யாங் ஓட்டத்தில் ஊற்றுப் புள்ளிகள்
எந்த ஒரு மூலகமும் , யாங் எனும் இறங்கும் நிலை ஓட்டத்தில், நுரை, நீர், கல் எனத் தாண்டி
தீ தொடும் முன்னர் மனம் 'ஐ ' வெட்டுகின்றன. கீழ்க் கண்ட புள்ளிகளைக் காண்க .
(1) குடல் ஓட்டம் : LI 1, LI 2, LI 3, LI 4,...
(2) மூ வெ ஓட்டம் : Tw 1, Tw 2, Tw 3, Tw 4,...
(3) சி குடல் ஓட்டம் : S I 1, S I 2, S I 3, S I 4,...
(4) பித்தப்பை ஓட்டம் : GB 44, GB 43, GB 41, GB 40,...
(5) இரைப்பை ஓட்டம் : St 45, St 44, St 43, St 42,...
(6) நீர்ப்பை ஓட்டம் : UB 67, UB 66, UB 65, UB 64,...
இவற்றில் நான்காம் புள்ளிகள் மூலப் புள்ளிகள் (YUVAN SOURCE points ) , தமிழில்
ஊற்றுப் புள்ளிகள். இவை நீண்ட நாள் நோய்களுக்கு பயன் தரும்.
(1) குடல் ஊற்று - LI 4- படம் காண்க
பயன்: உடலின் அனைத்து வலிகள், முன் கழுத்து வலிகள், மலச் சிக்கல், வயிறு நோய்கள் .
(2) Tw 4 - மூ வெ ஊற்று :
பயன் : மணிக்கட்டு வலி, கழுத்து வலி, காது கேளாமை , தோள்ப் பட்டை வலி
(3) S I 4 -சி கு ஊற்று :
பயன் : பெப்டிக் அல்சர், மணிக்கட்டு வலி, தலை வலி , மஞ்சள் காமாலை, கழுத்து இறுக்கம்.
(4) GB 40 - பித்தப் பை ஊற்று :
பயன் : வலி, கணுக்கால் வலி, கால் வலி, வாந்தி, பின்தலை வலி, கழுத்து வலி
(5) St 42 -இரைப்பை ஊற்று :
பயன் : பாத மேற் புற வலி , பாத வீக்கம், கணுக்கால் மூட்டு வலி, கால் வாதம், கால் தசை பலவீனம்
(6) UB 64 - நீர்ப்பை ஊற்று :
பயன் : தலைவலி, வலிப்பு, கீழ் முதுகு வலி, தலை கிறுகிறுப்பு , கால் வலி, கழுத்து பிடிப்பு ,
கழுத்து இறுக்கம், நீர் தொடர்பான நீண்ட நாள் நோய்கள் .
இனி படங்கள்
தொடரும்
No comments:
Post a Comment