Wednesday, 30 December 2015
Monday, 28 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.5 pictures
( அவ் புள்ளி -முதல் படம்.
(2) கல் வலு 'அ '
(3) பித்தப்பை வலு 'ஆ '
(4)தீ (இதயம் +மனம் ) வலு 'இ '
(2) கல் வலு 'அ '
(3) பித்தப்பை வலு 'ஆ '
(4)தீ (இதயம் +மனம் ) வலு 'இ '
12 தன் வலுப் புள்ளிகள் தரப் பட்டு உள்ளன.
அன்புடன், ஆ. மதி யழகன்.
Thursday, 24 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.5 contd.
சிறுநீரகம் வலுப் பெற கூடுதல் வழிகள் - நீர் வளம்.
காட்சி : நீலப் பொருள்களைப் பார்த்தல், (கருப்பு, வயலட், இண்டிகோ -வும் சிறுநீரக நிறங்களே )
மேலும் பயன்பாட்டில் கொண்டுவருதல் ( எ. கா. உடை ) , சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்க. வெப்பமான இடங்களில் வேலை செய்வோர் , நீல உடை அணிவது குளிர்ச்சி தரும், நீலப் பச்சை (bluish green ) இன்னும் சிறப்பு. குளிர்ச்சியை வெப்பமானக் கல்லீரலுக்கு கொண்டு செலுத்தும்.
உணவு : நீல நிறத்தில் உள்ள திராட்சை ( கருப்பு, வயலட், இண்டிகோ -வும் சரியே.
கருப்பு எள் , கருப்பு நாகப் பழம், கறுப்புப் பேரீச்சை , கருஞ் சீரகம் , கடுகு, மிளகு, கரும் பச்சைத் தர்பூசணி , நீர்ச் சத்தை உள்ளடக்கிய வெள்ளரி, சுரை, தேவையானபோது நீரும் அடங்கும்.
சுவை : உவர்ப்பு . அளவான உப்பு, சுவையோடு சிறுநீரகமும் தூண்டும். அவசர காலத்தில் தரப்படும் சலைன் பாட்டில் , சிறுநீரகத்தைத் தூண்டிப் பயன் தருகிறது. அதிகம் பயன்படுத்த வேண்டாம், சிறுநீரக மின்கலன் ஆயுள் குறையும்.
குணம் : அச்சத்தால் அழியும் சிறுநீரகம் என்பது பாட்டு . அச்சம் வந்தால் சிறுநீரக இயக்கம் தடைப் பட்டு , அடுத்துள்ள கல்லீரல் வலு கிடைக்காது. துணிவைக் கைகொள்வது வெற்றி பெற
ஆற்றல் தரும். அச்சம் தவிர்க்க உடலின் பிரபஞ்ச ஆற்றல் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மூச்சை இழுத்து அடக்கி பின் வெளியிடு. பிரபஞ்ச ஆற்றல் உள் வந்து உதவும்.
நம்பிக்கையால் சிறுநீரகம் செயல்படும். அதன் தலையில் உள்ள தொப்பி போன்ற சுரப்பி அட்ரீனலின் சுரக்கும். இது கல்லீரலுக்கு ஆற்றல் தந்து , அதன் வழி, மனம் இதயம் செயல்படும் .
செயல் இல்லாத பரபரப்பு , இதயத்துக்கு வேண்டாத இரத்த அழுத்தம் தருவதோடு, சிறுநீரகத்தை
காலி (வெறுமை ) செய்து கொண்டிருக்கும். அத்தகைய சூழ்நிலை தவிர்.
செயல் :
(1) சம்மணம் இட்டு அமர்ந்தால் , 'ஒ ' -K 10 என்ற புள்ளி - உள்ள முழங்கால் ரேகை மடிப்பில்
அழுத்தம் விழும். அடுத்து , 'ஓ ' - UB 66 என்ற கால் சுண்டுவிரல் கீழ் உள்ள புள்ளி மண் தொட்டு
அழுந்தும். ஆகா ! கிடைத்து விட்டதே சிறுநீரக வலு ! செயல் படுத்துவீர்களா ?
(2) பெண்கள் தரைச் சமையல் செய்யும்போது, ஒருகால் குத்துக் காலிட்டு, மறுகால் சம்மணமிடும் முறையில் மண் தொடும். சிறுநீரக முழு சுற்றும் உள்ளங்காலில் ஏறி சுண்டுவிரலில் முடியும். சிறுநீரகக் கோளாறு அண்டவே அண்டாது.
கால் சுண்டு விரல் சிறுநீரகத்தை சுண்டும் விரல் . கைச்சுண்டு விரல் இதயத்தை சுண்டும் விரல்
நோய்கள் :
'ஒ ' 'ஓ ' புள்ளிகள் தூண்டப் படாத நிலையில், உடலில் உள்ள உப்பு நீர்க் கழிவு UB சிறுநீர்ப் பை மூலம் வெளியேறாமல் கழிவுத் தேக்கம் ஏற்படும் . அதனால் வரும் நோய்கள் :-
(1) அரிப்பு (2) பாத எரிச்சல் (3) அதிக வியர்வை (4) குதிகால் வலி (5) விந்தணுக்கள் குறைவு
(6) முழங்கால் மூட்டு வலிகள் (7) மூட்டுப் பிடிப்பு (8) முதுகு வலி (9) சிறுநீர்ப் பிரச்சினைகள்
(10 கீழ் இடுப்பு வலி (11) பின்பக்கத் தலை வலி (12) வெள்ளைப் படுத்தல்.....
தன் வலுப் புள்ளிகள் 12 நிறைவு.
அன்புடன், ஆ. மதி யழகன் .
Wednesday, 23 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.5
5.5 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் நீர் வளம் K 10 , UB 66
K 10 - நீர் தன் வலு - உயிர் 'ஒ '
இருப்பிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம்.
துடிப்பு : கால்களை தொங்கப் போடுவதால் 'ஒ ' புள்ளி வலுக் குறைவு ஏற்படும். ஒரு காலேனும் மடித்தால் போதும். துடிப்புகள் ஒழுங்காகி நீர் வலு கிடைக்கும்.
மனம் வழி :
(1) உடலில் இப்புள்ளி வலு குன்றினாலும், அச்சம் வரும். ஆண்மைக் குறைவுகள் போன்ற நோய்கள் உள்புகும். உடல் -> மனம்.
(2) மனதில் அச்சம் வரினும் இப்புள்ளி உடலில் தடங்கல் செய்யும். மனம் -> உடல்.
ஆக, உடலின் பழக்க வழக்கங்களும் முக்கியம். மனதின் வலிமையும் முக்கியம்.
ஆழ் மனமாக விளங்கும் சிறுநீரகம் மரபு விருப்பங்களைக் கொண்டுள்ளது.
எ. கா. பாலுணர்வு , மரபு விருப்பச் சாதனைகள் ,
திரும்பத் திரும்ப பார்ப்பதாலும், கேட்பதாலும் மேல் மனதில் P தோன்றி, அடிமனம் Liv இறங்கி
உட்காரும் சூழல் விருப்பங்களையும் கொண்டுள்ளது. இவை பிரபஞ்ச செய்திகளாக வெளியேறி
உங்களை அறியாமலே முயற்சிகள் நடக்கும். நிறைவேறாத , முடிவுக்குக் கொண்டு வர முடியாத ஆசைகளின் படிவு , உடல்த் துன்பங்களின் முடிவு என மாறும்.
உடல் வலிகள், பாலுணர்வுக் குறைவு, கால் இயக்க க் குறைவு , வாதம், சிறுநீரக சிக்கல்களில் தெரியும். பிறகு கல், தீ, மண், நுரை என விரியும்.
பயன் : 'ஒ ' தூண்ட சிறுநீரக ஆற்றல் கிடைக்கும். பாத எரிச்சல் நீங்கும் . தலை முடி உதிரல் நிற்கும். ஆண்மைக் குறைவு அகலும்.
UB 66- நீர்ப் பை தன் வலு - உயிர் 'ஓ '
இருப்பிடம் : காலின் ஐந்தாவது எலும்பு, ஐந்தாவது விரல் எலும்பும் சேரும் இடத்தில் . ( சுண்டு விரல் முடியும் வெளிப் புறம் உள்ளது )
துடிப்பு : சுண்டு விரல் மண் பட சம்மணமிட்டு அமர 'ஓ ' துடிப்பு இயல்பான நிலையில் இருக்கும்.
இதன் வழி தடைப் பட்டால் , வலிகள் பல.
மனம் வழி :
ஆழ் மனக் குறைபாடு , வாழ்வில் ஈடுபாடு குறைவு, விரக்தி, சிறுநீர்ப் பை செயல் பாட்டில் குறைவு, கூடுதல் காட்டும். 'ஓம் ' என இறைவழி நாடும் கால கட்டம். 'ஓ ' ஒலி உச்சரிப்பே மன நிறைவு தரும். பல் வலி, எலும்பு வலிகள் அடையாளம் காட்டும்.
பயன் விளக்கம் :
'ஓ ' புள்ளி தூண்ட பாத வலி குறையும். சிறுநீர் போவதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறையும். அதனால் சர்க்கரை நோய்த் தீர்வுக்கு வழி வகுக்கும். கழுத்தில் இருந்து முதுகில் இறங்கி ஓடும் சிறுநீர்ப் பையின் 4 ஓட்டத்தில் உண்டாகும் தேக்கம் - கழுத்து இறுக்கம் நீங்கும்.
தொடரும்.
Tuesday, 22 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.4 contd
சுவை :
காரச்சுவை. மோரில் ஊறி வறுத்த மிளகாய், மிளகாய்ப் பொடி , மிளகு, மிளகுப்பொடி .. இவற்றை நாள்தோறும் பயன் படுத்த வேண்டும்.
குணம் : துக்க உணர்ச்சி நுரையீரல் வலு குறைக்கும். துக்கம் நெஞ்சை அடைக்கும் என்பார்கள். துக்க வீட்டில் நெஞ்சை அடித்துக் கொள்வது , நுரையீரல் காற்றுக் குறைவால் மாரடைப்பு வராமல் இருக்க. துக்கத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது 'உயிர்ப்பு ' என்கிறோம். என்றும் மகிழ்ச்சியாய் இருப்பது, நுரையீரல் வளம்.
செயல் :
(1) விடியல் காலை 3 மணி முதல் 7 மணி வரை யோகப் பயிற்சி செய்ய அரை மணி முதல் முக்கால் மணி ஒதுக்க வேண்டும். நுரை நோய் தடுப்பு.
(2) சுற்றுப்புறத் தூய்மை இன்றியமையாதது. தூசுகள் வரும் இடத்தில் படுத்துத் தூங்கி விட்டு அல்லது பணி புரிந்து விட்டு சளி பிடிக்கிறது என்று சொன்னால் , தன் குறை அல்லது சூழல் கேடு.
பஞ்சாலையில் பணி புரிவோர்கள் வேலை விட்டு வெளியேறும்போது 'அச்சு வெல்லம் ' தருவது வழக்கம். இது சளி பிடித்தல் தடுக்கவே. வெல்லம் மண் பூதம் தூண்டி நுரை வளமாக்கும். தாய் மகன் உறவு . புள்ளி வடிவில் Sp 5 - நுரை வழங்கும் மண் - பூண்டுப் புள்ளி.
மிதி வண்டி மிதிக்க அசையும் புள்ளி. இதன் எதிர்ப் புள்ளி Lu 9 - நுரை கேட்கும் மண் - இரத்தக் குழாய் அடைப்பு நீக்கி - நுரை ஊற்று ( source point ) - மனிதன், பிரபஞ்ச இணைப்பு புள்ளி -
வெள்ளை அணுக்கள் உற்பத்தி - ஆக நுரை வளம் கிட்டும். எல்லா மதங்களிலும் , பழக்க வழக்கங்களிலும் கயிறு, காப்பு உண்டு.
(3) நிறைய காற்று வரும்படி சன்னல்கள் உள்ள வீடு, படுக்கை அறை , முற்றம் பயன் படுத்த வேண்டும். தூய காற்று உள்ள இடங்களில் நடை பழக வேண்டும். விளையாட வேண்டும். ஆழ்ந்த மூச்சு இழுத்து பழக வேண்டும்.
(4) மூச்சின் மூலம் அக்குப் புள்ளி தூண்டல் :
எந்த அக்குப் புள்ளியைத் தூண்ட வேண்டுமோ , அந்தப் புள்ளியைக் கட்டை அல்லது சுட்டு விரல், அல்லது நடுவிரல் அழுத்தி, மூச்சு இழுத்து, சற்று நேரம் வைத்திருந்து, பின் மூச்சு விடும்போது விரலை மேலே தூக்கி விட வேண்டும். இதுபோல் எட்டு முறை செய்ய வேண்டும். புள்ளி தூண்டப்பட்டு பயன் கிடைக்கும்.
(5) நோய்கள் :
நுரையீரல் வலு 'எ ', 'ஏ ' குன்ற கீழ்க் காணும் நோய்கள் :-
(1) இருமல் (2) தும்மல் (3) மூச்சிறைப்பு (4) மலச்சிக்கல் (5) மயக்கம்
(6) தோல் நோய்கள் (7) ஆண்மைக் குறைவு (8) பேதி (9) தோள்ப்பட்டை வலி (10) தசைகளில் வலி (11) ஆஸ்துமா.....
அடுத்து நீர் வளம்
அன்புடன், ஆ. மதி யழகன்...
Tamil muraiyil acupuncture -2/5.4
5.4 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் நுரை வளம் Lu 8 , LI 1
Lu 8 -நுரை தன் வலு - அடர் வெள்ளை - உயிர் 'எ '
இருப்பிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் (Lu 9) இருந்து ஒரு சுன் மேலே அமைந்துள்ளது.
துடிப்பு : பிரபஞ்சத்தில் இருந்து காற்றை ( ஆக்சிஜனை ) கொண்டு வரும் வேலை அதிகம் ஆகும்போதும், வலுக் குன்றியபோதும் வலி காட்டும். ஊசிமுறை உதவாது. தொடல், அக்கு பிரசர் , PROBE சுற்றி அழுத்தல் உதவும்.
