Friday, 1 January 2016

Tamil muraiyil acupuncture -2/ 6.2

6.2 எதிர் ஆக்க சுற்று 

ஆக்க சுற்று தவிர்த்த பிற மூன்றில் எதிர் ஆக்க சுற்று, கட்டும் சுற்று, கவரும் சுற்று , தனிமங்கள் 
தன் ஓட்டப் பாதையிலேயே பிறவற்றின் சக்தியைப் பெற்று விடுகின்றன. 
ஒப்பீடு : ஒரு நாட்டுக்குச் செல்லாமலேயே தன் நாட்டு தூதரகம் மூலம்  'பணி ' யை முடித்துக் கொள்வது. மேலும் ஒப்பீடு : தாயைத் தேடாமல் தன்னிலேயே தாய் காண்பது அமைதியே. 
சிவம் தன்னுள் சக்தி காண்பது அமைதியே. 
பட விளக்கம் : 
 எதிர் ஆக்க சுற்று என்பது கேட்கும் வலு. கேட்கும் வலுவில் கோடரி காட்டப் பட்டுள்ளது.
கேட்கும் வலுவில் கேட்பவரே பயன் பெறுகிறார்.
குறிப்பு : இங்கு தாயிடம் இருந்து மகனுக்கு வருகிறது, மகனிடம் அதிகம் உள்ளது தாய்க்கும் வரும். எனவே சமன் புள்ளி எனவும் விளக்கலாம். 
             இங்கு 'கேட்டல் ' என்பது சரியான இடத்தில் , சரியான காலத்தில், சரியான ஆளிடம் கேட்பதற்கு ஒப்பாகும். கேட்டல் என்பது ஒரு மந்திரம். இங்கு இது மருந்து. எனவே கேட்கும் வலுப் புள்ளிகளை மருந்துப் புள்ளிகள் என்போம்.
           மந்திரமும், மருந்தும் அதிகம் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் , தன்னுடைய நேர் ஓட்ட வேலையை விட்டு, தனிமம் (பூதம் ) எதிர்த் திசையில் பயணிக்க வேண்டி நேருகிறது. இனி மருந்துப் புள்ளிகள் காண்போம். 
     ----பெயர்ப் பட்டியல் - மருந்துப் புள்ளிகள் ------
உயிர் வரிசை ---விளி ----குறியீடு -----3 d பெயர் ----பயன் வழிப் பெயர் 
அ       கல் மருந்து ------------Liv 8 ----கல் கேட்கும் நீர் ---குளிர்ச்சி 
ஆ    பித்தப்பை மருந்து ------GB 43----பித்தப்பை கேட்கும் நீர் --பக்கவாட்டு வலி நீக்கி 
இ    மனம் , இதய மருந்து ----P 9, H 9  ---தீ கேட்கும் கல் ---நினைவுத் திறன்,  மாரடைப்பு 
ஈ     மூ வெ , சி கு மருந்து ----Tw 3,  S I 3 ---மூ வெ , சி கு கேட்கும் கல் -கழுத்துவலி, பால் 
உ    மண் மருந்து  ------------Sp 2 -----மண் கேட்கும் தீ ---சர்க்கரை நோய் 
ஊ    இரைப்பை மருந்து -----St 41-----இரைப்பை கேட்கும் தீ -- இரத்த ஓட்ட சீர் 
எ       நுரை மருந்து --------Lu 9 -----நுரை கேட்கும் மண் ---- இ. குழாய் அடைப்பு நீக்கி 
ஏ       குடல் மருந்து --------LI 11 -----குடல் கேட்கும் மண்  --- நோய் எதிர்ப்பு சக்தி 
ஒ     நீர் மருந்து  -----------K 7 ------நீர் கேட்கும் நுரை ----- சிறுநீரகக் கல் நீக்கி 
ஓ      நீர்ப்பை மருந்து -----UB 67 ---நீர்ப்பை கேட்கும் நுரை  --- கழிவு நீக்கி 
        கேட்கும் வலுவில் தடங்கல் சற்று அழுத்தமாகப் பதிந்து உள்ளது என்பதாகும்.  இவற்றை சிறு நோய்கள் எனலாம்.  இப்புள்ளிகள் தூண்ட ,
(1) அறிகுறிகள் மறையும், (2) ஓட்டப் பாதை சரியாகும். (3) கொடுக்கும்மூலகம், வாங்கும் மூலகம் இரண்டும் சரியாகும். (4) சொல்லாத நோய்களும் தீரும்.; வரும் நோய்களும் தடுக்கப் படும். (5) இந்தப் புள்ளிகள் ஐந்து விதமான மன நோய்களுக்கும் கூட பயன் தரும்.
     நோய்கள் தீரும் வரை மேலே உள்ளவை மட்டுமே கூடப் போதும். 
-------நோய்ப் பட்டியல் ----------
(1) எரிச்சல் (2) மஞ்சள் காமாலை (3) பக்க வாட்டு வலிகள் (4) தலை வலி, நினைவு சக்தி (5) வாதம் (6) கழுத்துப் பிடிப்பு, தாய்ப் பால் சுரப்பு (7) பசி தூண்டல் - சருக்கரை நோய் (8) இரத்தக் குழாய் சீர் (9) நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் (10) சிறுநீரகக் கல் (11) கழிவுகள்  தேக்கம்.   
 தொடரும்.

No comments:

Post a Comment