Wednesday, 6 January 2016

Tamil muraiyil acupuncture-2/7.1

மன வெட்டுப் புள்ளிகள் - மூலப் புள்ளிகள் -ஊற்றுகள் 

பெரிகார்டியத்தின் அனைத்துப் புள்ளிகளும் மனப் புள்ளிகளே. இவற்றை தமிழ் முறையில் அக்கு பங்சர் முதல் புத்தகத்தில் பார்த்தோம். ஐந்து பூதங்களின் ஓட்டங்களும் மனதை வெட்டும் இடங்கள் சிறப்பான பயனைத் தருகின்றன. நுண் மனம் என்று அழைக்கப் படும் மண் புள்ளியில் அனைத்தும் வெட்டுப்பட்டது போல் , நலிவு அல்லது நோயில் தேக்கம் காட்டுகின்றன. அந்த இடத்தில்  அனைத்து மூலகங்களும் ஆற்றல் எடுத்துக் கொள்வதால், அந்தப் புள்ளிகளை மூலப் புள்ளிகள் (yuan source points ) என்கிறோம். தமிழில் ஊற்றுப் புள்ளிகள் என்போம். நீண்ட நாள் நோய்களுக்கு சிறப்பாக செயல் படும்.
     கீழ்க் கண்ட ஓட்டங்களின் முதல் மூன்று நிலைகள் காண்போம்.
(1) கல் ஓட்டம் - Liv 1, Liv 2, Liv 3 
(2) தீ ஓட்டம் - P 9, P 8, P 7
                         H 9, H 8, H 7
(3) மண் ஓட்டம் - Sp 1, Sp 2, Sp 3
(4) நுரை ஓட்டம் - Lu 11, Lu 10, Lu 9
(5) நீர் ஓட்டம் - K 1, K 2, K 3 
 இவற்றில் மூன்றாவது  உள்ளவை  ஊற்றுப் புள்ளிகள். மண் மூலகம் நுண் மனமாகச் செயல் படுவதால் நுணுக்கமான மன பாதிப்புகள், உணர்வுகள் வயிற்றில் மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. முதலில் மண்ணின் ஓட்டம் இங்கு தேக்கம் .விளைவு - ஹீமோ குளோபின்  அளவு குறைதல். Sp 3- மண் தன் வலு - மண் ஊற்று தூண்ட (தோண்ட ) சரியாகும். 
 மண் மூலகம் ஒரு பொக்கிச அறை - வேண்டும் அளவு ஆற்றல் எடுக்கலாம். அதிகப்படியான ஆற்றல் இருப்பை அளிக்கலாம். மண் மூலகம் ஒரு சமையல் அறை , பிற மூலகங்கள் வந்து பசி தீர்த்துக் கொள்ளலாம் . இனி சில விளக்கங்கள் :
Sp 3 - மண் வலு உ - மண் ஊற்று  - வலி இருந்தால் இரத்த சோகை - சரி 
மேலும் நுண் மன சோகை என்பது மறைந்து உள்ளது.
Liv 3 - கல் கட்டும் மண் - கல் குறை - வலி இருந்தால் இரத்த அழுத்தம் -சரி 
மேலும் கல்லீரல் சோகை என்பது மறைந்து உள்ளது . ஓய்வு, உறக்கம் தேவை. 
P 7, H 7- மனம் + இதயம் வழங்கும் மண் - மண்ணின் ஊட்டம் - மன, இதய ஊற்று -
படபடப்பு, செரிமானமின்மை என்கிறோம். 
மேலும் மனம், இதயம் சோகை, வலு தேவை என்பதும் மறைந்து உள்ளது.
Lu 9 - நுரை கேட்கும் மண் - நுரை மருந்து - நுரை ஊற்று - இரத்தக் குழாய் அடைப்பு - சரி 
மேலும் காற்று (ஆக்சிஜன் ) எடுப்பதில் சோகை என்பதும் மறைந்து உள்ளது.
K 3 - நீர் கவரும் மண் - நீர் நிறை (wants compliment ) - நீர் ஊற்று - குதிகால் வலி - சரி 
மேலும் சிறு நீரகம் சோகை என்றும் பொருள் . பல், எலும்புகள் மெலிவு . நீர் வலு தேவை . 
தொடரும். 

No comments:

Post a Comment