மனம் வழி : இதுவே பிரபஞ்ச மனம், வெளித் தொடர்பு உள்ளது. சோகத்தால் அல்லது கவலையால் மூச்சு குறைந்து Lu 8 - உயிர் 'எ ' மெலிவுத் துடிப்பில் இருக்கும், தொடர்ந்த கவலை, இழப்பு எண்ணம் மார்புக் கூட்டின் அளவைக் குறைக்கும். நுரைத் துடிப்பு மனம் வழி மெலிவான பிறகு , வெளியே இருக்கும் நோய்க் கூறுகள் எளிதில் வந்து உட்காரும். பிறகே நோய்கள். இன்ப எண்ணங்களால் மார்பு விரிவடையும். துக்கம், வெறுப்பு , துன்ப எண்ணங்களால் மார்பு சுருங்கும், தூய இன்பம், சிரிப்பு மனம் வழி சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி.
உடல் வழி : சுற்றுப் புறத் தூய்மை பேண வேண்டும் .
பயன் : யோகப் பயிற்சி ( மூச்சுப் பயிற்சி + உடல் ஆசனங்கள் ) செயும்போதும் , விளையாட்டில்
ஏற்படும் கை அசைவுகளினாலும் தூண்டப் படும், இருமல், ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு , மேல் மார்பு எலும்பு வலிகள் தொடக்க நிலையில் தடுக்கப் படும்.
LI 1 - குடல் வலு - அடர் வெள்ளை - உயிர் 'ஏ '
இருப்பிடம் : ஆட் காட்டி விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில் இருந்து 0.1 சுன் தூரத்தில்
உள்ளது.
துடிப்பு : மிகத் தெளிவான துடிப்பு பெரும்பாலும் இருக்கும் .
மனம் வழி விளக்கம் மற்றும் பயன் :
மனம் என்பது பாம்பு ஆனால் தலை P - மேல் மனம், உடல் கல்லும், நீரகமும். வால் நுரை + குடல். மேல் மன பாதிப்பு வால் LI 1 - ல் தடை உண்டாக்கும். மயக்கம், அதிர்ச்சி , திடீர் வயிற்றுப் போக்கு ஏற்படும் . மேலும் இதன் கழுத்து ஓட்டம் Lu 17, 18 - ல் தடையாகி கீழ்த் தாடை வீக்கம் உண்டாக்கும்.
ஆட் காட்டி விரல் தொடல் - ஒரு விளக்கம் :-
(1) ஒரு பொருளைத் தொட நினைப்பது , ஐம்பூதச் சுற்றில் மேல் மனம் P தொடங்கி கல், நீர், நுரை என 4 பூத சுற்று.
(2) தொட்டு , பிறகு மேல் மன உணர்வு வருவது 4 பூத எதிர்ச் சுற்று.
(3) வாயில் வைப்பது 5 பூத மண் சுற்று. வாயில் 'குழந்தை ' எனின் உமிழ்நீர் வடியும்.
(4) அனுபவக் குழந்தை எனின் (இது மேல் மனம் அல்ல ) கல்லீரல் - அனுபவக் கிடங்கில் இருந்து - அதன் அடிப்படையில் உமிழ் நீர் ஊறும் .
(5) சுட்டு விரல் , சுட்டும் விரல் மட்டும் அல்ல. அனுபவ விரல் கூட. அதனால்தான் உணவைச் சுவைக்க, பிற உணர சுட்டு விரல் பயன் படுத்துகிறோம்.
(6) நடு விரல் தொடல் நேரடி அனுபவம். ஆனால் ஒரு பூதம், சுட்டு விரல் தொடுவது 5 பூத அனுபவம்.
நுரை வளம் பெறக் கூடுதல் வழிகள் :
காட்சி : வெள்ளைப் பொருள்கள் பார்த்தல், ஆடை அணிகள் உட்படப் பயன் படுத்துதல், சுற்றிலும் காட்சி அமைப்பை உருவாக்கல், தமிழர்கள் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிதலும் இதில் சேரும். வெள்ளை உயிர் காக்கும் நிறம். தூய்மை காட்டுவதும் கூட,
உணவு : வெள்ளை நிறத்தில் உள்ள பூண்டு, வெங்காயம், ( உட்பகுதி ) வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி , அவல் , தானியங்கள் ( உட்பரப்பு வெள்ளை ) தேங்காய், தேங்காய்ப்பால் ....
தொடரும்.
Monday, 21 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.3 contd.
குணம் :
கவலை உணர்ச்சி செரிமானம் கெடுக்கும். அழிக்கும் உணர்ச்சி நீக்கி, ஆக்கும் உணர்ச்சி கொள்ள வேண்டும். இதை நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு எனக் கூறுகிறோம். இதை செழுமை உணர்வு எனவும் கூறலாம்.
எ. கா. (1) உறவினர் இறந்தார் என் செய்வேன் ?
விடை : இருக்கும் உறவினர் காப்பேன். மேலும் இறந்த தாய் தந்தை தன் உடலில் உள்ளபோது அதைக் காத்து, பெயரும் காக்க வேண்டும்.
(2) தேர்வில் தவறினேன் . என் செய்வேன் ?
விடை : வரும் தேர்வுக்கு உழைப்பேன் .
எந்த தோல்வியும், இழப்பும், மனதில் சுற்றி சுழன்று விடையற்று நின்றால் , மனம் சிக்கிக் கொண்டது என்று பொருள். அது பயிரில் களை . உடன் நீக்க வேண்டும்.
செயல் :
(1) உணவின் மூலமே உடல் கட்டுமானம் நடை பெறுகிறது. அற்றது போற்றி உண்க .
பசித்துப் புசி கைக் கொள்க.
(2) எந்த உணவையும் ஒதுக்காது , அறுசுவை வரும்படியும் , ஏழு நிறங்கள் வரும்படியும், தேர்ந்து உண்க . இதுவே சத்துணவு.
கால்சியம், மகனீசியம் . ... எதுவானாலும் உணவின் வழி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
அவசரம் எனில், ரசாயன மருந்துகள் வேண்டும் காலம் மட்டுமே.
(3) நடைமுறை : காலைத் தொங்கப் போட்டு வாழும் முறை முடிந்தவரை தவிர்க்கவும்.
சம்மணம் இட்டு உண்ணுங்கள். மேசையில் உண்ண நேர்ந்தால் , முழங்கை கீழ்ப் பகுதி (மண் மூலகம் ) ஊன்றவும்.
இயல்பாகத் தரையில் சம்மணம் இட்டு அமர்வதால் , Sp 3, St 36 இணை அழுத்தம் பெறுவதால் , செரிமானம் எளிதில் நடை பெறுகிறது. நாற்காலி, சோபா இவற்றை எப்போதாவது பயன் படுத்துங்கள் . அவ்வாறு அமர்ந்துதான் படிக்க நேர்ந்தால் , இரண்டு கால்களையும் தூக்கி வைக்க வழி செய்து கொள்ளுங்கள். செங்குத்து சாய்மான நாற்காலிகள் சிறப்பு. முதுகு வலி வராது.
தரையில் பாய் அல்லது சமுக்காளம் இட்டு , சுவரில் சாய்ந்து கால் நீட்டியவாறு அல்லது மடக்கி அமர்ந்து பணி செய்வது பல நோய்கள் தடுப்பு ஆகும்.
(4) நோய்கள் : மனம் வழி மேலும் விளக்கம் :-
(P ) மேல் மனம் நாகத்தின் தலை. அதன் உடல்
(Liv ) அடி மனம் கல்லீரல்
(K ) ஆழ் மனம் நீர் ஈரல்
(Lu ) சூழல் மனம் நுரை ஈரல் - வால்
வாலிலிருந்து உடல் நோய் கிளம்பும், நுரையீரல் நோய்கள் இருமல், தும்மல், சளி பிறகு நீர் ஈரல் நோய்கள் - வலி உடல் பகுதிகளில்.. பிறகு கல்லீரல் நோய்கள் - தலை வலி, இரத்த அழுத்தம் .. பிறகு மேல் மனம் , இதயக் கோளாறு , பசியின்மை , சுளுக்கு , தூக்கமின்மை இதற்குப் பிறகு மண்ணில் வந்து தீவிரமாக முடியும். நாகத் தலையில் இருந்து 'மன நோய் ' கிளம்பி அறிகுறிகள் காட்டி, காட்டி மறையும், ஆக, நுண் மனப் புள்ளிகள் 'உ ' , 'ஊ ' தூண்ட உடல் நோயும் தீரும் ; மன நோயும் தீரும்.
செரிமானம் கெடுவதால் வரும் நோய்ப் பட்டியல் :
(1) வயிற்று வலி (2) வாயுத் தொல்லை (3) அஜீரணம் (4) தலை வலி / பொட்டுத் தலைவலி
(5) பசியின்மை (6) அதிகப் பசி, சர்க்கரை (7) மூக்கு அடைப்பு (8) தோல் நோய்கள் (9) கால் மூட்டு வலி , முழங்கால் வலிகள் (10) மாத விடாய்க் கோளாறுகள் (11) நீர் வீக்கம் / நீர்க் கட்டு ... என விரிவு.
தொடரும்.
அன்புடன், ஆ. மதி யழகன்..
Tamil muraiyil acupuncture - 2/5.3
5.3 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் மண் வளம் Sp 3 , St 36
Sp 3- மண் தன் வலு - அடர் மஞ்சள் - உயிர் 'உ '
இருப்பிடம் : கால் பாத கட்டை விரல் எலும்பும் , கட்டை விரலும் சேரும் மூட்டின் பின்புறம் உள்ள பள்ளம். ( Sp 2 தொட்டு மேல் நகர மேடு தாண்டி வரும் முதல் பள்ளம் )
துடிப்பு : மரபு உலோகக் குச்சி 'probe ' கொண்டு Sp 3 தொட வலி இருப்பின் ஹீமோ குளோபின்
குறைவு காட்டும் . பெண்களுக்கு பெரும்பாலும் வலி இருக்கும்.
பயன் : உடல் வழி, இரத்த சோகை நீக்கும். தலை பாரம் குறைக்கும், கால் வலி தீர்க்கும்.
St 36- இரைப்பை தன் வலு - அடர் மஞ்சள் - உயிர் ' ஊ '
இருப்பிடம் : டிபியா எலும்பின் (முழங் கால் முன் எலும்பு )தலைப் பகுதியில் துருத்தி இருக்கும்
பகுதியில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் உள்ளது. (கண்டு பிடித்தல் : முழங்கால் கீழ்ப் பகுதி நடுவே நான்கு விரல்கள் வைக்கும்போது சிறுவிரல் தொடும் இடத்தில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் உள்ளது . )
துடிப்பு : செரிமானம் கெடும் நிலையில் வலி இருக்கும்.
பயன் : அனைத்து நோய்கட்கும் செரிமானம் முதல் என்பதால் , இப்புள்ளி முதலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். இப்புள்ளி தூண்ட வயிறு தொடர்பான நோய்கள் தீரும். எத்தனையோ வருடங்கள் தாண்டி வரும் கால் மூட்டு வலிக்கு முதல் கட்டும் புள்ளி. முழங்கால் வலிக்கு தீர்வில் முதற்புள்ளி .
மனம் வழி : இருபுள்ளிகளும் நுண் மனம் ஆகும். மேல் மனம் P வேறு வழியில் பாதிக்கப் பட்ட நிலையில் , மனம் / இதயம் ஆற்றல் தூண்டும் வலு வாக தாயிடம் இருந்து கிட்டாத நிலையில்,
அதாவது மனம் துன்ப நிலையிலும் , இதயம் அதிக வேலையிலும் இருத்தல், உணவில் ஈடுபாடு
அற்ற உணர்வோடு அல்லது வருத்த உணர்வோடு உண்ணும் நிலை யில் , உணவை அரைத்து , மென்று இன்சுலின் ஊற நேரம் தராது விழுங்கும் நிலையில், செரிமானம் கெடும். மண் வளம் கெடும். மனம் அமைதிக்கு வழிபாடு செய்து உண்பது , உணவு உடம்பில் ஒட்டவே.
மண்ணீரல் தன் வலுப் பெற கூடுதல் வழிகள் :
காட்சி : மஞ்சள் பொருள்களைப் பார்த்தல். பயன் படுத்தல். சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்ளுதல்.
உணவு : மஞ்சள் நிறத்தில் உள்ள வாழைப் பழம், பப்பாளி, மாம்பழம், அன்னாசி, கறி மஞ்சள் பயன்பாடு, பொட்டுக்கடலை உணவில் சேர்த்தல்.
சுவை : இனிப்பு சுவையை உணர்ந்து மூளை இன்சுலின் தருகிறது. மரபு இனிப்பு உணவுகள் காலை, நண்பகல் உணவில் அளவோடு சேர்த்து உண்ணத் தொடங்குங்கள். வெல்லம் , தேன் , பனங் கற்கண்டு, கருப்பட்டி கலந்த உணவுகள்.
துவர்ப்பும் மண் வளமே. தாம்பூலத்தில் உள்ள பாக்கு துவர்ப்பு என்பது நினைக்க.
துவர்ப்பு சுவையை சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகி , வாய்ப்புண் , அல்சர், மூலம், குணமாக்கும். வாழைப் பூ எந்த வகையிலும் உணவில் சேர்க்க.
தொடரும்.
Monday, 14 December 2015
Tamil muraiyil acupuncture - 2/5.2 contd.
குணம் :
பெருமை, மகிழ்ச்சி இரத்த ஓட்டத்தை கூடுதலாக்கி , படபடப் பாக்கி தொடரும் போது இதய நோய்க்கு வித்திடும். திருமணம் ஆகும் வேளையில் கட்டாய மோதிரம் அணிவது, மூ வெப்ப மண்டலத்தை ( நான்காம் விரல் Tw ஓட்டம், - மோதிர விரல் ) சிறு நீரகத் தோடு (வலி நீக்கம் )
இணைக்கும் புள்ளியைத் தூண்டவே. [ Tw 2 - மூ வெப்ப ம் கவரும் நீர் ] என்ன ஒரு பாதுகாப்பு ? அதுவும் முன் கூட்டியே.
மகிழ்ச்சி வரும் போது தெளிவு உணர்ச்சி கொள்க. பணம், பொருள்கள், பிறர் பாராட்டு இவற்றில்
எச்சரிக்கை , தெளிவு கொள்க. நீங்களும் , ' பெரியோரை வியத்தலும் இலமே ! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ! ' என உணர்வுத் தெளிவில் இருக்க வேண்டும். இதுவே இதயம் காக்கும் ; மனம் பொங்காது. B . P மாத்திரை தேவைப் படாது.
செயல் :
(1) பரபரப்பு வாழ்க்கை முறை சீர் செய்யப் பட வேண்டும். உங்கள் நோக்கில் முதல் படி ( First Step ) எடுங்கள்.
