Saturday, 29 November 2014

 நோய் மற்றும் தீர்வு  - 3. ADAIPPU - அடைப்பு      
 தீர்வுப் புள்ளிகள் : (1) மண் நுரை - Sp 5- உட்புறக் கணுக்கால் மூட்டின்  முன்புறம் உள்ளது.
 அனைத்து அடைப்பும் நீக்க வல்லது.
 பாடல் : முன் உள்   கணுக்காலின் 
                        மூட்டினது   முன்புறம் 
                உள்ளது     மண் நுரை 
                         உடைக்கும்    அடைப்பை ... (வரிகள் 229-232, ஏழுஒட் .)
 பார்க்க : வரிசை  எண் 44/60 -Sp 5 , மேலும் பயன் தரும் ,
                வரிசை எண் 3/60 - Lu 9 - நுரை மண் ,
                வரிசை  எண்  49/60 - St 41 - இரப்பைத்தீ .
                            (2) நுரை மண் - Lu 9 - மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் 
 அமைந்துள்ளது . 
  மூக்கடைப்பும் நீக்கும்,  இரத்தக் குழாய் அடைப்பும் நீக்கும்.
 பாடல் : மணிக்கட்டு     வெளி ஓரம் 
                       மண் புள்ளி      நுரை மண் 
               இருக்கட்டும்     காப்பொன்று 
                        இரத்தக் குழாய்    அடைக்காது ... ( வரிகள் 45 - 48, ஏழுஒட் .)
 பார்க்க : வரிசை எண் 3/60.
                         (3) இரைப்பைக் கல் - St 43 - இரண்டாவது , மூன்றாவது விரல் எலும்புகள் 
 சேரும் மூட்டின்  முன்புறம் அமைந்துள்ளது.
  நெஞ்சு சளி கரைக்கும். சளி நீக்க சரி புள்ளி .
 பாடல் : இரண்டாம்    மூன்றாம் 
                       விரல் எலும்பு     சந்திப்பில் 
               பார் இரைப்     பை கல் 
                      சேர் சளி     நீக்கல் ..... ( வரிகள் 249 -252, ஏழுஓட் .)
 பார்க்க : வரிசை எண்  48/60 
                  (4) 60 - ல்  அடங்காத  புள்ளி  St 40 - இடம் : St 36 - க்கு  கீழ், 5 சுன் , பிறகு  1 சுன் 
 வெளிப்பக்கம் .
      அதிக சளி வெளியேற்றும் .
              (5) நீர்க் கோர்வை  மற்றும்  வீக்கத்திற்கு  - Sp 9 - மண் நீர்  - முழங்கால்  முன் எலும்பு 
 டிபியா  முட்டித் தடங்கலில்  முடியும்  பள்ளம் .
  பாடல் : முழங்கால்    முன் எலும்பில் 
                          முன்னேற     முட்டி தட்டும் 
                இடம் காணின்         மண் நீராம் 
                          இது தீர்க்கும்       மூட்டு வலி..... ( வரிகள் 237 -240, ஏழுஓட் )
 பார்க்க : வரிசை எண் 45/60  
 மீண்டும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Friday, 28 November 2014

       நோய் மற்றும் தீர்வு - 2. ARIPPU - அரிப்பு         
தீர்வுப் புள்ளிகள் : (1) நீர்த் தீ - K 2 - பாதத்தின் உட்புற பக்கவாட்டு வளைவு மத்தியில் .
    பார்க்க : வரிசை எண் 52/60 
 பொதுவான  அரிப்பு கேட்கும்.
                பாடல் : வளைவாகும்    பாதநடு 
                                             உச்சியிலே       நீர்த் தீ 
                               களை எடுக்கும்    பாதவலி 
                                              களைந்திடும்     தோல் அரிப்பு (வரிகள் 267 -270, ஏழு ஒட் )
                             (2) நுரை நீர் - Lu 5 - கை மடிப்பில்  இருதலைத் தசை நாரின் வெளிப்பள்ளம் .
 பார்க்க : வரிசை எண் 5/60
 அரிப்பு, அலர்ஜியால் வரும் தோல் நோய்கள் கேட்கும்.
