Tuesday, 4 November 2014

 'ப '  ஓட்டம்  - கல்லீரல் ஓட்டம் (Liver Meridian )  
 கல்லீரல் ஓட்டப் பாதை : கல்லீரல் சக்தி ஓட்டப் பாதை, கால் கட்டை விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில், எலும்புகள் சேரும் மூட்டிற்கு நடுவில் தொடங்கி , காலின் 
 உட்புறமாக ஏறி முண்டத்தின் விலாப் பக்கம் முடிகிறது.
 கல்லீரல் துணை உறுப்பு பித்தப் பை  ஓட்டப் பாதை :
 பித்தப் பை  ஓட்டம் (Gall Bladder ) கண்ணின் வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, காதோரம் 
 இறங்கி , நெற்றி தொட்டு, காதில் இரு வளைவுகளுக்குப் பின் தலை ஏறி இறங்கி, உடம்பின் 
 பக்க வாட்டில் பயணம் செய்து, தொடை , முழங்காலின் பக்க வாட்டில்  காலின் நான்காம் விரல் 
 நக வெளிபக்க க்  கீழ் விளிம்பில் முடிகிறது.
          கல், மண், நீரக ஓட்டங்களே  காலின்  வலிமை . (கல் நீட்டினால் கால் )
 31/60 - கல் வலு - Liv 1  
 ● அமைவிடம் : கால் கட்டை விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ்  விளிம்பிற்கும் , எலும்புகள் 
 சேரும் மூட்டிற்கு இடையில் அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : கல்லீரல் தன் ஓட்டப் பாதையில் , தன்னிடத்தே (ஆகாயம் ) ஆற்றல் பெற்று 
 எழும் இடம். அதிக சக்தி வாய்ந்தது. மென்மையாகத் தடவினாலே போதும் . ஆற்றல் பொங்கும்.
 இது  இருப்பு (கல்லா என்ற சொல்லை கவனிக்கவும்.) குறைந்தால்,
     கால் விரல் வலிகள், செரிமானதுக்குப் பின் வரும் தலைவலி  உண்டாகும்.
  செரிமான முக்கோணம் : செரிமானம் என்பது முக்கோணத் திறன். உச்சிப் புள்ளி மனம். கீழ் ஒரு 
 புள்ளி கல்லீரல். அடுத்த  புள்ளி மண்ணீரல் .
(1) உச்சி மனம் ஈடுபட்டால் எளிதில் செரிமானம் . (P 7 தூண்டலாம் ) 
(2) உணவின் தன்மை எளிதாக , மண்ணீரல் தானே சுரந்து செரிமானம் (Sp 3, St 36) 
(3) கல்லீரல் ஒன்று தாண்டி வந்து நேரே உதவ செரிமானம் (Liv 3)
  மனம் கெட்டு , ஒய்வு, உறக்கம் கெட்டு இருந்தால் , மனதுக்கு P 7, உறக்கத்துக்கு P 6 கொடுத்து 
 'நோய் ' கவனித்து பிறகு 'பேய் ' மனதின் தன்மை  தீர்வு செய்ய வேண்டும்.
♥ நடைமுறை விளக்கம் : சம்மணமிட்டு அமருவதைப் பழக்கமாகக் கொள்ளுங்கள். கட்டை விரல்  தலை பாகத்தை  அடிக்கடி  நீவுங்கள்.
     எண்ணெய் தேய்த்தல் : முழங்கால்  முதல் பாதம், விரல் வரை  காலிலும், முழங்கை முதல் 
 உள்ளங்கை விரல் வரை  கையிலும்  ஓட்டப் பாதை ( இது முக்கியம் ) வழி சிறிதளவு தேங்காய் 
 எண்ணெய் தடவித் தேய்க்க  பல நோய்களை முன் தடுக்கும். ( காண் ஒளி  (video ) விரைவில் )
       வெட்கப் படும் பெண்கள் காற்ப் பெரு விரலால்  தரையில் கீறுவது , கல்லீரல் தூண்டல்.
  எழுகின்ற ஆற்றல் எழும் இடத்திலயே  அடக்கம்.
       வயதானவருக்கு காற்ப்  பெரு விரல் கதிர் வீச்சும், ஆற்றலும் நிறைந்தது. பாதம் பணிதல்,
 ஆசிர்வாதம் பெறல் நடைமுறை. இறந்தார் கால் வணங்கலும் அதே.
       கோவில் கருங்கல் தரையில் பலர் நடக்க, கெட்ட  ஆற்றல் கீழ் இறங்க, நல்ல ஆற்றல் 
 மேலாகப் படிந்து இருக்கும். அடுத்தவர் நடக்கும் போது  ஒட்டிக்கொள்ளும். ( கட்டை விரல்  யின் மேல் நிற்கும். நால் விரல் யாங் கீழ் இறங்கும்.)
⊙ புதுமை விளக்கம் : காற்ப் பெரு விரல், நகம் அழகானால் , முழு உடல் ஆரோக்கியம்.
பாடல் : காற்ப் பெரு விரல்                வெளி நகத்துக் 
                                கீழ் முனையில்              கல் வலுவாம் 
               தீர்க்கும அது              கால் வலிகள் 
                            தீர்த்து விடும்         தலை வலியும் ...................176.
   மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment