உண்மை 7: இன்பத்துப் பால்.
களவு,கற்பு எனும் இருநிலையிலும் உணர்வுகளை,ஆண்,பெண் மன வெளிப்பாடுகளை நாடக வடிவில் திருவள்ளுவர் கூற, அதை தமிழ்முறையில் மன அக்குபங்சர் வழி, மேலும் நுட்பமாக விளக்கி உள்ளோம்.
இன்பத்தில் எதிர்பார்க்காதே! அது துன்பம்!
இன்பத்தில் கொடுக்க முடியுமானால் அதுதான் இன்பம்!
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.-அறம்/ ஈகை/228.
ஆக, ஈத்துவத்தல் ( கொடுத்து மகிழ்தல்) இன்பத்துப் பால் சுருக்கம்.
காண்க: அக்குச் சக்கரத்தில் 5-1 -நீலக்கோடு -வாதக்கோடு - இன்பக்கோடு.
அறம் அடைய, மேல் மனம், அடிமனம் உங்கள் கட்டுப்பாட்டில். பொருள் அடைய, பிரபஞ்ச மனம் என்ற வெளி சக்தி தேவை. இன்பம் அடைய, ஆழ்மனம் என்கின்ற உயிர்சக்தி தேவை.
இன்பம் அடைய இரு வழிகள் :
உயிர் முனை வழி: இன்பம் ஆழ்மனத்தில் இரூந்து தொடங்க இடம், காலம்,நம்பிக்கை போன்ற உயிர் தூண்டும் நிகழ்வுகள் வேண்டும். தனி இடம்,மற்றும் மாலை, இரவு, விடியல் நேரங்கள் இவற்றோடு நம்பிக்கை முதன்மை யானது.இந்த முழுமையை இருமனம் ஒத்த களவு வாழ்க்கையும், கற்பு வாழ்க்கையும் மட்டுமே தர முடியும்.
அடிமன முறை வழி: மனம் உணர்வால் அமிழும் இடம்.அறிவு குறைந்து மறைந்து விடும்.
கற்பனை உணர்வோடு இன்பம் தேடும் தன் மனம்,தன் உடல் சார்ந்த வாழ்வு. இருவர் மனநிலை ஒத்துழைக்க, இருவரும் ஆழ்மனம் தொட்டால்,உயிரியல் சுரப்புகள் எளிதாகும். சிற்றின்பமும் பேரின்பமாகும். தனி முயற்சியில் பிரபஞ்ச வழி(யோகா) ஆழ்மனம் தொட்டு நின்றால் சதா- சிவம்.அது பேரின்பம்.
இன்பம் கெட வரும் காதல் நோய்கள் : கல்லீரல் நோய்கள் - உறக்கமின்மை.பின் இதய, மன நோய்கள்- உணவு செல்லாமை- உடல் இளைப்பு.பின் நுரையீரல் (இருமல்,சளி) .பின் சிறுநீரக நோய்களில் முடியும்.
காண்க: You tube : tamil muraiyil. acupuncture ALSO mana acupuncture. நோய்களைப் பற்றி முழுமையாக அறிய, அவ்விரு புத்தகங்களும் படிக்கவும்.
இந்த புத்தகத்தில் அக்குபங்சர்,திருக்குறள் ஒப்பீடு முதல் பகுதியாகவும்,குறள்சாறு இரண்டாம் பகுதியாகவும் தரப் பட்டுள்ளது.
அன்புடன், ஆசான் ஆ மதியழகன். 19/11/2016.
No comments:
Post a Comment