6.3 கட்டுப்பாடு சுற்று
இந்த சுற்றை கட்டுப்பாடு நிலை எனலாம். இங்கு ஒரு பூதம் அடுத்த பூதம் விட்டுத் தாண்டி அவசரமாக , பரபரப்பாக அதற்கும் அடுத்ததை நாடுகிறது.
பரபரப்பு ஓட்டம் இப்படி 1, 3, 5, 2, 4, 1, 3, 5, 2, 4, ...இந்த ஓட்டத்தை கை விரல் முனைகளில் கூறலாம். வர்ம முறைப்படி,
(1) கட்டை விரல் - தீ பூதம்
(2) ஆள் காட்டி விரல் - நுரை பூதம்
(3) நடு விரல் - கல் பூதம்
(4) நான்காம் விரல் - மண் பூதம்
(5) சுண்டு விரல் - நீர் பூதம்
இப்போது , இடது கை கட்டை விரலை இதயத்தில் வைக்க. ஆள் காட்டி விரல் நுரையில், நடு விரல் கல்லீரலில், நான்காம் விரல் மண்ணில் (வயிற்றுப் பகுதி ) , சுண்டு விரல் நீர் நோக்கிக் காட்டவும். You have matched .
கையை அப்படியே வைத்திருங்கள்.
முன் வீச்சு - விரைவு முன் கட்டுப்பாடு - பரபரப்பு தற்காப்பு நிலை. - கட்டல்
கட்டை விரலில் இருந்து ,
(1) தீ நுரை கட்டும் (கை வலி - P 5, H 4 )
(2) நுரை கல் கட்டும் ( மயக்கம் - Lu 11 )
(3) கல் மண் கட்டும் (இரத்த அழுத்தம் - Liv 3 )
(4) மண் நீர் கட்டும் ( மூட்டு வலி - Sp 9 )
(5) நீர் தீ கட்டும் ( அரிப்பு - K 2 )
கையை அப்படியே வைத்திருங்கள்.
பின் வீச்சு - விரைவு பின் கட்டுப்பாடு - கடின உழைப்பு தற்காப்பு நிலை - கவர்தல்
நடு விரல் கல்லீரலில் இருந்து தொடங்குவோம்.
(1) கல் நுரை கவரும் ( கணுக்கால் வலி - கொலுசுப் புள்ளி - Liv 4 )
(2) நுரை தீ கவரும் ( வறட்டு இருமல் - Lu 10 )
(3) தீ நீர் கவரும் ( நா வறட்சி , மாரடைப்பு தடுப்பு P 3, H 3 )
(4) நீர் மண் கவரும் ( குதிகால் வலி K 3 )
(5) மண் கல் கவரும் ( செரிமானத் தலைவலி Sp 1 )
பட விளக்கம் : கட்டும் சுற்று படத்தில் கயிறு கட்டி இழுப்பது போல் காட்டப் பட்டுள்ளது. இதில் முயற்சி எடுக்கும் மூலகம் தன் குறைநீக்க செயல்படுவதாகவே பொருள். கட்டப் படும் மூலகம் தன் முழு வீச்சில் செயல் பட முடியாது. .கட்டுப்பாட்டில் இருக்கும்; சமநிலை பேணும்.
எ. கா. Liv 3 - கல் கட்டும் மண் - கல் குறை - இரத்த அழுத்த புள்ளி.
தாண்டும் காரணங்கள் மூன்று.
(1) நடு பூதம் மனம் + இதயம் தேக்க நிலை
(2) மூன்றாம் பூதம் மண் மெலிவாகக் கூடாது.
(3) தனக்கு குறை வராமல் காப்பற்றிக் கொள்ள -தன்னில் பயன்படாது
இருக்கும் மிகுதியை குறைத்துக் கொள்ள - வேகத்தில் இயங்க வேண்டிய கட்டாயம் .
இங்கு நோய் என்பது கல்லீரல் குறைபாடே. ஓய்வு, உறக்கம் இல்லாத நிலை. மனதில் பரபரப்பு எண்ணங்கள் குவியலாக. எனவே இது போன்ற நோய்கள் முற்றிலும் குணமடைய உறுதி கூற முடியாது. தொடர் கவனிப்பு தேவை. நோயாளி உணர்ந்து தகுந்தபடி செயல் பட்டால் தீரா நிலை மாறும்.
தொடரும்.
No comments:
Post a Comment