(2) உடற் பயிற்சி செய்க. மூட்டுகள் அசையும் வழி உடற் பயிற்சி செய்வது. இரண்டாவது இரத்த ஓட்டம் என அழைக்கப் படுவது நிணநீர் ஓட்டம் ஆகும். முதுகுத் தண்டு வடம் முழுவதும்நிணநீர் அடிப்படையில் ' குளுகோஸ் , ஆக்சிஜன் ' பெறுகின்றன. உடற் பயிற்சி இல்லாது , பின் முதுகு, இடுப்பு வலி தீராது.
(3) 'Thumps up ' அடிக்கடி செய்க.
(4) நிறைய எண்ணங்கள், நினைவுகளின் வெப்பம் இதயத் துடிப்பை ஏற்றி விடுகிறது. பின் விளைவு பித்த நீர் தேக்கம். உணர்ச்சி எண்ணங்கள் செயல் உருவத்திற்கு வராததால் ஏகப் பட்ட ஆற்றல் தேங்கி கீழ்க் கண்ட நோய்கள் வருகின்றன,
இதயத்தால் வருவன :
(1) இதய வலி
(2) ஒற்றைத் தலை வலி
(3) தொண்டை வறட்சி
(4) கழுத்து வலி (5) வாயுத் தொல்லை (6) வயிறு உப்புசம்
(7) தோள்ப் பட்டை வலி (8) எலும்பு வலி (9) பசியின்மை - வயிற்றுக்கு ஆற்றல் போகாதது .
(10) இருதயப் படபடப்பு (11) சுளுக்கு
மனத்தால் வருவன :
(1) தூக்கமின்மை (2) உள்ளங்கை வியர்வை (3) அஜீரணம் (4) ஞாபக மறதி ((5) கர்ப்பப் பை நோய்கள் (6) காய்ச்சல் (7) காது வலி (8) முழங்கை வலி (9) மலச் சிக்கல் (10) காது இரைச்சல்
ஆக மேல் மனம் மனத் தீ , இதயத் தீயாக மாறுவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது, இதய நோய்கள் வருகின்றன.
அடுத்து மண் வலு.
அன்புடன், ஆ, மதி யழகன்.
Tamil muraiyil acuouncture -2/5.2
5.2 தன் வலுப் புள்ளிகள் 12 -ல் தீ வளம் P 8, H 8, Tw 6, S I 5
தீ தன் வலு = மனம் தன் வலு + இதயம் தன் வலு. - அடர் சிவப்பு - உயிர் 'இ '
இருப்பிடம் : இதய ரேகையில் நடு விரல் மற்றும் சுண்டு விரல் அழுத்தும்போது முறையே P 8, H 8 ரேகை மேல் படியும்.
துடிப்பு : இதயம் வேகமாகத் துடிக்கும்போது வியர்வை வரும் . இது கைகளிலும் தெரியும்.
மனம் வழி : மனத்தின் எண்ணங்கள் குவிந்து மீண்டும் மீண்டும் திரும்ப வரும்போது உண்டாகும்
மன அழுத்தம் இங்கு வலிப் புள்ளிகளாக மாறும். [ குறத்தி உலோகப் பூண் தடி தட்டி மன அழுத்தம் நீக்கும் இடம். ]
பயன் பாடு : கை விரல் வலி நீக்கும். வியர்வை மறையும். 'Thums up ' செய்க. [கை முட்டி மடக்கி கட்டை விரல் உயர்த்துக ] கடைத்தெரு செல்லும்போது கம்புப் பை எடுத்து செல்க, கையில் விசிறி பிடித்து வீசுக. கைப் பணிகள் எது வேண்டுமானாலும் செய்யவும். இதய ரேகை அழுத்தப் பட வேண்டும். தீ ( இதயம் + மனம் ) வலு கிட்டும்.
Tw 6 -மூ வெப்பத் தன் வலு , S I 5 - சிறுகுடல் தன் வலு - அடர் சிவப்பு - உயிர் 'ஈ '
இருப்பிடம் : Tw 6, புறங்கை மணிக்கட்டு ரேகையின் மூட்டிலிருந்து முட்டி ஒட்டி 3 சுன் மேலே. (படம்) S I 5 , உள்ளங்கை உள்நோக்கி சாய்க்கும்போது , மணிக்கட்டு தொடக்கத்தில் உள்ள பள்ளம்.
துடிப்பு : மிகினும் குறையினும் வலிப் புள்ளியாகி அடையாளம் காட்டும்.
மனம் வழி : மனதின் ஆற்றல் சரிவரப் பாயாததால் அல்லது வேகமாக உள்ளதால் மூ வெப்ப மண்டலம் ( சுவாச, ஜீரண , கழிவு மண்டலம் பிரிக்கும் இரட்டை உறை அதாவது உதர விதானம் ) இயக்கங்கள் சீர் கெட்டு வெப்ப மாறுபாட்டால் காய்ச்சல். எ. கா. பேய் படம் பார்த்து சிறுவர்களுக்கு வரும் காய்ச்சல்,
இதயம் வழி : அதிக எடை தூக்கல், இரத்த ஓட்டம் தேங்கல் ( கழிவு நீங்க வில்லை ) இவற்றால்
சிறு குடலுக்கு ஆற்றல் வரவில்லை, S I 5 அதிக வலிப் புள்ளியாக மாறும். இதனால் மணிக் கட்டு வலி , தோள் பட்டை வலி, பெருங் குடலில் வாயு ஓட்டம்.
பயன் பாடு : மணிக் கட்டு சுழலும் பணிகள் (1) கம்பு சுற்றல். (2) கத்தி , வாள் சுழற்றும் பயிற்சி
(3) மட்டை பிடித்து ஆடும் விளையாட்டுகள் தீ வலு தருபவை.
தீ வலுப் பெற கூடுதல் வழிகள்.
காட்சி : சிவப்பு (இதயம் ), இளஞ் சிவப்பு - ரோஸ் (மனம் ) பொருள்களைப் பார்த்தல், பயன்படுத்தல், சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்க.
உணவு : சிவப்பு நிறத்தில் உள்ள காய், கனிகள் உண்பது. எ. கா. பீட்ருட், ஆப்பிள், தக்காளி, காரட்,தோலோடு நிலக் கடலை , வெல்லம் , வெல்ல சருக்கரை, கருப்பட்டி, பனங் கல்கண்டு . . .
சுவை : கசப்பு சுவையான பாகற்காய் , பச்சை சுண்டைக்காய் ( அல்லது வற்றல் ) அகதிக் கீரை,
மாதுளம் பழத்தில் உள்ள கசப்புக் குருத்து, மஞ்சள் தோல். (சிவப்பு மணிகள் கூடுதல் பயன் )
தொடரும்.
Sunday, 13 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.1 contd
குணம் :
குடி கல்லீரலைக் கெடுப்பது போல , சினம், வெறுப்பு மனம் வழி
கல்லீரலைத் தின்று விடும். கத்தும் குணத்தைக் கை விட்டு சிக்கலைப் பேசித் தீர்க்க வேண்டும். இளையவர்கள் எனில் இரக்க சிந்தனையோடு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், கல்லீரல் கெட்டுப் போவதில்லை. கல்லீரல் தன் வலு காப்பாற்றப் படும்.
செயல் :
(1) உழைப்பதற்கு ஏற்ப ஓய்வு தேவை. ஒரு மணி நேரத்திற்கு 5 நி மேனி. இது உடல் வழித் தேவை ஆகும். வேலை மாற்றமும் ஓய்வாகக் கொள்ளலாம். எ. கா. உடற் பயிற்சியில் இருந்து
புத்தகப் படிப்பு . அல்லது புத்தகப் படிப்பில் இருந்து தோட்ட வேலை.
(2) இரவு 11 - 3 மணி வரை நான்கு மணி நேரம் கல்லீரல் சிறப்பாகப் பணி புரியும் நேரத்தில்
நன்கு உறக்கம் தேவை.
(3) கண் ஓய்வு : கல்லீரல் வெளி உறுப்பு கண் அதிக நேரம் பெரியதிரை (சினிமா ) , சின்னத் திரை, கணினித் திரை, கை பேசித் திரை இவற்றில் செலவிடுவதும் கல்லீரல், பித்தப் பை பாதிக்கும் . நேர அளவீடு கண் பணிக்குத் தேவை. கண் பயிற்சிகள் கை கொடுக்கும்.
(4) கண் வெப்பம், உடல் ஓய்வின்றி வேலை செய்வதால் ஏற்படும் வெப்பம் அனைத்தும்
கல்லீரலைப் பாதித்து கீழ்க் காணும் நோய்கள் உருவாகும்.
(1) தலை வலி
(2) மூச்சுத் திணறல்
(3) ஆண்மைக் குறைவு
(4) இரத்த அழுத்தம்
(5) தொடை நரம்பு வாதம்
(6) ஞாபக மறதி
(7) கட்டிகள்
(8) கண் எரிச்சல்
(9) அசதி அல்லது உடல் சோர்வு
(10) மயக்கம்
(11) மஞ்சள் காமாலை
(12) கோமா
என நோய்கள் உருவாகின்றன. இந்நோய்கள் வராது இருக்க , முன்னதாக த் தடுக்க கண் கழுவுதல் செய்ய வேண்டும்..
(5) கண் கழுவுதல் செய்யும் முறை :
ஒரு வாளி முழுவதும் ( அல்லது சிறு அமர் பலகையின் மேல் அகல ஏனத்தில் ) தண்ணீர்
வைத்துக் கொண்டு , மூச்சை உள்ளடக்கி , முகம் முழுவதும் நீரில் மூழ்கும்படி வைத்துக் கொண்டு கண்களை நன்றாகத் திறந்து பார்க்க வேண்டும்.
அதே சமயத்தில் வாயைத் திறந்து நாக்கு நன்றாக நனையும்படி செய்யவும், பிறகு தலையை உயர்த்திக் கொள்ளவும், மீண்டும் மூச்சை உள்ளடக்கி நீரில் கண்களை நன்றாகத் திறந்து பார்க்கவும். நாக்கும் தொங்க விடுக . இதயச் சூடும் குறையும்.
இதைத் தொடர்ந்து 8 முறை காலை குளிப்பதற்கு முன்னும், மாலை முகம் கழுவும் முன்னும் இருவேளை செய்ய கல்லீரல் குளிர்ச்சி அடையும். புத்துணர்ச்சி வரும். பெரும்பாலான நோய்கள் தடுக்கப் படும்.
அடுத்து தீ வளம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.
Tamil muraiyil acupuncture - 2/5.1
5.1 தன் வலுப் புள்ளிகள் 12-ல் கல்லீரல் வளம் Liv 1, G B 41
கல்லீரல் தன் வலு - உயிர் 'அ ' - அடர் பச்சை - Liv 1
இருப்பிடம் : கால் கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கும் , எலும்புகள் சேரும் மூட்டிற்கு இடையில் அமைந்துள்ளது.
துடிப்பு : இந்தப் புள்ளியில் கல்லீரல் தனக்கு இயல்பான பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறது. வலி இல்லை. ஏதேனும் புதிய வேலை சேரும்போது சற்று மிகையாகத் துடிக்கும், மேலும் மேலும் வேலை சேரும் போது துடிப்பு வலி தரும் புள்ளியாக மாறும். மெலிவு அடைந்தாலும் பழைய நிலை (RESTORE ) அடைய வலிப்புள்ளியாக மாறும்.
வலியின்மை நலம். இந்த சோதனை காலில் இரத்த ஓட்டம் இல்லாது சூம்பிய நிலையில் செல்லுபடி ஆகாது.
பயன்கள் : கல்லீரல் வலிகள், செரிமானத் துக்குப் பின் வரும் தலை வலி, நச்சு நீக்கல்.
மனம் : அடி மன பாதிப்பிலும் வலி வரும். நோய் முற்றிய நிலையில் கல்லீரல் டானிக் இதுதான் . வாரம் ஒருமுறை தூண்ட வேண்டும்.
பித்தப்பை தன் வலு - உயிர் 'ஆ ' - அடர் பச்சை - G B 41
இருப்பிடம் : காலின் நான்காவது, ஐந்தாவது கால் விரல் எலும்புகள் சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது .
துடிப்பு : பித்தப்பை மெலிவிலும் வேலை மிகுதியாலும் , பித்தநீர் தேக்க த் தாலும் துடிப்பு மிகும்,
மனம் : அடிமனதில் தேங்கியுள்ள சினம், வெறுப்பு மிகுதியாலும் , சிந்தனை மிகுதியாலும் , பித்தநீர் அதிகம் சுரக்கும்.
பித்தப் பை என்பது 'ஆ ' உறுப்பு . அதை வெட்டி எடுக்கக் கூடாது. எடுத்தால் கல்லீரல் வேலை இரட்டிப்பு , மற்றும் தாமதம் ஆகும்.
பயன்கள் : பாத வலி , குதி கால் வலி, இடுப்பு வலி தீரும்.
கல்லீரல் தன் வலுப்பெற கூடுதல் வழிகள் :
காட்சி : பச்சை, பசுமை, வெண் பச்சை பொருள்களைப் பார்த்தல், பயன் படுத்தல் , சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்ளல்.
உணவு : பச்சை நிறத்தில் உள்ள காய் கனிகள் உண்பது.
சுவை : இயற்கையில் புளிப்பான எலுமிச்சை , நார்த்தம் பழம், மாங்காய் போன்றவை .
புளியை விட கோக்கம் புளி (குடம் புளி ) நன்று.
தொடரும் .
Thursday, 10 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.0
5.0 தன் வலு - இணை புள்ளிகள் .
இணை புள்ளி விளக்கம் :
ஒரு படித்தான தன்மையுள்ள ஏறு புள்ளி ஒன்றையும் , அதே ஓட்டத்தில் இறங்கு புள்ளி ஒன்றையும் இணைத்தவாறு கூறல்.
எ. கா. ( Lu 8, LI 1)
அதாவது ( நுரை தன் வலு , குடல் தன் வலு )
இதுபோல் உள்ள தன் வலுப் புள்ளிகளை தமிழ் உயிர் எழுத்துக்களால் குறிக்கலாம். ஏனெனில் அந்த உயிர் ஓசைகள் , அந்தந்த உறுப்பை அதிர்வுகளால் அசைத்துப் பார்க்கின்றன.
