30. வாய்மை - துறவறவியல்
வாயால் பேசுவது தீங்கு இல்லாததாக வெளிவர வேண்டும். அதுவே வாய்மை. 'உண்மை ' உள்ளத்தில் உள்ளது. அதனினும் தீங்கு இல்லா உரையாகிய "வாய்மை " யே போற்றப் படும்.
அக்குப் பார்வை : இயற்கை நிகழ்வுகள் அன்றி மனிதர் சார்ந்த உண்மைகளும் நிகழ்வே. அது இரு மனங்கள் மற்றும் இரு உயிர்களின் மோதலில் நிகழ்வது. இந்த" உண்மை " மேலும் பரப்பற்கு உரியது அன்று. தீங்கு தராத வாய்மை பேசினால், பிற உயிர், தன் உயிர், சமுகம் காப்பாற்றப் படும். உண்மை, வாய்மை, மெய்ம்மையில் மெய்யான (உடல்) நடத்தைக்கு வாய் (மண்பூத நலன் ) மை யே முதன்மை.
31. வெகுளாமை - துறவறவியல்
சினம் கொள்ளாது இருக்கும் பண்பு. பெரியோரிடத்தில் சினம் வந்தால் ஒரு கணம் கூட நிற்காது. சினமற்றத் தன்மையே துறவுக்குத் தேவை .
அக்குப் பார்வை : ' நான் ' எனும் உணர்வு விளைவது, அடிமனமாகிய கல்லீரல் (ஆகாயம் ) பூதத்தில் தான். இந்த கர்வமே மேல்மனத்தில் ( இதயம் + மனம் ) இயங்கி வாழ்வின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கிறது. தான் என்பதைக் காப்பாற்ற , தனக்குப் பயன் வர சினம் கொண்டால் காப்பும் வராது. பயனும் தேடியது வராது. இழிவு, அழிவு வரும். சினம் துறவிக்குக் கூடாது. சமுகம் காக்க வரும் சினம் விதி விலக்கு .
32. இன்னா செய்யாமை - துறவறவியல்
பிறருக்கு மனதாலும், உடலாலும் துன்பம் செய்யாது இருத்தல்.
அக்குப் பார்வை : பிறர் என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களே ஆவர். எந்த ஒரு துன்பம் பிற உயிருக்குச் செய்யினும் அது சுழற்சி முறையில் திரும்பி வரும். மனதின் பிறர் துன்பக் கற்பனை
முதலில் உங்களுக்குள் நிகழ்வதால் , நீங்கள் பிரபஞ்ச விதிப் படி தப்ப முடியாது. தலை வெட்டும் எந்திரம் செய்தவன், அதனாலேயே செத்தான் என்பது வரலாறு.
33. கொல்லாமை - துறவறவியல்
பிற உயிர்களைக் கொல்லாதிருக்கும் மாண்பு.
அக்குப் பார்வை : பேருயிரையே ஆதி செல்லாக நம் உடம்பில் சிறுநீரகத்தில் 50:50 தாய் தந்தையர் மூலம் பெற்று வாழ்கிறோம். நம் இன்றைய வாழ்வு, பிரபஞ்சத்தில் பல கோடி ஆண்டுகளாய் புல்லாய், பூண்டாய் , புழுவாய் இருந்து இன்று அடைந்த வரம். எனவே உயிர் போற்றல் பேருயிர் போற்றும் உயர் பண்பு.
34. நிலையாமை - துறவறவியல்
செல்வம் வந்தால் அது போகும். நாள் என்பது வந்தால் அதுவும் போகும். உடல், உயிர் என்பது வந்தால் அதுவும் போகும். இதுதான் நிலையாமை . துறவின் நோக்கம் நிற்கும் தன்மை, செயல் அறிவது.
அக்குப் பார்வை : யின் யாங் இரண்டு முரண்பாடுகளால் சமநிலைப் பட்ட து , அண்டமும், பிண்டமும். சமநிலை குலைந்தால் முதலில் நோய், பிறகு அழிவு. பின் அடுத்த பிரபஞ்சத் தோற்றம். ஆக்கத்திலிருந்து அழிவும், அழிவிலிருந்து ஆக்கமும் நிகழ்வது தொடர்ச்சி செயல். இயக்கம் ஒன்றில் மட்டும் நிலைக்காது. சம நோக்குத் துறவிக்குத் தேவை. சமநோக்கில் மையம் கிடைக்கும். அது நிலைப் பொருள்.
தொடரும்.
No comments:
Post a Comment