் - மையக் குறி. 
"ஔ " என்பது ஐ எனும் மனதுக்குக் கட்டுப்பட்ட மூவெப்ப மண்டல இயக்கம் ( இரட்டை உதர விதானம் ) மூச்செடுத் தல் , செரிமானம், கழிவு நீக்கம் எனும் மூன்று மண்டலங்களை பிரிப்பது - இவற்றில் மன பாதிப்பால் மாறுதல் உண்டாகும்.
மண் :
"உ " எனும் வடிவம் மண்ணீரல் பை, கணைய நீளப் பையோடு .
"ஊ " வின் மேல் வடிவம் இரைப்பை  துணை உறுப்பு ஆதல்.
காற்று (நுரையீரல் ):
"எ " காற்றை இயக்கும் பெரிய நுரையீரல் "எ " . அதன் அடுத்த பகுதி இதயம்  அடைப்பதால் கோட்டு வடிவம். 
"ஏ " பெருங்குடல் தொடக்கம் , சிறுகுடல் சுழித்து , ஏறுகுடல், கிடைக்குடல், இறங்கு குடல் என வந்து சரிந்து குதத்தில் முடியும். "ஏ " காண்க.
நீர் ( சிறுநீரகம் ):
"ஒ " மேல் இரட்டைச் சுழி சிறுநீரகம் குறிக்கும். ( குழந்தையின் தலை கீழ் வடிவம் கூட ) 
"ஓ " கீழே உள்ள பை, சிறுநீரகத் துணை உறுப்பு , சிறுநீர்ப் பை.
ஆக, அக்கு பங் சர் பாடத்தில் உடலின் உயிர் சக்தி (chi ) இயங்கும் பன்னிரண்டு உறுப்புக்கள் வருமாறு :
அ - Liver - கல்லீரல் ; ஆ - Gall Bladder - பித்தப்பை .
இ - Heart - இதயம் ; ஈ - small  Indestine - சிறுகுடல் 
ஐ - perikaardiyam - மனம் ; ஔ - Triple Warmer - மூவெப்ப மண்டலம் .
உ - Spleen + pancreas - மண்ணீரல் + கணையம் ; ஊ - Stomach - இரைப்பை .
எ - Lungs - நுரையீரல் ; ஏ - Large Indestine - (பெருங் ) குடல். 
ஒ -  Kidney - சிறுநீரகம் ; ஓ - Urinal Bladder - சிறுநீர்ப் பை 
மெய் எழுத்துக்கள் தமிழ் முறையில் அக்குப் பங் சர் நூலில் காண்க.
முடிவுரை :
ஐம்பூத அறிதல் பள்ளிக் கூடத்திலிருந்து தொடங்க வேண்டும். நோய்கள் ஐவகையே. தமிழர்கள் இழந்ததை இனியேனும் பெறுவோம். தாய் மொழியில் கற்போம்.
---இறுதி -----'.

Wednesday, 27 April 2016

TAMIL ILAKKIYAK KAZHAKAM- MALAR KATTURAI.

தமிழின் உயிர்  மெய்ப் புதிர் விடுவிப்பு 

               ஆசான் .ஆ. மதி யழகன்.

முகவுரை :
       திருவாரூர் தமிழ் இலக்கியக் கழகம்  எனக்குத் தந்த வாய்ப்புதான், 21/12/2013-ல்  ஐந்து பூதங்கள் பற்றி உரையாற்றும் நிகழ்வு. தமிழர்களின் வர்ம மருத்துவத்தையும் , சீனர்களின் ஊசி மருத்துவத்தையும் ( அக்கு பங் சர் ) ஒப்பிட்டுப் பேசினேன். அதனால் தாய்த் தமிழுக்கு ஒரு மகுடம் கிடைத்தது. தமிழின் உயிர் ஒலிகள் உச்சரித்தாலே போதும், பன்னிரண்டு உயிர் ஆற்றல் உறுப்புகள் இயங்கும். (எ. கா - ஒ, ஓ - சிறுநீரகம் ஆகிய நீர் பூதம் ) . அதுபோல் மெய் எழுத்துக்கள் உடம்பில் அதிரும். (எ. கா.- ம் - மூலாதர் பகுதி அதிரும்.)
ஆரா விளைவு :
      உயிர் என்பது என்ன என்ற கேள்வி பலக் காலும் பலராலும் கேட்கப் பட்டு வருகிறது. த. ச. தமிழனார் இயற்றமிழ்ப் பயிற்றகத்திலும் உயிர்க் கருத்தரங்கு நடத்தப்பட்டது. உயிர் என்பது ஒரு காற்று வடிவத்தில் இயக்கம் செய்து கொண்டிருக்கிறது என்பது பொதுவான கருத்து . இப்பொழுது சற்றுத் தொலைவில் இறந்தவர், உயிர் உடையவர் என இருவர் இருந்தால், கிரிலியன் புகைப் படம் மட்டுமே உயிர் உள்ளவரின் ஒளி வட்டம் 'ஆரா ' காட்டும்.
       இந்த ஒளி உடலின் மேற் பரப்பை ஒட்டி உள்ளாகவும், வெளியாகவும் இருந்து பாதுகாக்கிறது. ஒத்த உணர்வு உள்ள இருவர் அருகிருந்து உரையாட, கை குலுக்க ஆராவும் இணைந்து கலக்கிறது. ஒத்த கருத்துடைய 50 பேர் நிரம்பிய கூட்டத்தில் நீங்கள் செலுத்துவது ஓர் ஆரா முதலீடு . ஆனால் நீங்கள் பெறுவது 50 ஆரா பயன் ஆகும். இது கூட்ட விளைவு ஆகும். இதை உணர மட்டுமே முடியும் . உங்கள் மனதின் விருப்ப அடிப்படையில் , ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகும். பயன் தரும் இந்த ஆற்றல் நிகழ்வு, எனக்கு அந்த  தமிழ் இலக்கியக் கூட்டத்தில் நடந்தது. 
ஐந்தும், பன்னிரண்டும் :
தொடரும்.
        

tha.Ilakkia kazhakam-katturai-thodarchi-1

ஐந்தும், பன்னிரெண்டும் :