(1) Liv 1 - கல் தன் வலு - உயிர் 'அ '
(2) GB 41 - பித்தப்பை தன் வலு - உயிர் 'ஆ '
(3) P 8 - மனம் தன் வலு - தீ தன் வலு - 'இ '
H 8 - இதயம் தன் வலு - தீ தன் வலு - 'இ '
(4) Tw 6 -மூ வெப்ப த் தன் வலு - 'ஈ '
S I 5 -சிறு குடல் தன் வலு - 'ஈ '
(5) Sp 3 - மண் தன் வலு - 'உ '
(6) St 36 - இரைப்பை தன் வலு - 'ஊ '
(7) Lu 8 - நுரை தன் வலு - 'எ '
(8) LI 1 - குடல் தன் வலு - 'ஏ '
(9) K 10 - நீர் தன் வலு -'ஒ '
(10) UB 66 - நீர்ப் பை தன் வலு - 'ஓ '
[ ஓ வடிவத்தில் மேல் இரட்டை சுழி சிறுநீரகத்தையும் , கீழ் சுழி நீர்ப்பை அமைப்பையும்
குறிக்கும். தமிழ்க் குறியீட்டில் சித்தர்களின் செயல். ]
இப்போது இணைப் புள்ளிகள் ( அ , ஆ ) , ( இ , ஈ ) , ( உ , ஊ ) , (எ , ஏ ) , (ஒ , ஓ ) ஆகும்.
குறில் எல்லாம் ஏறு புள்ளிகள். ( யின் ) . நெடில் எல்லாம் இறங்கு புள்ளிகள் ( யாங் ) .
மேலே உள்ள இணையாக உள்ள புள்ளிகள் முதன்மை வலு அல்லது தன் வலுப் புள்ளிகள் .
இணைப் புள்ளிகளின் வகைகள் :
பஞ்ச பூதப் புள்ளிகள் 60 - ஐ ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கலாம்.
தன் வலுப் புள்ளிகள் = 12
தூண்டும் வலுப் புள்ளிகள் = 12
கேட்கும் வலுப் புள்ளிகள் = 12
க ட்டும் வலுப் புள்ளிகள் = 12
கவரும் வலுப் புள்ளிகள் = 12
கூடுதல் = 60
தன் வலுப் புள்ளிகளில் அக்கு பிரசர் , அக்கு பங் சர் , அல்லது தொடு சிகிச்சை செய்வதன் மூலம் அறிகுறி நோய்களைத் தீர்க்கலாம்.
மற்ற எந்த நோய்த் தீர்வுக்கும் தன் வலுப் புள்ளிகள் அடிப்படையான 'டானிக் ' . ஊட்டச் சத்து பயன் உடையவை.
சுற்றுப் படம் காண்க.
அடுத்து புள்ளிகள் விரிவாக.
அன்புடன், ஆ. மதி யழகன் .
Wednesday, 9 December 2015
Tamil muraiyil acupuncture -2/4.3 &4.4
(4) கவரும் சுற்று - கவரும் வண்ணங்கள் - விரைவு பின்வீச்சு - உழைப்பு தற்காப்பு
இது ஒரு அபூர்வ நிகழ்வு அல்லது இயல்புக்கு மாறான நிகழ்ச்சி அறிவிப்பு மற்றும் நடப்பு.
மூடிய திரை அரங்கில் திரைப்படம் ஓடும்போது தீப் பிடித்தால் , கூட்டம் தப்பி ஓட அவசர வழி இருக்கும் அல்லவா ? அது போல இங்கு.
எ. கா. சிறு நீரகத் திற்கு தாய் உதவி இல்லை. (No Lu 5)
கேட்டும் உதவி இல்லை ( No K 7)
தாயின் தாயும் வந்து உதவி செய்யவில்லை (No S p 9 )
ஆனால் சிறு நீரகத் தின் வேலையோ அதிகம். நெருக்கடி நிலைமை. எனவே தானே
(in advance ) ஒன்றுக்கு முன் தாண்டி தாயின் தாயிடம் ஆற்றல் பெறல் K 3 = நீர் மண் -->
நீர் கவரும் மண் - குதி கால் வலி ( நோயா ? நிலைமையா ! )
ஆக எதிர்க் கட்டுப்பாடு சுற்றுதான் கவரும் சுற்று. இதனால் தான் பாடம் நடத்தும் போது K 7
வேலை செய்யாத போது K 3 தூண்டுக என்பர். கட்டுப் பாட்டு சுற்றில் Sp 9 - மண் கட்டும் நீர் -
மூட்டு வலி - மண் பூதம் சுமையில் முடிவு எடுக்கிறது. K 3 - ல் சிறு நீரகம் மெலிவில் . ஒவ்வொரு சுற்றையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் முப் பரிமாணப் பெயர்கள் அட்டவணை தருகிறேன்.
ஆக எதிர்க் கட்டுப்பாடு சுற்றுதான் கவரும் சுற்று. இதனால் தான் பாடம் நடத்தும் போது K 7
வேலை செய்யாத போது K 3 தூண்டுக என்பர். கட்டுப் பாட்டு சுற்றில் Sp 9 - மண் கட்டும் நீர் -
மூட்டு வலி - மண் பூதம் சுமையில் முடிவு எடுக்கிறது. K 3 - ல் சிறு நீரகம் மெலிவில் . ஒவ்வொரு சுற்றையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் முப் பரிமாணப் பெயர்கள் அட்டவணை தருகிறேன்.
4.4 நுரை புள்ளிகள் அட்டவணை.
குறியீடு -----இரு பரிமாணம் ------- முப் பரிமாணம் -3 D பெயர்
Lu 11 நுரை கல் நுரை கட்டும் கல்
Lu 10 நுரைத் தீ நுரை கவரும் தீ
Lu 9 நுரை மண் நுரை கேட்கும் மண்
Lu 8 நுரை வலு நுரை தன் வலு
Lu 5 நுரை நீர் நுரை வழங்கும் நீர்
துணை உறுப்பு குடல் புள்ளிகள் .
LI 3 குடல் கல் குடல் கட்டும் கல்
LI 5 குடல் தீ குடல் கவரும் தீ
LI 11 குடல் மண் குடல் கேட்கும் மண்
LI 1 குடல் வலு குடல் தன் வலு
LI 2 குடல் நீர் குடல் வழங்கும் நீர்
குறிப்பு : இறங்கு ஓட்டத்தில் (YANG ) மூன்றாவது புள்ளியே 'கல் ' புள்ளியாகும். 'கல்' தீ, மண் என மண்ணில் முடியும். எப்போதும் இறங்கு ஓட்டம் அழுக்குகளைக் களைவதற்காக
நுரை என்பதில் முதலில் தொடங்கி, நீர் என்பதில் இரண்டாவதாக முடியும்.
இது போல் பிற பட்டியல்கள் எழுதிப் பார்க்கவும்.
தேவைப் படும்போது அங்கங்கே பிற பெயர்கள் கூறப்படும்.
இனி, இணைப் புள்ளிகளைப் பார்ப்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.
துணை உறுப்பு குடல் புள்ளிகள் .
LI 3 குடல் கல் குடல் கட்டும் கல்
LI 5 குடல் தீ குடல் கவரும் தீ
LI 11 குடல் மண் குடல் கேட்கும் மண்
LI 1 குடல் வலு குடல் தன் வலு
LI 2 குடல் நீர் குடல் வழங்கும் நீர்
குறிப்பு : இறங்கு ஓட்டத்தில் (YANG ) மூன்றாவது புள்ளியே 'கல் ' புள்ளியாகும். 'கல்' தீ, மண் என மண்ணில் முடியும். எப்போதும் இறங்கு ஓட்டம் அழுக்குகளைக் களைவதற்காக
நுரை என்பதில் முதலில் தொடங்கி, நீர் என்பதில் இரண்டாவதாக முடியும்.
இது போல் பிற பட்டியல்கள் எழுதிப் பார்க்கவும்.
தேவைப் படும்போது அங்கங்கே பிற பெயர்கள் கூறப்படும்.
இனி, இணைப் புள்ளிகளைப் பார்ப்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.
Tamil muraiyil acupuncture -2/4.3
4.3 நான்கு சுற்றுக்கள்
ஐந்து தனிமங்கள் (பூதங்கள் ) தன் வலுப் பெறும் வகை நீக்கி விட , உயிர் ஆற்றல் சுற்றும் நிலைகளை நான்காகப் பிரிக்கலாம். அவை (1) வழங்கல் சுற்று (2) கேட்கும் சுற்று (3) கட்டும் சுற்று (4) கவரும் சுற்று . தன் வலுப் புள்ளிகளை அடர் வண்ணப் புள்ளிகள் அல்லது உயிர்ப் புள்ளிகள் எனலாம். பிற நான்கு முறையே வண்ணப் புள்ளிகள், கேட்பு வண்ணப் புள்ளிகள், கட்டும் வண்ணப் புள்ளிகள், கவரும் வண்ணப் புள்ளிகள். (படங்கள் )
(1) வழங்கல் சுற்று - வண்ணங்கள் - தூண்டும் வலு - உடல் அசைவில் தீர்வு
கல்லீரல் (1) , தீ (2) , மண் (3) , நுரை (4) , நீர் (5) என இயல்பாக ஓடும் முறை ஆக்க சுற்று. இந்த சுற்றில் கல்லீரல் தாய் தீக்கு, தீ தாய் ஆகும் மண்ணுக்கு , . . .
எனவே இந்த சுற்றில் தாய் இயங்கி தனயனுக்கு வழங்குவதால் இது வழங்கும் சுற்று.
எ. கா. நுரை, நீருக்கு ஆற்றல் வழங்கும் இடம் Lu 5 = நுரை நீர் --> நுரை வழங்கும் நீர்.
முழங்கை மடிப்பில் உள்ள இந்த புள்ளி , அசைவதன் மூலம் சீறுநீரக வலு கிடைக்கும்.
(பயன் வழிப் பெயர் திராட்சைப் புள்ளி. )
(2) கேட்கும் சுற்று - கேட்பு வண்ணங்கள் - கேட்கும் வலு - விளையாட்டு
ஓட்டம் 1, 2, 3, 4, 5 எனில் ஆக்க சுற்று. (படத்தில் அம்பு ) எதிர்த் திசையில் இயங்கினால் கோடரி போல் செயல் நடந்து பிடி பாக பூதம் பயன் அடைகிறது. வழங்குவது தேங்கினால்
கேட்டு வாங்குவது, கடன் வசூலிப்பு போல.
எ. கா. மேல் எடுத்துக் காட்டில் வழங்கல் முறையில் சிறுநீரகத்திற்கு ஆற்றல் வராத போது (Lu 5 இயங்கவில்லை) , சிறு நீரகம் , சிறு நீரகக் கற்களைக் கரைக்க ஆற்றல் நுரையிடம் கேட்பது K 7 புள்ளி = நீர் நுரை புள்ளி . இது கேட்கும் சுற்றில் உள்ள புள்ளி. இதை நீர் கேட்கும் நுரை எனலாம். இடம் : காலில் முன் கணுக்கால் எலும்பு, குதி கால் நரம்பு கோட்டின் மையத்தில் இருந்து 2 சுன் மேலே. ( பயன் வழிப் பெயர் கல் நீக்கி )
(3) கட்டும் சுற்று - கட்டும் வண்ணங்கள் - விரைவு முன் வீச்சு - பரபரப்பு தற்காப்பு
ஒன்று தாண்டி முன் ஓடல் கட்டும் சுற்று.
எ. கா. கல்லீரல் - தீக்கு ஆற்றல் தந்து , தீ - மண்ணுக்கு ஆற்றல் (செரிமான உதவி ) தராது போனால், கல், மண்ணுக்கு ஒன்று தாண்டி உதவ வந்து கட்டுப் பாடு செய்தல் Liv 3 =
கல் மண் --> கல் கட்டும் மண் . இது இரத்த அழுத்த நோய்.
எ. கா. 2 மண்ணீரல் - நுரைக்கு ஆற்றல் தந்து - நுரை நீருக்கு ஆற்றல் தந்தால்சிறுநீரகம் வளம் பெறும் . இது ஆக்க சுற்று .
நுரை துக்கத்தால் தேங்குகிறது. மண் கவலை அப்பிய நிலை அல்லது சுமை மிகுதியால் ஒன்று விட்டுத் தாண்டி சிறுநீரகத்திற்கு ஆற்றல் தருவது S P 9 - மண் நீர் --> மண் கட்டும் நீர். சிறு நீராக வேலை தடைப் பட்டு வலிகள் உருவாகும். இது கால் மூட்டு வலி நோய்.
அடுத்து 4 -வது சுற்று .
அன்புடன், ஆ. மதி யழகன்.
Tuesday, 8 December 2015
Tamil muraiyil acupuncture -2/4.1
4. நான்கு சுற்றுக்கள் - முப் பரிமாணப் பெயர்கள்.
4.1 காரணப் பெயராக்கல் :
சென்ற புத்தகத்தில் ஐம்பூதங்களின் ஐந்து மின் காந்த ஓட்டங்களையும் , தீ பூதத்தில் கூடுதலான பெரி கார்டியம் அல்லது மனம் என ஒரு ஓட்டத்தோடு சேர்த்து ஆறு ஓட்டங்களைப் பார்த்தோம். ஒவ்வொன்றிலும் பஞ்ச பூதப் புள்ளிகள் ஐந்து. மொத்தம் ஏறும் 6 ஓட்டங்களிலும் , இறங்கும் 6 ஓட்டங்களிலும் சேர்த்து 12 × 5 =60 அறுபது எனப் பார்த்தோம்.
ஒவ்வொரு பஞ்ச பூதப் புள்ளியிலும் என்ன நடக்கிறது? அதைப் பெயரில் கொண்டு வர முடியுமா ? கொண்டு வந்தால் என்ன பயன்? அதன் மூலம் நோய்த் தன்மை அறிதல் இயலுமா ?
நோய் தீர்க்கும் வழி அறிய இயலுமா ? புள்ளிகள் பெயரிலேயே ப் பேசுமா ? மறைந்த பல உண்மைகள் அதன் மூலம் நமக்குக் கிடைக்குமா ? என்பதற்கான ஒரு முயற்சியாக , நான்கு சுற்றுக்களை முழுக்க ஆராய எடுத்துக் கொண்டேன். சுற்று அடிப்படையில் பெயரிலும் கொண்டு வந்தேன்.
