Wednesday, 23 December 2015

Tamil muraiyil acupuncture -2/5.5

5.5 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் நீர் வளம் K 10 , UB 66 

K 10 - நீர் தன் வலு - உயிர் 'ஒ ' 
இருப்பிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம். 
துடிப்பு : கால்களை தொங்கப் போடுவதால் 'ஒ ' புள்ளி வலுக் குறைவு ஏற்படும். ஒரு காலேனும்  மடித்தால் போதும். துடிப்புகள் ஒழுங்காகி நீர் வலு கிடைக்கும்.
மனம் வழி : 
   (1) உடலில் இப்புள்ளி வலு குன்றினாலும், அச்சம் வரும். ஆண்மைக் குறைவுகள் போன்ற நோய்கள் உள்புகும். உடல் -> மனம்.
   (2) மனதில் அச்சம் வரினும் இப்புள்ளி  உடலில் தடங்கல் செய்யும். மனம் -> உடல். 
          ஆக, உடலின் பழக்க வழக்கங்களும் முக்கியம். மனதின் வலிமையும் முக்கியம். 
ஆழ் மனமாக விளங்கும் சிறுநீரகம் மரபு விருப்பங்களைக் கொண்டுள்ளது. 
எ. கா. பாலுணர்வு , மரபு விருப்பச் சாதனைகள் , 
திரும்பத் திரும்ப பார்ப்பதாலும், கேட்பதாலும் மேல் மனதில் P தோன்றி, அடிமனம் Liv  இறங்கி 
உட்காரும் சூழல் விருப்பங்களையும்  கொண்டுள்ளது. இவை பிரபஞ்ச செய்திகளாக வெளியேறி 
உங்களை அறியாமலே முயற்சிகள் நடக்கும். நிறைவேறாத , முடிவுக்குக் கொண்டு வர முடியாத ஆசைகளின் படிவு , உடல்த் துன்பங்களின் முடிவு என மாறும். 
     உடல் வலிகள், பாலுணர்வுக் குறைவு, கால் இயக்க க்  குறைவு , வாதம், சிறுநீரக சிக்கல்களில் தெரியும். பிறகு  கல், தீ, மண், நுரை  என விரியும். 

பயன் : 'ஒ ' தூண்ட  சிறுநீரக  ஆற்றல் கிடைக்கும். பாத எரிச்சல் நீங்கும் . தலை முடி உதிரல்  நிற்கும். ஆண்மைக் குறைவு அகலும். 

UB 66- நீர்ப் பை தன் வலு - உயிர் 'ஓ ' 
இருப்பிடம் : காலின் ஐந்தாவது எலும்பு, ஐந்தாவது விரல்  எலும்பும் சேரும்  இடத்தில் . ( சுண்டு விரல் முடியும் வெளிப் புறம் உள்ளது ) 
துடிப்பு : சுண்டு விரல் மண் பட சம்மணமிட்டு அமர 'ஓ ' துடிப்பு  இயல்பான நிலையில் இருக்கும். 
 இதன் வழி தடைப் பட்டால் , வலிகள் பல. 
மனம்  வழி : 
 ஆழ் மனக் குறைபாடு , வாழ்வில் ஈடுபாடு குறைவு, விரக்தி, சிறுநீர்ப் பை செயல் பாட்டில்  குறைவு, கூடுதல் காட்டும். 'ஓம் ' என இறைவழி நாடும் கால கட்டம். 'ஓ ' ஒலி உச்சரிப்பே மன நிறைவு தரும். பல் வலி, எலும்பு வலிகள் அடையாளம் காட்டும். 
பயன் விளக்கம் : 
    'ஓ ' புள்ளி தூண்ட பாத வலி குறையும். சிறுநீர் போவதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறையும். அதனால் சர்க்கரை நோய்த் தீர்வுக்கு வழி வகுக்கும். கழுத்தில் இருந்து முதுகில் இறங்கி ஓடும் சிறுநீர்ப் பையின் 4 ஓட்டத்தில் உண்டாகும் தேக்கம் - கழுத்து இறுக்கம்  நீங்கும். 
தொடரும். 

No comments:

Post a Comment