35. துறவு - துறவறவியல்
' நான் ' எனும் கர்வமும், 'எனது ' எனும் உடைமையும் துறக்க வேண்டும். அது புலனடக்கத்தால் நிகழ வேண்டும். அதுவே துறவு.
அக்குப் பார்வை : தான் என விளையும் இடம் கல்லீரல் (ஆகாயம் ) எனும் முதல் பூதம் . அதுவே மனிதனின் முதல். கல்லீரலின் வெளிப்பாட்டுப் பதிவு , ஒன்று கண்மணிப் பாப்பாவிலும் , மற்றொன்று மூளை செல்களிலும் பதிவாகிறது. கல்லீரல் பூதமே அடிமனம் -ஆசாமி - நந்தி.
இதன் தாய் சிறுநீரகம் , ஆழ் மனம் - சாமி - பதி . நந்தி நீங்க பதி தெரிவார். இதுவே பசுபதி தத்துவம். காணொளி காண்க: YOU Tube : tamil muraiyil acupuncture .
36. மெய்யுணர்தல் - துறவறவியல்
காணும் பொருள்கள் தம் அழகின் சிறப்பால் கவரும். இது மாயை. இயற்கையும் விளையாடும் . மனிதனும் தன் பங்குக்கு அழகு சேர்ப்பான். இதனால் விளைவது அதிக விருப்பு . ( காமம் ) . கிடைக்காவிடின் சினம் ( வெகுளி ) . நிகழ் காலம் எனும் இருப்பு மறைவதால் தடுமாற்றம் (மயக்கம் ) . பெரும் சுழல்கள் தாம் இந்தத் தோற்றங்கள் என உணர்தல் 'மெய் ' உணர்தல்.
அக்குப் பார்வை : கண்ணால் காணும் காட்சிகள் ஆண் மனதைக் கெடுக்கும். அடிமனம் கல்லீரல் .அதன் வெளி உறுப்பு கண். காதில் விழும் சொற்கள் பெண் மனதைக் கெடுக்கும். ஆழ்மனம் சிறுநீரகம் . அதன் வெளி உறுப்பு காது . இவை இல்லறவியலார் முரண்பாட்டுத் துன்பங்கள்.
கண்ணால் காண்பதும் பொய் ; காதால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப்பதே மெய். இதுவே நடுவு நிலை மற்றும் துறவு நிலை.
37. அவா அறுத்தல் - துறவறவியல் (இறுதித் தலைப்பு )
அவா அல்லது ஆசை அல்லது விருப்பம் , ஒருவரை அடுத்த பிறப்புக்கு இட்டுச் செல்கிறது. பிறப்பு, இறப்பு , இன்ப துன்பம் எனும் சுழற்சி உருவாகிறது. அவாவை அறுத்தல் துறவை நிலைப் படுத்த உதவும்.
அக்குப் பார்வை : யின் யாங் குறியீடு காண்க. அவா பெரு வெளிச்சமாய் இருந்தால் , இருள் சிறிது இருக்கும் . பிறகு இருள் பெரிதாகும். வெளிச்சம் சிறிதாகும். மறு முயற்சி செய்தாலும் சுழற்சி நிற்காது. அவா, பேரவா எனத் தொடரும். அவாவைப் பற்றாதே . விலகு. துறவும் இலகு.
38. ஊழ் - ஊழியல்
மனிதன் எல்லாப் பாகுபாடுகளையும் இரண்டாகப் பிரித்து, தனது இருப்பை விரும்பியதில் நிறுத்த முயன்றாலும் விதி ( ஊழ் ) இடத்தாலும், காலத்தாலும் மாற்றிப் போடும். " ஊழ் காட்டாறு போல - மனித முயற்சி ஒரு துரும்பின் அசையும் முயற்சி." இது கணியன் பூங்குன்றனார் உவமை.
அக்குப் பார்வை : உச்சந் தலைப்புள்ளி Du 20 வழியே பிறப்பின் போது நுழையும் பிரபஞ்சம் மனிதனின் இயக்கத்திற்கு (உயிர்) காரணம் ஆகிறது. சிறுநீரகத்தை இயக்குவதும் இதுவே. சிருண்றீரகம் permanant Battery . அதன் சக்தி வாங்கி இயங்கும் கல்லீரல் ஒரு Rechargable Battery . கல்லீரல் நீங்கள் ; அதைத் தீர்மானிப்பது மரபாகிய சிறுநீரகம் - ஆதி செல் . அதன் இயக்கத்தைத் தீர்மானிப்பது - வெளிச்சுழலில் இயங்கும் நுரையீரல் - பிரபஞ்ச மனம். ஆக, மரபும், சூழலும் உங்கள் விதியைத் தீர்மானிக்கின்றன. மரபு, சூழல், நீங்கள் மூன்றும் அறிந்து உணரும் விழிப்புணர்வே 'அறம் ' எனும் பயணம் சிறக்க உதவும்.
----------அறம் முற்றிற்று --- பொருள் தொடரும் ---
No comments:
Post a Comment