Friday, 23 October 2015

                  100ஆண்டுகள் வாழ தமிழ்முறையில் அக்குபங்சர்
                       தரும் 10 கட்டளைகள்.
    -தமிழ்முறையில் அக்குபங்சர் ஆசான்.ஆ.மதியழகன்.
                நீண்ட நாள் நோய்நொடி இன்றி வாழ ஒவ்வொரு மருத்துவமும் ஒவ்வொரு
வழியைக் காட்டுகிறது.இது மலையுச்சியை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையைப் பின்பற்றிச் செல்வதைப் போன்றது.
                இயற்கையோடு இயைந்து வாழவேண்டும்.சமைத்த உணவுகளை உண்ண வேண்டாம்.
இயற்கையாக விளைந்த காய் கனிகளை அப்படியே உணவாக்குவதே நீண்டநாள் வாழ வழி என்பது ஒரு கூற்று.இதை முற்றிலும் பின்பற்றுவது கடினம்.
                சிலர் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு அல்லது குறைந்த அளவு நாள்தோறும் நடை வேண்டும் என்பர்.இன்னும் சிலர் யோகா என்கிற மூச்சுப்பயிற்சியோடு கூடிய ஆசனங்கள்,நீண்டநாள் வாழ உதவும் என்பர்.மேலும் சிலர் காயகல்பம் (நீண்ட வாழ்நாள் உடலுக்குத் தருவது) என உணவுப்பொருட்களைப் பட்டடியலிட்டு உண்ணச் சொல்வார்கள்.
               இவ்வாறு பலதிசைகளில் அவர்கள் மெய் என்று கண்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவார்கள்.
                 இவையனைத்தும் கண்ணுக்குத் தெரியாத யானையைக் குருடர்கள் தொட்டு விவரிப்பது போல பகுதி உண்மைகளே!அப்படி என்றால் முழு உண்மை என்ன?
            நம் உடல் பஞ்சபூதங்களால் அமைந்து வெளிஉலகில் உள்ள பஞ்சபூதங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.பஞ்சபூதங்கள் உடலில் உருவாகும்போது மனம் என்ற ஓர் அமைப்பு
இதயத்தோடு சேர்ந்து உருவாகி ஐந்து பூதங்களையும் மேலாக நின்று ஆட்சி செய்கிறது.
அக்குபங்சரில் இது பெரிகார்டியம் என்றும்,மகாபாரதத் தொடரில் 'என் இருதயம்' என்றும்
அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறது.
           எனவே உடல்நலம் காக்க பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என்றால்,கூடவே மனநலம் காக்கவும் பஞ்சபூதக் கட்டளைகள் 'ஐந்து' என வந்து விடுகிறது.ஆக பத்துக் கட்டளைகள்
போற்றினால்தான் 'நலம்' என்பது முழுமையாகக் கிடைக்கும்.நீண்டநாள் நோயின்றி வாழ்வதும்
எளிதான செயலாகும்.

         (1) ஆகாயபூதம்-உடலில் கல்லீரல்-ஓய்வு,உறக்கம்

ஆகாயத்தை விண் என்றும்,வெளி என்றும் உரைப்பர்.இங்கு ஆகாயம் என்பதன் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவை.உடலில் ஆகாயமாக நம் கல்லீரல்  உறுப்பு,கண் வழியாகச் செயல்படுகிறது.இதன் செயல்பாடு குறைவின்றி இருக்க உடல்ரீதியாக ஓய்வும் உறக்கமும்
தேவை.ஓய்வு என்பது வேலைமாற்றம் அல்லது பிடித்தவை செய்வது..வேலையே பிடித்தமானது ஆனால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

      (2)ஆகாயபூதம்-அடிமனமாகக் கல்லீரல் தேவை-இரக்கத் தன்மை.

கல்லீரல் பாதிக்கப் படுவது மதுவகையால் என்பது சொல்லத்தேவையில்லை.அதேபோல் மனத்தின் கோபநிலையாலும் வலிமையாகப் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.தன்கோபம் தன் உடல்கெடுக்கும்.அடுத்தவர் கோபத்திற்கு எதிர்கோபம் கொள்ளாது கவசம் இட்டவாறு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.அருள் அல்லது இரக்க மனப்பான்மை உள்ளவர்களே நீண்டநாள் வாழமுடியும் என்பது உண்மை.

2 comments:

  1. Sir,
    Very useful blog. I like if I can read this as a book. Hope to read your soon. And thank you for creating such a very good blog and I m interested in totle.

    ReplyDelete
  2. Sir,
    Very useful blog. I like if I can read this as a book. Hope to read your soon. And thank you for creating such a very good blog and I m interested in totle.

    ReplyDelete