தொடர்ச்சி , நூல் கருத்துரை - பாவ புண்ணிய க் கணக்குகள்.
தத்துவம் சார்ந்த கருத்துக்கள் .
(15) அறிவு வளர்ச்சி என்பது வசதிகளைத் தரும். ஞான வளர்ச்சி என்பது ஈவிரக்கம், அன்பு ,
கருணை தரும். எனவே ஞான அடிப்படையில் புண்ணியம் தேட வேண்டும்.
(16) கூலி, வேலி (நிலம் ), தாலி -எல்லை அறிந்து தெளிவு கொள்ள வேண்டும்.
(17) குழந்தை பிறந்தவுடன் பிரபஞ்ச ஆற்றல் உச்சிக் குழியில் நுழைந்து மூடிக் கொள்ளல்.
(முதல் வருட முடிவில் மொட்டை அடித்தல் , உச்சிக் குழி நன்கு ஆற்றல் பெற்று மூடவே.)
(18) ஞான விளக்கு -தீப விளக்கு ஒப்பீட்டு விளக்கம் , வாசி யோகம் சார்ந்தது.
(19) வேளாண்மை போற்று ; ஞான வேளாண்மையும் நடத்து.
(20) சாணியிலும் (சாணிப் பிள்ளையார் ) பிரபஞ்ச சக்தி உண்டு.
(21) உடலும், ஆன்மாவும் , கார் , காரோட்டி ஒப்பீடல் (தானியங்கி விமானம் மற்றும் விமான
ஓட்டி என ஒப்பிட்டால் , உயிர் , ஆன்மா வேறுபாடு இன்னும் நன்கு புலனாகும்.)
(22) வரமா ? சாபமா ?- திடீர் இறப்பு அழைப்புகள் , பாவ புண்ணியத்தோடு சேர்த்துப் பேசப்
படுகிறது . ( ஒப்பீடு : காந்தி , பூகம்பத்தால் இறந்தவர்களை ப் பாவம் செய்தவர்கள் என்று
எழுதியது பிறரால் கண்டிக்கப் பட்டது.பகுத்தறிவுப் பார்வை - விபத்துக்கள் நேர்ந்தவை ;
நோய்கள் ஈட்டியவை (மரபு, சூழல்தான் )-மேலும் எடுத்துக்காட்டு இலங்கை ப் படுகொலைகள்,
சுனாமி போன்றவை.)
(23) கனிப் பருவத்தில் மரணம் -முதுமை மரணம் -நன்று
(24) இருட்டு வாழ்க்கை இல்லாத சாமியார்கள் குறைவு - நடப்பு.
(25) ஒரு துறவி மகானாகும் நிலை -கடினம் எனல்.
(இல்லறம் பின் துறவறம் - தமிழர் நிலைப்பாடு )
(26) சமத்துவம் உணர்த்தும் மயானம், கடைசிக் கதவு.-விளக்கம் அருமை.
இந்த 26 கட்டுரைகளும் , உள்ளடக்கம் மற்றும் விவரித்த வகையில் வாசகரை
ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச செல்கிறது . வாழ்வில் அறம் பேணும் புதிய மனிதராக வாசகர் மாறுவார்..தலைப்புக்கு ஏற்ற கருத்துக்களும் விளக்கமும் உடைய இப்புத்தகம் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும்.
------அன்புடன், ஆசான் . ஆ. மதி யழகன்..
No comments:
Post a Comment