Tuesday, 8 December 2015

Tamil muraiyil acupuncture -2/4.1

4. நான்கு சுற்றுக்கள் - முப் பரிமாணப் பெயர்கள். 

4.1 காரணப் பெயராக்கல் :
     சென்ற புத்தகத்தில் ஐம்பூதங்களின் ஐந்து மின் காந்த ஓட்டங்களையும் , தீ பூதத்தில் கூடுதலான பெரி கார்டியம் அல்லது மனம் என ஒரு ஓட்டத்தோடு சேர்த்து ஆறு ஓட்டங்களைப் பார்த்தோம். ஒவ்வொன்றிலும்  பஞ்ச பூதப் புள்ளிகள் ஐந்து. மொத்தம் ஏறும் 6 ஓட்டங்களிலும் , இறங்கும் 6 ஓட்டங்களிலும் சேர்த்து 12 × 5 =60 அறுபது எனப் பார்த்தோம். 
      ஒவ்வொரு பஞ்ச பூதப் புள்ளியிலும் என்ன நடக்கிறது? அதைப் பெயரில் கொண்டு வர முடியுமா ? கொண்டு வந்தால் என்ன பயன்? அதன் மூலம் நோய்த்  தன்மை அறிதல்  இயலுமா ? 
 நோய் தீர்க்கும் வழி அறிய இயலுமா ? புள்ளிகள் பெயரிலேயே ப் பேசுமா ? மறைந்த பல உண்மைகள் அதன் மூலம் நமக்குக் கிடைக்குமா ? என்பதற்கான ஒரு முயற்சியாக , நான்கு சுற்றுக்களை முழுக்க ஆராய எடுத்துக் கொண்டேன். சுற்று அடிப்படையில் பெயரிலும் கொண்டு வந்தேன். 

4.2 பெயரிடல் - முப் பரிமாணப் பெயர் 

எடுத்துக் காட்டு விளக்கம் : Lu 11 - நுரை கல் (பழைய பெயர் ) 
இருப்பிடம் : கைக் கட்டை  விரலில் வெளி நகத்து  0 . 1 சுன் அளவில் மேலாக உள்ள புள்ளி நுரை கல் Lu 11 . இது நுரை ஓட்டத்தில் கல்லீரலை ச் சந்திக்கிறது. [ பயன் வழிப் பெயர்  - தலை வலி நீக்கி ] (படம் )
 முறையான நுரையீரலின் ஓட்டம் 4, 5, 1 எனச் செல்ல வேண்டும். அதாவது சிறுநீரகம் (5) தொட்டு பின் கல்லீரல் (1) தொடுவதே. ஆனால் ஒன்று தாண்டி ஓடி சாதிப்பது என்ன ? 
 கல்லீரல் ஒரு குழப்ப நிலை, ஒரு சிறு மயக்கம், மற்றும் சோர்வில் இருத்தலால் உதவ வந்து ஆனால் கட்டுப்பாடு செய்து விடுகிறது. குறைவை நீக்கும் ; கூட இருந்தாலும் குறைக்கும்.
 குறை, கூடுதல் அளவாக்கும்.
 தீர்க்கும் நோய் : தலை வலி நீங்கும். மயக்கம் தீரும். சோர்வு அகலும். 
 சினம் தவிர்க்கவும் இயலும் என்பதால் துறவிகள் ஜப மாலை உருட்டுகிறார்கள்.
  இந்த புள்ளி  Lu 11 - ஐ ஏன் மூன்று பரிமாணச் சொல்லால் குறிக்கக் கூடாது ?  அதாவது நுரை கட்டும்  கல் . இவ்வாறு பெயர்களைக் குறிக்க, பயன்கள் வருமாறு : 
   (1) எந்த ஓட்டத்தில் எந்த மூலகம் வருகிறது.
  (2) அந்நிகழ்வு எந்த ஒரு சுற்று அடிப்படையில் பயன் தருகிறது. 
   (3) அது எந்த மூலகத்தின் நோய்த் தன்மையை எந்தவிதத்தில் தீர்க்கிறது. 
 (4) மறைந்துள்ள நோயையும் தெரிந்து கொள்ளலாம். 
 (5) தீர்க்கும் நிகழ்வையும் புரிந்து கொள்ளலாம். 
பெயர்ப் புரிதல் இங்கு : 
 (1) நுரை ஓட்டத்தில் 'கல்' வருகிறது.
 (2) அது 'கல் ' லுக்கு  கட்டுப்பாடு அடிப்படையில் பயன் தருகிறது. 
 (3) 'கல் ' தன சக்தியில் குறைவு பட்டதால் ( தூக்கமின்மை , அசதி, அதிக சிந்தனை , அடி மனக் குழப்பங்கள் ) வந்த தலை வலி தீர்க்கிறது.
 (4) மறைந்திருக்கும்  கோளாறு  ஓய்வு, உறக்கமின்மை  அறிகுறி.
 (5) கல்லீரல் கூடுதல், குறைவை, நுரையீரல் (ஆக்ஸிஜன் தந்து )  சரி செய்கிறது. தாயின் தாய் தீர்வு செய்கிறது.
 ஆக  நுரை கட்டும் கல்  எனக் குறிப்பதன் மூலம், மூன்று நிலைகள் (Three Dimention ) புரியும்.
       முதல் சொல் -------- ஓட்டப் பாதை 
        இரண்டாம் சொல் ------ சுற்று நிலை 
        மூன்றாம்  சொல் -------- பயன் பெறும் அல்லது தரும் அடுத்த ஓட்டப் பாதை.
 இனி  நான்கு சுற்றுக்கள் .
அன்புடன், ஆ, மதி  யழகன்.   

No comments:

Post a Comment