Friday, 23 January 2015

                            நூல் கருத்துரை 

நூல் : பாவ  புண்ணிய க் கணக்குகள் 
ஆசிரியர் : யாணன் 
வெளியீடு : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் 
        மூன்று பதிப்புகள் கண்ட  இந்த நூல் , பாவ புண்ணிய க்  கணக்குகள் , பலவிதமான 
வாழ்வியலுக்குத் தேவையான சிந்தனை முத்துக்களை உள்ளடக்கியது .

       வாழ்வியலுக்குத் தேவையான பொதுவான கருத்துக்கள் 

(1) பாசிடிவ் எனர்ஜி பரப்பப் பட வேண்டும் ,  என்ற கருத்து வரவேற்கப் பட வேண்டியதும் ,
வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியதும் ஆகும்.வெற்றி, வீட்டு வாசலுக்கு வர உதவும்.
செய்தித் தாள் இதழ்களில் வெளியாகும் ' கொலை , கொள்ளை ........' போன்றவை எச்சரிக்கை 
என்ற பெயரில் முழுமையாக வர்ணிக்கப் படுவது அளவு படுத்த வேண்டும் , எனக் குறிப்பிட்டு 
 இருக்கலாம். வீட்டுக்குள் இருக்கும் சண்டை விவரங்களை அடுத்தவர்க்கு கூறாதே என்பதற்கு,
புத்தர் கதையில் சொல்லும் பழமொழி ' உன் வீட்டு நெருப்பை அடுத்தவர்க்கு கொடுக்காதே '

(2) பாவம் சேர்க்காதே, புண்ணியங்கள் எண்ணிக்கை சேர்க்கவும். இதனால் குடும்பம், பிள்ளைகள் 
 விளங்குவர் . இக்கருத்தை ' வசையொடு வாழாதே ! இசை (புகழ் ) யோடு வாழ் ' எனும் 
திருவள்ளுவரின் வாக்காக எடுத்துக் கொள்ளலாம் .

(3) எல்லா முதியோர்களும் , பெற்றோர்களும் சமம் ஆனவர்கள் . வாழும் கடவுள் என ஆதரியுங்கள் .வயதுக்கு மரியாதை தரும் கருத்து சிறப்பு.

(4) பணத்துக்காக ஓடி , வாழ்வின் மகிழ்வுகளை  இழந்தவர்கள் ஏராளம் . இக்கருத்து வாழ்வின் 
மதிப்பைக் கூறுகிறது .

(5) பண்பால், செயலால் நல்லவர், கெட்டவர்  கதை 'நெகிழ்ச்சி ' விளக்கம். (ஓஷோவின் 
நல்லவர் , கெட்டவர் இருபிரிவினர் விளக்கம் - எவ்வளவுப் பெரியவர் ஆனாலும், தன்னலம் 
வரின் கெடுதல் நிகழ்வது இயல்பு. எனவே , தன்னலம் விட்டவர் நல்லார் ; விடார் கெட்டவர் .)

(6) அசைவம் சேர்ப்பதன் எல்லை விளக்குவது, உயிரின அழிப்பைத் தவிர்க்கச் சொல்வது,
ஆன்மா , உயிர் வேறுபாடு - நுணுக்கமான விளக்கம்.

(7) அநியாய வட்டி பாவத் தொழில்.

(8) எது நல்ல சாவு என்பது ஊர் பேச்சில் விளங்கும். சாபம் வாங்காதே ; நல்ல பெயர் எடு.

(9) இறந்த உடலுக்கும் (காசி நகரம் போல்  இல்லாமல் ) மதிப்பு தர வேண்டும்.

(10) இறந்த உடல் எரியூட்டலே சிறப்பெனக் காரணம் கூறல்.

அறிவியல் சார்ந்த கருத்துக்கள் 

(11) கண் திருஷ்டி , மாந்திரீகம் மன வலிவுடையோரை ஒன்றும் செய்யாது.

(12) இரவில் அறிவும் வேலை செய்யும்.- புத்தன் இரவில் புறப்படல் ,

(13) பழங்களை பறவைகளுக்காக  விட்ட மரங்கள் வேண்டும்.

(14) வலசை வரும் பறவைகளைக் காப்பற்றி , பல்லுயிர் ஓம்ப வேண்டும்.
தொடரும்.



No comments:

Post a Comment