குணம் :
கவலை உணர்ச்சி செரிமானம் கெடுக்கும். அழிக்கும் உணர்ச்சி நீக்கி, ஆக்கும் உணர்ச்சி கொள்ள வேண்டும். இதை நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு எனக் கூறுகிறோம். இதை செழுமை உணர்வு எனவும் கூறலாம்.
எ. கா. (1) உறவினர் இறந்தார் என் செய்வேன் ?
விடை : இருக்கும் உறவினர் காப்பேன். மேலும் இறந்த தாய் தந்தை தன் உடலில் உள்ளபோது அதைக் காத்து, பெயரும் காக்க வேண்டும்.
(2) தேர்வில் தவறினேன் . என் செய்வேன் ?
விடை : வரும் தேர்வுக்கு உழைப்பேன் .
எந்த தோல்வியும், இழப்பும், மனதில் சுற்றி சுழன்று விடையற்று நின்றால் , மனம் சிக்கிக் கொண்டது என்று பொருள். அது பயிரில் களை . உடன் நீக்க வேண்டும்.
செயல் :
(1) உணவின் மூலமே உடல் கட்டுமானம் நடை பெறுகிறது. அற்றது போற்றி உண்க .
பசித்துப் புசி கைக் கொள்க.
(2) எந்த உணவையும் ஒதுக்காது , அறுசுவை வரும்படியும் , ஏழு நிறங்கள் வரும்படியும், தேர்ந்து உண்க . இதுவே சத்துணவு.
கால்சியம், மகனீசியம் . ... எதுவானாலும் உணவின் வழி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
அவசரம் எனில், ரசாயன மருந்துகள் வேண்டும் காலம் மட்டுமே.
(3) நடைமுறை : காலைத் தொங்கப் போட்டு வாழும் முறை முடிந்தவரை தவிர்க்கவும்.
சம்மணம் இட்டு உண்ணுங்கள். மேசையில் உண்ண நேர்ந்தால் , முழங்கை கீழ்ப் பகுதி (மண் மூலகம் ) ஊன்றவும்.
இயல்பாகத் தரையில் சம்மணம் இட்டு அமர்வதால் , Sp 3, St 36 இணை அழுத்தம் பெறுவதால் , செரிமானம் எளிதில் நடை பெறுகிறது. நாற்காலி, சோபா இவற்றை எப்போதாவது பயன் படுத்துங்கள் . அவ்வாறு அமர்ந்துதான் படிக்க நேர்ந்தால் , இரண்டு கால்களையும் தூக்கி வைக்க வழி செய்து கொள்ளுங்கள். செங்குத்து சாய்மான நாற்காலிகள் சிறப்பு. முதுகு வலி வராது.
தரையில் பாய் அல்லது சமுக்காளம் இட்டு , சுவரில் சாய்ந்து கால் நீட்டியவாறு அல்லது மடக்கி அமர்ந்து பணி செய்வது பல நோய்கள் தடுப்பு ஆகும்.
(4) நோய்கள் : மனம் வழி மேலும் விளக்கம் :-
(P ) மேல் மனம் நாகத்தின் தலை. அதன் உடல்
(Liv ) அடி மனம் கல்லீரல்
(K ) ஆழ் மனம் நீர் ஈரல்
(Lu ) சூழல் மனம் நுரை ஈரல் - வால்
வாலிலிருந்து உடல் நோய் கிளம்பும், நுரையீரல் நோய்கள் இருமல், தும்மல், சளி பிறகு நீர் ஈரல் நோய்கள் - வலி உடல் பகுதிகளில்.. பிறகு கல்லீரல் நோய்கள் - தலை வலி, இரத்த அழுத்தம் .. பிறகு மேல் மனம் , இதயக் கோளாறு , பசியின்மை , சுளுக்கு , தூக்கமின்மை இதற்குப் பிறகு மண்ணில் வந்து தீவிரமாக முடியும். நாகத் தலையில் இருந்து 'மன நோய் ' கிளம்பி அறிகுறிகள் காட்டி, காட்டி மறையும், ஆக, நுண் மனப் புள்ளிகள் 'உ ' , 'ஊ ' தூண்ட உடல் நோயும் தீரும் ; மன நோயும் தீரும்.
செரிமானம் கெடுவதால் வரும் நோய்ப் பட்டியல் :
(1) வயிற்று வலி (2) வாயுத் தொல்லை (3) அஜீரணம் (4) தலை வலி / பொட்டுத் தலைவலி
(5) பசியின்மை (6) அதிகப் பசி, சர்க்கரை (7) மூக்கு அடைப்பு (8) தோல் நோய்கள் (9) கால் மூட்டு வலி , முழங்கால் வலிகள் (10) மாத விடாய்க் கோளாறுகள் (11) நீர் வீக்கம் / நீர்க் கட்டு ... என விரிவு.
தொடரும்.
அன்புடன், ஆ. மதி யழகன்..
No comments:
Post a Comment