Saturday, 30 January 2016

Tamil muraiyil acupuncture-2/ manak kaappu

2.6 மனக் காப்பு 

மனமும் சூழலும் :
    சூழ்நிலைக் கேற்ப வும் மனப் பாம்பு ஆடும். கெட்ட சூழல் தவிர். அல்லது மனம் அற்று  இரு. 
மனப் பாம்பு உண்ணும் உணவோடு, அதில் ஏற்றப் பட்ட உணர்வையும் சேர்த்து உண்ணும். உணவில் நல்ல உணர்வு சேர் ; கொடு ; பெறு .
கொடுப்பவர் :
       ஒருவர் உணவு சமைக்கும் போதும் , உணவிடும்போதும் அவர்தம் உணர்வும் , கையாளுகை 
மற்றும் சூழல் நெருக்கத்தாலும் உணவில் இறங்கும் . மனிதனைச் சுற்றி (1) மன உணர்வுகள் ஓர் ஆராவாகவும் (2) அதைச் சுற்றி உயிர்த் தன்மை அதைவிடப் பெரிய ஆராவாகவும் இருந்து சுற்றி உள்ள பொருள்களையும் , மனிதர்களையும் பாதிக்கின்றன. தீயவர் சூழல் தீமை தரும் எண்ணம் ஏற்றும். நல்லவர் சூழல் நன்மை தரும் எண்ணம் ஏற்றும்.
      நன்மை தீமையும் ஆகலாம்; தீமை நன்மையையும் ஆகலாம் எனில் நடுவு நிலை கொள்ளவும் தெரிவது ஒரு சிறந்த காப்பாகும். 
பெறுபவர் :
       நேசம் மிகுந்தவர்கள் சிறந்த ஊடகமாக இருந்து கொடுக்கப் படும் உணர்வை உள்ளே வாங்குகின்றனர். எனவே அன்பின் உணர்வு, நல்ல எண்ணம், இவை உள்ளத்திலிருந்து வருவோரிடம் மட்டும் பழக வேண்டும்; உணவும் உண்ண வேண்டும். நாமும் அந்த அன்பு , நல்லெண்ணத்தையே உள்ளத்தில் இருந்து வெளிப் படுத்த வேண்டும். 
    இந்த கொடுக்கல் வாங்கலில் நமது உடல்நலம், மற்றும் சுற்றி உள்ளவர் உடல்நலமும் சேர்ந்து காப்பாற்றப் படும். மன நலம் மேல் அடுக்கு ; உடல் நலம் கீழ் அடுக்கு. (உயிர் நலம் உயர் அடுக்கு )
குறிப்பு : மனம் அற்ற நிலையில் , ஐம்பூதம் மட்டுமே இயங்கும் . அந்தப் படம் அடுத்து வரும்.
உள்ளும், வெளியும் ஐம்பூதம் ஒன்றானால் , ஒத்திசைவில் உரைக்கவும் முடியாத அற்புதங்கள் நிகழும். மவுனமாய் இரு ; மேலும் நிகழும்.-தத்துவங்களின் சாரம் இதுவே .
----அன்புடன், ஆ. மதி யழகன். 

No comments:

Post a Comment