4.2 பெயரிடல் - முப் பரிமாணப் பெயர்
எடுத்துக் காட்டு விளக்கம் : Lu 11 - நுரை கல் (பழைய பெயர் )
இருப்பிடம் : கைக் கட்டை விரலில் வெளி நகத்து 0 . 1 சுன் அளவில் மேலாக உள்ள புள்ளி நுரை கல் Lu 11 . இது நுரை ஓட்டத்தில் கல்லீரலை ச் சந்திக்கிறது. [ பயன் வழிப் பெயர் - தலை வலி நீக்கி ] (படம் )
முறையான நுரையீரலின் ஓட்டம் 4, 5, 1 எனச் செல்ல வேண்டும். அதாவது சிறுநீரகம் (5) தொட்டு பின் கல்லீரல் (1) தொடுவதே. ஆனால் ஒன்று தாண்டி ஓடி சாதிப்பது என்ன ?
கல்லீரல் ஒரு குழப்ப நிலை, ஒரு சிறு மயக்கம், மற்றும் சோர்வில் இருத்தலால் உதவ வந்து ஆனால் கட்டுப்பாடு செய்து விடுகிறது. குறைவை நீக்கும் ; கூட இருந்தாலும் குறைக்கும்.
குறை, கூடுதல் அளவாக்கும்.
தீர்க்கும் நோய் : தலை வலி நீங்கும். மயக்கம் தீரும். சோர்வு அகலும்.
சினம் தவிர்க்கவும் இயலும் என்பதால் துறவிகள் ஜப மாலை உருட்டுகிறார்கள்.
இந்த புள்ளி Lu 11 - ஐ ஏன் மூன்று பரிமாணச் சொல்லால் குறிக்கக் கூடாது ? அதாவது நுரை கட்டும் கல் . இவ்வாறு பெயர்களைக் குறிக்க, பயன்கள் வருமாறு :
(1) எந்த ஓட்டத்தில் எந்த மூலகம் வருகிறது.
(2) அந்நிகழ்வு எந்த ஒரு சுற்று அடிப்படையில் பயன் தருகிறது.
(3) அது எந்த மூலகத்தின் நோய்த் தன்மையை எந்தவிதத்தில் தீர்க்கிறது.
(4) மறைந்துள்ள நோயையும் தெரிந்து கொள்ளலாம்.
(5) தீர்க்கும் நிகழ்வையும் புரிந்து கொள்ளலாம்.
பெயர்ப் புரிதல் இங்கு :
(1) நுரை ஓட்டத்தில் 'கல்' வருகிறது.
(2) அது 'கல் ' லுக்கு கட்டுப்பாடு அடிப்படையில் பயன் தருகிறது.
(3) 'கல் ' தன சக்தியில் குறைவு பட்டதால் ( தூக்கமின்மை , அசதி, அதிக சிந்தனை , அடி மனக் குழப்பங்கள் ) வந்த தலை வலி தீர்க்கிறது.
(4) மறைந்திருக்கும் கோளாறு ஓய்வு, உறக்கமின்மை அறிகுறி.
(5) கல்லீரல் கூடுதல், குறைவை, நுரையீரல் (ஆக்ஸிஜன் தந்து ) சரி செய்கிறது. தாயின் தாய் தீர்வு செய்கிறது.
ஆக நுரை கட்டும் கல் எனக் குறிப்பதன் மூலம், மூன்று நிலைகள் (Three Dimention ) புரியும்.
முதல் சொல் -------- ஓட்டப் பாதை
இரண்டாம் சொல் ------ சுற்று நிலை
மூன்றாம் சொல் -------- பயன் பெறும் அல்லது தரும் அடுத்த ஓட்டப் பாதை.
இனி நான்கு சுற்றுக்கள் .
அன்புடன், ஆ, மதி யழகன்.
Monday, 7 December 2015
Tamil muraiyil acupuncture -2/3.2
3.2 நோய் தீர்வு முறைகள்.
உயிர் -> மனம் -> ஐந்து பூதங்கள் -> உடல் (+மனம் ) வழி 1, 2, 3, 4, 5.
(1) உயிர் ஓட்டத்தை உடலின் ஏழு சக்கரங்களில் ஆரா மூலம் அறிந்து , உச்சந்தலை மற்றும் உள்ளங்கை மையத்தில் (P 8 ) பெற்று தன் குணம், மற்றும் அடுத்தவரையும் குணப்படுத்து கின்றனர். வான் வழிப் பெறும் ஆற்றல் காஸ்மிக் கதிர்கள் என்பர். ஜப்பானில் இம்முறை ரெய்கி என அழைக்கப் படுகிறது. லெமூரியாக் கண்டத்தில் உயிர் வழி (ஆரா ) முறை
வழக்கில் இருந்தது , தற்போது சிலரால் மீட்டு எடுக்கப் படுகிறது.
(2) மனதை ஆராய்ந்து தீர்வு காண்பது. நோயாளி பேச மாட்டார். ஆழ்மன வசியம் செய்ய வேண்டும். ஆழ் மனம் வேற்றாள் திறப்பது சரியல்ல.
(3) ஆக அக்கு பங் சர் வழி ஐம்பூதத் தீர்வு காண்பதே சிறப்பானதாகும். இதிலேயே பல முறைகள் உண்டு. அவை தொடு சிகிச்சை , அக்கு பிரசர், அக்கு பங் சர் ...என.
உயிர் தாண்டி, மனம் மாய்ந்திட , வரும் சிறுநோய்கள் , உங்கள் பாதுகாப்புக் கோடு உடைந்து போய் விட்டது என்பதைக் காட்டுகின்றன. நோய் வருடக் கணக்கில் நீடிக்கும் போது , வெளிப் பாடானது உணவு ஏற்கும் தன்மை, இயக்கத்திற்கான தன்மை இவற்றை பாதித்து பெரு நோய்
ஆகிறது. எ . கா . மூட்டு வலி , வாதம், இரத்த அழுத்தம், ...
அக்கு பங் சர் தீர்வு :
நோய் என்பது பெரும்பாலும் உள - உடல் கோளாறுகள் தான். மருத்துவம் என்பதும் அதே வழியில் இருக்க வேண்டும் என்றால் , அது அக்கு பங் சரே . ஐம்பூதங்கள் அனைத்துமே உள ரீதியிலும் வேலை செய்கிறது ; உடல் ரீதியிலும் வேலை செய்கிறது. மற்றும், உள நலம் என சிறப்புப் புள்ளிகளையும் கொண்டு உள்ளது.
உடலில் தோன்றும் ஓட்டத் தடைகளை நீக்கினால் முதலில் குணம் வரும். பிறகு அல்லது சேர்ந்தார்ப் போல் மன ஓட்டத் தடைகளை நீக்க வேண்டும். அவற்றின் அடையாளங்கள் ஐந்து பாதையிலும் உண்டு. நோயாளி யோடு பேச வேண்டும். தொழில், சூழல், மன ஓட்டம் அறிய வேண்டும். யோகா முறைகள், உடற் பயிற்சி எடுத்துக் கூற வேண்டும் . மனம் வலுவாகும்.
உயிர் வலுவாக இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும். அது இப்புத்தகத்தின் எல்லை அல்ல. மனப் புள்ளிகள் வரை செல்வோம். அதற்கு முன் ஐம்பூதப் புள்ளிகள் 60- ஐ ஐம் பெரும் பிரிவாக சுற்று வழி பிரித்து நோய் விளக்கம் அறிவோம்.
அடுத்து நான்கு சுற்றுக்கள் -முப் பரிமாணப் பெயர்கள்.
அன்புடன், ஆ. மதி யழகன்.. ..
Monday, 30 November 2015
Tamil muraiyil acupuncture -2/3.1
3. மனம் வழி நோய் விளைச்சல்.
உயிர் ஆற்றல் :
உயிருக்கான பிரபஞ்ச மனம் ஆகச் செயல்படும் நுரையின் ஆற்றலும் , உயிரின் ஆழ் மனமாகச் செயல் படும் தாய், தந்தை 50:50 ஆற்றல் பெற்ற சிறுநீரகமும் இணைந்து உயிர் ஆற்றலாகச் செயல்பட்டு ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிர் சாரத்தை வழங்குகின்றன.
3.1 நோயில் மனதின் பங்கு
மனதின் காணும் பகுதி உடல். உடலின் காணாத பகுதி மனம். உயிரும் உடலும் மனத்தால் முழுமையாக இணைக்கப் பட்டு இருக்கின்றன.
உயிர் --> மனம் --> உடல்.
இயங்கும் உயிர் ஆற்றல்தான் பசியுணர்வு, பாலுணர்வு, பாச உணர்வு , விருப்ப உணர்வு களைத்
தோற்றுவிக்கிறது. இவற்றின் கட்டுப்பாடு அற்ற வெளிப்பாடுகளை , கற்பிக்கப் பட்ட லாப உணர்ச்சி (தான் ) அடிமனமும் , நாகரீகம் பார்க்கும் மேல் மனமும் (சூழ்நிலை ) முரண்பட்டு தடை செய்யும் போது இடையூறுகள் உடலில் பதிவு செய்யப் படுகின்றன.
இவையே உடலில் விளையும் சிறு நோய்கள்.
எ . கா. இருமல், தும்மல், சளி, மயக்கம், வாந்தி, மலச் சிக்கல், தலை வலி. ....
இந்த சிறு நோய்கள் உடலின் ஓட்டப் பாதையில் அடையாளங்கள் ஏற் படுத்துகின்றன . அவை
ஓட்டப் பாதை இயக்கத்தைத் தடை செய்வதின் அளவைப் பொறுத்து , நோய்கள் பல பரிமாணங்களை வெளிப் படுத்துகின்றன. விளைவு , ஐம்பூத நோய்கள்.
அடுத்து நோய் தீர்வு முறைகள்.
அன்புடன், ஆ. மதி யழகன்..
Tamil muraiyil acupuncture -2/2.4
2.4 பிரபஞ்ச மனம் : மனிதன் , சித்தர் தத்துவம்.
மனிதன் பிறக்கும் போது தலை உச்சி வழியாக உள் நுழையும் உயிர் காற்று, பிரபஞ்ச அறிவை உள் இறக்கி, ஐம்பூதச் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. உயிர் இயக்கம் முழுவதும்,
(1) பிரபஞ்ச மன இணைப்பில் (LUNGS )
(2) ஆழ் மனத் தொடர்பில் (KIDNEY )
(3) ஒரு குறிப்பிட்ட பெயரில் (LIVER )
ஒரு மனிதனிடத்தில் வெளிப் படுகிறது.
ஒரு மனிதனைப் புகழ்வது என்பது, பிரபஞ்ச முதன்மையைப் புகழ்வதே ஆகும். ஒரு மனிதனை இகழ்வது என்பது தவறு. அவனிடம் இன்னும் பிரபஞ்சம் வெளிப் படவில்லை என்பதே ஆகும்.
நோக்குக :
(1) பெரியோரைப் புகழ்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
---கணியன் பூங்குன்றனார்
(2) எல்லாப் புகழும் இறைவனுக்கே
----நபி நாயகம்.
(3) எல்லோருமே புத்தர்கள் . சிலர் இப்போது புத்தர்கள் ; பிறர் வருங்காலப் புத்தர்கள் .
----ஓஷோ .
சித்தர்கள் (ஞானிகள் ):
பிரபஞ்ச மனம் ஆகிய நுரையீரலில் காற்றைக் கட்டுப் படுத்தி, இயக்கி, ஆழ்மனம் நீர் ஈரல்
இணைத்து, அடிமனக் கல்லீரலைத் தூய்மை செய்து, மேல் மனம் (பெரி கார்டியம் ) தீயின் பகுதியில் அன்பில் நிறைகின்றார் ஞானிகள். அவர்கட்கு வயிற்று உபாதை மண் ஆகிய நுண் மனத்தால் நிகழாது, உணவின் தீமையால் நிகழலாம். முக்காலம் உணர்வதால் அவர்கள் விரும்பின் அதை அனுமதிக்கலாம் , அல்லது ஏற்கலாம். புத்தரின் கடைசி காலத்தில் தவறான உணவு விரும்பி ஏற்றார்.
2.5 மன ஈரல் வடிவம்.
எண் பூதம் மன வகை குறிப்பு
4. நுரை ஈரல் --------பிரபஞ்ச மனம் --- தியானத்தில் ஆழ்மன நுழைவு
5. நீர் ஈரல் -----------ஆழ்மனம் -------ஆழ் கடல் நிகர்.
1. கல் ஈரல் -----------அடிமனம் ----------உறக்கத்தில் ஆழ் மன நுழைவு.
2. தீ ஈரல் -------------மேல் மனம் ----------நீங்கள் இப்போது இங்கே.
3. மண் ஈரல் ----------நுண் மனம் --------விளைச்சல் தெரியும் இடம்
4 -->5--> 1--> 2--> 3 வரை கட்டுப்பாடு சித்தரிடம் உண்டு.
1, 2, 3 மனிதனிடம் உண்டு. ஒரு நாடகப் பாத்திரம் போன்ற வாழ்வு.
கருத்துப் படம் : மனதில் தலை உடைய நாகம், நுரை எனும் வால் அசைவால் இயங்குகிறது.
எல்லா நிறங்களையும் உள்ளே அடக்கியது வெள்ளை நிறம். எல்லா வற்றையும் தன் அகத்தே கொண்டது பிரபஞ்சம் ஆகிய நுரையீரல்.
உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு , உயிர் மர்மம் எல்லாம் நுரையீரல் கொண்டு உள்ளது.
அடுத்து மனம் வழி நோய் விளைச்சல்.
அன்புடன், ஆ, மதி யழகன். ...
Sunday, 29 November 2015
Tamil muraiyil acupuncture -2/2.3
2.3 மன இயக்கம் - நனவும், கனவும்.
மேல் மனம் , அடிமனம் :
குடும்பம், சமுகம் இவை 'மேல் மனதை ' இப்படித்தான் எனத் தீர்மானிக் கின்றன . குழந்தைப்
பருவத்தில் இருந்து பார்த்து, கேட்டு, நுகர்ந்த அனுபவங்கள் 'அடிமனத்தைத் ' தீர்மானிக் கின்றன.
அடி மனமே 'நான் ' எனும் பாத்திரத்தை ஏற்றுச் செயல் புரிகிறது.
மேல் மனம், அடிமனம் இரண்டுமே கர்வம் அல்லது அகந்தையை உள்ளாகவும், அறம் , தர்மம்
என மேலாகவும் கொண்டு உள்ளன.
கனவில் ஆழ்மனம் :
அடிமனம் (கல்லீரல் ) பல அடுக்குகளை உடையது. கால வாரியாகப் பதிவுகள் / படிவுகள் உண்டு. மேல் மனம் அடி மனத்தில் படிந்தவாறு உள்ளது. அடி மனம் கனவு காணும் போது ,
ஆழ் மனத்தில் எண்ணங்கள் இறங்குகின்றன.
நிலை 1: தேர்வுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு த் தவறாமல் சென்றவன், கனவில் தவற விடுவதாய்க் கண்டு பதறுகிறான். எனவே வெற்றிகள் கனவில் மாறாகத் தோல்வியில்
முடிகின்றன. என்றோத் தோன்றிய 'அச்சம் ' என்ற உணர்வு ஆழ் மனத்தில் ' முறிக்கப்பட்டு '
சம நிலை எய்துகிறது. கதை, திரைப் பட அச்சங்கள் நேரடி அனுபவம் போல ஏற்பட்டு கனவில் இருந்து தீடீர் என்று விழிப்போம். ' பாம்பு ' என்ற சொல் மேல் மனதில் பதியும் என்று இரவில்
சிறுவர்கள் உச்சரிப்பது தடை செய்யப் பட்டு உள்ளது.
நிலை 2: ' ஐஸ் கிரீம் ' உண்ண வேண்டும் எனும் நிறைவேறாத மேல் மன ஆசை, சில நாட்களிலேயே கனவில் உண்பது போல காட்சி உண்டாகிறது. ஆக என்றோ தோன்றிய நிறைவேறாத ஆசை அல்லது விருப்பம் திடீரெனக் கனவில் நிறைவேறுவதன் மூலம் ஆழ் மனம் ' ஆசையை ' முறித்து உணர்வுச் சமநிலை எய்துகிறது.
முடிவு : ஆழ்மனம், சுனாமி போல், பூகம்பம் போல் தன்னிடத்து சரி (+) , தவறு (-) என்பதை அண்ட விடுவதில்லை. அது தேவை நிறைவேறச் செயல் படுகிறது. சரி, தவறு பாகுபாடு இல்லை.
அக்கு பங் சர் பார்வை : மனிதனின் மனம் என்பது மேல் மனம் (பெரி கார்டியம் ) , அடிமனம் (கல்லீரல்) எனும் இரண்டு வட்டங்களுள் பகலில் சுற்றி வருகிறது. (பழைய கோபதாபங்கள்
திடீர் என வெளிப் படுவது இதனால்தான். ) இரவு, உறக்கத்தின் போது ஆழ் மனம் (சிறுநீரகம்)
அதை உள் வாங்கி (+), (-) இன்றி முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுகிறது. தீவிர உணர்வாகிய பயம் அல்லது ஆசையே நிறைவேறுகிறது,
பயன் படுத்தும் விதம் : பயம் அற்று , அகக் காட்ச்யாய் விருப்பத்தை [ நல்ல முடிவுகள் உள்ளதுதான் நிலைத்த புகழ் தரும். ] எதுவானாலும் மேல் மனத்தில் விதைக்க, அறுவடை ஆவதாகக் காணின் அது நனவில் கை கூடி வரும். இதை உறங்கு முன் செய்ய வேண்டும்.
எ . கா . என் உடல்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது எனக் கூறி P 9 மனம் கல் என்ற புள்ளியை (நடுவிரல் முனை ) அழுத்தி மூச்சு எடுத்து விடுவதை, மூன்று முறை செய்ய வேண்டும்.
நனவில் உள்ள மேல்மனம், அடிமனம் இவையே உங்கள் குணம், உடல்நலன் இவற்றைத் தீர்மானம் செய்கின்றன.
நல்ல உளநலம் --> நல்ல உடல்நலம் --> நல்ல உள நலம்.
அன்புடன், ஆ. மதி யழகன் .
Tamil muraiyil acupuncture -2/2.2
2.2 ஐம் பொறி - எதிர் /நேர் உணர்வுகள்.
எந்த ஒரு நோயின் தொடக்கமும் உணர்வின் ஆதிக்கத்தில் தோன்றுகிறது. ஐம் பொறி ஆகிய புலன் உணர்வுகளில் அடையாளம் காட்டுகின்றன. அவற்றை சிறு நோய் எனப் பொருட் படுத்தாமல் காரணம் கண்டு தெளிய வேண்டும். புலன்கள் தொடர்ந்து வலிமை குன்றும் போது நோய்கள் பூதங்களின் வலிமை குறைத்து ஐம் பூத நோய்களாக மாறுகின்றன. பட்டியல் ----
பொறி--------பூதம் --------எதிர் உணர்வு -------நேர் உணர்வு --
கண் --------கல்லீரல் ------சினம் ---------இரக்கம் ---
நாக்கு ------தீ ஈரல் -பெரி கார்டியம் --பெருமை , பரபரப்பு - தெளி வு, அமைதி
வாய் மண்ணீரல் கவலை செழுமை
மூக்கு நுரையீரல் துக்கம் உயிர்ப்பு அல்லது பரிமாறல்
காது நீர் ஈரல் அச்சம் நம்பிக்கை
கண்ணில் எந்த கோளாறு வந்தாலும் சின உணர்வு வெளிப் படாமல் உடலில் வெப்பமாக உள்ளது .இதற்கு தீர்வு கல்லீரல் ஓட்டத்தில் காண மன, உடல் தீர்வுகள் உடனே கிடைக்கும். கால் கட்டை விரல் புள்ளி Liv 1. மேலும் ஓய்வு , உறக்கம் சரி பார்க்க வேண்டும்.
இதைக் கண்டும் காணாமலும் விடத் தலை வலி வரும். நடை K 1 தூண்டுவதால் தீர்வு. (கல்லீரல் தாய் உதவி) . சின் முத்திரைப் பணிகள் Lu 11 செய்தாலும் தீரும். (கல்லீரல் தாயின் தாய் ) . இரண்டும் இல்லாதபோது கல்லீரல் அடிக்கடி அல்லது நிலையாக அதன் மூலப் புள்ளி ஆகிய Liv 3 - நுரை மண்ணில் போய் நிற்கும் . இதுவே இரத்த அழுத்த நோய் என ப் பெரு நோய்
ஆகி விடுகிறது.
மாறுபட்ட உணர்வு தீர்க்கப் பட நல்ல வாழும் முறை (LIFE STYLE ) வேண்டும்.
நல்ல வாழும் முறை இல்லாத போது சிறு நோய்க்குப் பின் பெரு நோய் உட்கார்ந்து , வாழ் நாள் வரை மருந்து.
இது போல் பிற பொறிகளே முதல் அடையாளம் ஆகின்றன.
ஆக, ஐந்து பொறிகளிலும், புலன் வாயிலாக உணர்தல் அதாவது எண்ணம் நேர்மறை (+) ஆக
இருக்க வேண்டும். சொல்லும், செயல்களும் அது போல் இருந்தால் நோய் இன்றி நீண்ட நாள்
வாழலாம். இதுவே நோயின்மைக்கு முதல் படி.
திருக்குறள் : பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள் : ஐம் பொறிகளை அடக்கி ஆளவல்ல இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியாளர் நீண்ட நாள் வாழ்வார். ஆக, ஆமை போல் 'கெட்டது ஒடுக்கி நல்லது ஊக்கி ' வாழ நோயில்லை.
குறிப்பு : நன்று (+), அன்று (-) இரண்டு நிலையில் நடுவு நிலைமையே சிறப்பு. தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால் நேர்மறை (+) எடுக்க.
அடுத்து மன இயக்கம் காண்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்....
Saturday, 28 November 2015
Tamil muraiyil acuouncture -2/2.1
2. மன ஈரல் தத்துவம்.
உரு , அரு உரு, அரு விளக்கம் :
கல்லீரல், தீ ஈரல், மண்ணீரல், நுரையீரல், நீர் ஈரல் ஐவகை ஈரல்கள் ஐவகை பூதங்கள் ஆக உள்ளன. இவற்றை கல், தீ, மண், நுரை, நீர் எனச் சுருக்கமாகக் கூறுகிறோம். இவற்றை பொருளாக ' இதோ ' என்று சுட்டவோ , பிரித்து எடுத்தோ, காட்டி விடலாம். ஏனெனில் இவை பருப்பொருள்கள் . ' உரு ' எனக் கூறலாம். மனமே நுண்பொருள் . 'அரு ' எனக் கூறலாம்.
பெரி கார்டியம் மட்டுமே மேல் மனத்தின் ஒரு பகுதியாக உள்ள அருவத் தன்மையும் (ஏனெனில் பெரி கார்டியம் சுற்றி உள்ள மின் காந்த இடங்களும் சேர்ந்தவை ) பார்க்கத் தக்க 'ஈருறை நடுவில் திரவம் ' என உருவத் தன்மையும் கொண்டு "அரு உரு " வாக உள்ளது.
இறைவன் : இறைவன், உருவானவனாகத் தோன்றுவான் ; அருவானவனாக இருப்பான் ; சிவலிங்கம் போல அரு உரு வாகவும் இருப்பான் என்பது வழக்கு.
மனிதன் : ' மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ' மனிதனைப் பொறுத்தவரை
உரு வடிவுகள் : கல், தீ, மண், நுரை, நீர்.
அரு உரு : பெரி கார்டியம் (மேல் மனம்)
அரு : எவை? முழு மனம் என்பது எது, எப்படி, எவை?
2.1 மன ஈரல் ஐம் பிரிவு ஐம் பூதமே.
முதல் புத்தகத்தில் ,
பெரி கார்டியம் - மேல் மனம் ( consc ious mind )
கல்லீரல் - அடி மனம் ( sub conscious mind )
நீர் ஈரல் - ஆழ் மனம் (super conscious mind )
முதல் கட்டுரையின்படி ,
மண்ணீரல் - நுண் மனம் (minute conscious mind )
நுரையீரல் - பிரபஞ்ச மனம் ( universal conscious mind )
ஆக, இந்த பஞ்ச பூதங்கள் அனைத்துமே மன ஈரல் அல்லது முழு மனம் என்பதை மனிதனுள் நிறுவுகின்றன. பொதுவாக மனம் என்பது மேல் மனம் (PRESENT ) மட்டுமே. அதுவே நிகழ் காலத்தில் சிந்தனை நிகழ்த்துவதால். இது ஒரு பனிப் பாறை , நீரில் மூழ்கிக் கிடக்கும் போது நமக்கு பனிப் பாறை அளவு என்பது கண்ணுக்குத் தெரிவதே ஆகும்.
உண்மையில் மனம் மிக விரிவானது.
மனதை ஒரு பாம்பாகக் கருதினால் தலை , மேல் மனம் பெரி கார்டியம்.
கல், நீர், உடல்.
உடல் வாலாக நுரையீரல். சீறும் இடம் மண்.
அடுத்து மன உணர்வுகள் தாக்கம் காண்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்...
Friday, 27 November 2015
Tamil muraiyil acupuncture-2/1.5
1.5 நுண் மனம் (மண் தொகுதி )
வயிற்றின் செரிமானம் , மனதின் சோகம் , சினம், பெருமை, கவலை, வெறுப்பு, துக்கம், மகிழ்ச்சிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது . அதனால் மண்ணீரல் , கணைய சுரப்புகள் பாதிப்பு உறுகின்றன . எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் மண் பூதம் நுண் மனம்.
மண் பூதம் , பெண்ணின் கருப்பை கட்டுமானங்களையும் , மாத விலக்கையும் நிருவாகம் செய்வதில் உள்ள பங்கினைக் கருதினால் இதைப் பெண் மனம் எனவும் சிறப்பாகக் கூறலாம். பெண்கள் வெட்கம் வரும்போது கால் கட்டை விரலைக் கொண்டு மணலில் கீறுவர் . அங்கு Sp 1
மண் தொடக்கப் புள்ளி உள்ளது. இதன் முடிவுப் புள்ளி Sp 21 விலாப் பகுதியில் உள்ளது, விலாப் பகுதியில் கிச்சு கிச்சு செய்யக் கூசும். மண்ணீரல் ஓட்டத்தில் மனதின் உணர்வுகளும் பெண்ணின் உணர்வுகளும் பிரதிபலிப்பதைக் காணுங்கள்.
Sp 1 - அஜீரணத் தலை வலி ; Sp 2 - சர்க்கரை நோய் விளைவு ; Sp 3 - ஹீமோக்ளோபின் பாதிப்பு , இரத்த சோகை ; Sp 6 - மாத விடாய் பாதிப்பு ; Sp 9 - செரிமானக் கோளாறால் மூட்டு வலி ; மிகவும் முக்கியமான புள்ளி Sp 5 - அனைத்து அடைப்பும் நீக்கும் புள்ளி. மன அடைப்பு உடல் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும் இடம், Sp 5 - மண் நுரை (எதிர்ப் புள்ளி நுரை மண் Lu 9 இதுவும் வேலை செய்யா விட்டால் இரத்தக் குழாய் அடைப்புகள் . தூண்ட சரியாகும்.)
மண்ணின் துணை உறுப்பு இரைப்பை . இதன் தொடக்கம் St 1 - கண் இரைப்பையின் மையப் பகுதியில் , கரு விழி நேர் கீழே ஆரம்பம், கண்ணீர்த் துளிகள் இறங்கும் தொடக்கக் கோட்டுப் புள்ளி . அன்பு என்பது மனதின் மிக நுண்ணிய உணர்வு. இது பாதிக்கப் படும்போது கண்ணில் கண்ணீர் பெருகுகிறது. இதையே திருவள்ளுவரும் ,
' அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்.' --71
அன்பு போல் மற்றும் அவலம், மகிழ்ச்சி, போன்ற தீவிர உணர்வுகளின் போதும் கண்ணீர் வருவது நுண்ணிய உணர்வுகள் மனதை பாதிப்பதையே அதனால் வயிறு (stomach) கெடுவதையே காட்டு கின்றன.
உலகில் பிறந்து வந்த போது வயிறு வெறும் பலூன்பை . எல்லா நோயும் இங்குதான் (வயிற்றில் ) தொடங்கு கிறது. மண் பூத இருப்பு மைய பூதம். [1-2-3-4-5]
மண் பூதம் நோய்க்கும் முதல், தீர்வுக்கும் முதல்.
நீர் பூதம் உயிர் இருக்கவும் முதல், போகவும் முதல்.
