ஐம்பூத உறுதிமொழி
நீர் :
என் உடலில் ஆதி செல்களை மீளாக்கம் செய்கின்ற 50-க்கு 50 தாய் தந்தை ஆற்றல் உள்ள சிறுநீரகம் செயல்பட போதிய நீர் அருந்துவேன் எனவும், பிரபஞ்ச சக்தி என்னுள்ளே இருக்கிறது,
மற்றும் வழி காட்டுகிறது என நம்பிக்கை கொள்ளவும் உறுதி கூறுகிறேன்.
கல் :
என் அடிமனமாக இருந்து 'நான் ' என விளைவிக்கும் கல்லீரல் , உடல் மனத் தோற்ற அழகை
உருவாக்கும் விதத்தில் போதுமான ஓய்வும் , உறக்கமும் தருவேன் என்றும், ஒவ்வொரு
உயிர் இயக்கத்தின் மீதும் அருள் தன்மையோடு நடந்து கொள்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
தீ :
என் உடம்பின் ஒவ்வொரு மூட்டும் அசையுமாறு வாழும் விதம் , பணி முறை, விளையாட்டு,
உடற்பயிற்சி கொள்வேன் என்றும் , மனம் எனும் வரவேற் பறை தூய்மையாக இருக்கவும்
உறுதி செய்கிறேன்.
மண் :
என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆற்றல் தரும் அறுசுவை உணவை வாய் மூடி ,
நன்கு மென்று கூழாக்கி , உமிழ் நீரோடு கலந்து , உணவு ஈடுபாட்டோடு , முறையறிந்து
உண்பேன் என்றும், நல்லெண்ண வளர்ச்சிக்கு மட்டுமே வழி காண்பேன் எனவும் உறுதி
கூறுகிறேன்.
நுரை :
என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் உயிர் வளி தருகிற காற்றை யோக முறையில்
அடக்கி ப் பயன் கொள்வேன் என்றும், எல்லாம் இன்ப மயம் எனும் உணர்வைக் கொள்வேன்
எனவும் உறுதி கூறுகிறேன்.
--------அமைப்பு ஆசான் ஆ. மதி யழகன்..
No comments:
Post a Comment