வர்மமாக இருந்தாலும், ஊசி மருத்துவம் (அக்கு பங் சர் ) என இருந்தாலும், அவை உடலின் ஐம்பூத இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்த வகையில் ஐந்து பூதப் பண்புகளை அட்டவணை வடிவில் பூதத்தின் வண்ணம், முதல் உறுப்பு, துணை உறுப்பு, புலன்கள், சுவை, கட்டுப் படுத்தும் திசுக்கள், குரல் பண்பு, உணர்ச்சி, மனத் தீர்வு, நீர் சுரப்பு, உடல் மனம், பருவ காலம், வானிலை, உடல் நோய் எதிர்ப்பு சக்திக்குரிய தீர்வு, இயங்கும் நேரம் , சார்ந்த நோய்கள் இவற்றை எடுத்துக் கூறி, பிண்ட இயக்கம், அண்ட இயக்கம் அனைத்துமே இவ்வடிப்படையில் நடக்கின்றன எனக் கூறி அட்டவணை விளக்கம் தந்தேன். 
              வீட்டுக்கு வந்தவுடன் ஐந்து பூதங்களில் தமிழ் ஏன் அடங்கக் கூடாது என நினைத்து மனக் கண்ணில் இயற்றமிழ் பயிற்றக  செயலசான் இளைய நம்பியை அழைத்து உரையாடினேன்.
ஆ.மதி யழகன் : தமிழ் உயிர் எழுத்து 12. உயிர் எனக் கையாளுதல் உள்ளதால் 5-ந்தில் அடங்குமா ?
இளைய நம்பி : கூட்டெழுத்து ஐ, ஔ விட்டாலும்  மீதி பத்து உள்ளதே.
ஆ.மதி யழகன் : ஐந்து × இரண்டு = பத்து அல்லவா ?
இளைய நம்பி : இரண்டாவது ஐந்து என்ன ?
ஆ.மதியழகன் : முதல் ஐந்து பூதங்கள் - குறில் - அ , இ , உ , எ , ஒ . அவை நீட்டொலிக்க  அவற்றின் துணை உறுப்புக்கள் இயக்கம் பெறும் . ஆ, ஈ , ஊ, ஏ, ஓ .
இளைய நம்பி : அப்பொழுது ஐ, ஔ  என்னவாகும் ?
ஆ.மதியழகன் : அவை பூதங்களுள் சேர்ந்தும் சேராமலும் நடுவில் உள்ளவை . நல்லது. எனக்கு   ஒரு வரைபடம் கிடைத்து விட்டது.
       தமிழின் உயிர் உறுப்புகள் வரைபடத்துடன் எனது நூல் " தமிழ் முறையில் அக்கு பங் சர் ", பிளாக் ஹோல் பப்ளிகேஷன் வெளியீட்டில் வந்துள்ளது. காண்க யூ டியுப் : "tamil muraiyil acupuncture "

பன்னிரண்டு உயிர் விளக்கம் :

தொடரும்.

Sunday, 17 April 2016

Tamil acupuncture vision to Thirukkural 9 to 13

9. விருந்தோம்பல் - இல்லறவியல் 

     ஒரு குடும்பத்தின் செழிப்பு காட்டுவது விருந்தோம்பல் . விருந்தினர் என்பது புதியவர் எனப் பொருள் தரும். இந்த பண்பு தரும் பலன் அளப்பற்கரியது .
அக்கு ப் பார்வை : ஒரு மனிதனின் ( உடல், மனம், உயிர் ) செழிப்பு என்பது பிறர் நலம் போற்ற உதவுதலே . பிறரின் பசி போன்ற உணர்வை உணர்ந்து செயல் பட வேண்டும். பிரபஞ்ச மனம் (நுரையீரல் பூதம் ) உள்ளும் வெளியும் இன்ப உணர்வைச் சமன் செய்ய வேண்டும்.

10. இனியவை கூறல் - இல்லறவியல் 

    ஒருவரின் மரபின் சிறப்பும், சூழ்நிலை வளர்ப்பும் இன்சொல், வன்சொல் தேர்வில் தெரியும். குடும்பம் செழித்திட இன்சொல் தேர்வு வேண்டும்.
அக்குப் பார்வை : நல்லெண்ண வளர்ச்சி  என்பது தன் வயிறைக் (மண்ணீரல் பூதம் ) காப்பாற்றும்.
ஏன், தன் உயிரையே க் காப்பாற்றும். நல்லெண்ணம், நற்சொல்லாகப் பிறரிடம் கூற இன்சொல் பிறக்கும் .  இருவருக்கும் இதம் கிடைக்கும்.

11. செய்ந்நன்றி அறிதல் - இல்லறவியல் 

  ஒருவர் தமக்கு செய்த உதவியை அறிந்து நன்றியுடன் இருத்தல்.
அக்குப் பார்வை : இது ஒரு நேர்மறை உணர்வு. இது வளமாக இருந்தால் , மண் பூதத்திற்கு செரிமான சக்தி கிடைக்கும். மேல் மனம் நல்ல அமைதியில் இருக்கும்.

12. நடுவு நிலைமை - இல்லறவியல் 

    தன் பக்கம், எதிர்ப் பக்கம் இரண்டும் சாயாது நடுவில் நிகழ வேண்டியதில் கவனம் வைத்து வாழ்தல். இந்த உணர்வு மோதல்களைத் தவிர்க்கும். செயல் குலையாது. 

அக்குப் பார்வை : யின் , யாங்  கூடுதல் குறை இன்றி இருக்கும் சமநிலை பேணலே உயிர் வாழ்வு. 

13. அடக்கம் உடைமை - இல்லறவியல் 

  எவ்வளவு காரண காரியங்கள் இருந்தாலும் , இடம், காலம், பொருள் அறிந்து அடங்கி இருந்து கொண்ட  கொள்கை நிறைவேற முயல வேண்டும். 
அக்குப் பார்வை : அடிமன எண்ணங்கள் 'நான் ' என்பதை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அதை ஊக்குவிக்க 'அடக்கம் ' கெடும். 'நாம் ' என்பதை ஊக்குவிக்க அடக்கம் வரும்.
தொடரும். 

Friday, 8 April 2016

Tamil acupuncture vison to kural-1to8

தமிழ் அக்கு பங் சர்  பார்வையில்  திருக்குறள் .

அறத்துப்பால் : 38 தலைப்புகளில் பாயிரம் நான்கு விளக்கம் 

(1) கடவுள் வாழ்த்து : ஆதி பகவன் என்கிற பெண் சக்தி, ஆண் சக்தி இணைந்த சக்தி உலக முதன்மை. அகரம் முதன்மை எழுத்துக்கு  என்பது எடுத்துக்காட்டு.
அக்கு ப் பார்வை : யின் - யாங் இயக்கம் முதன்மை யானது. பூத சுழற்சியில் ஆகாய பூதம் அல்லது கல்லீரல் பூத ஒலி  'அ ' ஆகும்.
(2) வான் சிறப்பு : நீர் ஒழுங்கே வாழ்வு ஒழுங்கு அண்டத்திலும், பிண்டத்திலும் (உலகத்திற்கும் மக்களுக்கும் )
அக்குப் பார்வை : நீர் ( மனிதனில் சிறுநீரகம் ) இயக்கம் , அடுத்து சிறப்பு.
(3) நீத்தார் பெருமை : தவ வாழ்வுப் பெரியோர் மறை மொழி பெருமையானது.
அக்குப் பார்வை : இருமையும் (யின் - யாங் ) ஐம்பூத ( கல், தீ, மண், நுரை, நீர் ) ஆற்றல் அறிந்து பக்குவப் பட்டவர்களை ப் போற்றி பெருமைப் படுத்து. இது மூன்றாவது.
(4) அறன் வலியுறுத்தல் : மனத்தின் தூய்மை அறம் ஆகும்.
அக்குப் பார்வை : தீ பூதத்தின் , மனத் தெளிவே இயல்பான  ஐம்பூத சுழற்சிக்கு வலியுறுத்தப் படும்.

