Tuesday, 22 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.4 contd

சுவை :

காரச்சுவை. மோரில் ஊறி வறுத்த மிளகாய், மிளகாய்ப் பொடி , மிளகு, மிளகுப்பொடி .. இவற்றை நாள்தோறும் பயன் படுத்த வேண்டும். 
குணம் : துக்க உணர்ச்சி நுரையீரல் வலு குறைக்கும். துக்கம் நெஞ்சை அடைக்கும் என்பார்கள். துக்க வீட்டில்  நெஞ்சை அடித்துக் கொள்வது , நுரையீரல் காற்றுக் குறைவால் மாரடைப்பு  வராமல் இருக்க. துக்கத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது 'உயிர்ப்பு ' என்கிறோம்.  என்றும் மகிழ்ச்சியாய் இருப்பது, நுரையீரல் வளம். 
செயல் : 
(1) விடியல் காலை 3 மணி முதல் 7 மணி வரை யோகப் பயிற்சி செய்ய அரை மணி முதல் முக்கால் மணி ஒதுக்க வேண்டும். நுரை நோய் தடுப்பு. 
 (2) சுற்றுப்புறத் தூய்மை இன்றியமையாதது. தூசுகள் வரும் இடத்தில்  படுத்துத் தூங்கி விட்டு அல்லது பணி புரிந்து விட்டு சளி பிடிக்கிறது என்று சொன்னால் , தன் குறை அல்லது சூழல் கேடு. 
 பஞ்சாலையில் பணி புரிவோர்கள் வேலை விட்டு வெளியேறும்போது 'அச்சு வெல்லம் ' தருவது வழக்கம். இது சளி பிடித்தல் தடுக்கவே. வெல்லம் மண் பூதம் தூண்டி நுரை வளமாக்கும். தாய் மகன் உறவு . புள்ளி வடிவில் Sp 5 - நுரை வழங்கும் மண் - பூண்டுப் புள்ளி. 
மிதி வண்டி மிதிக்க அசையும் புள்ளி. இதன் எதிர்ப் புள்ளி Lu 9 - நுரை கேட்கும் மண் - இரத்தக் குழாய் அடைப்பு நீக்கி  - நுரை ஊற்று ( source point ) - மனிதன், பிரபஞ்ச இணைப்பு புள்ளி -
வெள்ளை அணுக்கள் உற்பத்தி - ஆக நுரை வளம் கிட்டும். எல்லா மதங்களிலும் , பழக்க வழக்கங்களிலும்  கயிறு, காப்பு உண்டு. 
 (3) நிறைய காற்று வரும்படி சன்னல்கள் உள்ள வீடு, படுக்கை அறை , முற்றம் பயன் படுத்த வேண்டும். தூய காற்று உள்ள இடங்களில் நடை பழக வேண்டும். விளையாட வேண்டும். ஆழ்ந்த மூச்சு இழுத்து பழக வேண்டும். 
 (4) மூச்சின் மூலம் அக்குப் புள்ளி தூண்டல் : 
 எந்த அக்குப் புள்ளியைத் தூண்ட வேண்டுமோ , அந்தப் புள்ளியைக் கட்டை அல்லது சுட்டு விரல், அல்லது நடுவிரல் அழுத்தி, மூச்சு இழுத்து, சற்று நேரம் வைத்திருந்து, பின் மூச்சு விடும்போது விரலை மேலே தூக்கி விட வேண்டும்.  இதுபோல் எட்டு முறை செய்ய வேண்டும்.  புள்ளி தூண்டப்பட்டு பயன் கிடைக்கும். 
 (5)  நோய்கள் : 
 நுரையீரல் வலு 'எ ', 'ஏ ' குன்ற கீழ்க் காணும் நோய்கள் :-
 (1) இருமல்  (2)  தும்மல் (3) மூச்சிறைப்பு  (4) மலச்சிக்கல் (5) மயக்கம் 
 (6) தோல் நோய்கள் (7) ஆண்மைக் குறைவு (8) பேதி (9) தோள்ப்பட்டை வலி  (10) தசைகளில் வலி (11) ஆஸ்துமா.....
அடுத்து நீர் வளம் 
அன்புடன், ஆ. மதி  யழகன்...

No comments:

Post a Comment