                பாடல் : இருதலைத்       தசைநார் 
                                         வெளிப் பள்ளம்      கைமடிப்பில் 
                               இருக்கும்      நுரைநீர் 
                                          ஒடுக்கும்      தோல் நோய் (வரிகள் 53-56, ஏழு ஒட் )
                        (3) மண் மனம் - Sp 6 - உட்புறக் கணுக்கால் எலும்பு மூட்டில் இருந்து 3 சுன் 
 மேலே ( நான்கு விரல் குறுக்கம் ) - முழங்கால் முன் எலும்பு 'டிபியா ' ஓரமாக  
 பார்க்க : வரிசை எண் 44A /60
 பிறப்பு உறுப்பில் அரிப்பு, அலர்ஜி  கேட்கும்.
                  பாடல் : முன் உள்      கணுக்காலின் 
                                            மூட்டின் மேல்       முச்சுன்னில் 
                                 உள்ளது        மண் மனம் 
                                              உணர்த்தும்    பெண் மனம் ( வரிகள் 233-236, ஏழு ஒட் )
        பொது விளக்கம் :
                 அரிப்பு என்பது சிறுநீரகத் துணை உறுப்பு , சிறுநீர்ப் பை  ஓட்டம்  UB  தடை  அல்லது 
 வலுவின்றி ஒடுதலே .
        வழி 1. குளியலறையில்  துணையாள்  உதவி கொண்டு  முதுகுப் புறம் , புட்டம், தொடை 
 பின் பகுதி , முழங்கால் பின்பகுதி , பாதத்தின் சுண்டுவிரல் பக்கமும் , சுண்டுவிரல் நுனி வரை 
 கீழாக இழுத்து தேய்த்து விட்டால் உடனே குறையும் .
       வழி 2. சம்மணம் இடும்போது , கால் மடிப்பு இறுகுவதால் K 10- நீர் வலு  - அடர் நீலம்  -
  தூண்டப் படுகிறது . மேலும், சுண்டு விரல் மற்றும் அதன் அடிப்பகுதி  UB 66 -( நீர்ப்பை வலு -
  -அடர் நீலம் ) உட்பட மண் தரையில் அழுத்தப் பட்டு தூண்டப் படுகிறது.
      பழக்க முறையால் அரிப்பு தடுக்கப் படுகிறது.
        சிறுநீரகத் தன் வலு முறை 
    வழி 3. முழங்கை மடிப்பு பணிகள்  செய்வதால் - Lu 5 -நுரை நீர் - தூண்டல் , தாய் வலு.
 நீலப் புள்ளி. ஆட்காட்டி விரல் Li 2 -குடல் நீர்  தொடும்படியான  மோதிரம் உதவும்.
     மேலும், அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி யழகன்..

Thursday, 27 November 2014

 நோய்களும் , தீர்வுப் புள்ளிகளும் .    1. அஜீரணம்         
  பொது வடிவம் :      ஆங்கிலப் பெயர் உச்சரிப்பில் - தமிழ்ப் பெயர் 
        தீர்வுப் புள்ளிகள் : (1) தமிழ்ப் பெயர் - குறியீடு  - இருப்பிடம் 
         பாடல் வரிகள்.... (2) .....இதுபோல.
                          1. AJIRANAM - அஜீரணம் - செரியாமை 
  தீர்வுப் புள்ளிகள் :  (1) மன மண் - P 7 - மணிக்கட்டு மத்தியில் . பார்க்க  வ . எண் 13/60
  பாடல் வரிகள் : மணிக்கட்டு    ரேகையின் 
                                       மத்தியில்     மன மண் 
                             மணிக்கட்டு      வலி போம் 
                                       மணி வயிறும்     நலமாம் . (89-92- ஏழு ஓட்டங்கள் ) 
                                (2) இரைப்பை  வலு - St 36 -முழங்கால் பக்கவாட்டில் 3 சுன் கீழே 
 (3சுன் = நான்கு விரல் குறுக்கம் ) இது செரிமானச் செம்புள்ளி . பார்க்க  வ . எண் 50/60 
  பாடல் வரிகள் :  முழங்காலின்    முச்சுன் கீழ் 
                                         முன்னல்ல      பின்னொரு சுன் 
                               இலங்கும்        இரைப்பை வலு 
                                           எடுக்கும்     நோயின் வலு. ( 257-260 -  ஏ . ஓ ) 
                         (3) ரென் 6 - Ren 6  - கொப்பூழில் (தொப்புள் ) 1 . 5 சுன் கீழே 
   (1 . 5 சுன் = இரு விரல் குறுக்கம் ) இதிலும் அக்கு பிரசர் தரலாம்.