38 தலைப்புகளில் இல்லறவியல் இருபது விளக்கம் 

(5) இல் வாழ்க்கை : குடும்பமாய் வாழ்வது போல் வேறு சிறந்த அறம் இல்லை. அதனால் இல்லறம் . 
அக்குப் பார்வை : நுரையீரல் பூத நிறம் வெள்ளை. அதனால்தான் மற்ற பூதங்கள் வாழ்கின்றன.
குடும்பம் இருப்பதனால்தான் தனி மனிதன் , சமுகம், மதம், அரசியல், இனம் எல்லாம். வெள்ளையில் எல்லா வண்ணமும் அடக்கம். குடும்ப வாழ்வில் எல்லாமும் அடக்கம்.
(6) வாழ்க்கைத் துணைநலம் : குடும்பத் தலைவன் வெளியுலகப் பணிகளுக்கு தேவையானவனும், வீட்டுக்கு முதன்மையும் ஆனவன். இல்லறப் பொறுப்பு ஏற்கும் இல்லத்தரசிக்கு தலைவன்,  குழந்தைகள், குடும்பப் பெயர் காப்பாற்ற நலன்கள் தேவை.
அக்குப் பார்வை : பெண் யின் வகை. அவள் இயக்கம்   உள்ளார்ந்தது. இல்லறமே சிறப்பு (தமிழர் மரபு )
(7) மக்கட் பேறு : நன்மக்கள் பெற்று வளர்த்தல்  பெரும் பேறு 
அக்குப் பார்வை : ஒருபூதம் ஊட்டி வளர்த்த அடுத்த பூதம், திரும்பும் நிலையில் முதல் பூதம் காப்பாற்றப் படும்.. மேம்பட்ட வாழ்வும், ஒழுங்கும் கிடைக்கும்.
(8) அன்புடைமை : யாவருக்கும் எப்போதும் உரியது ஆதல்  அன்புடைமை.
அக்குப் பார்வை : ஒருவரின் அன்புத் தன்மை மரபு சார்ந்தது என நிருபிக்கப் பட்டு உள்ளது. மரபு சிறுநீரகப் பண்பு. அன்பின் குழவி அருள் கல்லீரலுக்கு எளிதாகும்.
தொடரும் --அன்புடன், ஆ. மதி  யழகன்.  

Wednesday, 6 April 2016

INDEX

                உள்ளே  ...

1. மனதின் ஓட்டங்கள் ....................................... 9

2. மன ஈரல் தத்துவம் .........................................17

3. மனம் வழி நோய் விளைச்சல் .........................25

4. நான்கு சுற்றுக்கள் - முப்பரிமாணப் பெயர்கள்.....31

5. தன் வலு - இணைப் புள்ளிகள் ............................38

6.சுற்றுக்கள்  விளக்கம்.
             5 தனிமங்கள் நான்கு சுற்றுக்கள் ................62

7.மன வெட்டுப் புள்ளிகள் .
      மூலப் புள்ளிகள் எனும் ஊற்றுப் புள்ளிகள் .....86

8. நடைமுறையில் ஐம்பூதக் காப்பு .....................94

9. நல வாழ்வு பெற ஐம்பூத சிற்பங்கள் ................101

10.ஐம்பூதம்  காப்பாற்ற பத்துக் கட்டளைகள் ......102
( சதுக்கச் சிற்பங்கள் கடைசிப் பக்கங்களில் )

Replace-New text-sadukka sirpam/9

சதுக்கச் சிற்பம் பயன்படுத்தும் முறை :

எ. கா .  கல்லீரல் சதுக்கச் சிற்பம் - கல் -, கல் + காண்க.
         இது இடப் பக்கம் கல் - என்று உள்ளது.
         இதுவே வலப் பக்கம் கல்+ என்று உள்ளது.
(1) இட மேல் கட்டம் உடல், ஒரு குறிப்பிட்ட தவறான நிலையை எடுத்துக் கொண்டு உள்ளது.
"பொய் மயக்கம் " . இதன் தீர்வு வலது மேல் கட்டம் -" ஓய்வு , உறக்கம் " ஆகும்.
(2) இடக் கீழ் கட்டம் மனம், ஒரு குறிப்பிட்ட தவறான நிலையை எடுத்துக் கொண்டு உள்ளது.
"சினம், வெறுப்பு " . இதன் தீர்வு வலது கீழ் கட்டம் - " உயிர் இரக்கம் "
(3) மேலாக இடம் மேல் -0- செரிமானத் தலைவலி, கால் விரல் வலி . நோயின்  யின் விளைவு.
பார்க்க  வலம் மேல் -0- கல் தன் வலு 'அ ' . தீர்வுப் புள்ளி Liv 1
(4) இடம் கீழ் -0- இடுப்பு வலி, பாத வலி, குதிகால் வலி . நோயின் யாங் விளைவு.
பார்க்க வலம் கீழ் -0- பித்தப்பை தன் வலு "ஆ ". தீர்வுப் புள்ளி GB 41.
(5) இதுபோல் முதல் பக்கம் மேலே மற்றும் கீழே உள்ள x , -x , 2x , 3x நோய்களுக்கு தீர்வு 
எதிர்ப் பக்க கல் + ல் கண்டு தெளியலாம்.
(6) இதுபோல் ஐம்பூதநோய் களுக்கும் (கல், தீ , மண், நுரை , நீர் ) நோயிலிருந்து தீர்வுப் புள்ளிகள் கொடுக்கப் பட்டுள்ளன.

மேலும் அறியத் தக்கன , இதே எடுத்துக் காட்டில் - கல் பூதம் 

(1) பொது : உடல், மன விதிகளைப் பின்பற்ற "நோய்" இல்லை.
(2) '0'  கட்டத்தில் நிற்பது பூத நோய் தொடக்கம். தன் வலு சரி செய்யப் பட வேண்டும்.
(Liv 1, GB 41)
(3)'X ' கட்டத்தில் நிற்பது முதல் சுற்று , தூண்டும் வலு. இது எச்சரிக்கை ஆகும். பூதம் தேக்க நிலையில் உள்ளது. தூண்டுக. (K 1, UB 65)
(4) '-X ' கட்டத்தில் நிற்பது இரண்டாம் சுற்று கேட்கும் வலு . இது தீவிர எச்சரிக்கை ஆகும்.
பூதம் சங்கட நிலையில் உள்ளது. கேட்க (Liv 8, GB 43)
(5) '2X ' கட்டத்தில் நிற்பது மூன்றாம் சுற்று கட்டும் வலு . இது வெகு தீவிர எச்சரிக்கை ஆகும்.
திரும்பி வரும் தீரா நோய். இடை பூதம் சிக்கல். இங்கு கல், இடை, மண் . இடையில் உள்ள தீ பூதம் சிக்கல் .அதனால் கல்லும், மண்ணும் சிக்கலில் உள்ளன. தற்காலிகத் தீர்வு (Liv 3, GB 34)
(6) '3X ' கட்டத்தில் நிற்பது நான்காம் சுற்று கவரும் வலு. இது முடிவான எச்சரிக்கை ஆகும்.
இது மீட்சி நோய். கவரும் பூதம் வலுக் குறைவில் உள்ளது. தற்காலிகத் தீர்வு (Liv 4, GB 44)
       இதுபோல் பிறவும் அறிக.

Wednesday, 30 March 2016

padangal-kai, mei-poothangal-petror.



 -------.

ALIPPU-VARIKAL

அன்னைத் தமிழாக என் நெஞ்சில் வாழ்கின்ற 

                த . ச. தமிழனார் அய்யா அவர்கட்கும் 

என் உடலிலேயும் , உயிரிலேயும் வாழ்கின்ற 

               என் தந்தையார் அரு. ஆறுமுகம் அவர்கட்கும் 

             என் தாயார் ஆ. மங்களம் அவர்கட்கும் 

அடிபணிந்து  அளிப்பது .

