பன்னிரண்டு விளக்கம்
ஆகாயம் (கல்லீரல் ):
"அ " எனும் வடிவம் கல்லீரல் வடிவம் - கல்லீரல் பூதம்
"ஆ "வின் சுழி பித்தப்பை குறிக்கும் - கல்லீரல் துணை உறுப்பு.
தீ (இதயம் +பெரி கார்டியம் எனும் மனம் ):
"இ " எனும் வடிவம்- இதய வடிவம் - நான்கு துண்டு பிரிவு, விசிறு வடிவம் ( பெருந்தமனி )
"ஈ " (பழைய வடிவம் இ மேல் சுழித்தல், தீ எழுத்து போல.)
சிறுகுடல் பல சுருட்டலுக்குப் பின் வயிற்றுப் பையில் மேலாக இணைதல்.
"ஐ " என்பது தீயோடு -இதயத்தோடு சேர்ந்து இயங்கும் பெரி கார்டியம் இடம் - மையக் குறி.
"ஔ " என்பது ஐ எனும் மனதுக்குக் கட்டுப்பட்ட மூவெப்ப மண்டல இயக்கம் ( இரட்டை உதர விதானம் ) மூச்செடுத் தல் , செரிமானம், கழிவு நீக்கம் எனும் மூன்று மண்டலங்களை பிரிப்பது - இவற்றில் மன பாதிப்பால் மாறுதல் உண்டாகும்.
மண் :
"உ " எனும் வடிவம் மண்ணீரல் பை, கணைய நீளப் பையோடு .
"ஊ " வின் மேல் வடிவம் இரைப்பை துணை உறுப்பு ஆதல்.
காற்று (நுரையீரல் ):
"எ " காற்றை இயக்கும் பெரிய நுரையீரல் "எ " . அதன் அடுத்த பகுதி இதயம் அடைப்பதால் கோட்டு வடிவம்.
"ஏ " பெருங்குடல் தொடக்கம் , சிறுகுடல் சுழித்து , ஏறுகுடல், கிடைக்குடல், இறங்கு குடல் என வந்து சரிந்து குதத்தில் முடியும். "ஏ " காண்க.
நீர் ( சிறுநீரகம் ):
"ஒ " மேல் இரட்டைச் சுழி சிறுநீரகம் குறிக்கும். ( குழந்தையின் தலை கீழ் வடிவம் கூட )
"ஓ " கீழே உள்ள பை, சிறுநீரகத் துணை உறுப்பு , சிறுநீர்ப் பை.
ஆக, அக்கு பங் சர் பாடத்தில் உடலின் உயிர் சக்தி (chi ) இயங்கும் பன்னிரண்டு உறுப்புக்கள் வருமாறு :
அ - Liver - கல்லீரல் ; ஆ - Gall Bladder - பித்தப்பை .
இ - Heart - இதயம் ; ஈ - small Indestine - சிறுகுடல்
ஐ - perikaardiyam - மனம் ; ஔ - Triple Warmer - மூவெப்ப மண்டலம் .
உ - Spleen + pancreas - மண்ணீரல் + கணையம் ; ஊ - Stomach - இரைப்பை .
எ - Lungs - நுரையீரல் ; ஏ - Large Indestine - (பெருங் ) குடல்.
ஒ - Kidney - சிறுநீரகம் ; ஓ - Urinal Bladder - சிறுநீர்ப் பை
மெய் எழுத்துக்கள் தமிழ் முறையில் அக்குப் பங் சர் நூலில் காண்க.
முடிவுரை :
ஐம்பூத அறிதல் பள்ளிக் கூடத்திலிருந்து தொடங்க வேண்டும். நோய்கள் ஐவகையே. தமிழர்கள் இழந்ததை இனியேனும் பெறுவோம். தாய் மொழியில் கற்போம்.
---இறுதி -----'.
No comments:
Post a Comment