Wednesday, 16 November 2016

தமிழ் அக்குபங்சர் பார்வையில் திருக்குறள்/முகவுரை.

முகவுரை: திருக்குறளுக்கு சுருக்கமாகப் பொருள்கூறும் விதமாக ஒருவரிப் பொருள் உரையை
' குறள் சாறு ' என வடித்திருந்தேன்.இதை அப்படியே மக்களுக்குக் கொண்டு சென்றால், பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று என்ற விதத்திலேயே அமையும் என்பதால் புதுமை சேர்க்க எண்ணினேன்.
                   முதல்ப் புத்தகம் ' தமிழ் முறையில் அக்குபங்சர்' எழுதிய போது, மருத்துவம் என்பதோடு ' மருந்து ' என்ற திருக்குறள் அதிகாரம் மட்டுமே பொருந்தும் என நினைத்திருந்தேன்.
எனது இரண்டாவது புத்தகம் ' தமிழ் முறையில் மன அக்குபங்சர் ' எழுதிய போது மனம் என்பதைக் கொண்டு அறம்,பொருள்,இன்பம் எனும் முப்பாலை விளக்க முடியும் என உணர்ந்தேன். மன அக்குபங்சர் புத்தக வெளியீட்டு உரையை நிகழ்த்தியபோது,ஐம்பூதச் சக்கரத்தின் மூன்று முனைகள் அறம்,பொருள், இன்பம் போக, எச்சம் இரண்டு முனைகள் காதல்,
வீரம் எனப் புரிந்து கொண்டு வெளிப் படுத்தினேன்.See you tube: mana acupuncture.
                    ஆக (1) கல்லீரல் (ஆகாய பூதம்) -அடிமனம் நீட்சி மேல்மனம் வரை -அறக் கோடு-
ஆகையால் அடிமனம் என்பது அறம் முனை.
                            (2) தீ ஈரல் (இதயம்+மனம்)-மேல்மனம் நீட்சி நுண்மனம் வரை-விருப்பக் கோடு-
படைக்கும் சக்தி.ஆகையால் மேல்மனம் என்பது காதல் முனை.
                             (3) மண் ஈரல்(கணையம் உட்பட)-நுண்மன நீட்சி பிரபஞ்ச மனம் வரை -பொருள் விளையும் கோடு.ஆகையால் நுண்மனம் என்பது பொருள் முனை.
                              (4 ) நுரை ஈரல் (காற்று பூதம்) -பிரபஞ்சtt மனம் நீட்சி ஆழ்மனம் வரை -வீரம்,வீர விளையாட்டு, மூச்சுப் பயிற்சி களின் கோடு.ஆகையால் பிரபஞ்ச முனை என்பது வீரமுனை           (5) நீர் ஈரல் (சிறுநீரகம்)- ஆழ்மனம் நீட்சி அடிமனம் வரை- ஐம்புலன் இன்பங்களின் கோடு.ஆகையால் ஆழ்மன முனை என்பது இன்ப முனை.
                     இதற்குரிய அட்டைப் படம் பல உண்மைகளை நமக்கு  விளக்கும்.
        உண்மைகள் (1) அறமும், பொருளும் நீடித்து நிற்க வேண்டுமானால் வாழும் விருப்பக் கோடு எனும் காதல் முனை, அது துணை மீதாயினும் சரி,தொழில் மீதாயினும் சரி வாழையடி வாழையாக,தொடர்ச்சியாகத் துடிப்புடன் இருக்க வேண்டும்.
                             (2) பொருளும் இன்பமும் நீடித்து நிற்க வேண்டுமானால், இரண்டிற்கும் காப்பாகிய வீரம் விளையாட்டு வடிவிலேனும் இருந்தால்தான் நல்ல உடற்கட்டும், நீண்ட வாழ்நாளும் பொருள், இன்பத்தைத் துய்க்கக் கிடைக்கும்.
                    (3) அறம், பொருள்,இன்பத்தை அடைந்து,வீடு பேறு எனும் நிறைவை, ஒரு சுற்றாகிய முழுமையை, அடைய வேண்டுமானால் காதலும்,வீரமும் வாழ்வில் தேவை.அதனால்தான் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்கள் என்றனர்.
(இன்று பெரும்பாலான இளைஞர்கள் காதலையும், வீரத்தையும் சின்னத் திரை,பெரியத் திரையிலேயே காண்கிறார்கள்.)
             (4)இன்பத்தின் முழுமையில் பிற உயிரினங்கள்,மனிதன் வேறுபாடு : இன்பமும், அறமும்
அடிமனம் வழியாக நேரடியாக இணைவதைக் காணலாம். மரங்களும் , மிருகங்களும் மேல்மனம்,அடிமனத் தடையின்றி நேரடியாக ஆழ்மனத்தோடு இணைக்கப் படுகின்றன.இந்த உண்மையான பிரபஞ்சத் தியானத்தில் இன்பமும் வளர்ச்சியும் தங்குதடையின்றி அவற்றுக்கிடையே நடைபெறுகின்றன.மனிதர்களுக்கு கற்பிக்கப்படும் அறம், சிறு வயதில் இருந்து அடிமனத்தில் பதிவதால் இன்பத்தின் முழுமை, அறத்தைப் பொறுத்ததே!
----தொடரும்---ஆசான்  ஆ மதியழகன். 16/11/2016.

No comments:

Post a Comment