நான்கு சுற்றுக்களும் நன்கு புரியும்.

manam seyyum udal aatchi-2

மன விளக்கம் - கபம் - பொருள் கோடு 

நுண் மனம் (Sp -மண் ), பிரபஞ்ச மனம் (Lu - நுரை ) சேர்ந்த மனக் கோட்டின் இந்த பகுதி பொருள் கோடு . இதைக் கபம் எனவும் கூறலாம். இந்தப் பகுதி இயங்கு தசையால் இயக்கம் பெறுகிறது, கண்டிப்பாக மன ஆட்சி உண்டு. இந்நிகழ்ச்சிகள் தன்னிச்சையாக நடைபெறுவது போலத் தோன்றினாலும், உங்களைச் சுற்றி உள்ள நபர்கள், செயல்பாடுகள் எனப் பலவிதத்தில் 'அறியாத' பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நுண் மனக் கோட்டின் நிறம் மஞ்சள். 

     மண் முனை :

சுவை யறிந்து மென்று உண்டால்தான் , பல்லில் உள்ள நரம்புகள், நா நரம்புகள் மூலம் இரைப்பை அறிந்து இன்சுலின் சுரக்கும். இதற்குரியது, மன மண் புள்ளி P 7. இதை செரிமானப் புள்ளி, இன்சுலின் புள்ளி , இஞ்சிப் புள்ளி எனலாம். இன்சுலினை, செரிமானத்தை மன அளவில் கேட்டு வாங்கும் புள்ளி மண் மனம் Sp 6 ஆகும். நுண் மனத்தன்மையும் , பெண்ணுக்குரிய தன்மையும் நிறைந்த புள்ளி.

பிரபஞ்ச முனை :

கணுக்கால் அருகில் உள்ள கால் புள்ளி மண் நுரை Sp 5 ஆகும். இது மிதிவண்டி ஓட்டுவதால் இயங்கும். செரிமான நுணுக்க நீர்ச்சத்து நுரையீரல் வந்து சேரும். நோய்களே  இல்லை . இதன் எதிர்ப் புள்ளி நுரை மண் Lu 9. இது கை விசிறி வீசுவதாலும், கைப் பணிகளாலும் பயன் கிடைக்கும். இந்த ஒரு முனையில் அண்டமானது பிண்டத்தை சந்திக்கிறது. இது அனைத்து இரத்தக் குழாய் அடைப்புகளையும் நீக்கும்.

மன விளக்கம் -வாதம் -இன்பக் கோடு 

ஆழ் மனம் (K -நீர் ), அடிமனம் (Liv -கல் ) சேர்ந்த இணைப்புக் கோடுதான் இன்பக் கோடு . 5-> 1 . இன்பக் கோட்டின் நிறம் நீலம் . ஆழ்ந்த அமைதி பொறுத்தே இன்பமும் மிகும். மனம் பரபரப்பு அடங்கி , பொ ழுதுமடங்கிய நிலையில் நீலக் கோடு  விழிக்கும்.

கர்வ முனை :

'தான்' எனும் கர்வ முனையாகிய கல்லீரல் பூதம் நழுவும்போது அடைவது சிற்றின்பம்.

ஆதி அந்த முனை :

நுரையீரலில் மூச்செடுத்து, மனம் படிப்படியாய் நீக்கி, ஆழ்மனம் K தொட்டு வளம் பெற்று தான் எனும் 'Liv ' சிந்தனை விடுத்து வெறுமை உணர்தல் பேரின்பம். இது எதிர்ப் பக்கத் தொடுகை.
           எந்த ஒரு இன்பத்திற்கும் வழியின்றி, நுரை துக்கத்தால் நிரம்பி வழியும்போது ,  நுரை ஆற்றல் குறைவதால் , சிறிநீரகம் வலுக் குன்றி சிற்றின்பமும் கூடத் தடையாகிறது. இரவுத்தூக்கம் கெடுகிறது. என்பதும் சேர்ந்தால், தசைநார் இயக்கம் கல்லீரல் வலுக் குன்றி வாதம் வர வழிச் செய்கிறது.இந்த நிலைமை, சிறுநீரகம், கல்லீரல் வலு ஏற்றுவதால் தீரும்.
---------

manam seyyum udal aatchi.- katturai

மனம் செய்யும் உடல் ஆட்சி.

மனதின் செல்வாக்கு :

'மனிதன் ' என்பதன் பொருளே , மனத்தை உடையவன் என்பதாகும். நம் ஒவ்வொரு தெரிந்த செயலிலும் , தெரியாத  நிலையில் செய்யும் செயலிலும்கூட , மனம் பங்கு கொள்கிறது.
         (1) 'திரும்பு' என்று பிறர் சொன்னது கேட்டாலும், அல்லது தானே விரும்பினாலும்  தலையை நாம் திருப்புகிறோம். இது நடப்பது இயக்கு தசையால், உடலின் மீது விளைச்சல்.
       (2) அதிருமாறு அல்லது திடீரெனக் கவரும் வகையில் , ஒலி ஓரிடத்தில் கேட்டால்  தலை  தானே திரும்பும். இது நடப்பது இயங்கு தசையால் உடலின் மீது விளைச்சல்.

மன விளக்கம் -பித்தம் -அறக்கோடு 

அடிமனம் (Liv -கல் பூதம் ) , மேல் மனம் (P - பெரி கார்டியம் ) சேர்ந்த மனம் விழிப்புணர்வு உடைய மனம் . இதன் திடமான அமைப்பு இயக்கு தசைகளை , விருப்பப்படி அசைக்கிறது.
கட்டளை இன்னும் கீழேயிருந்து வந்தால், இயங்கு தசையும் அசையும்.
 இங்கு 1-> 2 பச்சை நிறத்தில் கல்லீரல் கோடாகக் காட்டப் பட்டுள்ளது. இது இப்பிறவியில் பதிந்த விருப்பு (+), (-) எனும் இரட்டையால்  இயக்கப்படும் அறக் கோடு  ஆகும். 
           இதன் அதிகப் படியான சிந்தனைகள் உடலில் உண்டாக்கும் விளைவுகள் :
(1) பித்தப்பை சுரப்பை அதிகமாக்கும். (பித்தப்பை எடுத்தல் பரிந்துரை செய்யப் படும் .)
(2) உறக்கத்தை சிந்தனையால் கெடுத்து கல்லீரல் புதுப்பிப்பு தடையாக்கும். (ஆள் மெலிதல் )
(3) சிந்தனை அதிகரிப்பால் , சுமை அதிகமாகி மறதி வரும். ( P 9 - பிட்யூட்டரி சுரப்பி பாதித்தல் )
(4) மன வலுக் கெடுதல் (P 8 - தைராய்டு சுரப்பி பாதிப்பு )
(5) மனதின் உண்ணும்  ஆர்வம் குறைந்து செரிமானம் பாதிக்கும் . (P7- இன்சுலின் சுரப்பு பாதிப்பு 
).தீ மண் - P 7, H 7 கெட்டதால் , மண் தீ Sp 2 வலி தொடர்ந்து இருப்பதால் , சர்க்கரை நோய் ப் பரிந்துரை கிடைக்கும்.
(6) உடல் மன சமானம் கெட்டு உறக்கம் கெடும். (P 6-உறக்கப்  புள்ளி )
(7) மனம் சுருங்க, நுரையீரல் காற்றெடுத்தல் கெட்டு கை வலி வரும் (P 5- நுரைப் புள்ளி )
(8) மனதின் தன் சமானம் கெட்டு வலி P 4  நிற்கும் .
(9) மன வெப்பம் கூடிய நிலையில் நா வறட்சி (P 3- தீ கவரும் நீர் )
 ஆகவே மனம் தொட்ட இடங்கள் அனைத்து  பூதங்களும் ஆகும்.
 எனவே, பூதங்கள் வழி நோய்த் தீர்வு என்று வரும்போது, ஊசி இடலில் முதல் ஊசி P  - ல்  இருக்க வேண்டும்.

மன விளக்கம் - கபம் - பொருள் கோடு -  காண்போம் .

Tuesday, 22 March 2016

Manap-paambu (dif pic)+aimpootha ottapadam.

 மனப் பாம்பு 

 மனப் பாம்பு ( விளக்கம் )

உயிர் ஓடும்; மனம் வெறு மை 

 ஐம்பூத சுழற்சி 
பச்சைக்கோடு -அடிமன , மேல் மன இணைப்பு (உங்கள் +,- விழிப்பு மனம் )
சிவப்புக்கோடு 'மேல்மன , நுண் மன  இணைப்பு (உங்கள் வாழும் உணர்வு = காதல்)
மஞ்சள்கோடு -நுண் மன, பிரபஞ்ச மன இணைப்பு ( உங்கள் உடல் தோற்றம்.)
வெள்ளைக்கோடு  -பிரபஞ்ச மன, ஆழ்மன  இணைப்பு (உங்கள் காற்றேடுக்கும் நெஞ்சு வலிமை= வீரம்.
நீலக்கோடு- ஆழ்மன , அடிமன இணைப்பு (இறைவன் ஆட்சி = இன்ப மனம்)
மேலும்,
பச்சைக்கோடு =அறம் 
சிவப்புக்கோடு = காதல் 
மஞ்சள் கோடு = பொருள் 
வெள்ளைக்கோடு = வீரம் 
நீலக்கோடு  = இன்பம் 
-ஆசான். ஆ. மதி யழகன்.22/03/2016.



Sunday, 14 February 2016

Tamil muraiyil acupuncture-2/add 7.2 location

LI 4:
இருப்பிடம் : கட்டை விரலையும்  ஆள்காட்டி விரலையும்  இணைக்கும்போது ஏற்படக் கூடிய
                    தசைத் திரட்சியின் உயர்ந்த இடத்தில உள்ளது.
Tw 4:
இருப்பிடம்:புறங்கை மணிக்கட்டில் , Tw 3 கோட்டுப் பாதையில் உள்ள பள்ளத்தில் Tw 4 உள்ளது.
S I 4:
இருப்பிடம் : கை சுண்டு விரலுக்கான கை எலும்பின் அடிப்பகுதி , மணிக்கட்டு எலும்போடு சேரும் இடம் S I 4.
GB 40:
இருப்பிடம் : புறக் கணுக்கால் எலும்பு  மூட்டின் அருகில், GB 41 கோட்டின் வழியாக .
St 42:
இருப்பிடம் : கொலுசுப் புள்ளி St 41-லிருந்து கீழே , பாத மேற்புறத்தில் .
UB 64: கால் சுண்டு விரல் எலும்பு சேரும் , கால் பாத எலும்பின் பின் பள்ளம், தோலின் இரு நிறங்களும் சேரும்  இடத்தில் உள்ளது.
 இவை அனைத்தும்  யாங் (இறங்கும் ஓட்டம் ) வழியில் ஊற்றுப் புள்ளிகள் (source points )
--------

Saturday, 30 January 2016

Tamil muraiyil acupuncture-2/ manak kaappu

2.6 மனக் காப்பு 

மனமும் சூழலும் :
    சூழ்நிலைக் கேற்ப வும் மனப் பாம்பு ஆடும். கெட்ட சூழல் தவிர். அல்லது மனம் அற்று  இரு. 
மனப் பாம்பு உண்ணும் உணவோடு, அதில் ஏற்றப் பட்ட உணர்வையும் சேர்த்து உண்ணும். உணவில் நல்ல உணர்வு சேர் ; கொடு ; பெறு .
கொடுப்பவர் :
       ஒருவர் உணவு சமைக்கும் போதும் , உணவிடும்போதும் அவர்தம் உணர்வும் , கையாளுகை 
மற்றும் சூழல் நெருக்கத்தாலும் உணவில் இறங்கும் . மனிதனைச் சுற்றி (1) மன உணர்வுகள் ஓர் ஆராவாகவும் (2) அதைச் சுற்றி உயிர்த் தன்மை அதைவிடப் பெரிய ஆராவாகவும் இருந்து சுற்றி உள்ள பொருள்களையும் , மனிதர்களையும் பாதிக்கின்றன. தீயவர் சூழல் தீமை தரும் எண்ணம் ஏற்றும். நல்லவர் சூழல் நன்மை தரும் எண்ணம் ஏற்றும்.
      நன்மை தீமையும் ஆகலாம்; தீமை நன்மையையும் ஆகலாம் எனில் நடுவு நிலை கொள்ளவும் தெரிவது ஒரு சிறந்த காப்பாகும். 
பெறுபவர் :
       நேசம் மிகுந்தவர்கள் சிறந்த ஊடகமாக இருந்து கொடுக்கப் படும் உணர்வை உள்ளே வாங்குகின்றனர். எனவே அன்பின் உணர்வு, நல்ல எண்ணம், இவை உள்ளத்திலிருந்து வருவோரிடம் மட்டும் பழக வேண்டும்; உணவும் உண்ண வேண்டும். நாமும் அந்த அன்பு , நல்லெண்ணத்தையே உள்ளத்தில் இருந்து வெளிப் படுத்த வேண்டும். 
    இந்த கொடுக்கல் வாங்கலில் நமது உடல்நலம், மற்றும் சுற்றி உள்ளவர் உடல்நலமும் சேர்ந்து காப்பாற்றப் படும். மன நலம் மேல் அடுக்கு ; உடல் நலம் கீழ் அடுக்கு. (உயிர் நலம் உயர் அடுக்கு )
குறிப்பு : மனம் அற்ற நிலையில் , ஐம்பூதம் மட்டுமே இயங்கும் . அந்தப் படம் அடுத்து வரும்.
உள்ளும், வெளியும் ஐம்பூதம் ஒன்றானால் , ஒத்திசைவில் உரைக்கவும் முடியாத அற்புதங்கள் நிகழும். மவுனமாய் இரு ; மேலும் நிகழும்.-தத்துவங்களின் சாரம் இதுவே .
----அன்புடன், ஆ. மதி யழகன். 

Tamil muraiyil acupuncture -2/ manap paambu

Add caption
மனம் பாம்பாக ஐம்பூதத்தில் .

மனம் பாம்பாக மாறி ஐம்பூதம் பாதிக்கும் கருத்துப் படம்.

மனதில்  தலையுடைய நாகம் , நுரை எனும் வாலசைவில்  இயங்குகிறது. நுரை பூதம் - பிரப்ச்ஞ்ச  மனம்  ஆட்டுவிப்பது.
பட விளக்கம் மேலும் :
      தனது எண்ணத்தினாலேயே உணவு உண்ணாது, செரிக்கவும் செய்யாது கொட்டும். மண் பூதத் தாக்குதல்  முதலில் நிகழும்.  இது கவலை.  பிறகு  இது துக்கமாக மாறி,  மீண்டும், மீண்டும் மனதில் (பெரி கார்டியம் )  கொத்திக் கொண்டு  இருக்கும். கவலைக்குரிய குணம் உடைய பூதம்  மண் (3) ; துக்கதுக்குரிய குணம் உடைய பூதம்  மூச்சு எடுக்கும் நுரை பூதம். 
தொடரும் 

Wednesday, 27 January 2016

Tamil muraiyil acupuncture -2 / pin ulla attai.

இடம் 

இந்தப் புத்தகத்தில்  
        அனைத்து நோய்களையும்  ஐந்து பூதத் தலைப்புகளில் அடக்கி விடும் அறிவுக்கு உட்பட்ட விளக்கம் .
         மனத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து பூத மன நோய்களை விளக்கம் செய்தல் .
          ஒவ்வொரு பூத (மனம் +உடல் ) பாதிப்புகளுக்கு ஏற்ப (1) வலு ஏற்றும்  இடங்கள் (2) ஊட்டம் தர வேண்டிய இடங்கள் (3) மருந்தாகும்  இடங்கள் (4) குறையாகும் இடங்கள் (5) நிறையாகும் இடங்கள் . விரிவான பட விளக்கங்களுடன் . சுற்றுக்களின் முற்று ஆராய்ச்சி .
           தமிழ் அக்கு பங் சரில் , மேலும் ஒரு புதிய அணுகு முறை , ஆய்வு . தமிழில் 3 d  பெயர்கள் 
மற்றும் காரணப் பெயர்கள் . எ . கா. Lu 11 - நுரை கல் - நுரை கட்டும் கல் - நுரை குறை - 
(ஆக்சிஜன் குறைவினால் வரும் ) தலைவலிக்கான புள்ளி. இது போல் 60 புள்ளிகள் பெயர்கள்.
           ஐம்பூத நோய்கள் விரிவடையும் பட விளக்கம் , சிற்ப வடிவில் - தீர்வுப் புள்ளிகளோடு .

வலம் 

ஆசான் . ஆ. மதி யழகன் 
தமிழ் முறையில் அக்கு பங் சர் எனும் இவரின் முதல் நூல் , முதல் பதிப்பு விரைவில் விற்றுத் 
தீர்ந்தது . இந்தத் தலைப்பில் பேசிய வெளியீட்டு உரை யூ டியூபில் 6000 -க்கு மேல் பார்வையாளர்கள் தாண்டி , இன்றும் நாள்தோறும் 35 பேருக்கு மேல் பார்வையிடுகிறார்கள்.
      மேலும் இவர், திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான் த . ச. தமிழனார் ஊக்கம் தந்த தமிழ்ப் படைப்பாளி மற்றும் பேச்சாளர் . அறிவியல், கணிதம் பயிற்றும்  ஆசிரியப் பயிற்சி பெற்ற 
ஸ்டேட் வங்கிக் காசாளர் (ஓய்வு ) . விஞ்ஞானச் சுடரில் ' அறுமுகி  [Cube ] , ஆய்வும், தீர்வும் ' 
என ஆய்வுக் கட்டுரை வடித்தவர் . திருக்குறளுக்கு ஒருவரிப் பொருள் கூறும் 'குறள் சாறு ' 
படைத்தவர். 

அட்டை முன் 

இது வரை  நீங்கள் அறியாத  மனம், உடல் மேலும் உயிர் குறித்த பேருண்மைகள் , தமிழால் தமிழில் , தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரப்படுகிறது. 
-------அட்டை முடிவு --------

Friday, 22 January 2016

Tamil muraiyil acupuncture -2/ mukavurai melum

நன்றியுரை :

               இந்நூல் சிறப்புற வெளிவரத் துணை புரிந்து , ஆக்கமும், ஊக்கமும் தந்து துணை நின்ற 
 மனைவி வளர்மதிக்கும், வரைகலைப்  படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளைய நிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர உதவி புரிந்த , மறைந்த திருவாரூர் த. ச . தமிழனார் அய்யா அவர்கட்கும், முதல் நூல் வெளியீட்டு உரையை சிறப்பாக்கிய இயற்றமிழ்ப் பயிற்றக நண்பர்களுக்கும் , நட்பில் ஊக்குவித்த குடவாசல், திருவாரூர், தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கி நண்பர்களுக்கும் ,  நட்பில் 
உள்ள அக்கு மருத்துவர்களுக்கும் , திருவாரூர் தமிழ் இலக்கியக் கழகம், திருவாரூர் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றின் தமிழ் நண்பர்களுக்கும் , உளங்கனிந்த பாராட்டுக்களை அலை பேசியிலும் , முக நூலிலும் , நேரிலும் தெரிவித்துக் கொண்டு இருக்கின்ற நல்ல உள்ளங்களுக்கும் , நெஞ்சார்ந்த நன்றி.
             தமிழ்ப் பணியைத் தலைமேல் கொண்டுள்ள த. ச.  குற ளேந்தி க்கும் , புலவர் எண்கண் மணி, புரவலர். திரு மோகன்தாசு . த. இ . கழகம். அவர்கட்கும், தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் காகவும் , கண்ணகி வழிபாடு பெருகவும்  தன் வாழ்வையே அறப்பணியா கக் கொண்ட நண்பர் யாணன் அவர்கட்கும், வெளியீட்டுக்கு உதவிய " பிளாக் ஹோல் " நிறுவனத்தாருக்கும்  என் 
உளமார்ந்த நன்றி உரித் ததாகும் .
          அன்புடன்,
ஆசான், ஆ. மதி யழகன் .
------------தமிழ் வாழ்க --------

Tamil muraiyl acupuncture -2/ mukavurai-contd

(4) ஒன்று விட்டுத் தாண்டும் கட்டுப்பாடு சுற்று :

