Monday, 14 December 2015

Tamil muraiyil acupuncture - 2/5.2 contd.

குணம் :

பெருமை, மகிழ்ச்சி  இரத்த ஓட்டத்தை கூடுதலாக்கி , படபடப் பாக்கி தொடரும் போது இதய நோய்க்கு வித்திடும். திருமணம் ஆகும் வேளையில் கட்டாய மோதிரம் அணிவது, மூ வெப்ப மண்டலத்தை ( நான்காம் விரல் Tw ஓட்டம், - மோதிர விரல் ) சிறு நீரகத் தோடு (வலி நீக்கம் ) 
 இணைக்கும் புள்ளியைத் தூண்டவே. [ Tw 2 - மூ வெப்ப ம்  கவரும் நீர் ] என்ன ஒரு பாதுகாப்பு ? அதுவும் முன் கூட்டியே.
 மகிழ்ச்சி வரும் போது தெளிவு உணர்ச்சி கொள்க. பணம், பொருள்கள், பிறர் பாராட்டு  இவற்றில் 
எச்சரிக்கை , தெளிவு கொள்க. நீங்களும் , ' பெரியோரை வியத்தலும் இலமே ! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ! ' என உணர்வுத் தெளிவில் இருக்க வேண்டும். இதுவே இதயம் காக்கும் ; மனம் பொங்காது. B . P மாத்திரை தேவைப் படாது.

செயல் : 

(1) பரபரப்பு வாழ்க்கை முறை சீர் செய்யப் பட வேண்டும். உங்கள் நோக்கில் முதல் படி ( First Step ) எடுங்கள். 
 (2) உடற் பயிற்சி செய்க. மூட்டுகள் அசையும் வழி உடற் பயிற்சி செய்வது. இரண்டாவது  இரத்த ஓட்டம் என அழைக்கப் படுவது நிணநீர் ஓட்டம் ஆகும். முதுகுத் தண்டு வடம் முழுவதும்நிணநீர் அடிப்படையில் ' குளுகோஸ் , ஆக்சிஜன் ' பெறுகின்றன. உடற் பயிற்சி இல்லாது , பின் முதுகு, இடுப்பு வலி தீராது.
 (3) 'Thumps up ' அடிக்கடி செய்க.
(4) நிறைய எண்ணங்கள், நினைவுகளின் வெப்பம் இதயத் துடிப்பை ஏற்றி விடுகிறது. பின் விளைவு  பித்த நீர் தேக்கம். உணர்ச்சி எண்ணங்கள் செயல் உருவத்திற்கு வராததால் ஏகப் பட்ட ஆற்றல் தேங்கி கீழ்க் கண்ட நோய்கள் வருகின்றன,
இதயத்தால் வருவன :
        (1) இதய வலி 
       (2) ஒற்றைத் தலை வலி 
     (3) தொண்டை வறட்சி 
    (4) கழுத்து வலி  (5) வாயுத் தொல்லை (6) வயிறு உப்புசம் 
 (7) தோள்ப் பட்டை வலி  (8) எலும்பு வலி (9) பசியின்மை - வயிற்றுக்கு ஆற்றல் போகாதது . 
(10) இருதயப் படபடப்பு (11) சுளுக்கு 
மனத்தால் வருவன : 
(1) தூக்கமின்மை (2) உள்ளங்கை வியர்வை (3) அஜீரணம் (4) ஞாபக மறதி  ((5)  கர்ப்பப் பை நோய்கள் (6) காய்ச்சல் (7) காது வலி (8) முழங்கை வலி (9) மலச் சிக்கல் (10) காது  இரைச்சல் 
ஆக மேல் மனம் மனத் தீ , இதயத் தீயாக மாறுவதால்  இரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது,  இதய  நோய்கள் வருகின்றன.
அடுத்து மண் வலு.
அன்புடன், ஆ, மதி  யழகன்.  

No comments:

Post a Comment