Monday, 7 December 2015

Tamil muraiyil acupuncture -2/3.2

3.2 நோய் தீர்வு முறைகள்.

 உயிர் -> மனம் -> ஐந்து பூதங்கள் -> உடல் (+மனம் ) வழி 1, 2, 3, 4, 5. 
          (1) உயிர் ஓட்டத்தை உடலின் ஏழு சக்கரங்களில் ஆரா மூலம் அறிந்து , உச்சந்தலை மற்றும் உள்ளங்கை மையத்தில் (P 8 ) பெற்று தன் குணம், மற்றும் அடுத்தவரையும் குணப்படுத்து கின்றனர். வான் வழிப் பெறும் ஆற்றல் காஸ்மிக் கதிர்கள் என்பர். ஜப்பானில் இம்முறை ரெய்கி என அழைக்கப் படுகிறது. லெமூரியாக் கண்டத்தில் உயிர் வழி (ஆரா ) முறை 
 வழக்கில்  இருந்தது , தற்போது சிலரால் மீட்டு எடுக்கப் படுகிறது.
     (2) மனதை ஆராய்ந்து தீர்வு காண்பது. நோயாளி பேச மாட்டார். ஆழ்மன வசியம் செய்ய வேண்டும். ஆழ் மனம் வேற்றாள் திறப்பது சரியல்ல. 
    (3) ஆக அக்கு பங் சர் வழி ஐம்பூதத் தீர்வு காண்பதே சிறப்பானதாகும். இதிலேயே பல முறைகள் உண்டு. அவை  தொடு சிகிச்சை , அக்கு பிரசர், அக்கு பங் சர் ...என. 
       உயிர் தாண்டி, மனம் மாய்ந்திட , வரும் சிறுநோய்கள் , உங்கள் பாதுகாப்புக் கோடு  உடைந்து போய் விட்டது என்பதைக் காட்டுகின்றன. நோய் வருடக் கணக்கில் நீடிக்கும் போது , வெளிப் பாடானது உணவு ஏற்கும் தன்மை, இயக்கத்திற்கான தன்மை   இவற்றை பாதித்து  பெரு நோய் 
 ஆகிறது. எ . கா . மூட்டு வலி , வாதம், இரத்த அழுத்தம், ...

அக்கு பங் சர் தீர்வு :

   நோய் என்பது பெரும்பாலும் உள - உடல் கோளாறுகள் தான். மருத்துவம் என்பதும் அதே வழியில் இருக்க வேண்டும் என்றால் , அது அக்கு பங் சரே . ஐம்பூதங்கள் அனைத்துமே உள ரீதியிலும் வேலை செய்கிறது ; உடல் ரீதியிலும்  வேலை செய்கிறது. மற்றும், உள நலம் என சிறப்புப் புள்ளிகளையும் கொண்டு உள்ளது.
     உடலில்  தோன்றும் ஓட்டத் தடைகளை நீக்கினால் முதலில் குணம் வரும்.  பிறகு அல்லது சேர்ந்தார்ப் போல் மன ஓட்டத் தடைகளை நீக்க வேண்டும். அவற்றின் அடையாளங்கள்  ஐந்து பாதையிலும் உண்டு. நோயாளி யோடு பேச வேண்டும். தொழில், சூழல், மன ஓட்டம் அறிய வேண்டும். யோகா முறைகள், உடற்  பயிற்சி  எடுத்துக் கூற வேண்டும் . மனம் வலுவாகும். 
உயிர் வலுவாக இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும். அது இப்புத்தகத்தின் எல்லை அல்ல. மனப் புள்ளிகள் வரை செல்வோம். அதற்கு முன் ஐம்பூதப் புள்ளிகள் 60- ஐ ஐம் பெரும் பிரிவாக சுற்று வழி பிரித்து நோய் விளக்கம் அறிவோம்.
அடுத்து நான்கு சுற்றுக்கள் -முப் பரிமாணப் பெயர்கள்.
அன்புடன், ஆ. மதி யழகன்.. ..

No comments:

Post a Comment