கல்லீரல் பூதம் உடல் கட்டுமானம் ஏற்றவும் முதல், குறைக்கவும் முதல்.
தீ பூதம் பராமரிப்புக்கும் முதல், சீரழியவும் முதல்
நுரை பூதம் உடல், மனம், உயிர் பராமரிப்புக்கும் முதல், சீரழியவும் முதல்...
ஆகப் பஞ்ச பூதங்களே மன நல பாதிப்பு அடைந்து உடலில் விளைவு காட்டுகின்றன. உடலில் விளைந்த பிறகு உணர்விலும் காட்டுகின்றன. ஆகப் பஞ்ச பூதப் புள்ளிகள் (அக்குப் புள்ளிகள் ) உடலையும் அசைக்கும்; மனதையும் அசைக்கும்.
மன ஓட்டம் பஞ்ச பூத ஓட்டமே!
அன்புடன் ஆ. மதி யழகன்.
Tamil muraiyil acuouncture-2/1.4
1.4 பிரபஞ்ச மனம் (நுரையீரல் )
நுரையீரல் நீரின் தாய் . விதைகளுக்கு வெளிச்சமும் காற்றும் போல நுரையீரல் சிறுநீரகத்திற்கு வலுத் தருகிறது. ஆக மூச்சுப் பயிற்சி இருந்தால் சிறுநீரக வலிமை எளிது . முழங்கை மடக்கும் பனி புரிந்தாலும் Lu 5 -நுரை நீர் தூண்டப்பட்டு சிறுநீரகம் வலுவாகும் . இதன் மாற்றுப் புள்ளி K 7 நீர் நுரை (நீர் ஓட்டத்தில் நுரை வலு கேட்டு வாங்கும் இடம் ) சிறுநீரகக் கல் கரைக்கும்.
பிரபஞ்சத்தில் இயங்கும் ஒளித்துளி காற்று வடிவில் தலை உச்சிப் புள்ளி வழியே நுழைந்து நுரையீரல் பலூன் பையில் நுழைகிறது . ஆயா முதுகில் தட்ட இயங்குகிறது. உடலில் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கிற காற்று பிரபஞ்ச சக்தியை உள் வாங்கித்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது . உடலில் மூக்குவழி காற்று இயக்கம் நடைபெற்றாலும் , உடலில் உள்ள ஒவ்வொரு நுண் துவாரம் வழியாகவும் சுவாசம் நடைபெறுகிறது .
பிரபஞ்ச ஆற்றல் முழுமையாக உள் வாங்க , பஞ்ச பூதங்கள் உள்ள மேல் உடல் (முண்டம்) அதாவது மார்பும் முதுகும் திறப்பாக இருப்பது நன்று. மன்னர்கள் அணிகலன் கூடிய வெற்று மார்பில் இருப்பர் . சில கோவில்களில் மேல் சட்டை கழற்றுவது மரபாக உள்ளது . ஆண்கள் பனியன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு , துண்டு போர்த்துவது வழக்கமாகக் கொள்ளலாம் . பெண்கள் முதுகு திறப்பாக ஜாக்கெட்டு அணிவது ஏற்கெனவே வழக்கில் உள்ளது . முதுகுப் புள்ளிகள் சுவாசிக்க உதவும். அங்கு நீர்ப் பை U B ஓட்டம் உள்ளதால் சிறுநீரக வலுவுக்கு உதவும்.
மார்புப் பகுதியில் தொடங்கும் நுரையீரல் ஓட்டம் கை கட்டை விரல் வெளி நகக் கண் அருகே Lu 11 என முடிகிறது. நுரையீரல் துணை உறுப்பு பெருங் குடலின் ஓட்டம் இரண்டாம் விரல் ஆகிய ஆள் காட்டி விரல் வெளி நகக் கண் L I 1 அருகே தொடங்குகிறது . முடிவு மூக்கின் அடியில் உள்ள L I 20 என்ற புள்ளி ஆகும். ஆகக் கட்டை விரலும் , ஆள் காட்டி விரலும் சேரும் சின் முத்திரை நுரையீரல் சுற்றை முழுமை செய்து உடல் நலம் தருகிறது. மேலும் பிரபஞ்ச மனத்தை கட்டி இழுத்து ஆழ் மனமாகிய சிறுநீரகம் உடன் இணைக்கிறது . உறக்கம் இல்லாமலே ஆழ் மனம் புகுதல் ஆகும். அறிவும் , உணர்வும் இரு முனை இணைக்கும் விழிப்புணர்வு ஆகும்.
மூக்கின் பணி களுள் ஒன்று , வாசனை பார்த்து உணவை வயிற்றினுள் செல்ல அனுமதி தருவது. இனி மண்ணீரல், கணையம், வயிறு இணைந்த மண் பூதம் நுண் மனம் ஆக செயல் படுவது காண்போம் .
அன்புடன் ஆ . மதி யழகன் ...
Tamil muraiyil acupuncture-2/1.3
1.3 ஆழ் மனம் (சிறுநீரகம் )
சிறுநீரகம் ஆழ் மனமாகச் செயல்பட்டு தாய் தந்தையின் 50:50 பண்புகளை விளைவிக்கிறது எனக் கூறி இருந்தோம் . இதுவே காலங்களால் முந்திய ஆதி செல்லின் தொடர்ச்சி உறுப்பு எனவும் கூறி இருந்தோம். பல், எலும்பு , உடல் வளர்ச்சியோடு ஆழ் மன விருப்பங்களையும் நிகழ்த்துவதும் இதுவே . சிறுநீரக ஓட்டத்தின் தொடக்கப் புள்ளி K 1 . இது முன்னங்கால் மையத்தில் உள்ளது . இதற்கு சமமான கையில் உள்ள புள்ளி P 8 . இது மனதின் (மேல் மனம் ) வலுவான புள்ளி. ஆடு , மாடு , பொதுவாக மிருகங்கள் நான்கு கால்கள் ஊன்றி நடக்கும் போது மேல் மனம் , ஆழ் மனத்தோடு நேரடியாக இணைக்கப் படுகிறது. மரங்கள் நேரடியாக வேரோடு இணைக்கப் படுகின்றன . மரங்களும், மிருகங்களும் தாம் உண்மையில் பிரபஞ்சத் தியானத்தில் இருக்கின்றன என ஞானிகள் கூறுவர் . மனிதன் இரு கால்கள் ஊன்றி நிற்பதால் கண் வழிக் கல்லீரல் இயங்கி ஆழ் மனத்தோடு இணைகிறது . கல்லீரல் எழுப்பிய மேல் மனமோ பழைய அனுபவம் அல்லது எதிர் கால ஆசை அலைகளில் அசை போட்டு நிற்கிறது. மேல் மனம் வெறுமையில் இருந்தால்தான் அடிமனம் அறிந்து தெளிந்து ஆழ் மனம் புகல் முடியும் . பல அற்புதங்கள் நிகழ்த்த முடியும். இன்றேல் கனவு மட்டுமே நினைவுகள் இணைத்து காட்சிகள் எழுப்பும் .
அடுத்து சிறுநீரகத்தின் இறுதிப் புள்ளி K 27 காலர் எலும்பின் கீழ் முடிகிறது. இதன் அருகே , மார்புப் பகுதியின் முதல், இரண்டாவது விலா எலும்புகள் இடையேதான் நுரையீரல் தொடக்கப் புள்ளி Lu 1 அமைகிறது என்பதைக் கவனிக்கவும். ஆக நுரையீரல் எனும் பிரபஞ்ச மனம் அடுத்து இணைகிறது . மேலும் சிறுநீரகப் பை ஓட்டத் தொடக்கம் U B 1 கண்ணின் உட்புற இமை ஓரம் மூக்கு ஒட்டி அமைகிறது. சிறு நீரகச் செய்தி நுரையீரல் எனும் பிரபஞ்ச மனதிற்கு செல்கிறது . FORWARD CALL SENT . சிறுநீர்ப் பையின் இறுதிப் புள்ளி U B 67 . இது காலின் சுண்டு விரல் வெளி நகக் கண் அருகில் உள்ளது . காலின் சுண்டு விரல் என்பது சிறுநீரகத்தை சுண்டும் விரல் ஆகும் . மேலும் அது நீர்ப் பையின் நுரையீரல் புள்ளி ஆகும். SECOND CONTACT . அடுத்து பிரபஞ்ச மனம் .
அன்புடன் ஆ . மதி யழகன் ...
Thursday, 26 November 2015
Tamil muraiyil acuouncture-2 /1.1
1.1 மேல் மனம் (பெரி கார்டியம் )
பொதுவாக எந்த ஓர் ஓட்டமும் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது ? தொடங்கும் இடத்தில் என்ன நடக்கிறது ? முடியும் இடத்தில் என்ன நடக்கிறது ? என்ற தொடர்ச்சி கவனிக்கப் படுவதில்லை . அதை கவனிப்போம் . முதல் புத்தகத்தில் (தமிழ் முறையில் அக்கு பங் சர் 1) பெரி கார்டியத்தை P மனம் என்றே குறிப்பிட்டு இருந்தோம் . இதன் தொடக்கப் புள்ளிP 1 . இது மார்க் காம்பின் ஒரு சுன் வெளிப் பக்கம் தொடங்குகிறது . இரு மார்புக் காம்புகள் சமச் சீராக உள்ளன. இட மார்புக் காம்பு சுற்றி மனம் இட அமைப்பில் உள்ளது . சமச் சீரில் அடுத்த பக்கத்திலும் அதன் விளைவு இருக்கும் . மண்ணீரல் S P , கல்லீரல் LIV ஓட்டங்களும் சமச் சீரே .
பெரி கார்டியத்தின் இறுதிப் புள்ளி P 9 (நினைவு சக்திப் புள்ளி ) இது நடு விரல் முனையில் முடிகிறது . பிறகு அதன் துணை உறுப்பு மூ வெப்ப மண்டலம் Tw 1 நான்காம் விரல் அல்லது மோதிர விரல் வெளிப்புற நக முனையில் தொடங்கி , கண் புருவக் கீழ் முனை Tw 23 -ல் முடிகிறது . ஆக மேல்மனம் (பெரி கார்டியம் ) கண்ணை இயக்கும் அடிமனமாகிய கல்லீரலைத் தூண்டுகிறது .
1.2 அடி மனம் (கல்லீரல் )
கல்லீரல் (LIVER ) அடி மனமாக ச் செயல் படுகின்றது என்று முன்பே குறிப்பிட்டு இருந்தோம் . கல்லீரல் அதன் வெளி உறுப்பாகிய கண் கொண்டு பலவற்றை உள் வாங்கி மூளையில் ஒரு பதிவும் , கண் பாப்பா (IRIS ) வில் ஒரு பதிவும் கொண்டுள்ளது .
கண் பாப்பாவின் மேல் அரை வட்டம் அகக் கண்ணாக , உள்ளச் செய்திகளின் பதிவேடாக உள்ளது . கண் பாப்பாவின் கீழ் அரை வட்டம் உடல்ச் செய்திகளின் பதிவேடாக உள்ளது .
[ IRIDOLOGY SHOW THAT YOUR EYES CAN GIVE A GLIMPSE OF THE STATE OF YOUR OVERALL HEALTH-google] இதை ஆராய்ந்தால் உடல் , உள நலச் செய்திகள் தெளிவாகத் தெரியும் . இதற்கென ப் படக் கருவிகளும் , கணினி மென்பொருள்களும் உண்டு. தற்போதுள்ள
SCAN , MCR பயன்பாடுகள் குறையும் என்று இக்கருவி அறிமுகப் படுத்தாமல் மறைக்கப் படுகிறது.
ஆகக் கல்லீரல் உள்ளம் , உடலின் நலத்திற்குக் காரணமாகவும் , தொலை தூர இயக்கியாகவும் உள்ளது . இறப்பு கல்லீரலில் நிகழும் போது கண் பாப்பா நிலை குற்றி விடுகிறது . அடி மன இயக்கம் கல்லீரல் சார்ந்தது . கல்லீரல் முதல் புள்ளி LIV 1 கால் கட்டை விரல் வெளி நகத்தில் தொடங்கி விலா எலும்புகள் ஆறு , ஏழு இடையே முடிகிறது.. துணை உறுப்பு பித்தப்பை ஓட்டம்
G B 1கண்ணின் வெளிப் புற ஓரம் தொடங்கி , காலின் நான்காவது விரல் நக வெளி முனையில் முடிகிறது G B 44. கல்லீரல் நமக்கு மின்னூட்ட மின்கலம் (RECHARGABLE BATTERY )
இதற்கு வலு தரும் தாய் சிறுநீரகம் நிலையான மின்கலம் (PERMANENT BATTERY )
சிறுநீரகம் -கல்லீரல் உறவு நடையின்போதும் (K 1) , சம்மணமிட்டு அமரும் போதும் (Liv 8) , உறக்கத்தின் போதும் (விழிப் பாப்பா அசைவு ) சக்தி வேண்டும் போதெல்லாம் (அட்ரீனலின் சுரப்பு ) நிகழ்கின்றன.
அடுத்து சிறுநீரகம் -ஆழ் மனம் காண்போம் .
அன்புடன் ஆ. மதி யழகன் ..
tamil muraiyil acupuncture-2
தமிழ் முறையில் அக்கு பங் சர் -2
ஐம் பூத நோய் விளக்கம் [மனப் புள்ளிகள் , நான்கு சுற்றுக்கள் ]
1.மனதின் ஓட்டங்கள் .
உடல் நலம் கருதுகிற துறை 'HEALTH DEPARTMENT ' என அழைத்தாலும் , நலம் (HEALTH ), நல வாழ்வு (HEALTH LIFE ) என ப் பொதுச் சொல் பயன்பாட்டால் 'நலத் துறை ' எனக் குறிப்பிடுவதே சரி . நலத்தை உடல்நலம் , மனநலம் என்று இரண்டு வகையாகப் பிரித்தாலும் , அவை ஒன்றுக் கொன்று இணைந்து செல்பவை . உயிரியக்கம் என்பது ஒரு தொடர் வண்டி என்று எடுத்துக் கொண்டால் , அதன் இரண்டு தண்டவாளங்கள் உடலும் மனமும் .இது ஓர் ஒப்புமையே . நலம் பெற இரண்டும் கவனிக்கப் பட வேண்டியவை .
