Thursday, 10 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.0

5.0 தன் வலு - இணை புள்ளிகள் . 

இணை புள்ளி விளக்கம் :

ஒரு படித்தான தன்மையுள்ள ஏறு புள்ளி ஒன்றையும் , அதே ஓட்டத்தில் இறங்கு புள்ளி ஒன்றையும் இணைத்தவாறு கூறல். 
         எ. கா. ( Lu 8, LI 1)
         அதாவது  ( நுரை தன் வலு , குடல் தன் வலு ) 
இதுபோல் உள்ள தன் வலுப் புள்ளிகளை தமிழ் உயிர் எழுத்துக்களால் குறிக்கலாம். ஏனெனில் அந்த உயிர் ஓசைகள் , அந்தந்த உறுப்பை அதிர்வுகளால் அசைத்துப் பார்க்கின்றன. 
(1) Liv 1 - கல் தன் வலு  - உயிர் 'அ '  
(2) GB 41 - பித்தப்பை தன் வலு - உயிர் 'ஆ '
(3) P 8 - மனம் தன் வலு - தீ  தன் வலு  - 'இ '
      H 8 - இதயம் தன் வலு - தீ தன் வலு - 'இ '
(4) Tw 6 -மூ வெப்ப த் தன் வலு  - 'ஈ '
     S I 5 -சிறு குடல் தன் வலு - 'ஈ '
(5) Sp 3 - மண் தன் வலு - 'உ '
(6) St 36 - இரைப்பை தன் வலு - 'ஊ '
(7) Lu 8 -  நுரை தன் வலு  - 'எ ' 
(8) LI 1 - குடல் தன் வலு - 'ஏ ' 
(9) K 10 - நீர் தன் வலு  -'ஒ ' 
(10) UB 66 - நீர்ப் பை தன் வலு - 'ஓ ' 
[ ஓ  வடிவத்தில்  மேல் இரட்டை சுழி சிறுநீரகத்தையும் , கீழ் சுழி நீர்ப்பை அமைப்பையும் 
குறிக்கும். தமிழ்க் குறியீட்டில் சித்தர்களின் செயல். ] 
 இப்போது இணைப் புள்ளிகள் ( அ , ஆ ) , ( இ , ஈ ) , ( உ , ஊ ) , (எ , ஏ ) , (ஒ , ஓ )  ஆகும். 
 குறில் எல்லாம் ஏறு புள்ளிகள். ( யின் ) . நெடில் எல்லாம்  இறங்கு புள்ளிகள் ( யாங் ) . 
 மேலே உள்ள இணையாக உள்ள புள்ளிகள் முதன்மை வலு அல்லது தன் வலுப் புள்ளிகள் . 
 இணைப் புள்ளிகளின் வகைகள் :
         பஞ்ச பூதப் புள்ளிகள்  60 - ஐ  ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கலாம். 
     தன் வலுப் புள்ளிகள் = 12 
 தூண்டும் வலுப் புள்ளிகள் = 12 
கேட்கும் வலுப் புள்ளிகள் = 12 
க ட்டும் வலுப் புள்ளிகள்  = 12 
கவரும் வலுப் புள்ளிகள்  = 12
      கூடுதல் = 60 
தன் வலுப்  புள்ளிகளில்  அக்கு பிரசர் , அக்கு பங் சர் , அல்லது தொடு சிகிச்சை செய்வதன் மூலம் அறிகுறி நோய்களைத் தீர்க்கலாம்.
   மற்ற எந்த நோய்த் தீர்வுக்கும்  தன் வலுப் புள்ளிகள் அடிப்படையான  'டானிக் ' . ஊட்டச் சத்து பயன் உடையவை. 
  சுற்றுப் படம் காண்க.
அடுத்து புள்ளிகள் விரிவாக.
அன்புடன், ஆ. மதி  யழகன் .  

No comments:

Post a Comment