Sunday, 23 November 2014

 59/60 - நீர்ப்பை தீ  - UB 60      
 ● அமைவிடம் : குதிகால் நரம்பிற்கும் , வெளிப்புறக் கணுக்கால் மூட்டிற்கும் இடையில் உள்ளது UB 60.
 ■ பயன் விளக்கம் : நீர்ப் பை தன்  ஓட்டத்தில்  'கல் ' தாண்டி 'தீ ' உறுப்பின்  இதயம் அடைந்து 
(தனையன் மகன் - பேரன் ) இரத்த ஓட்ட ஆற்றலுக்கு உதவுகிறது . குறைவை ஈடு செய்வது 
 இதன் நோக்கம் . இது தடங்கினால்    ------
  (1) இரத்த ஓட்டம் கெட்டு  கணுக்கால் வலி.
 (2) உடலின் பின் பக்கம் -முதுகு , தொடை பின் பக்கம், கால்  பின் புறம்,.. போன்றவற்றில் 
 இரத்த ஓட்டம் தடைப் படும் . விளைவு, பின்பக்க வலிகள் .
 (3) சிறுநீரக ஓட்டம் தேங்குவதால் - சிறுநீரகக் கல்.
 ♥ நடைமுறை விளக்கம் : திரும்பவும் கூறுகிறேன் ; திரும்பத் திரும்பக் கூறுகிறேன் .
 சம்மணம் இட்டு அமர்ந்து பாருங்கள். இந்தப் புள்ளி UB 60 நன்கு தரையில் அமுக்கப் 
 படுவதை . ஒரு சின்னப் பழக்கம் தருவது எவ்வளவு பெரிய பயன்கள்! 
 ⊙ புதுமை விளக்கம் : K 3 - முன்புறம் ; UB 60 - பின் புறம். ( இரண்டும் அழுத்த குதிகால் 
 வலி தீரும்.) 
 பாடல் : குதிகாலின்     நரம்பு 
                    புறக் கணுக்கால்     மூட்டு 
                கோட்டிடை    நீர்ப்பைத் தீ 
                     குறைக்கும் பின்      பக்கவலி ...............304..
 60/60 - நீர்ப்பை மண்  - UB 40  
 ● அமைவிடம்  : முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் உள்ளது UB 40.
 ■ பயன் விளக்கம் : நீர்ப் பை  தன் ஓட்டத்தை மண்ணில் முடிக்கும் இடம் UB 40.
 'நுரை ' தாண்டி வர வேண்டிய 'மண் '  அவசர நிலையில் 'நீரக ' ஓட்டத்துக்கு உதவும் 
 இடம் .   இது தேங்கினால் , ------(1) மூட்டுகள் வலிக்கும்  (2) மூட்டு வீங்கும் 
  (3) முதுகு வலி உண்டாகும் .  UB 40 தூண்ட ( அக்கு பிரசர், அக்கு ஊசி ) நீங்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் :இந்த முழங்கால் உள் மடிப்பு அழுத்தமும், கால் மடக்கும் பணியில்தான் கிடைக்கும். சம்மணம் ? 
       மூட்டு வலிக்கிறது ; முதுகு வலிக்கிறது , என்று கூறிக் கொண்டிருந்தால் முழங்கால் 
 மடிப்பு மத்தியில் அழுத்தம், ஒய்வு  - ..... மாறி மாறி வருமாறு என்ன செய்தீர்கள் ?
 பஸ்கி , ஜாக்கிங் , மிதிவண்டி ஒட்டுதல்  ..... செய்ய வேண்டும்.
        சம்மணம் போட்டு  எழு . வஜ்ராசனம் போட்டு  எழு . காலை மடித்து எடை தூக்கு.
 குப்பறப் படுத்து  கால்களால் புட்டம் தொடு  (மாறி, மாறி பின் இரண்டு கால் பாதத்தாலும் 
...60 முறை ) கால் மடக்கி வேலை செய்க . முதுகு, மூட்டு வலிகள் தீரும்.
 ⊙ புதுமை விளக்கம் : சுவற்றில் / சாய்மானத்தில் முதுகு பட நன்கு சாய்ந்து அமர்ந்து 
 வேலை செய்யுங்கள். தேவையானால் படிமானத்திற்கு ,இடையே சிறு தலையணை 
 வைத்துக் கொள்ளுங்கள் . நடு நடுவில்  காலை மடக்கி நீட்டுங்கள் . சம்மணம் இட்டு 
 அமர்ந்திருந்தால் , காலை நீட்டி மடக்குங்கள்.
 பாடல் : முழங்கால்    மடிப்பு ரேகை 
                     மத்தி நீர்ப்     பை மண் 
               தடங்கல்       களைந்தால் 
                      அடங்கும்    முதுகு வலி.............308..
 மேலும், படங்கள் அடுத்து, அன்புடன், ஆ . மதி  யழகன்..

No comments:

Post a Comment