தமிழின் உயிர் மெய்ப் புதிர் விடுவிப்பு
ஆசான் .ஆ. மதி யழகன்.
முகவுரை :
திருவாரூர் தமிழ் இலக்கியக் கழகம் எனக்குத் தந்த வாய்ப்புதான், 21/12/2013-ல் ஐந்து பூதங்கள் பற்றி உரையாற்றும் நிகழ்வு. தமிழர்களின் வர்ம மருத்துவத்தையும் , சீனர்களின் ஊசி மருத்துவத்தையும் ( அக்கு பங் சர் ) ஒப்பிட்டுப் பேசினேன். அதனால் தாய்த் தமிழுக்கு ஒரு மகுடம் கிடைத்தது. தமிழின் உயிர் ஒலிகள் உச்சரித்தாலே போதும், பன்னிரண்டு உயிர் ஆற்றல் உறுப்புகள் இயங்கும். (எ. கா - ஒ, ஓ - சிறுநீரகம் ஆகிய நீர் பூதம் ) . அதுபோல் மெய் எழுத்துக்கள் உடம்பில் அதிரும். (எ. கா.- ம் - மூலாதர் பகுதி அதிரும்.)
ஆரா விளைவு :
உயிர் என்பது என்ன என்ற கேள்வி பலக் காலும் பலராலும் கேட்கப் பட்டு வருகிறது. த. ச. தமிழனார் இயற்றமிழ்ப் பயிற்றகத்திலும் உயிர்க் கருத்தரங்கு நடத்தப்பட்டது. உயிர் என்பது ஒரு காற்று வடிவத்தில் இயக்கம் செய்து கொண்டிருக்கிறது என்பது பொதுவான கருத்து . இப்பொழுது சற்றுத் தொலைவில் இறந்தவர், உயிர் உடையவர் என இருவர் இருந்தால், கிரிலியன் புகைப் படம் மட்டுமே உயிர் உள்ளவரின் ஒளி வட்டம் 'ஆரா ' காட்டும்.
இந்த ஒளி உடலின் மேற் பரப்பை ஒட்டி உள்ளாகவும், வெளியாகவும் இருந்து பாதுகாக்கிறது. ஒத்த உணர்வு உள்ள இருவர் அருகிருந்து உரையாட, கை குலுக்க ஆராவும் இணைந்து கலக்கிறது. ஒத்த கருத்துடைய 50 பேர் நிரம்பிய கூட்டத்தில் நீங்கள் செலுத்துவது ஓர் ஆரா முதலீடு . ஆனால் நீங்கள் பெறுவது 50 ஆரா பயன் ஆகும். இது கூட்ட விளைவு ஆகும். இதை உணர மட்டுமே முடியும் . உங்கள் மனதின் விருப்ப அடிப்படையில் , ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகும். பயன் தரும் இந்த ஆற்றல் நிகழ்வு, எனக்கு அந்த தமிழ் இலக்கியக் கூட்டத்தில் நடந்தது.
ஐந்தும், பன்னிரண்டும் :
தொடரும்.
தொடரும்.
No comments:
Post a Comment