Friday, 18 November 2016

தமிழ் அக்கு பார்வையில் திருக்குறள்/முகவுரை தொடர்ச்சி

உண்மை 5: அறத்துப்பால்

            தனிமனிதனின் அறமே  சமுதாய அறமாக மலர முடியும் என்பதால், தனிமனித அறமே முதன்மை. திருக்குறள் முழுமையுமே அது 'உங்களுக்கு' எனக் கூறப் படுவதாகும். இதை யாருக்கும் கட்டாயப் படுத்த முடியாது. இது தனிமனிதன் தன்னைத் தானே உரைத்துப் பார்க்க வேண்டிய கட்டளைக் கல்.
         ' மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
         ஆகுல நீர பிற.'     -அறம்/குறள் 34.
மனத்தூய்மை தான் அறம் என்பது அறத்துப் பால்  சுருக்கம். இதை இல்லறத்திலும் (முதல் வாழ்வு) , துறவறத்திலும் (இரண்டாம் வாழ்வு)  கடைப் பிடிக்க வேண்டும்.
            அறம் என்பதை மூன்று நிலைகளில் கடைப் பிடிக்க வேண்டும். அவை எண்ணம், சொல், செயல். (1) எண்ணம் : தூய்மையான எண்ணம் அடிமனம் இருத்தல் உண்மை.இது கல்லீரல் வெளிப்பாடாகிய. கண்கள் மூலம் நன்கு வெளிப்படும்.
               (2) சொல்: பிறருக்குத் தீங்குதராத சொல் மேல்மனம் கூறல், வாய்மை. இது நுண்மனமாகிய வாயின் மூலமும், மேல் மனமாகிய நாக்கின் மூலமும் தெளிவாக வெளிப்படும்
            (3)செயல்: பிறருக்கு இன்பம் தரும் செயல் உடல் வழி,பொருள்வழி, மன உணர்வு வழி, உயிர் ஈர்க்கும்படி வெளிப்படல் வேண்டும்.இது மெய்ம்மை.ஐம்புல வெளிப்பாடு.
காண்க : தமிழ் அக்கு சக்கரத்தில் 1-2-பச்சைக் கோடு-பித்தக் கோடு-அறக் கோடு.

நோய்கள்:கல்லீரல், தீ ஈரல் (இதயம்+ மனம்) தொடர்பான நோய்கள், அறம் தவறுவதால் உண்டாகும்.

உண்மை 6 : பொருட்பால்

            மனவிருப்பம் செயல்பட்டால்தான்  உணவு செரிமானத்திற்குரிய சுரப்பு நீர்கள் சுரந்து, உடற்கட்டான உறுப்புகள் வளர்வதற்கான நுண்சத்துக்கள், நீர்ம வடிவில் நுரையீரலுக்குப் போய்ச் சேரும்.பிறகு அது சிறுநீரகத்துக்குப் போய் நீர் வடிவில் சேர்ந்து பிரிக்கப் பட வேண்டும்.இடையில் வரும் தடைகள் எல்லாம் மண்ணீரல்,நுரையீரலுக்கான நோய்கள்.இவை வயிற்றின் பசியிலும்,மூச்செடுப்பதிலும் தெரியும்.
          பொருளுக்கான மனத் தூண்டல்: 'துணை' விருப்பம்  , 'தொழில்' விருப்பம் செயல்பட்டால்தான் தனிமனிதன் குடும்பமாகி,குடும்பங்கள் சமுதாயமாகி, சமுதாயம் தனக்கு வேண்டியவற்றை சாதிக்கக் கூடிய நல்லாட்சியும், நல்ல நாடும் அமையப் பெறும். 'பொருள்' எனும் செல்வம் கைவர வேண்டுமானால் ' ஊக்கம் ' என்பது  மனத்தின் உடைமை ஆக வேண்டும்.
           'உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
          நில்லாது  நீங்கி  விடும்.'   - பொருள்/குறள் 592
'மன ஊக்கம்' தான் பொருள் என்பது பொருட்பால் சுருக்கம்.பிற செல்வங்கள் பின்னே வரும்.
பொருள் தவறியோர் அறம் முரண் பட்டார் எனக் கூற முடியாது..அறம்  மாறுபட்டாரே! நல்லோரோ, தீயோரோ யாம் அறியோம்.
         காண்க:தமிழ் அக்குச் சக்கரத்தில் 3-4 - மஞ்சள் கோடு -கபக்கோடு - பொருள்கோடு.

 நோய்கள் : முதல் அடையாளம் மண்ணீரல் (கணையம்  உட்பட) , நுரையீரல் நோய்கள். அதன் பின் கல்லீரல், இதயம்,மனம் தொடர்பான நோய்கள்.அன்புடன், ஆசான் ஆ மதியழகன். 18/11/2016.

No comments:

Post a Comment