Sunday, 13 December 2015

Tamil muraiyil acupuncture - 2/5.1

5.1 தன் வலுப் புள்ளிகள் 12-ல் கல்லீரல் வளம் Liv 1, G B 41

கல்லீரல் தன் வலு - உயிர் 'அ ' - அடர் பச்சை - Liv 1

இருப்பிடம் : கால் கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கும் , எலும்புகள் சேரும் மூட்டிற்கு இடையில் அமைந்துள்ளது. 
துடிப்பு :  இந்தப் புள்ளியில் கல்லீரல் தனக்கு இயல்பான பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறது. வலி இல்லை. ஏதேனும் புதிய வேலை சேரும்போது சற்று மிகையாகத் துடிக்கும், மேலும் மேலும் வேலை சேரும் போது துடிப்பு வலி தரும் புள்ளியாக மாறும். மெலிவு அடைந்தாலும்  பழைய நிலை (RESTORE ) அடைய வலிப்புள்ளியாக மாறும்.
வலியின்மை நலம். இந்த சோதனை காலில் இரத்த ஓட்டம் இல்லாது சூம்பிய நிலையில் செல்லுபடி ஆகாது. 
பயன்கள் : கல்லீரல் வலிகள், செரிமானத் துக்குப் பின் வரும் தலை வலி, நச்சு நீக்கல். 

மனம் : அடி மன பாதிப்பிலும் வலி வரும். நோய் முற்றிய நிலையில்  கல்லீரல் டானிக்   இதுதான் . வாரம் ஒருமுறை தூண்ட வேண்டும். 

பித்தப்பை தன் வலு - உயிர் 'ஆ ' - அடர் பச்சை - G B 41
இருப்பிடம் : காலின் நான்காவது, ஐந்தாவது கால் விரல் எலும்புகள்  சேரும் இடத்தில்  உள்ள பள்ளத்தில்  அமைந்துள்ளது . 
துடிப்பு : பித்தப்பை மெலிவிலும் வேலை மிகுதியாலும் ,  பித்தநீர் தேக்க த் தாலும்  துடிப்பு மிகும், 
 மனம் : அடிமனதில் தேங்கியுள்ள சினம், வெறுப்பு மிகுதியாலும் , சிந்தனை மிகுதியாலும் , பித்தநீர் அதிகம் சுரக்கும். 
பித்தப் பை என்பது 'ஆ ' உறுப்பு .  அதை வெட்டி எடுக்கக் கூடாது.  எடுத்தால்  கல்லீரல் வேலை இரட்டிப்பு , மற்றும்  தாமதம் ஆகும். 
பயன்கள் : பாத வலி , குதி கால் வலி, இடுப்பு வலி தீரும். 

கல்லீரல் தன் வலுப்பெற கூடுதல் வழிகள் :

காட்சி : பச்சை, பசுமை, வெண் பச்சை பொருள்களைப் பார்த்தல், பயன் படுத்தல் , சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்ளல். 
உணவு : பச்சை நிறத்தில் உள்ள காய் கனிகள் உண்பது.
சுவை : இயற்கையில் புளிப்பான எலுமிச்சை , நார்த்தம் பழம்,  மாங்காய்  போன்றவை .  
 புளியை விட கோக்கம் புளி  (குடம் புளி ) நன்று.
 தொடரும் .

1 comment:

  1. தங்களை தொட்ர்பு கொள்ள கைபேசி எண்ணைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete