25. அருள் உடைமை - துறவறவியல்
இல்லறம் நடத்துபவருக்கு மன உணர்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். துறவறத்தை இல்லறம் பின் துறவறம் என மேற் கொள்ளும்போது முதல் தேவை இரக்கம் எனும் அருளுடைமை ஆகும்.
அக்குப் பார்வை : உடலின் முதல் பூதம் கல்லீரல் (ஆகாயம் ) . இதன் நேர்க்குணம் அருளுடைமை ( இரக்கம் ). அழிக்கும் எதிர்க்குணம் சினம் மற்றும் பிறர் செயல் மீது வெறுப்பு. இரக்கம் அல்லது அருளால் தீர்வு செய்ய மனம், உடல் நலம் உடனே கிடைக்கும்.
26. புலால் மறுத்தல் - துறவறவியல்
போர்க்குணம் தரும் புலால் உணவு, அருள் ஆளும் துறவிக் குணத்திற்கு எதிர்த் தன்மை ஆகும். துறவில் முன்னேற புலால் மறுத்தல் இரண்டாம் நிலை .
அக்குப் பார்வை : மனதைப் பக்குவப் படுத்தினால் மட்டுமே, உடலைப் பக்குவப் படுத்த முடியும். மனதிலிருந்து உடலும், உடலிலிருந்து மனமும் என பண்பு சுழற்சி நடைபெறுவதால், உடலுக்குத் தரும் உணவிலிருந்து மனக் காப்புத் தொடங்குகிறது.
ஒரு மனிதனின் சிறுநீரகம் வடித்தெடுக்கும் செங்கற்கள், கல்லீரலில் சேமிப்பு ஆகி, மனித மரபு உருவம் , பண்பு கிடைக்கிறது. மிருகங்களின் சிறுநீரகத்தால் பக்குவப் படுத்த ப் பட்ட
உணவே மிருக உடல். அதன் செரிமானத்தின் செரிமானம் குண இறக்க நிலையாகும்.
27. தவம் - துறவறவியல்
துன்பம் பொறுத்தலும் , தான் எனும் செருக்கு விடலும் தவம்.
அக்குப் பார்வை : மனம் துன்பமுற்றே உடல் துன்புறுகிறது. மனம் இன்பத்தில் இறங்கும் போது துன்பத்தை சேர்த்து வாங்குகிறது. தான் விடத் தன்னால் வரும் துன்பம் தீரும். பிறர் அறியாது செய்யும் துன்பம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இது தவ வாழ்வின் அடிப்படை.
28. கூடா ஒழுக்கம் - துறவறவியல்
தன்னை கவனிக்க. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் தவறு. இந்த நிலையிலேயே விழிப்புணர்வு கொண்டு மனதின் சுழற்சியிலிருந்து விலக வேண்டும். புற வேடம் கூடா ஒழுக்கம் ஆகும். துறவைக் கலைத்து விடும்.
அக்குப் பார்வை : மன நலமே முதல். உடல் நலம் அடுத்த நிலை. மன, உடல் ஒழுக்கம் இணைந்து முன்னேற வேண்டும்.
29. கள்ளாமை - துறவறவியல்
களவு என்பது திருட்டுத் தனமாய் பொருளை அடைவது. இன்னொரு பொருள் திருட்டுத் தனமாய்க் காதல் கொள்வது. பழமொழி காண்க. "களவும், கற்று மற " ஆக திருட்டுத்தனமாய் பொருள் அடைதல், துறவிக்குத் தீங்கு.
அக்குப் பார்வை : பொருளின் மீதான மிகு விருப்பம், தீ பூதம் ( மனம் + இதயம் ) கெடுத்து பரபரப்பாக்கும். மன அமைதி கெட, தவ வாழ்வு கெடும். எதிர்மறை எண்ணம் விடுக்க.
தொடரும்.
No comments:
Post a Comment