8.1 ஐந்து பூதத்தில் எது முதல் ?
உயிர் ஓட்டம் கல், தீ, மண், நுரை, நீர் என உயிரின் ஒலி அதிர்வுகளில் 12 உறுப்புகளின் வாயிலாக சுற்றிக் கொண்டு உள்ளது. எல்லா உறுப்புகளும் முதன்மை சிறப்பு உடையவை , எதற்கு எது முதல் என இனி பார்ப்போம்.
-0- அல்லது -5- நீர் பூதம் - kidney - உயிர் முதல் .
-1- கல் பூதம் (ஆகாயம் ) - Liver - மனிதன் முதல் .
-2 - தீ பூதம் ( இதயம் + மனம் ) - மனம் முதல் ( மனமே இதயத்தை தூண்டுகிறது ) P
-3- மண் பூதம் - Spleen - உடல் முதல்
-4 - நுரை பூதம் - காற்று - Lungs - நலம் முதல் ( First in health point of view )
பாடல் :
உயிர் முதல் ஒன்று தேடினேன்
உடலில் அது நீர் ஈரல்
உடலில் மனித முதல் தேடினேன்
ஓங்கி நின்றது கல்லீரல்
மன முதல் எதுவெனக் கேட்டேன்
மருட்டி நின்றது தீ ஈரல்
உடல் முதல் எதுவெனக் கேட்டேன்
உண்ணக் கேட்டது மண் ஈரல்
நலம் முதல் எதுவெனக் கேட்டேன்
நன்றாய் விரிந்தது நுரை ஈரல் .............30
8.2 சூழ்நிலையும் ஐந்து பூதங்களும்
மனித உடலுக்கு நோய் என்பது முதலில் சூழலில் கருக் கொண்டு , பூதங்களில் அறிகுறிகள் காட்டி ஒரு பூதத்தை வலுவாகத் தாக்கும் போதுதான் அறிகிறோம். வேரைக் கண்டு பிடித்து நீக்கினால்தான் நோய் முற்றும் தீரும். சூழ்நிலைத் தாக்கம் காண்போம்.
படிக வளர்ச்சி : சிறு வயதில் தாமிர சல்பேட்டு படிகத்தை கயிற்றில் கட்டி , தாமிர சல்பேட்டு
கரைசல் உள்ள பாத்திரத்தில் வைத்தால் , சில நாட்களில் வளரும் எனப் படித்து வியந்து இருக்கிறோம் . படிகத்தின் மேல் நுண் துகள்கள் படிந்து பின்னிக் கொண்டு வளர்கின்றன.
மனிதனும் அது போல் சூழலில் வாங்குகிறான், வளர்கிறான். சூழலில் இழக்கிறான் , அதனால் தேய்கிறான். வாங்குவது என்ன ? இழப்பது என்ன ? தூண்டப் படும் காந்த சக்தி பொருத்து ஈர்த்தல் மற்றும் இழத்தல் ஆகும்.
கல் பூத பாதிப்பு : உங்களைச் சுற்றி உள்ள மனிதர்களின் குணங்கள் , உங்கள் அடிமன எண்ணங்கள், வாழ்க்கை இவற்றை பாதிக்கின்றன . கல்லில் விளைச்சல் (+ அல்லது -)
தீ பாதிப்பு : புத்தகம், நண்பர்கள், திரைக் காட்சி, ... தூண்டப் படும் விருப்பங்கள் மனம் பாதிக்கின்றன.
மண் பாதிப்பு : மேல் கண்ட பாதிப்புகளோடு , உணவின் தரம், உண்ணும் முறை, உண்ணும் காலம்
போன்ற செயல்களும்
நுரை பாதிப்பு : சுற்றி உள்ள காற்றும், மன நிலையும்
நீர் பாதிப்பு : மேல் கண்ட பாதிப்புகளோடு , வாழ்வு அச்சம் , நம்பிக்கை அற்ற தன்மை, அதிகப் படியான சிறுநீரகத் தூண்டல்கள் .
தொடரும்.
No comments:
Post a Comment