Saturday, 8 November 2014

36/60 - பித்தப் பை நுரை  - GB 44  
அமைவிடம் : காலின் நான்காவது விரல் நகத்தின்  வெளிப்புறக் கீழ் விளிம்பில்  0. 1 சுன் 
 தூரத்தில் அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : கல்லீரல் துணை உறுப்பு பித்தப்பை , நுரையீரல் ஆற்றலை  ஒன்று தாண்டி 
 (சிறுநீரகம் ) முன்னதாகப் பெறும்  இடம் . ஆக்சிஜன்  வரவு  இன்றேல், -
          கால் விரல் வலிகள், கால் நகக் கண் வலிகள்.
 ♥ நடைமுறை விளக்கம் : பித்தப் பை ஓட்டம், பல வளைவுகள் கொண்டது. அனைத்து  தேக்கங்களிலும்  உண்டாகும்  வலிகள் , நான்காம் விரல் மண் தொடுவதன் மூலம்  ஈர்க்கப் 
 பட வேண்டும். ஆற்று, கடல் மண்ணில் கால் புதைய  நடக்கலாம். கருங்கல்லில் அந்த ஈர்ப்பு 
 உண்டு. சடுகுடு போன்ற மணல் விளையாட்டுக்கள் விளையாடலாம். கிச்சு கிச்சு தாம்பாளம் 
 கை வலிகள் தீர்க்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : மண்ணில் இறங்கும் முனை மூவர்.
       St 45 -இரப்பை நுரை - இரண்டாம் விரல் வெளி நகங் கீழ்.
     GB  44 - பித்தப்பை நுரை  - நான்காம்  விரல் வெளி நகங்  கீழ்.
    UB  67 - நீர்ப்பை  நுரை  - ஐந்தாம்  விரல்  வெளி நகங்  கீழ்.
 பாடல் : நான்காம் விரல்       வெளி நகத்துக் 
                     கீழ் முனை பித்    தப் பை நீர் 
               நீங்காத       வலிகளெல்லாம் 
                     நீங்குமே         நிலம் பட .......................196. 
 37/60 - பித்தப் பை நீர்  - GB 43       
 ● அமைவிடம் : காலின் நாலாவது விரலும், ஐந்தாவது விரலும் சேரும்  இடத்தில  உள்ள 
 பள்ளத்தில் அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : கல்லீரல் துணை உறுப்பு பித்தப் பை  தன்  தாயிடமிருந்து (நீர்) ஆற்றல் 
 பெறும்  இடம் . நீர் ஆற்றல் பெறாவிடில், -- பாத வலி.
 ♥ நடைமுறை விளக்கம் : பயன் ஆவன -
       பக்கவாட்டு வலிகளுக்கு  -GB 43 - பித்தப் பை நீர்  - நான்காம் விரல் இடுக்கு.
      முன் பக்க வலிகளுக்கு  - St 44, Li 4 - இரப்பை நீர், குடல் மனம் - இரண்டாம் விரல்  இடுக்கு , கைக்கவுளி , பின்பக்க வலிகளுக்கு  -UB 40, UB 60 - நீர்ப் பை மண் ( முழங்கால் மூட்டு உள் 
 மடிப்பு மையம் ) நீர்ப் பை  தீ (வெளிக் கணுக்கால் எலும்பு , குதிகால் நரம்பு  கோட்டின் மையம் )
⊙ புதுமை விளக்கம் : மெட்டிப் புள்ளிகள் St 44 , GB 43, UB 66 (2, 4, 5 -ம்  விரல் இடுக்குகள் )
 பாடல் :  நான்காம்       ஐந்தாம் 
                       விரலிடை பித்       தப் பை நீர் 
                நாளில்        சேர் வலி 
                        தாளில்    நீக்கும்...........................200.
   மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.

No comments:

Post a Comment