பூதங்களின் பணி , முக்கியமாக 'மனிதன் ' எனப்படும் கல்லீரல் பணி - பரபரப்பு மிகுந்து வேகமாகச் செயல்படத் தூண்டும்போது 'உயிர் ' ஓட்டம் தன் வேகத்தை இரட்டிப்பு செய்து , பூதங்களில் ஒன்று விட்டுத் தாண்டும் நிலை உருவாகிறது.
       இயல்பு : கல், தீ, மண், நுரை, நீர்.
  கல் - தீ விட்டு மண் தொடல் -> இரத்த அழுத்தம் 
மண் - நுரை விட்டு நீர் தொடல் -> மூட்டு வலி 
நீர் - கல் விட்டு தீ தொடல் -> தோல் அரிப்பு ....
        இங்கு உயிர் சுழற்சி வேகம்  '2X ' ஆகும் . இருமதி வேகம் . 
இத்தகைய நோய்கள் மனிதனின் பரபரப்பு தீரும் வரை "தீரா " நோய்கள். மீண்டும் வரும். வர வாய்ப்பு உண்டு என்பதுவே விளங்கிக் கொள்ள வேண்டும். 
(5) எதிர்க் கட்டுப்பாடு சுற்று : 
பூதங்களின் பணி , முக்கியமாக 'மனிதன் ' எனப் படும் கல்லீரல் பணி - உடலில் காலின் அதிக 
வேலை ( நீண்ட தூர நடை, நீண்ட நேர நடனம் ) காரணமாக அல்லது கல்லீரல் (=மனித அடி மனம் ) பாதிப்பு அடைந்திருந்தாலோ , விரைந்த குணம் வேண்டி , அதி விரைவாக '3 X ' வேகம் செல்லுகிறது. ( இது '-2X ' எனவும் பொருந்தும் என்பதால்  எதிர்க் கட்டுப்பாடு சுற்று எனக் கூறுவர் ) மெய்யாக இது மும்மதி - மூன்று மதி வேக இயக்கம்.
எ. கா. அதி விரைவில் ஓடும் கார் சக்கரம் , எதிர்த் திசையில் சுழல்வதாகத் தெரியும்.
இங்கு பின்னே உள்ள பூதம் இழுக்கப் படுவதால் 'கவரும் ' சுற்று ஆகிறது.
      கல் -தீ விட்டு , மண் விட்டு, நுரை தொடல் - பாத வலி 
      நுரை -நீர் விட்டு , கல் விட்டு, தீ தொடல் -வறட்டு இருமல் 
      தீ - மண் விட்டு , நுரை விட்டு, நீர் தொடல் - மாரடைப்பு 
     நீர் -கல் விட்டு, தீ விட்டு, மண் தொடல் - குதி கால் வலி 
இங்கு உயிர் சுழற்சி வேகம் மூன்று மதி என்பதால் , அறிகுறிகளில் செய்யும் தீர்வு தற்காலிகமே .
அதன் காரணமான நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல் 'பூதம்' வலுவாகும்  வரை நோய்  தீராது . 
எ. கா. குதிகால் வலிக்கு மூலம் 'நீர் பூதம்' . குதிகால் வலி மட்டும்  தீர்த்தால் , நீர் பூதம் தன் வலுவின்மையை வேறு  இடங்களில், வேறு வழிகளில் காட்டும். (1) நீர்க் கட்டிகள் (2) இடுப்பு வலி (3) கழுத்து வலி (4) மூட்டு வலி (5) மூட்டுத் தேய்மானம் ......
             எனவே, நோயுற்ற - வலிவு குன்றிய பூதங்களை அடையாளம் காணவும் , தீர்வு  காண 
 உதவுவதுமே   இந்நூல் முயற்சி . புள்ளிகள், மற்றும் அடிப்படை விளக்கத்திற்கு முதல் புத்தகம் உதவும்.
எச்சரிக்கை : இந்நூல் படிப்பதற்கு முன்னதாக நீங்கள் ஓர் உறுதி கொள்ள வேண்டும். நான்,  நீங்கள் எனும் சொற்களைப் பாராட்ட மட்டுமே பயன் படுத்த வேண்டும்,(  அதில் நோய் தோற்று உள்ளது ) மனிதர் குறை கூறாது, பூதங்களின் குறை மட்டுமே கூற வேண்டும். 
தொடரும்.

Tamil muraiyil acupuncture-2/-mukavurai

ஐம்பூத நோய் விளக்கம் - நூல் ஆசிரியர் உரை 

என் ஆர்வம் :
        அக்கு பங் சர் மருத்துவம் கற்பித்தல் எனும்போது , புள்ளியின் இட விளக்கம் , அப்புள்ளியின் மருத்துவப் பயன்கள் கூறப் படுகின்றன. அடுத்து , கையில் நாடி பார்த்து, பூதங்களின் கூடுதல், குறைவு கண்டு ஏற்ற இறக்கங்களைச் சரி செய்வதற்கு நான்கு சுற்றுக்களை அறிமுகம் செய்வர்.
கூடவே, கை நாடி பார்க்க காலை ஏழுமணிப் பொழுதே  உகந்தது என்பர். எளிய வழி காண ஆர்வம் கொண்டேன். நான்கு சுற்றுக்களின்  புதிர் அவிழ்ப்பே  இந்நூல் . ஏன் எனக் காரணம் கேட்பின் , துடிக்கும் ஒவ்வொரு அக்கு பங் சர் புள்ளியும் ஒவ்வொரு நாடியே  எனும்  நுண் கருத்தே.  அந் நாடியே , சுற்றையும் , பல  பேருண்மை களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. 
கேட்போர் ஆர்வம் :
          என்னுடைய முதல் புத்தகம் , ' தமிழ் முறையில் அக்கு பங் சர் ' வெளியான பிறகு (முதல் வெளியீடு - 2015) நிறைய அலை பேசி அழைப்புகள் வந்து பாராட்டியுள்ளனர் . புத்தகத்தின்  வெளியீட்டுரை  you tube : Tamil  muraiyil acupuncture  வெளி வந்து உலகம் முழுவதும் பலரும் பாராட்டி , நூல் கேட்டு வாங்கி உள்ளனர்.
         மனம் என்ற கருத்து பலரால் மேலும் மேலும் கேட்கப் பட்டது ; வரவேற்கப் பட்டது . மனம் பற்றி மேலும் கூற முடிவு செய்தேன். அக்கு பங் சர் படிக்க பலர் ஆர்வம் கொண்டு வழி கேட்டு வந்த மின் - அஞ்சல்கள் பல. 
நூல்  அடிப்படை :
          முதல் புத்தகத்தில் உடல் அக்கு பங் சர் புள்ளிகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று 
எழுதிக் கொண்டு இருந்தேன்.  ஆனால் பெரி கார்டியம் எனும் ஓட்டத்தை 'மனம்' என்று கூறாமல் விளக்க முடியாததை உணர்ந்தேன். அதே போல் இந்த புத்தகத்தில் மனப் புள்ளிகள் , நான்கு சுற்றில்  ஐம்பூதப் புள்ளிகள் (உடல் + மனம் சார்ந்தவை ) எனக் கூறவே புகுந்தேன். 
         எல்லாம்  எழுதி முடித்து விட்டு , எந்த சொல்லை விரிவாக அடுத்த புத்தகத்தில் விளக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது கடைசி அத்தியாயத்தில் ' பூதங்களின் சதுக்கச் சிற்பம் ' 
என்பதில் அந்த சொல் விளக்கம் அவசியம் ஆகி விட்டது. 
          ---------அது   - " உயிர் "
(1) ஒவ்வொரு பூதமும் தன்  வலுவில் அமைதியாக இருக்கின்றன. இப்போது உயிர் சுற்றும் வேகம் '0' -சுழி .
(2) அடுத்து ஒரு பூதம் தன் வலு மிகுந்து  ஒரு செயல் புரிவதற்காக அடுத்தடுத்து தாவி , வேலைமுடிக்கிறது .  அது  அ , ஆ, ....ஒ , ஓ  என ஐம்பூதச் சுற்று . இதன் வேகம் 'X ' என்போம் . 
தூண்டும் வலுவில் உயிர் சுழற்சி  வேகம் '  X  '  X = மதி  என்க 
(3) அடுத்து ஒரு பூதம் தன் வலுக் குறைய ,  வேலை செய்ய வேண்டித் தாய் பூதத்திடம் ' கேட்டுப் ' பெறுகிறது . இங்கு உயிர் சுழற்சி வேகம் ' -X ' எதிர் மதி  என்க . 
( அதாவது  ஓடாத சக்கரத்தை சற்றே பின்னுக்கு இழுத்து விடுவது போல. உண்மையில் அக்கு பங் சரில் இதுதான் மருந்து எனக் கூறப் பட வேண்டும். கேட்கும் வலிமை மந்திரம் ஆகும். ) 
தொடரும். 

