Monday, 30 May 2016

Tamil acupuncture vision to Thirukkural-19 - 24

19.புறங்கூறாமை - இல்லறவியல் 

      அடுத்தவர் இல்லாதபோது அவர்தம் குற்றம் பிறருக்கு எடுத்துக்  கூறுவது. இதுவே நேரிற் கூறாது புறத்தில் கூறுதல். இது தவிர்க்க வேண்டும்.
அக்குப் பார்வை : மூன்றாவது நபரின் புகழ் கூறலாம். குற்றம் கூறல், கேட்கும் பிறர் அவர்தம் கற்பனையால் (மேல் மனம் + அடிமனம் ) மெருகு ஏற்றப் படும்போது புறங் கூறுவார்க்குப் பழி உண்டாகும். எனவே, புறங் கூறாமை செம்மைப் பண்பு (+).
20.பயனில சொல்லாமை - இல்லறவியல் 
        பயன் தராச் சொற்கள் பேசாது இருத்தல் . 
அக்குப் பார்வை : பேசும்போது இருவருக்கும் பயன்படாத சொற்கள், நிகழ்சிகளை விவரித்துப் பேசுவது . இது இருவரின் நேரம், காலம் இவற்றைக் கொல்வதற்குச் சமம். சொற்கட்டு வர, எண்ணம் , செயல் கட்டுப்பாடு வரும். மன எண்ணங்களின் கட்டுப்பாடு, உள்ளீடு சொற்களில் வெளியாகும். 
21. தீவினையச்சம் - இல்லறவியல் 
       பிறருக்குத் தீங்கு செய்வதில் அச்சம். 
அக்குப் பார்வை : எண்ணக் கட்டுப் பாட்டிலேயே பிறர் தீங்கு விட வேண்டும். அதை உள்விட , உள்ளமே முதலில்  தீப் பற்றி எரியும். பின் தன் உடலும் கெடும். எனவே, தன்னைக் காக்க , பிறர் தீங்கில் அச்சம் கொள்க. 
22. ஒப்புரவு அறிதல் - இல்லறவியல் 
     அடுத்தவர்க்கு உதவுதல் 
அக்குப் பார்வை : சுற்றி உடையவர் மகிழ்வது , தன் நெஞ்சு மகிழ்வதாய் மாறும். நுரையீரல் பூதம் உயிர்ப்பு அடைவதால் தன் உடல்நலம், பொதுநலம், சமூகநலம்  எனத் தொடர் செழிப்பு நிகழும். 
23. ஈகை - இல்லறவியல் 
    இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுதல் 
அக்குப் பார்வை : நாமே, ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு வந்தவர்கள் அல்லவா ? இல்லாதவர்க்கு நாம் உதவுவது கடவுள் நிலை மற்றும் இருப்பைப் போற்றுவது ஆகும். ஈகைதான் வாழ்வு. இது பிரபஞ்ச விதி. 
24. புகழ் - இல்லறவியல்  
     உயிருக்கு ஊதியம் என்பது புகழ் பெற்று வாழ்வதே. 
அக்குப் பார்வை : ஐம்பூதம் அடக்கி வாழ பெரியோர் ஆகலாம். செயற்கரிய செயல் செய்து புகழும்பெறலாம். மனம் அடக்கும் மகா வீரமே புகழ் தரும். 
தொடரும்.  

No comments:

Post a Comment