மனம் செய்யும் உடல் ஆட்சி.
மனதின் செல்வாக்கு :
'மனிதன் ' என்பதன் பொருளே , மனத்தை உடையவன் என்பதாகும். நம் ஒவ்வொரு தெரிந்த செயலிலும் , தெரியாத நிலையில் செய்யும் செயலிலும்கூட , மனம் பங்கு கொள்கிறது.
(1) 'திரும்பு' என்று பிறர் சொன்னது கேட்டாலும், அல்லது தானே விரும்பினாலும் தலையை நாம் திருப்புகிறோம். இது நடப்பது இயக்கு தசையால், உடலின் மீது விளைச்சல்.
(2) அதிருமாறு அல்லது திடீரெனக் கவரும் வகையில் , ஒலி ஓரிடத்தில் கேட்டால் தலை தானே திரும்பும். இது நடப்பது இயங்கு தசையால் உடலின் மீது விளைச்சல்.
மன விளக்கம் -பித்தம் -அறக்கோடு
அடிமனம் (Liv -கல் பூதம் ) , மேல் மனம் (P - பெரி கார்டியம் ) சேர்ந்த மனம் விழிப்புணர்வு உடைய மனம் . இதன் திடமான அமைப்பு இயக்கு தசைகளை , விருப்பப்படி அசைக்கிறது.
கட்டளை இன்னும் கீழேயிருந்து வந்தால், இயங்கு தசையும் அசையும்.
இங்கு 1-> 2 பச்சை நிறத்தில் கல்லீரல் கோடாகக் காட்டப் பட்டுள்ளது. இது இப்பிறவியில் பதிந்த விருப்பு (+), (-) எனும் இரட்டையால் இயக்கப்படும் அறக் கோடு ஆகும்.
இதன் அதிகப் படியான சிந்தனைகள் உடலில் உண்டாக்கும் விளைவுகள் :
(1) பித்தப்பை சுரப்பை அதிகமாக்கும். (பித்தப்பை எடுத்தல் பரிந்துரை செய்யப் படும் .)
(2) உறக்கத்தை சிந்தனையால் கெடுத்து கல்லீரல் புதுப்பிப்பு தடையாக்கும். (ஆள் மெலிதல் )
(3) சிந்தனை அதிகரிப்பால் , சுமை அதிகமாகி மறதி வரும். ( P 9 - பிட்யூட்டரி சுரப்பி பாதித்தல் )
(4) மன வலுக் கெடுதல் (P 8 - தைராய்டு சுரப்பி பாதிப்பு )
(5) மனதின் உண்ணும் ஆர்வம் குறைந்து செரிமானம் பாதிக்கும் . (P7- இன்சுலின் சுரப்பு பாதிப்பு
).தீ மண் - P 7, H 7 கெட்டதால் , மண் தீ Sp 2 வலி தொடர்ந்து இருப்பதால் , சர்க்கரை நோய் ப் பரிந்துரை கிடைக்கும்.
(6) உடல் மன சமானம் கெட்டு உறக்கம் கெடும். (P 6-உறக்கப் புள்ளி )
(7) மனம் சுருங்க, நுரையீரல் காற்றெடுத்தல் கெட்டு கை வலி வரும் (P 5- நுரைப் புள்ளி )
(8) மனதின் தன் சமானம் கெட்டு வலி P 4 நிற்கும் .
(9) மன வெப்பம் கூடிய நிலையில் நா வறட்சி (P 3- தீ கவரும் நீர் )
ஆகவே மனம் தொட்ட இடங்கள் அனைத்து பூதங்களும் ஆகும்.
எனவே, பூதங்கள் வழி நோய்த் தீர்வு என்று வரும்போது, ஊசி இடலில் முதல் ஊசி P - ல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment