Sunday, 3 January 2016

Tamil muraiyil acupuncture -2/6.4

6.4 எதிர்க் கட்டுப்பாடு சுற்று - கவரும் சுற்று -பின் வீச்சு 

தனிமங்கள் ஒன்று விட்டு த்  தாண்டுவது முன் வீச்சு , கட்டுப்பாடு சுற்று. இதுபோல் அவசர நிலையில், ஒன்று தாண்டி முன்னதாக சக்தி பெற்றால் , இது எதிர்க் கட்டுப்பாடு , பின் நோக்கிக் கட்டுப்பாடு  அல்லது பின் வீச்சு எனப்படும். இங்கு ஒரு பூதம்  தன் தாயின் தாயிடம் உதவி பெற்று  வலிமையாக இயங்குகிறது.
பட விளக்கம் :
படத்தில் காந்தம் லாட வடிவில் காட்டப் பட்டுள்ளது . லாடத்தின்  வளைவுப் பக்கம், பிடிக்கும் மூலகம் உள்ளது. துருவங்கள் முனையில் பிடிபட்ட மூலகம் உள்ளது.
 எ. கா. K 3 - குதிகால் வலி - கவரும் நிலை 
இது நோய் அல்ல. சிறுநீரகத்தின் குறைபாடு . உடலில் நீர்ச்சத்து சரிவர இயக்கம் இல்லாமல் , 
நீரகக் குறைபாடு உள்ளது. இங்கு சிறுநீரகம் தனக்கு முன் உள்ள நுரையிடம் ஆற்றல் பெறாது அதற்கு முன் உள்ள  மண்ணிடம் ஆற்றல் பெறுகிறது.
காரணங்கள் மூன்று :
(1) நடு பூதம் நுரை போதுமான வேலை செய்து காற்றின் வழி ஆற்றல் தரவில்லை . (யோகா தேவை ) (2) அதற்கு முன் உள்ள மண் பூதமோ உணவை வெளுத்துக் கட்டி சக்தி நிரம்பி உள்ளது. (பருமன் ஏறிக் கொண்டு இருக்கும் ) (3) மண்ணின் வலிமைக்கு நிகராக சிறுநீரகமாகிய தானும் வலிவு பெற்றால்தான் உடலைக் காப்பாற்ற முடியும். 
      எனவே பின்னே பொய் , திருடன் மூட்டையை தன் முதுகில் சுமந்து ஓடுவது போல , நீர் மண்ணைக் கவர்ந்து ஓட்டம் நிறைவு செய்கிறது. இதன் விளைவு (1) சிறுநீரக வேலை கெடுவதால் வலி இருக்கும். (2) மண் இழுக்கப் படுவதால் பசி இருக்காது. கண்ட நேர உணவு, ஆற்றல் செலவு குறைந்து உடலில் வரவாகி ப் பருமன் ஏறும். 
      கவரும் சுற்றால் வரக் கூடிய நோய்கள் மீட்சித் தன்மை உடையவை. பழக்க வழக்கங்களை நோயாளி உணர்ந்து சரி செய்தால்தான் விடுபட முடியும். 
கவரும் புள்ளிகள் பெயர்ப் பட்டியல் : 
------கவரும் புள்ளிகள் - நிறை புள்ளிகள் (complimentry points ) 
உயிர் வரிசை ---விளி ---குறியீடு ---3 d பெயர் ----பயன் வழிப் பெயர் 
அ        கல் நிறை ------Liv 4 -----கல் கவரும் நுரை ---கணுக்கால் வலி நீக்கி 
ஆ      பித்தப்பை நிறை -GB 44---பித்தப்பை கவரும் நுரை --கால் விரல் வலி 
இ       மன நிறை ------P 3---தீ (மனம் ) கவரும் நீர் -----நா வறட்சி 
இ      இதய நிறை ----H 3----தீ (இதயம் ) கவரும் நீர் --மாரடைப்பு தடுப்பு 
ஈ       மூ வெ நிறை --Tw 2---மூ வெ கவரும் நீர் ----மனச் சுமை குறைப்பு (மோதிரம் )
ஈ      சிறு கு நிறை ---S I 2 ----சிறு குடல் கவரும் நீர் ---கைவிரல் வலி , தோள்ப் பட்டை வலி 
உ        மண் நிறை ----Sp 1 ----மண் கவரும் கல் ----செரிமானத் தலைவலி 
ஊ     இரைப்பை நிறை --St 43--இரைப்பை கவரும் கல் ---சளி நீக்கம் 
எ      நுரை நிறை -----Lu 10 ---நுரை கவரும் தீ ----வறட்டு இருமல் 
ஏ     குடல் நிறை ------LI 5 ---குடல் கவரும் தீ -----மலச்சிக்கல் 
ஒ     நீர் நிறை --------K 3 ---நீர் கவரும் மண் -----குதிகால் வலி 
ஓ    நீர்ப்பை நிறை -----UB 40 --நீர்ப்பை கவரும் மண் --முதுகு வலி ப் புள்ளி 
நோய்ப் பட்டியல் 
 --மீட்சி நோய்கள் (1) பாத வலி, கணுக்கால் வலிகள், கணுக்கால் மூட்டு வலிகள் , கால் விரல் வலிகள் (2) முழங்கை வலி, தொண்டை, நாக்கு வறட்சி, இதயப் படபடப்பு , நெஞ்சு வலி, மாரடைப்பு நிலை  காய்ச்சல், காது  அடைப்பு , கை விரல் வலி, தோள்ப் பட்டை வலி  (3) செரிமானத் தலை வலி, சளி நீக்கம்  (4) வறட்டு இருமல், தொண்டை வறட்சி, கைக் கட்டை விரல் வீக்கம், விரல் வலி, கை மரப்பு , மலச்சிக்கல், தூசி அலர்ஜி, மணிக்கட்டு வலி (5)  குதிகால் வலி, கணுக்கால் வலி, பிறப்புறுப்பில் அலர்ஜி , மூட்டு வலி, மூட்டு வீக்கம், முதுகு வலி  
தொடரும் ஆ. மதி  யழகன்.  

No comments:

Post a Comment