Wednesday, 5 November 2014

 33/60 -கல் மண்  - Liv 3 - குருதி அழுத்தப் புள்ளி. 
 ● அமைவிடம் : Liv 2 விலிருந்து (காற் கவுளி ) 2 சுன் மேலே.
  (2 சுன் =3விரல் குறுக்கம் ) 
 ■ பயன் விளக்கம் : தந்தை - மகன் -பேரன்  போல 
                                  கல் -தீ -மண் =கல்லீரல் -தீ ஈரல் -மண்ணீரல் .
 இது செரிமான முக்கோணம். தீ ஈரலில் மனமே முதன்மை ஆட்சி .மனம் உச்சிப் புள்ளி.
        மன உணர்வுகள் அதிகமானால் , கல்லீரல் தன் ஆற்றலை நேரடியாகத் தானாகவே 
 மண்ணீரல்  தனக்கு வழங்கி விடும். அந்த இடமே Liv 3- கல் மண். மண்ணீரல் சமநிலைக்கு 
வந்தவுடன் இதுவும் தானே சரியாகி விடும்.
          Liv 3 தானே இயங்கும் போது , குருதி அழுத்தம் உயர் நிலையில் இருக்கும். தொடர்ந்து 
 நாம் தூண்டினால் (அக்கு ஊசி ) , இதயத்திற்கு ஆற்றல் இன்றி , குருதி அழுத்தம் குறைய 
 ஆரம்பித்து விடும். எனவே, மற்ற புள்ளிகள் 20 நி  என்றால், இதில் 2நி மட்டுமே அக்கு ஊசி 
 இருக்க  வேண்டும். அக்கு பிரசரும் குறைந்த அளவே செய்ய வேண்டும்.
      Liv 3 இயங்கும் நிலையில், (வலி அங்கு இருக்கும் ) , இதயத்தின் வெப்பம் ஏறுவதால்,
  கண் கட்டி, தலை வலி, கண் தொடர்பான சிக்கல்கள் உண்டாகும்.
 அக்கு பிரசர் பயன் தரும்.
 ♥ நடைமுறை விளக்கம் : இடது காலில் உள்ள Liv 3-ல் ,  வலது காலின் குதிகாலை வைத்து,
 அழுத்தி, அழுத்தி எடுப்பதன் மூலம், பதற்றத்தால் வரும் B P , தலை வலி  குறைக்கலாம்.
 வார் உள்ள காலணிகள் அணியலாம். தேங்காய் எண்ணெய்  காலில் தேய்க்கும் போது 
 Liv 1, Liv 2, Liv 3 நோக்கி மேலாகத் தேய்க்கலாம்.
 ⊙ புதுமை விளக்கம் : முதற்கோணல் (B P ) உணர்த்தும் புள்ளி.
 பாடல் : கல் தீ       தொடங்கி 
                        மேலாம்     இரு சுன்னில் 
                கல் மண்     இருக்கும் 
                      மிகை அழுத்தம்   தடுக்கும்..............184.
  மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment