Sunday, 9 November 2014

 38/60 - பித்தப் பை வலு  - GB 41  
 ● அமைவிடம் : காலின் நான்காவது , ஐந்தாவது கால் விரல் எலும்புகள்  சேரும்  இடத்தில் 
 உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : பித்தப்பை தன் உறுப்பு, ஆகாயத்தை சந்திக்கும் இடம். இந்தத்  தன்  வலு 
 குன்றி விடுமானால்  -- பாத வலி, இடுப்பு வலி, குதிகால் வலி 
          இப்புள்ளி தூண்டினால் நீங்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் : காலணி  (செருப்பு ) அமைப்பில் இதன் மேல் அழுத்தம் விழுந்தால் 
 உண்டு. மற்றபடி அக்கு பிரசர் , அக்கு ஊசி தேவைப் படும்.
 ⊙ புதுமை விளக்கம் : GB 41 கால் வலி நீக்கும்  வலுப் புள்ளி.
 பாடல் : நான்காம்        ஐந்தாம் 
                      விரல் எலும்பு        சந்திப்பில் 
               பார் பித்தப்      பை வலு 
                       தீர் இடுப்பு      பாத வலி கள் .................204.
 38A  - பித்தப்பை மனம் - GB 40 
 ● அமைவிடம் : கணுக்கால் வெளி மூட்டு எலும்பின் கீழ் உள்ளது  GB 40 
 ■பயன் விளக்கம் : பித்தப் பை கல்லீரல் தொட்டு பின்  மனம் (P ) சந்திக்கும் இடம் . -
 பித்தப் பை மனம் - பித்தப் பை நேரடியாகச் செயல் படும் இடம்.- செயல் படா விடில் --
          வலி , வாந்தி, செரிமானமின்மை, வீக்கம், கால் வலி, கணுக்கால் வலி, பித்தப் பை 
 நீண்ட நாள் கோளாறுகள். பின் தலை வலி, கழுத்து வலி  உண்டாகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : கொலுசு .... போன்ற அணிகள் படும் இடம்.
 ⊙ புதுமை விளக்கம் : காலின்  உள் முட்டி முன்னே Sp 5 - மண் நுரை - நுரையீரல் காப்புப் புள்ளி.
   காலின்  வெளி முட்டி  கீழே  GB 40 - பித்தப் பை மனம்.- வலி காப்புப் புள்ளி.
 பாடல் : கணுக்கால்        வெளி மூட்டு 
                      கீழ் பித்தப்          பை மனம் 
                கணுக்கால்       வலியொடு  
                       கழுத்து வலி     தீர்க்கும் ....................208.
  மேலும், அடுத்து, அன்புடன், ஆ . மதி  யழகன். 

No comments:

Post a Comment