Sunday, 9 November 2014

 39/60 - பித்தப்பை தீ  - பித்தத் தீ - GB 38 
 ● அமைவிடம் : காலின் வெளிப்புறக் கணுக்கால் மூட்டிலிருந்து 4 சுன்  மேலே.
 (பிபிலா எலும்பின் முன்பக்க ஓரத்தில்.- முழங்காலின் முன்னம் டிபியா , பின்னம் 
பிபிலா எலும்புகள் அமைவு )
 ■ பயன் விளக்கம் : பித்தப்பைக்கு  நன்கு  இரத்த ஓட்ட வேகம் (தீ ) கிடைக்கும்  இடம்.
 இது தடங்கினால் ,--  நரம்பு களுக்கான  முக்கியப் புள்ளி உதவி கிட்டாது ,
                  - பக்க வாட்டு  வலிகள் 
      -கால் வாதம், கால் பிடிப்பு உண்டாகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : தேங்காய் எண்ணெய் தேய்த்துதான் நீவ வேண்டும். அல்லது 
 நோயின் அறிகுறி நிலையில் வலி கண்டு , அக்கு பிரசர், அக்கு ஊசி பயன் படுத்த வேண்டும்.
 ⊙ புதுமை விளக்கம் : நரம்புகள் இயக்க முக்கியப் புள்ளி. நாள்தோறும் கவனிக்க வேண்டும் .
 பாடல் :  கணுக்கால்      வெளி மூட்டு 
                        மேல் நால் சுன்          பித்தத் தீ 
                கணக்காய்த்     தீர்ப்பன 
                         கால் வாதம்        கால் பிடிப்பு................212.
 40/60 - பித்தப் பை மண்  - GB 34  
 ● அமைவிடம் : முழங்காலில் இருந்து 4 சுன்  கீழே, பக்க வாட்டில் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : பித்தப் பை மண்ணீரல் தனக்கு ஒன்று தாண்டி (தீ ) வந்து உதவும் புள்ளி.
 இன்றேல், ----தசைநார் இயக்கத்தின் முக்கியப் புள்ளி உதவி கெடும்.
     ---- தசைப் பிடிப்பு உண்டாகும் 
   -----வாய்க் கசப்பு உண்டாகும்.    புள்ளி தூண்ட சரியாகும்.
♥ நடைமுறை விளக்கம் : சம்மணம் இட்டு  அமர்ந்தால் , St 36 - இரைப்பை வலு , பாதத்தால் 
 இடிபடுவதோடு , GB 34 - பித்தப் பை மண்ணும்  இடிபடும். --- தசை நார் இயக்கம் தூண்டப் படும் . தசைப் பிடிப்பு , வாய்க் கசப்பு  அகலும்.
 ⊙ புதுமை விளக்கம் : GB 34 - தசை நார் இயக்க முக்கியப் புள்ளி.
 பாடல் : முழங்கால்       கீழ் நால் சுன் 
                        முடிவில் பித்          தப்பை மண் 
               அலுங்காமல்      தசை நார் வலி 
                          அடியோடு      நீக்கும்..............................216.
 மேலும், அடுத்து, அன்புடன், ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment