Monday, 21 December 2015

Tamil muraiyil acupuncture - 2/5.3

5.3 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் மண்  வளம் Sp 3 , St 36 

 Sp 3- மண் தன் வலு - அடர் மஞ்சள் - உயிர் 'உ '
இருப்பிடம் : கால் பாத கட்டை விரல் எலும்பும் , கட்டை விரலும் சேரும் மூட்டின் பின்புறம் உள்ள பள்ளம். ( Sp 2 தொட்டு மேல் நகர மேடு தாண்டி வரும் முதல் பள்ளம் ) 
 துடிப்பு : மரபு உலோகக் குச்சி 'probe ' கொண்டு Sp 3 தொட வலி இருப்பின் ஹீமோ குளோபின் 
 குறைவு காட்டும் . பெண்களுக்கு பெரும்பாலும் வலி இருக்கும். 
பயன் : உடல் வழி, இரத்த சோகை நீக்கும். தலை பாரம் குறைக்கும், கால் வலி தீர்க்கும். 
St 36- இரைப்பை தன் வலு - அடர் மஞ்சள் - உயிர் ' ஊ '
இருப்பிடம் : டிபியா எலும்பின் (முழங் கால் முன் எலும்பு )தலைப் பகுதியில்  துருத்தி  இருக்கும் 
 பகுதியில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் உள்ளது. (கண்டு பிடித்தல் : முழங்கால் கீழ்ப் பகுதி நடுவே நான்கு  விரல்கள் வைக்கும்போது சிறுவிரல் தொடும் இடத்தில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் உள்ளது . ) 
 துடிப்பு : செரிமானம் கெடும் நிலையில் வலி இருக்கும்.  
 பயன் : அனைத்து நோய்கட்கும் செரிமானம் முதல் என்பதால் , இப்புள்ளி முதலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். இப்புள்ளி தூண்ட வயிறு தொடர்பான நோய்கள் தீரும். எத்தனையோ வருடங்கள் தாண்டி வரும் கால் மூட்டு வலிக்கு முதல் கட்டும் புள்ளி. முழங்கால் வலிக்கு தீர்வில்  முதற்புள்ளி . 
 மனம் வழி : இருபுள்ளிகளும்  நுண் மனம் ஆகும். மேல் மனம் P வேறு வழியில் பாதிக்கப் பட்ட நிலையில் , மனம் / இதயம் ஆற்றல் தூண்டும் வலு வாக தாயிடம் இருந்து கிட்டாத நிலையில், 
 அதாவது மனம் துன்ப நிலையிலும் , இதயம் அதிக வேலையிலும் இருத்தல், உணவில் ஈடுபாடு 
 அற்ற உணர்வோடு அல்லது வருத்த உணர்வோடு உண்ணும் நிலை யில் , உணவை அரைத்து , மென்று இன்சுலின் ஊற நேரம் தராது விழுங்கும் நிலையில், செரிமானம் கெடும். மண் வளம் கெடும். மனம் அமைதிக்கு வழிபாடு செய்து உண்பது , உணவு உடம்பில் ஒட்டவே. 

மண்ணீரல் தன் வலுப் பெற கூடுதல் வழிகள் :

காட்சி : மஞ்சள் பொருள்களைப் பார்த்தல். பயன் படுத்தல். சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்ளுதல்.
உணவு : மஞ்சள் நிறத்தில் உள்ள வாழைப் பழம், பப்பாளி, மாம்பழம், அன்னாசி, கறி மஞ்சள் பயன்பாடு, பொட்டுக்கடலை  உணவில் சேர்த்தல். 
சுவை : இனிப்பு சுவையை உணர்ந்து மூளை இன்சுலின் தருகிறது. மரபு இனிப்பு உணவுகள் காலை, நண்பகல் உணவில் அளவோடு சேர்த்து உண்ணத் தொடங்குங்கள். வெல்லம் , தேன் , பனங் கற்கண்டு, கருப்பட்டி கலந்த உணவுகள். 
             துவர்ப்பும் மண் வளமே. தாம்பூலத்தில் உள்ள பாக்கு துவர்ப்பு என்பது நினைக்க.
துவர்ப்பு  சுவையை சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகி , வாய்ப்புண் , அல்சர், மூலம், குணமாக்கும். வாழைப் பூ  எந்த வகையிலும் உணவில் சேர்க்க. 
தொடரும். 

No comments:

Post a Comment