8.3 சக்கரங்களில் ஐம்பூதம்
உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதை அறிவீர்கள். அவற்றில் தலையில் உள்ள இரண்டு சக்கரங்கள் உயிருக்கு வழியும், ஒளியும் ஆனவை.
தலை உச்சிப் புள்ளி மையம் உடைய வட்டம் - சகஸ்ரராம் - உயிர் வழி சக்கரம்
புருவ மத்தி - நெற்றிக் கண் - ஆக்ஞை - உயிர் ஒளி சக்கரம்
மீதி உள்ள ஐந்து சக்கரங்கள் ஐந்து பூதங்கள் பண்பு உடையவை .
தொண்டைப் பகுதியில் உள்ள விசுக்தி - உயிர்க் கல் சக்கரம் ( அடிமன இயலாமை,
தன்னம்பிக்கை குறைவு, தைராய்டு சிக்கல்கள் )
மார்க் காம்புக் கோட்டு மையத்தில் உள்ள அனாகதம் - உயிர் நுரை சக்கரம் ( துக்க நோய்,
சூழல் பாதிப்பு )
நாபியில் உள்ள மணிப் பூரகம் - உயிர்த் தீ சக்கரம் ( மேல் மனக் குறைபாடு வயிறைப்
பாதிக்கும் .
மர்மக் குறி சற்று மேல் உள்ள புள்ளியிடம் -சுவாதிட்டானம் - உயிர் நீர் சக்கரம் ( பாலியக்கக் குறைபாடுகள் , ஆண்மைக் குறைவு )
மர்மக் குறி சற்றுக் கீழ், ஆசன வாய் மேலாக உள்ள மூலாதார் - உயிர் மண் சக்கரம்
( நுண் மனக் குறைபாடுகள் , பெண்மை சார்ந்த நோய்கள் , கருப்பை குறைபாடுகள் )
எதிர்க் கட்டுப்பாடு சுற்று :
மேலிருந்து கீழாக சக்கரங்களின் பூதங்கள் ஆவன ,
கல், நுரை, தீ, நீர், மண் அதாவது
1, 4, 2, 5, 3, 1 ....எதிர்க் கட்டுப்பாடு சுற்று அல்லது கவரும் சுற்று
மீண்டும், மீண்டும் வரும் மீட்சி சுற்று.
கவரும் சுற்று இரண்டு, இரண்டாகத் தாண்டி மூன்றாவதில் உள்ள நான்காம் நிலையைத்
தொடுகிறது எனவும் கூறலாம். கட்டுப்பாடு சுற்று ஒன்று விட்டுத் தாண்டுகிறது. விரைவு சுற்று என்கிறோம். எதிர்க் கட்டுப்பாடு சுற்றில் இரண்டு விட்டுத் தாண்டுவதால் அதி விரைவு அல்லது
இருமை வேகச் சுற்று எனலாம்.
மகிழுந்து விரைவாக ஓடும்போது , சக்கரம் பின்னோக்கி ஓடுவது போல் தோன்றுவதை ஒப்பிடலாம்.
எனவே, கல், நுரை, தீ, நீர், மண் என்ற அமைப்பில் REN ஓட்டத்தில் கல் நோக்கி இழுக்கப் படுவதால் , கழுத்தில் உள்ள உருத்திராட்சம், மணி ( நீலம் ) , அனைத்து சக்கரங்களையும் நன்கு இயக்கும் . விரைவுச் சுற்று அல்லவா ?
கழுத்து அணிகள் அனைத்தும் ஐம்பூத அணிகள். மாலையும் அதுவே.
தொடரும்.
No comments:
Post a Comment