Sunday, 13 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.1 contd

குணம் : 

குடி கல்லீரலைக் கெடுப்பது போல , சினம், வெறுப்பு மனம் வழி 

கல்லீரலைத் தின்று விடும். கத்தும் குணத்தைக் கை விட்டு சிக்கலைப் பேசித் தீர்க்க வேண்டும். இளையவர்கள் எனில் இரக்க சிந்தனையோடு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், கல்லீரல் கெட்டுப் போவதில்லை. கல்லீரல் தன் வலு காப்பாற்றப் படும்.  
செயல் :
     (1) உழைப்பதற்கு ஏற்ப ஓய்வு தேவை. ஒரு மணி நேரத்திற்கு 5 நி மேனி. இது உடல் வழித் தேவை ஆகும். வேலை மாற்றமும் ஓய்வாகக் கொள்ளலாம். எ. கா. உடற் பயிற்சியில் இருந்து 
புத்தகப் படிப்பு . அல்லது புத்தகப் படிப்பில் இருந்து தோட்ட வேலை. 
 (2) இரவு 11 - 3 மணி வரை நான்கு மணி நேரம்  கல்லீரல் சிறப்பாகப் பணி புரியும் நேரத்தில் 
நன்கு உறக்கம் தேவை. 
 (3) கண் ஓய்வு : கல்லீரல் வெளி உறுப்பு கண் அதிக நேரம் பெரியதிரை (சினிமா ) , சின்னத் திரை,  கணினித் திரை, கை பேசித் திரை  இவற்றில் செலவிடுவதும் கல்லீரல், பித்தப் பை  பாதிக்கும் . நேர அளவீடு கண் பணிக்குத் தேவை. கண் பயிற்சிகள் கை கொடுக்கும். 
 (4) கண் வெப்பம், உடல் ஓய்வின்றி வேலை செய்வதால் ஏற்படும் வெப்பம் அனைத்தும் 
கல்லீரலைப் பாதித்து கீழ்க் காணும் நோய்கள் உருவாகும்.
         (1) தலை வலி 
       (2) மூச்சுத் திணறல் 
     (3) ஆண்மைக் குறைவு 
    (4) இரத்த அழுத்தம் 
   (5) தொடை நரம்பு வாதம் 
   (6) ஞாபக மறதி 
  (7) கட்டிகள் 
 (8) கண் எரிச்சல் 
 (9) அசதி அல்லது உடல் சோர்வு 
  (10) மயக்கம் 
 (11) மஞ்சள் காமாலை 
  (12) கோமா  
என நோய்கள் உருவாகின்றன. இந்நோய்கள் வராது இருக்க , முன்னதாக த்  தடுக்க  கண் கழுவுதல் செய்ய வேண்டும்.. 
(5) கண் கழுவுதல் செய்யும் முறை : 
 ஒரு  வாளி  முழுவதும் ( அல்லது  சிறு அமர் பலகையின் மேல் அகல  ஏனத்தில்  )  தண்ணீர் 
வைத்துக் கொண்டு , மூச்சை உள்ளடக்கி , முகம் முழுவதும் நீரில் மூழ்கும்படி வைத்துக் கொண்டு கண்களை நன்றாகத் திறந்து பார்க்க வேண்டும்.
    அதே சமயத்தில் வாயைத் திறந்து நாக்கு நன்றாக நனையும்படி செய்யவும், பிறகு தலையை உயர்த்திக் கொள்ளவும், மீண்டும் மூச்சை உள்ளடக்கி நீரில் கண்களை நன்றாகத் திறந்து பார்க்கவும். நாக்கும் தொங்க விடுக . இதயச் சூடும் குறையும். 
    இதைத் தொடர்ந்து 8 முறை காலை குளிப்பதற்கு முன்னும், மாலை முகம் கழுவும் முன்னும் இருவேளை செய்ய கல்லீரல் குளிர்ச்சி அடையும். புத்துணர்ச்சி வரும். பெரும்பாலான நோய்கள் தடுக்கப் படும்.
 அடுத்து தீ வளம்.
அன்புடன், ஆ. மதி  யழகன்.  

No comments:

Post a Comment