Saturday, 1 November 2014

 28/60 - சிறுகுடல் கல்  -S I 3                     
 ● அமைவிடம் : கை விரல்களை மடக்கும் போது , இதய ரேகை மடிப்பில் ஏற்படும்  மேடான 
 பகுதியில், தோலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது .
 ■ பயன் விளக்கம் : இதயத்தின் துணை உறுப்பு சிறுகுடல் , தன் பாதையில் முன்னம் உள்ள 
 மண்ணீரல் நோக்கிச் செல்லாமல் , திரும்பிய நிலையில் கல்லீரலில் மேலும் ஆற்றல் பெறும் 
 இடம். பெறாவிடில்  - முதுகு வலி, தாய்ப் பால் சுரப்பின்மை , நரம்புத் தொடர்பான வலிகள்.
  புள்ளி தூண்டப் பயன்.
 ♥ நடை முறை விளக்கம் : துணிகளைக் கைகளால் கும்மித் துவைக்கும் போதும் , யோகா 
 ஆசன முத்திரைகளின் ( கை மடக்கி விரல் உயர்த்தி - Thumps up  -  தொடை மேல் 
 அழுத்தி  மூச்சுப் பயிற்சி செய்தல் ) போதும்  S I 3 தூண்டப் படும்.
 ⊙ தாய்ப்பால் தூண்டு புள்ளி.
 பாடல் : இறுக்கும்    கை ஓரம்  
                           இதய ரேகை    மேட்டதனில் 
                இருக்குமே     சிறுகுடல் கல் 
                             தீர்க்குமே    பால் சுரப்பு ..........................164     
 29/60  - சிறுகுடல் தீ  - S I 5               
 ● அமைவிடம் : ஐந்தாவது கை விரல் மூட்டின்  தலைப் பகுதியும் , அல்னா எலும்பும்  இணையும்   இடத்தில் , உள்ளது. ( உள்ளங்கை உள் நோக்கி  சாய்க்கும் போது , மணிக்கட்டு 
 தொடக்கத்தில் உண்டாகும் பள்ளம்.) 
 ■ பயன் விளக்கம் : சிறுகுடல் தன் உறுப்பு (தீ ) ஆற்றலைப் பெறும்  இடம். -- தடங்கினால் 
  மணிக்கட்டு  வலி, தோள்ப்  பட்டை வலி, வாயுத் தொல்லை .
 ♥ நடை முறை விளக்கம் : கை சுழற்றிப் பணி  புரிந்தால்  பிணி  இல்லை. வீட்டின் சுழல்ப் 
 பிடிகள் , திறவு கோல்  சுழற்றுதல் , வளைப்  பந்து  விசிறுதல் , போன்ற பணிகள்  மூட்டுகளுக்கு 
 வலி  வாராது  காக்கும்.
 ⊙ புதுமை  விளக்கம் : சீட்டுக் கட்டு விசிறுதல், பந்து மட்டை விசிறுதல், போன்றவற்றால் 
 தூண்டப் படுவதால்  இது  S I 5  விசிறுப் புள்ளி.
 பாடல் : மணிக்கட்டு    தொடக்கத்தில்  
                              கை சாய்க்க        வரும் பள்ளம் 
                கணிக்கட்டும்      சிறுகுடல் தீ 
                              களையட்டும்    தோளின் வலி.............168    
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ. மதி  யழகன்.

No comments:

Post a Comment