Saturday, 16 January 2016

Tamil muraiyil acupuncture-2/10.0

10.0 ஐம்பூதம் காப்பாற்ற பத்துக் கட் டளைகள் .

           ஒவ்வொரு பூதமும் மனமாக முதலில் உள்ளது. பிறகு உடலாகக் கண்ணுக்குத் தெரிகிறது.
மனச் செல்வம் என்பது காணாக் காசு ( unseen money = virtual money held )
உடல் செல்வம் என்பது கைக் காசு ( cash Deposit in hand ) 
இனி பட்டியல் :
       பூதம்               முதன்மை           காணாக் காசு             கைக் காசு 
-0- சிறுநீரகம்         உயிர் முதல்       நம்பிக்கை வலு          நீர்த் தன்மை வலு 
-1- கல்லீரல்         மனிதன் முதல்     இரக்க வலு              ஓய்வு, உறக்க வலு 
-2- தீ ஈரல்            மனம் முதல்         மனத் தூய்மை  வலு         உடற்பயிற்சி வலு 
-3- மண்ணீரல்      உடல் முதல்         நல்லெண்ண வளர்ச்சி வலு    அறுசுவை, ஏழ் வண்ண உணவு வலு 
-4- நுரை ஈரல்     நலம் முதல்           மகிழ்ச்சி உணர்வு வலு     யோகப் பயிற்சி வலு 
           ஒவ்வொன்றிலும் பத்து மதிப்பெண் வைத்துக் கொண்டால் , விலை மதிப்பற்ற மனிதரே,
நீங்கள் 100 - க்கு எவ்வளவு ? அதுவே நலத்தின் அளவு. 

பாடல் :             காணாக் காசு - ஐம்பூத மனச் செல்வம் 

                நல்லதோர்     நம்பிக்கை 
                       நலமாக்கும்    சிறுநீரகம் 
                 வல்லதோர்      இரக்கம் 
                       வளமாக்கும்      கல்லீரல் 
                 கொள்ளும்        மனத் தூய்மை 
                       கொண்டாடும்     தீ பூதம் 
                  அள்ளும்          நல்லெண்ணம் 
                        அழகாக்கும்      மண் பூதம் 
                  துள்ளும்        மகிழ்வுதான் 
                              தூக்கிவிடும்      நுரை பூதம்  ............40
               கைக் காசு - ஐம்பூத மனச் செல்வம் 
               நீர்த் தன்மை        உணவாலே 
                    நெடு வாழ்வாம்         நீர் பூதம் 
              சீர் ஓய்வு          செவ்வுறக்கம் 
                   செழிப்பாக்கும்        கல் பூதம் 
               நேர் அசைவு     நிலைப் பயிற்சி 
                       நிமிர்த்தும்           தீ பூதம் 
               தேர் சுவையும்       தெளி வண்ணமும் 
                     தெம்பாக்கும்           மண் பூதம் 
                வேர் கொள்ளும்        யோகம்தான் 
                      விரிவாக்கும்      நுரை பூதம் ..................50
                                                 ஆசான் . ஆ. மதி  யழகன். 
ஆய்வும், எழுத்தும் :
ஆசான் .ஆ. மதி யழகன் . 
அறி. இ . , கல். இ . , அக்கு பட்டயம் , 
உயர்நிலை  அக்கு மருத்துவம் . 
Researched  & written    by 
A . MATHIYALAGAN . B . Sc; B.Ed,
Dip.in acu., M. D. (acu)
E mail - 6mathi@gmail.com
You tube : Tamil muraiyil acupuncture
Face book: Mathiyalagan Arumugam
        -------THE END----------

Tamil muraiyil acupuncture -2/9.0

9.0 நல வாழ்வு பெற ஐம்பூத சிற்பங்கள் .

ஒவ்வொரு பூதத்தின் அனைத்து சுற்றுகளையும் கருத்தில் கொண்டு , அதன் மைய விரிவு அமைப்பை  இங்கு சதுர வடிவில் அமைத்து உள்ளேன். வட்ட வடிவிலும் அமைக்கலாம்.
சதுர வடிவில் படிகளோடு அமைத்தால்  முப்பரிமாண சிற்பம். இங்கு கட்டங்கள் வடிவில் தரப் பட்டுள்ளது . அடிப்படை  இங்கு தரப் பட்டுள்ளது. 
அமைப்பு : 
        ஒவ்வொரு பூதத்தின் மையத்தை உடல் மற்றும் மனம் ஆகவே எடுத்துக் கொள்ளுதல் 
(1) முதல் சதுரத்தில் நான்கு பகுதியாகா ப்  பிரித்துக் கொண்டு ,
          இடம் மேல் -> உடல் தேவை ; இடம் கீழ் -> மனம் தேவை 
          வலம் மேல்  -> உடல் குழப்பம் ; வலம் கீழ் -> மனக் குழப்பம்  குறித்தல் 
(2) எப்பொழுதும் இடம் + , அறிவின் ஆட்சி ; வலம் - , உணர்வின் ஆட்சி 
(3) அடுத்த சதுரத்தில் உயிர் வலு 
                             +            -
                     யின் புள்ளி        நோய்கள் 
                     யாங் புள்ளி         நோய்கள் 
(4) அடுத்த சதுரத்தில்  -3-வது - தூண்டும் வலு - பூதத்தின் ஊட்ட வலு 
(5) -4- வது சதுரத்தில் - கேட்கும் வலு - பூதத்தின் மருந்து வலு 
(6) -5 -வது சதுரத்தில் - கட்டுப்பாட்டு நிலை - குறை நிலை - தீரா வகை 
(7) -6 -வது  சதுரத்தில் - கவரும் நிலை - அதி வேக நிலை - நிறை நிலை - மீட்சி நிலை .
         இந்த வகையில் 5 பூத சிற்பங்கள் - படங்கள் காண்க. 
9.1- கல்லீரல் சதுக்கச் சிற்பம் 
9.2 - தீ ஈரல்  சதுக்கச் சிற்பம் 
9.3 - மண்ணீரல் சதுக்கச் சிற்பம் 
9.4 -நுரையீரல்  சதுக்கச் சிற்பம் 
9.5 - நீர் ஈரல்   சதுக்கச் சிற்பம் 
         புள்ளிகளைத் தொட்டுப் பார்த்தும் , வலியறிந்து தூண்டியும், நோயில் இருந்து மீளுங்கள் . 
நோய் மீண்டும் வராது இருக்க படி நிலை அறிந்து நடவடிக்கை எடுங்கள்.

எந்த ஒரு புள்ளிகளுக்கான நடைமுறை விளக்கங்களையும் அறிய முதல் புத்தகம் ' தமிழ் முறையில் அக்கு பங் சர் ' கண்டு பின்பற்றவும்.

இப்பொழுது, நீங்களும் ஒரு மருத்துவர்தானே ? 
தொடரும் .