Sunday, 2 November 2014

 30/60 - சிறுகுடல் மண்  - S I 8            
 ● அமைவிடம் : மேற் கை எலும்பின் உட்பகுதியும் , அல்னா  எலும்பும்  இணையும்  இடத்தில 
 உள்ள பள்ளத்தில் உள்ளது. ( கையை 90 பாகை மடக்கும் போது  இந்தப் புள்ளியை உணரலாம்.
 ■ பயன் விளக்கம் : சிறுகுடல் தன் பாதையில் மண்ணீரல் சந்தித்து ஆற்றல் தந்து , ஓட வேண்டிய  இடம். தேங்கினால், - முழங்கை வலி, மோதிரவிரல் வலி, மேலும், கை கால்  விரல்கள் மரத்துப் போதல் .
 ♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கி வேலை செய்தால் கவலை இல்லை. கை கால் விரல்கள்  எல்லாம்  வலியும்  இல்லை.
   தரையில் அமராமல் உணவு மேசையில் உண்பவர்கள், முழங்கை ஊன்றி உண்ணுவதால்,
 இந்தப் புள்ளி S I 8 (செரிமானப் புள்ளி - மண் ஆற்றல் தருவது ) தூண்டப் படும்.
 முழங்கை  மடிப்பின் மேல் நீர்ப் புள்ளிகள் ( H 3, P 3, Lu 5)  உண்டு.
 முழங்கை  மடிப்பின்  கீழ்  மண் புள்ளிகள் ( S I 8, Tw 10, L I 11) உண்டு. L I 11 சற்று பக்க வாட்டில். கை மடக்கி வேலை செய்ய நீர் வளமும் (சிறுநீரகம் ), நிலவளமும் (மண்ணீரல் )
 கிடைக்கும் .
 ⊙ புதுமை விளக்கம் : கை கால்  மரத்தால் , கை மடக்கி, மடக்கி  நீட்டு . காலுக்கு கால் மடக்கி 
 நீட்டல் நன்று.
 பாடல் : முழங்கையும்      மேற்கையும் 
                           மூட்டசைக்கும்       முன்பள்ளத்து 
               விழுந்திருக்கும்     சிறுகுடல் மண் 
                            வீழ்த்திவிடும்       மரப்பு தனை..................172.
   மேலும் , அடுத்து  ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment