9. விருந்தோம்பல் - இல்லறவியல்
ஒரு குடும்பத்தின் செழிப்பு காட்டுவது விருந்தோம்பல் . விருந்தினர் என்பது புதியவர் எனப் பொருள் தரும். இந்த பண்பு தரும் பலன் அளப்பற்கரியது .
அக்கு ப் பார்வை : ஒரு மனிதனின் ( உடல், மனம், உயிர் ) செழிப்பு என்பது பிறர் நலம் போற்ற உதவுதலே . பிறரின் பசி போன்ற உணர்வை உணர்ந்து செயல் பட வேண்டும். பிரபஞ்ச மனம் (நுரையீரல் பூதம் ) உள்ளும் வெளியும் இன்ப உணர்வைச் சமன் செய்ய வேண்டும்.
10. இனியவை கூறல் - இல்லறவியல்
ஒருவரின் மரபின் சிறப்பும், சூழ்நிலை வளர்ப்பும் இன்சொல், வன்சொல் தேர்வில் தெரியும். குடும்பம் செழித்திட இன்சொல் தேர்வு வேண்டும்.
அக்குப் பார்வை : நல்லெண்ண வளர்ச்சி என்பது தன் வயிறைக் (மண்ணீரல் பூதம் ) காப்பாற்றும்.
ஏன், தன் உயிரையே க் காப்பாற்றும். நல்லெண்ணம், நற்சொல்லாகப் பிறரிடம் கூற இன்சொல் பிறக்கும் . இருவருக்கும் இதம் கிடைக்கும்.
11. செய்ந்நன்றி அறிதல் - இல்லறவியல்
ஒருவர் தமக்கு செய்த உதவியை அறிந்து நன்றியுடன் இருத்தல்.
அக்குப் பார்வை : இது ஒரு நேர்மறை உணர்வு. இது வளமாக இருந்தால் , மண் பூதத்திற்கு செரிமான சக்தி கிடைக்கும். மேல் மனம் நல்ல அமைதியில் இருக்கும்.
12. நடுவு நிலைமை - இல்லறவியல்
தன் பக்கம், எதிர்ப் பக்கம் இரண்டும் சாயாது நடுவில் நிகழ வேண்டியதில் கவனம் வைத்து வாழ்தல். இந்த உணர்வு மோதல்களைத் தவிர்க்கும். செயல் குலையாது.
அக்குப் பார்வை : யின் , யாங் கூடுதல் குறை இன்றி இருக்கும் சமநிலை பேணலே உயிர் வாழ்வு.
13. அடக்கம் உடைமை - இல்லறவியல்
எவ்வளவு காரண காரியங்கள் இருந்தாலும் , இடம், காலம், பொருள் அறிந்து அடங்கி இருந்து கொண்ட கொள்கை நிறைவேற முயல வேண்டும்.
அக்குப் பார்வை : அடிமன எண்ணங்கள் 'நான் ' என்பதை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அதை ஊக்குவிக்க 'அடக்கம் ' கெடும். 'நாம் ' என்பதை ஊக்குவிக்க அடக்கம் வரும்.
தொடரும்.
No comments:
Post a Comment