இடம்
இந்தப் புத்தகத்தில்
அனைத்து நோய்களையும் ஐந்து பூதத் தலைப்புகளில் அடக்கி விடும் அறிவுக்கு உட்பட்ட விளக்கம் .
மனத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து பூத மன நோய்களை விளக்கம் செய்தல் .
ஒவ்வொரு பூத (மனம் +உடல் ) பாதிப்புகளுக்கு ஏற்ப (1) வலு ஏற்றும் இடங்கள் (2) ஊட்டம் தர வேண்டிய இடங்கள் (3) மருந்தாகும் இடங்கள் (4) குறையாகும் இடங்கள் (5) நிறையாகும் இடங்கள் . விரிவான பட விளக்கங்களுடன் . சுற்றுக்களின் முற்று ஆராய்ச்சி .
தமிழ் அக்கு பங் சரில் , மேலும் ஒரு புதிய அணுகு முறை , ஆய்வு . தமிழில் 3 d பெயர்கள்
மற்றும் காரணப் பெயர்கள் . எ . கா. Lu 11 - நுரை கல் - நுரை கட்டும் கல் - நுரை குறை -
(ஆக்சிஜன் குறைவினால் வரும் ) தலைவலிக்கான புள்ளி. இது போல் 60 புள்ளிகள் பெயர்கள்.
ஐம்பூத நோய்கள் விரிவடையும் பட விளக்கம் , சிற்ப வடிவில் - தீர்வுப் புள்ளிகளோடு .
வலம்
ஆசான் . ஆ. மதி யழகன்
தமிழ் முறையில் அக்கு பங் சர் எனும் இவரின் முதல் நூல் , முதல் பதிப்பு விரைவில் விற்றுத்
தீர்ந்தது . இந்தத் தலைப்பில் பேசிய வெளியீட்டு உரை யூ டியூபில் 6000 -க்கு மேல் பார்வையாளர்கள் தாண்டி , இன்றும் நாள்தோறும் 35 பேருக்கு மேல் பார்வையிடுகிறார்கள்.
மேலும் இவர், திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான் த . ச. தமிழனார் ஊக்கம் தந்த தமிழ்ப் படைப்பாளி மற்றும் பேச்சாளர் . அறிவியல், கணிதம் பயிற்றும் ஆசிரியப் பயிற்சி பெற்ற
ஸ்டேட் வங்கிக் காசாளர் (ஓய்வு ) . விஞ்ஞானச் சுடரில் ' அறுமுகி [Cube ] , ஆய்வும், தீர்வும் '
என ஆய்வுக் கட்டுரை வடித்தவர் . திருக்குறளுக்கு ஒருவரிப் பொருள் கூறும் 'குறள் சாறு '
படைத்தவர்.
அட்டை முன்
இது வரை நீங்கள் அறியாத மனம், உடல் மேலும் உயிர் குறித்த பேருண்மைகள் , தமிழால் தமிழில் , தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரப்படுகிறது.
-------அட்டை முடிவு --------
No comments:
Post a Comment