உடலின் ஐம்பூத ஓட்டங்களை , மின்காந்த ஓட்டங்கள் எனவும் கூறலாம் . இவை உடலின் மேற் பகுதியில் ஆராவை ஓட்டிச் செல்லுகின்றன . இவை உள்ளும் வெளியுமாக விளிம்பு ஒட்டிச் செல்வதனால் உடலின் ஓட்டங்களையே மனதின் ஓட்டங்களாக க் கருதலாம் . இது நலம் வேண்டும் பாதையில் முக்கிய முடிவு.
பாடல் :
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
உடலில் உள்ள பூதங்களும் ஐந்து
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
உள்மனதின் பூதங்களும் ஐந்து -------------4
இதயத்தின் பெரி கார்டியம் மேல்மனம்
இதன்பின் கல்லீரல் அடிமனம்
இதயத்தை அட்ரீனளினால் இயக்கம்
இரண்டு நீரகமும் ஆழ்மனம் ------------8
ஆழ்மனம் இயக்கும் அற்புதத்தை
அழகாய்ச் செய்வன நுரையீரல்
இழுக்கும் மூச்சு ஒவ் வொன்றிலும்
இருக்கும் பிரபஞ்ச மனம்தானே ------------12
உள்ளத்தில் அச்சமா சினமா
ஒரு பெருமையா ஒரு கவலையா
உள்ளம் முடக்கும் துக்கமா
ஒடிவது மண் எனும் நுண் மனமே !-----------16
பெண்ணுக்கு இருக்கும் பேராற்றல்
பிள்ளையாய் ஆக்கும் பெருந்திறன்
மண்ணுக்குப் பின்னே இவள்தானே !
நுண் மனம் இவளுக்கு பெண்மனமே !-----------20
அன்புடன் ஆ. மதி யழகன் . தொடரும்.
Friday, 23 October 2015
100 ஆண்டுகள் வாழ... கட்டுரை தொடர்ச்சி -2
(6)மண் பூதம்-மனம் வழி மண்ணீரல்,கணைய சுரப்பிகள்-நல்லெண்ண வளர்ச்சி.
மண்பூதம் நன்கு செயல்பட ஆற்றல் மனம்,இதயம் என்ற தீ பூதமே தந்து உதவ வேண்டும்.
மனம் கவலை என்ற எண்ணத்தில் மூழ்கிவிட்டால்,அதாவது மாற்றமுடியாத 'பெயிலாகி விட்டேன்' கணவர் இறந்து விட்டார்.என்ன செய்வேன்?' இப்படி களை போன்ற எண்ணத்தில் மாட்டிக் கொண்டால் தற்கொலை வரை இழுத்துச் சென்று விடும். அல்லது வயிற்றுக்கு வைத்தியம் என்று வருடக் கணக்கில் பயனின்றி நீளும்.
எனவே நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு.
(7)காற்று பூதம்-நுரையீரல் உடல் வழி-யோகா எனும் மூச்சுப்பயிற்சி.
மூச்சுதான் உடலை ஓம்புகிறது.காற்று போக்குவரத்தை நுரையீரல் ஒழுங்குபடுத்தி அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்வது யோகா முறைகளே ஆகும்.எனவே அரைமணியாவது யோகா அவசியம்.
(8) காற்று பூதம்-நுரையீரல் மனம் வழி-உணர்வு பகிரல்.
துக்கம்நெஞ்சை அடைக்கும் என்பார்கள். நுரையீரல் கோளாறு வருவதற்கு காரணம் தூசும் பிறவும் மட்டும் அல்ல.மனதின் நீக்க முடியாத துக்க நிலைகளும் கூட.துக்கத்தைப் பேசித்தான் தீர்க்க வேண்டும்.தீர்வுக்கு வழி பிறக்கும்.உணர்வு பகிரல் அவசியம்.
(9)நீர்பூதம்-சிறுநீரகம்-உடல்வழி-நீரும்,நீர் உள்ள உணவுப் பொருள்கள்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்றிலிருந்து ஐந்து டம்ளர் வரை நீர் குடிக்க வேண்டும்.உணவுக்கு முன் அரைமணி,உணவுக்கு பின் அரைமணி நீர் அருந்தாமை,வயிற்று அமிலம் செயல்பட வழிவிடும்.நாள்தோறும் ஏழு டம்ளர் நீர்அருந்துவதும் தேவை.நீர் உள்ள உஉணவுப் பொருள்கள் வெள்ளரி,தர்பூசணி,சுரைக்காய் போன்ற நீரும் நீர் உள்ள உணவுப் பொருள்கள் தேவை.
(10)நீர்பூதம்-சிறுநீரகம்-மனம் வழி- நம்பிக்கை.
சிறுநீரகம் தாய்தந்தை வழி 50:50 ஆற்றல் பெற்று மரபு நிலையைப் பேணுவது மற்றும் பிரபஞ்ச சிந்தனைகள் பதிந்து உள்ள இடம்.ஆழ்மனம் இதுவாகும்.அச்ச உணர்வினாலும்,சிறுநீரகத்தை அவசியமின்றி மருந்துகள்,எண்ணங்களால் தூண்டினாலும் வாழ்நாள் சுழற்சி குறையும்.
இரசாயன மருந்துகளையும்,தேவையற்ற கிளர்ச்சியுறு எண்ணங்களையும் நீக்கி,வாழ்வு விருப்பமும்,உள்ளிருக்கும் பேராற்றல் காப்பாற்றும் என்ற நம்பிக்கை யும் அவசியம்.
இந்த பத்து கட்டளைகள் ஒன்றும் குறைவுபடாமல் மனம் ஒப்பி நிறைவேற்றினால்தான் நூறாண்டு வாழ்வு எளிதாகும்.
[நூலாசிரியர் பற்றி:'தமிழ்முறையில் அக்குபங்சர்'எனும் நூலை எழுதி அதன் முதற்பதிப்பு முற்றும் விற்பனை ஆகி உள்ளது.புத்தகத்தின் வெளியீட்டுரை யூ டியுபில் நாள்தோறும் 35 பேர் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். தற்போது அதன் எண்ணிக்கை 3600 நெருக்கம்.]
100 ஆண்டுகள் வாழ... கட்டுரை தொடர்ச்சி.
(3) தீ பூதம்-உடலில் இதயம்-உடற்பயிற்சி.
இதயத்திற்கு வலிமையும்,வாழ்நாள் நீடிப்பும் வேண்டும் எனில் மூட்டுக்கள் அசையும் உடற்பயிற்சி வேண்டும்.பழக்க வழக்கங்கள்,விளையாட்டு,நடைப்பயிற்சி இதில் அடங்கும்.
(4)தீபூதம்-மேல்மனமாக பெரிகார்டியம்-மனத் தூய்மை.
பெருமைபேசுவதால் இரத்த ஓட்ட அதிகரிப்பு ஏற்பட்டு வாழ்நாள் குறைகிறது.வாழ்க்கைத் தெளிவு கண்டு உணர்வில் அடங்க வேண்டும். மனத் தூய்மை வேண்டும்.
(5)மண்பூதம்-உடலில் மண்ணீரல்,கணையம்,இரைப்பை-6சுவை,7நிறம்.
புளிப்பு,காரம்,இனிப்பு,துவர்ப்பு,கசப்பு,உப்பு என. உணவில் 6 சுவை வேண்டும்.மேலும் கருப்பு வண்ணத்தின் வகையான ஊதா,வயலெட்,நீலம்,மற்றும் பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு மற்றும் கூட்டு வண்ணம் வெள்ளை என 7 நிறம் உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.இதனால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.மண் வழியாகவே 5 பூத ஆற்றலுக்கான உணவுகள் உள்ளே செல்லுகின்றன.எனவே வாய் மூடி நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து பசையாக்கி உண்ண வேண்டும்.மெல்லும்போது உணவு ஈடுபாட்டோடு உண்ண இயற்கை இன்சுலின் சுரக்கும்.
.
100ஆண்டுகள் வாழ தமிழ்முறையில் அக்குபங்சர்
தரும் 10 கட்டளைகள்.
-தமிழ்முறையில் அக்குபங்சர் ஆசான்.ஆ.மதியழகன்.
நீண்ட நாள் நோய்நொடி இன்றி வாழ ஒவ்வொரு மருத்துவமும் ஒவ்வொரு
வழியைக் காட்டுகிறது.இது மலையுச்சியை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையைப் பின்பற்றிச் செல்வதைப் போன்றது.
இயற்கையோடு இயைந்து வாழவேண்டும்.சமைத்த உணவுகளை உண்ண வேண்டாம்.
இயற்கையாக விளைந்த காய் கனிகளை அப்படியே உணவாக்குவதே நீண்டநாள் வாழ வழி என்பது ஒரு கூற்று.இதை முற்றிலும் பின்பற்றுவது கடினம்.
சிலர் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு அல்லது குறைந்த அளவு நாள்தோறும் நடை வேண்டும் என்பர்.இன்னும் சிலர் யோகா என்கிற மூச்சுப்பயிற்சியோடு கூடிய ஆசனங்கள்,நீண்டநாள் வாழ உதவும் என்பர்.மேலும் சிலர் காயகல்பம் (நீண்ட வாழ்நாள் உடலுக்குத் தருவது) என உணவுப்பொருட்களைப் பட்டடியலிட்டு உண்ணச் சொல்வார்கள்.
இவ்வாறு பலதிசைகளில் அவர்கள் மெய் என்று கண்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவார்கள்.
இவையனைத்தும் கண்ணுக்குத் தெரியாத யானையைக் குருடர்கள் தொட்டு விவரிப்பது போல பகுதி உண்மைகளே!அப்படி என்றால் முழு உண்மை என்ன?
நம் உடல் பஞ்சபூதங்களால் அமைந்து வெளிஉலகில் உள்ள பஞ்சபூதங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.பஞ்சபூதங்கள் உடலில் உருவாகும்போது மனம் என்ற ஓர் அமைப்பு
இதயத்தோடு சேர்ந்து உருவாகி ஐந்து பூதங்களையும் மேலாக நின்று ஆட்சி செய்கிறது.
அக்குபங்சரில் இது பெரிகார்டியம் என்றும்,மகாபாரதத் தொடரில் 'என் இருதயம்' என்றும்
அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறது.
எனவே உடல்நலம் காக்க பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என்றால்,கூடவே மனநலம் காக்கவும் பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என வந்து விடுகிறது.ஆக பத்துக் கட்டளைகள்
போற்றினால்தான் 'நலம்' என்பது முழுமையாகக் கிடைக்கும்.நீண்டநாள் நோயின்றி வாழ்வதும்
எளிதான செயலாகும்.
தரும் 10 கட்டளைகள்.
-தமிழ்முறையில் அக்குபங்சர் ஆசான்.ஆ.மதியழகன்.
நீண்ட நாள் நோய்நொடி இன்றி வாழ ஒவ்வொரு மருத்துவமும் ஒவ்வொரு
வழியைக் காட்டுகிறது.இது மலையுச்சியை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையைப் பின்பற்றிச் செல்வதைப் போன்றது.
இயற்கையோடு இயைந்து வாழவேண்டும்.சமைத்த உணவுகளை உண்ண வேண்டாம்.
இயற்கையாக விளைந்த காய் கனிகளை அப்படியே உணவாக்குவதே நீண்டநாள் வாழ வழி என்பது ஒரு கூற்று.இதை முற்றிலும் பின்பற்றுவது கடினம்.
சிலர் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு அல்லது குறைந்த அளவு நாள்தோறும் நடை வேண்டும் என்பர்.இன்னும் சிலர் யோகா என்கிற மூச்சுப்பயிற்சியோடு கூடிய ஆசனங்கள்,நீண்டநாள் வாழ உதவும் என்பர்.மேலும் சிலர் காயகல்பம் (நீண்ட வாழ்நாள் உடலுக்குத் தருவது) என உணவுப்பொருட்களைப் பட்டடியலிட்டு உண்ணச் சொல்வார்கள்.
இவ்வாறு பலதிசைகளில் அவர்கள் மெய் என்று கண்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவார்கள்.
இவையனைத்தும் கண்ணுக்குத் தெரியாத யானையைக் குருடர்கள் தொட்டு விவரிப்பது போல பகுதி உண்மைகளே!அப்படி என்றால் முழு உண்மை என்ன?
நம் உடல் பஞ்சபூதங்களால் அமைந்து வெளிஉலகில் உள்ள பஞ்சபூதங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.பஞ்சபூதங்கள் உடலில் உருவாகும்போது மனம் என்ற ஓர் அமைப்பு
இதயத்தோடு சேர்ந்து உருவாகி ஐந்து பூதங்களையும் மேலாக நின்று ஆட்சி செய்கிறது.
அக்குபங்சரில் இது பெரிகார்டியம் என்றும்,மகாபாரதத் தொடரில் 'என் இருதயம்' என்றும்
அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறது.
எனவே உடல்நலம் காக்க பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என்றால்,கூடவே மனநலம் காக்கவும் பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என வந்து விடுகிறது.ஆக பத்துக் கட்டளைகள்
போற்றினால்தான் 'நலம்' என்பது முழுமையாகக் கிடைக்கும்.நீண்டநாள் நோயின்றி வாழ்வதும்
எளிதான செயலாகும்.
(1) ஆகாயபூதம்-உடலில் கல்லீரல்-ஓய்வு,உறக்கம்
ஆகாயத்தை விண் என்றும்,வெளி என்றும் உரைப்பர்.இங்கு ஆகாயம் என்பதன் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவை.உடலில் ஆகாயமாக நம் கல்லீரல் உறுப்பு,கண் வழியாகச் செயல்படுகிறது.இதன் செயல்பாடு குறைவின்றி இருக்க உடல்ரீதியாக ஓய்வும் உறக்கமும்
தேவை.ஓய்வு என்பது வேலைமாற்றம் அல்லது பிடித்தவை செய்வது..வேலையே பிடித்தமானது ஆனால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
(2)ஆகாயபூதம்-அடிமனமாகக் கல்லீரல் தேவை-இரக்கத் தன்மை.
கல்லீரல் பாதிக்கப் படுவது மதுவகையால் என்பது சொல்லத்தேவையில்லை.அதேபோல் மனத்தின் கோபநிலையாலும் வலிமையாகப் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.தன்கோபம் தன் உடல்கெடுக்கும்.அடுத்தவர் கோபத்திற்கு எதிர்கோபம் கொள்ளாது கவசம் இட்டவாறு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.அருள் அல்லது இரக்க மனப்பான்மை உள்ளவர்களே நீண்டநாள் வாழமுடியும் என்பது உண்மை.
Subscribe to:
Posts (Atom)