1.4 பிரபஞ்ச மனம் (நுரையீரல் )
நுரையீரல் நீரின் தாய் . விதைகளுக்கு வெளிச்சமும் காற்றும் போல நுரையீரல் சிறுநீரகத்திற்கு வலுத் தருகிறது. ஆக மூச்சுப் பயிற்சி இருந்தால் சிறுநீரக வலிமை எளிது . முழங்கை மடக்கும் பனி புரிந்தாலும் Lu 5 -நுரை நீர் தூண்டப்பட்டு சிறுநீரகம் வலுவாகும் . இதன் மாற்றுப் புள்ளி K 7 நீர் நுரை (நீர் ஓட்டத்தில் நுரை வலு கேட்டு வாங்கும் இடம் ) சிறுநீரகக் கல் கரைக்கும்.
பிரபஞ்சத்தில் இயங்கும் ஒளித்துளி காற்று வடிவில் தலை உச்சிப் புள்ளி வழியே நுழைந்து நுரையீரல் பலூன் பையில் நுழைகிறது . ஆயா முதுகில் தட்ட இயங்குகிறது. உடலில் சுற்றுப் பெற்றுக் கொண்டிருக்கிற காற்று பிரபஞ்ச சக்தியை உள் வாங்கித்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது . உடலில் மூக்குவழி காற்று இயக்கம் நடைபெற்றாலும் , உடலில் உள்ள ஒவ்வொரு நுண் துவாரம் வழியாகவும் சுவாசம் நடைபெறுகிறது .
பிரபஞ்ச ஆற்றல் முழுமையாக உள் வாங்க , பஞ்ச பூதங்கள் உள்ள மேல் உடல் (முண்டம்) அதாவது மார்பும் முதுகும் திறப்பாக இருப்பது நன்று. மன்னர்கள் அணிகலன் கூடிய வெற்று மார்பில் இருப்பர் . சில கோவில்களில் மேல் சட்டை கழற்றுவது மரபாக உள்ளது . ஆண்கள் பனியன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு , துண்டு போர்த்துவது வழக்கமாகக் கொள்ளலாம் . பெண்கள் முதுகு திறப்பாக ஜாக்கெட்டு அணிவது ஏற்கெனவே வழக்கில் உள்ளது . முதுகுப் புள்ளிகள் சுவாசிக்க உதவும். அங்கு நீர்ப் பை U B ஓட்டம் உள்ளதால் சிறுநீரக வலுவுக்கு உதவும்.
மார்புப் பகுதியில் தொடங்கும் நுரையீரல் ஓட்டம் கை கட்டை விரல் வெளி நகக் கண் அருகே Lu 11 என முடிகிறது. நுரையீரல் துணை உறுப்பு பெருங் குடலின் ஓட்டம் இரண்டாம் விரல் ஆகிய ஆள் காட்டி விரல் வெளி நகக் கண் L I 1 அருகே தொடங்குகிறது . முடிவு மூக்கின் அடியில் உள்ள L I 20 என்ற புள்ளி ஆகும். ஆகக் கட்டை விரலும் , ஆள் காட்டி விரலும் சேரும் சின் முத்திரை நுரையீரல் சுற்றை முழுமை செய்து உடல் நலம் தருகிறது. மேலும் பிரபஞ்ச மனத்தை கட்டி இழுத்து ஆழ் மனமாகிய சிறுநீரகம் உடன் இணைக்கிறது . உறக்கம் இல்லாமலே ஆழ் மனம் புகுதல் ஆகும். அறிவும் , உணர்வும் இரு முனை இணைக்கும் விழிப்புணர்வு ஆகும்.
மூக்கின் பணி களுள் ஒன்று , வாசனை பார்த்து உணவை வயிற்றினுள் செல்ல அனுமதி தருவது. இனி மண்ணீரல், கணையம், வயிறு இணைந்த மண் பூதம் நுண் மனம் ஆக செயல் படுவது காண்போம் .
அன்புடன் ஆ . மதி யழகன் ...
No comments:
Post a Comment