        அக்கு பிரசர்  என்பது அந்தக் குறிப்பிட்ட புள்ளியின் மேல் கட்டை விரல் 
 அல்லது  நடுவிரல் அல்லது அதற்குரிய probe  என்னும் இரும்புக் குச்சி கொண்டு ,
 (1) அதிக வலியின்றி அழுத்தியவாறு 21 முறை கடிகார சுழற்சி செய்து , 
 பிறகு (2) அதே விரலால் 60 முறை ' பானையில் புளி அமுக்குவதுபோல் ' விட்டு, விட்டு 
 அழுத்த வேண்டும்.
       நோயின் தன்மை பொறுத்து , உடனடியாகவோ , ஒரு மணியிலோ , ஒரு நாளிலோ 
 தீர்வு கிடைக்கும்.
    அக்கு ஊசி  15 நி  முதல் 20 நி வரை வைத்து எடுக்கலாம்.    
  மேலும், அடுத்த நாள் , அன்புடன் , ஆ . மதி யழகன்..

Sunday, 23 November 2014




படம் -1 பாத வளைவின் மேல் புள்ளியில் இருந்து  K 2 - நீர்த் தீ , K 3 - நீர் மண்
              K 7 - நீர் நுரை , K 9 - நீர் மனம் , K 10 - நீர் வலு .
படம் 2 - K 1 - நீர் கல்
படம் 3 - சுண்டு விரல் முனையில் இருந்து 5 புள்ளிகள் : UB 67 - நீர்ப் பை நுரை
           UB 66 - நீர்ப்பை வலு , UB 65 - நீர்ப்பை கல் , UB 62 - நீர்ப்பை மனம் ,
        UB 60 - நீர்ப்பைத் தீ
படம் 4 - முழங்கால் மடிப்பு மத்தி  - UB 40 - நீர்ப்பை மண் .
  மேலும், அடுத்த நாள் , அன்புடன் ஆ . மதி யழகன்..
 59/60 - நீர்ப்பை தீ  - UB 60      
 ● அமைவிடம் : குதிகால் நரம்பிற்கும் , வெளிப்புறக் கணுக்கால் மூட்டிற்கும் இடையில் உள்ளது UB 60.
 ■ பயன் விளக்கம் : நீர்ப் பை தன்  ஓட்டத்தில்  'கல் ' தாண்டி 'தீ ' உறுப்பின்  இதயம் அடைந்து 
(தனையன் மகன் - பேரன் ) இரத்த ஓட்ட ஆற்றலுக்கு உதவுகிறது . குறைவை ஈடு செய்வது 
 இதன் நோக்கம் . இது தடங்கினால்    ------
  (1) இரத்த ஓட்டம் கெட்டு  கணுக்கால் வலி.
 (2) உடலின் பின் பக்கம் -முதுகு , தொடை பின் பக்கம், கால்  பின் புறம்,.. போன்றவற்றில் 
 இரத்த ஓட்டம் தடைப் படும் . விளைவு, பின்பக்க வலிகள் .
 (3) சிறுநீரக ஓட்டம் தேங்குவதால் - சிறுநீரகக் கல்.
 ♥ நடைமுறை விளக்கம் : திரும்பவும் கூறுகிறேன் ; திரும்பத் திரும்பக் கூறுகிறேன் .
 சம்மணம் இட்டு அமர்ந்து பாருங்கள். இந்தப் புள்ளி UB 60 நன்கு தரையில் அமுக்கப் 
 படுவதை . ஒரு சின்னப் பழக்கம் தருவது எவ்வளவு பெரிய பயன்கள்! 
 ⊙ புதுமை விளக்கம் : K 3 - முன்புறம் ; UB 60 - பின் புறம். ( இரண்டும் அழுத்த குதிகால் 
 வலி தீரும்.) 
 பாடல் : குதிகாலின்     நரம்பு 
                    புறக் கணுக்கால்     மூட்டு 
                கோட்டிடை    நீர்ப்பைத் தீ 
                     குறைக்கும் பின்      பக்கவலி ...............304..
 60/60 - நீர்ப்பை மண்  - UB 40  
 ● அமைவிடம்  : முழங்கால் மடிப்பு ரேகையின் மத்தியில் உள்ளது UB 40.
 ■ பயன் விளக்கம் : நீர்ப் பை  தன் ஓட்டத்தை மண்ணில் முடிக்கும் இடம் UB 40.
 'நுரை ' தாண்டி வர வேண்டிய 'மண் '  அவசர நிலையில் 'நீரக ' ஓட்டத்துக்கு உதவும் 
 இடம் .   இது தேங்கினால் , ------(1) மூட்டுகள் வலிக்கும்  (2) மூட்டு வீங்கும் 
  (3) முதுகு வலி உண்டாகும் .  UB 40 தூண்ட ( அக்கு பிரசர், அக்கு ஊசி ) நீங்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் :இந்த முழங்கால் உள் மடிப்பு அழுத்தமும், கால் மடக்கும் பணியில்தான் கிடைக்கும். சம்மணம் ? 
       மூட்டு வலிக்கிறது ; முதுகு வலிக்கிறது , என்று கூறிக் கொண்டிருந்தால் முழங்கால் 
 மடிப்பு மத்தியில் அழுத்தம், ஒய்வு  - ..... மாறி மாறி வருமாறு என்ன செய்தீர்கள் ?
 பஸ்கி , ஜாக்கிங் , மிதிவண்டி ஒட்டுதல்  ..... செய்ய வேண்டும்.
        சம்மணம் போட்டு  எழு . வஜ்ராசனம் போட்டு  எழு . காலை மடித்து எடை தூக்கு.
 குப்பறப் படுத்து  கால்களால் புட்டம் தொடு  (மாறி, மாறி பின் இரண்டு கால் பாதத்தாலும் 
...60 முறை ) கால் மடக்கி வேலை செய்க . முதுகு, மூட்டு வலிகள் தீரும்.
 ⊙ புதுமை விளக்கம் : சுவற்றில் / சாய்மானத்தில் முதுகு பட நன்கு சாய்ந்து அமர்ந்து 
 வேலை செய்யுங்கள். தேவையானால் படிமானத்திற்கு ,இடையே சிறு தலையணை 
 வைத்துக் கொள்ளுங்கள் . நடு நடுவில்  காலை மடக்கி நீட்டுங்கள் . சம்மணம் இட்டு 
 அமர்ந்திருந்தால் , காலை நீட்டி மடக்குங்கள்.
 பாடல் : முழங்கால்    மடிப்பு ரேகை 
                     மத்தி நீர்ப்     பை மண் 
               தடங்கல்       களைந்தால் 
                      அடங்கும்    முதுகு வலி.............308..
 மேலும், படங்கள் அடுத்து, அன்புடன், ஆ . மதி  யழகன்..

Saturday, 22 November 2014

 58/60 - நீர்ப் பை கல் - UB 65         
 ●அமைவிடம் : காலின் 5 -வது விரலும் , 5- வது விரல் எலும்பும் சேரும் மூட்டின் பின்புறம் 
 உள்ளது. (இரு நிறங்களும் சேரும் இடம்.)
 ■ பயன் விளக்கம் : சிறுநீர்ப் பை , கல்லீரல் - தனயன்  தொட்டு ஆற்றல் அளிக்கும் இடம்.
  ---ஆற்றல் வராவிடில்,  (1) நீர்க் கடுப்பு  (2) சிறுநீர் அலர்ஜி .
 ♥ நடைமுறை விளக்கம் : சிறுநீரகம் (5) - கல்லீரல் (1) ஆற்றல் அளித்தல் கீழ் வருமாறு.
 (1) நல்ல உறக்கத்தால் நிகழும். (11PM  - 3 AM ) - கல்லீரல் எழுச்சி நேரம் - முறையான வாழ்வு. (2) கால் பந்து போன்ற கால் ஊன்றும் விளையாட்டுகளால் நிகழும். ( 3 PM -7PM )
 மாலை விளையாட்டு - திட்டமிட்ட வாழ்வு.
 (3) K 1 ஊன்றிய எண்ணத்தோடு கூடிய நடைப் பயிற்சி , மாடிப்படி இறங்குதல் - கிடைத்த 
 நேரம் எல்லாம் பயிற்சி .
 (4) சம்மணம் இட்டு அமர்தல் (UB 65) - பழக்கம் ! அவ்வளவுதான்.
   நான்கும் தவற விட்டால், நீர் கடுப்பு, சிறுநீர் அலர்ஜி .
  ஒன்று நன்றாயினும் தொல்லை இல்லை . 1, 3, 4 எளிது.
 ⊙ புதுமை விளக்கம் : பரிமாறும் ஆற்றல் பெற பயிற்சி மற்றும் பழக்கம்  பெற வேண்டிய 
  தாய் - மகன் உறவுப் புள்ளி (யின், யாங் ) இணைகள் - வண்ணங்கள் - ஐம்பூத உறுப்பு 
 வளம்  பெறுதல் கீழ்வருமாறு.
 (1) பச்சைப் புள்ளி  - கல் வளம்  - K 1/UB 65
 (2) சிவப்புப் புள்ளி  - தீ வளம்  - Liv 2/GB 41
 (3) மஞ்சள் புள்ளி  - மண் வளம் - P 7/Tw 10, H 7/S I 8
 (4) வெள்ளைப் புள்ளி - நுரை வளம் - Sp 5/ St 45
 (5) நீலப் புள்ளி - நீர் வளம்  - Lu 5/Li 2
    இந்தப் புள்ளிகளின் நடைமுறை  விளக்கம் ஏற்கனவே கூறப் பட்டுள்ளன .
 பாடல் : சுண்டு விரல்  ஐந்தாம் 
                      விரல் எலும்பு    சந்திப்பில் 
              உண்டாம் நீர்ப்    பை கல் 
                  ஒட்டுமே     நீர்க் கடுப்பு....,............296.
 58A /60  - நீர்ப் பை மனம்  - UB 62     
 ● அமைவிடம் : புறக் கணுக்கால் மூட்டு எலும்பிற்கு நேர் கீழே உள்ளது.
 ■ பயன் விளக்கம் : நீர்ப்பை தன் ஓட்டத்தில் 'கல் ' தொட்டு எழும்போது தீயின் பெரி கார்டியம் 
 (மனம் ) - தமிழ் 'ஐ 'ப்  புள்ளி  தொடுகிறது.- நீர்ப்பை மனம். - இவ்விடம்  தேங்கினால் , -----
  --(1) தலை கிறுகிறுப்பு (2) தூக்கமின்மை (3) கவலை (4) மன அழுத்தம் (5) மன நோய் 
 (6) வலிப்பு  (7) கால், கணுக்கால், முதுகு  வலிகள்.
 ♥ நடைமுறை விளக்கம் : உள் கணுக்கால் மூட்டசைவில்  Sp 5 இயங்கும். நுரை வளம் 
 கிடைக்கும் . அதோடு சேர்ந்து புறக் கணுக்கால் மூட்டும்  அசையும்.மனம் சார்ந்த தொல்லை 
 இல்லை .  நுரையீரல் நோய்களின்போது , மனக் கவலை , துக்கம்  சேர்ந்து வருவது  இதன் 
 காரணமே.
 ⊙ புதுமை விளக்கம் : மிதி வண்டி  மிதி. காற்றும் கிடைக்கும்; மனமும் லேசாகும்.
 பாடல் : பின் உள்      கணுக்காலின் 
                           மூட்டினது    கீழ்ப் புறம் 
               உள்ளது     நீர்ப்பை மனம் 
                           ஒழிக்கும்   மன அழுத்தம்...........300. 
 மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன் ..

Friday, 21 November 2014

 56/60 - நீர்ப்பை நுரை -UB 67         
 ● அமைவிடம் : கால் சுண்டு விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில் 0. 1 சுன் தூரத்தில் 
 அமைந்துள்ளது . ( இரு நிறங்களும் சேரும் இடம். ) 
 ■ பயன் விளக்கம் : சிறுநீரகத் துணை உறுப்பு சிறுநீர்ப் பை தன் இறங்கு ஓட்ட இறுதியில்  நுரை 
 ( தன் தாய் ) சந்தித்து சக்தி பெறும் நிலை. கழிவுகள் அனைத்தும்  மண்ணில் ஐந்தாம் விரல் அழுந்த , வெளியேறும் . தடங்கினால்  ---
        ---(1) கழிவுகள் வெளியேற்றம் தடையாவதால் ஓட்டப் பாதையில் நோய், வலி .
     ---(2) ஒழுங்கற்ற மாத விடாய் . 
 ♥ நடைமுறை விளக்கம் : கழிவுகள் வெளியேற்றம்  என்றால் இதன் முதன்மை ( உடல் நல 
 அடிப்படை ) புரியும். சம்மணம் போட்டு அமருங்கள். இரண்டு சுண்டு விரலும் தரையில் 
 அமுக்கப் படும். வேறு தனி முயற்சி தேவை இல்லை.
    பாத பக்க வாட்டு நடையும் உதவும்.
 ⊙ புதுமை விளக்கம் : 'தீ ' காப்பாற்ற கை சுண்டு விரல் நக முனை.
              'நீர் ' காப்பாற்ற  கால் சுண்டு விரல் நக முனை.
 பாடல் : ஐந்தாம் விரல்      வெளி நகத்துக் 
                         கீழாம்        நீர்ப் பை நுரை 
               அடங்காக்         கழிவு நீக்கும் 
                           அளவாக்கும்        மாதவிடாய் ...............288..
 57/60 - நீர்ப் பை வலு  - UB 66    
 ● அமைவிடம் : காலின் ஐந்தாவது எலும்பு, ஐந்தாவது விரல் எலும்பும்  சேரும்  இடத்தில் 
 ( சுண்டு விரல் முடியும் வெளிப்புறம் ) உள்ளது.
 ■ பயன் விளக்கம் : சிறுநீர்ப் பை தன் வலுப் (நீர் ) பெறும்  இடம். நீர் உச்ச வலுவான இடம்.
 K 10 - ம், UB 66 - ம்  நீரின் ஏற்ற இறக்க  தன் வலு நிலைகள். UB 66 பயன்பாடு இலாது 
 போனால்    -----(1) பாத வலி உண்டாகும்.
           (2) சர்க்கரை நோய்க்குக் காரணம்.
        (3) சிறுநீர் போதல் அளவு ( குறைவோ, கூடுதலோ ) கெடும்..
      (4) கழுத்தில் இறுக்கம் உண்டாகும். 
 ♥ நடைமுறை விளக்கம் : சம்மணம்  இட்டு அமர, இப்புள்ளியும் இயல்பான தூண்டல் 
 பெறும் . மேற் கண்ட நோய்கள் நீங்கும்.. UB 67, UB 66 தூண்டி வரல் சுகப் பிரசவத்திற்கு 
 வழி கோலும் .
 ⊙ புதுமை விளக்கம் : பிரபஞ்ச ஆற்றல் பெற  அமுக்க வேண்டிய  தன் வலுப் புள்ளி 
 இணைகள் . --அடர் வண்ணங்கள்.    
 (5) அடர் நீலம் - நீர் வளம் - K 10 /UB 66.     
 (1) அடர் பச்சை  - கல் வளம்  - Liv 1/ GB 41.
 (2) அடர் சிவப்பு  - தீ வளம்  - P 8/ Tw 6 , H 8/ S I 5 . 
 (3) அடர் மஞ்சள் - மண் வளம்  - Sp 3 / St 36.        
 (4) அடர் வெள்ளை  - நுரை வளம்  - Lu 8/ LI  1. 
 பாடல் : சுண்டு விரல்   கால் எலும்பில் 
                         ஒண்டு ஓரம்      நீர்ப் பை வலு 
                மண்டி விடும்       பாதவலி    
                          சர்க்கரை     தீர்க்கும்......................292......
மேலும், அடுத்தநாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Thursday, 20 November 2014

 54/60 - நீர் நுரை  - K 7        
 ● அமைவிடம் : K 3 - நீர் மண்ணில் இருந்து (குதிகால் நரம்பு - முன் கணுக்கால் எலும்பு - கோட்டின் மையம் ) 2 சுன்  மேலே.
 ■ பயன் விளக்கம் : இது Lu 5- நுரை நீரின்  எதிர்ப்புள்ளி 
 நுரை நீரில்  இருந்து  இயல்பான ஆற்றல் கிடைக்காத போது , தானே நுரை ஆற்றல் கேட்டுப் 
 பெறும் இடம்  நீர் நுரை - K 7 - இது தூண்ட, ----
     (1) சிறுநீரகக் கல் கரையும். ( காற்றோட்டம் இல்லாத இடத்தில் படுப்பதால் நுரையீரலின் 
 ஆக்சிஜன் எடுப்பு வேலையை K  செய்யும். தன்  வேலை கெட்டதால்  சிறுநீரகக் கல் . அதை 
 கரைக்க நுரையிடம் ஆற்றல் கேட்கும் இடம். )
 (2) நுரையீரல் திணறலான ஆஸ்துமாவின்  போது  K 7, நுரையீரல் இடம் வந்த நீர்ச் சத்து 
 கேட்டுப் பெறுவதால் --ஆஸ்துமா குறையும்.
 ( நுரையீரலின் வரவு Lu 9 குறைப்பதன் மூலமும் ஆஸ்துமா குறையும்.)
 (3) அதிக ஓட்டத்தின்போது மூச்சு இரைத்து  வியர்வை அதிகமாக வரும். நுரையீரலுக்கு 
 துணை புரியும் புள்ளி ஆதலால் ---- அதிக வியர்வை குறைக்கும்.
 (4) நீருக்கு வளம் கிடைப்பதால், முடி வளர, தலை வழுக்கை தீர உதவும்.
 ♥ நடைமுறை விளக்கம் : கணுக்காலுக்கு மேல் முழங்கால் பிடித்து அமுக்கினால்  இப்புள்ளி 
 மற்றும்  Sp 6 - மண் மனம் , அழுத்தப் பட்டு பயன் கிடைக்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : கேட்கப்பட்ட நீர் வளம் , K 7 - நீர் நுரை - கேட்பு நீலம் .
  பிற.        Liv 8 - கல் நீர்  - கேட்பு பச்சை , P 9, H 9 - மனம் கல் , இதயம் கல்  - கேட்பு சிவப்பு .
 Sp 2 - மண் தீ - கேட்பு மஞ்சள் , Lu 9 - நுரை மண் - கேட்பு வெள்ளை.
 பாடல் : நீர் மண்    இரு சுன்னில் 
                        நீர் நுரை        இருக்குமே 
                 நீரின் கல்       நீக்குமே 
                          நீர் வளம்      ஆக்குமே ..............276.
 54A /60 - நீர் மனம்  - K 9              
 ● அமைவிடம் : K 3- ல்  இருந்து 5 சுன்  மேலே . ( K 7-ல்  இருந்து  3 சுன்  மேலே.) 
 ■ பயன் விளக்கம் : நீர் தன்  ஓட்டத்தில் நுரை தொட்டு, 'ஐ ' தமிழ்ப் புள்ளி  மனத்தை 
 (பெரி கார்டியம் ) K 9 -ல்  தொடுகிறது. இது தேங்கினால், ---
  ---மனக் கோளாறு, மாதவிடாய்க் கோளாறு , கால் வலி உண்டாகும்.
♥ நடை முறை விளக்கம் : காலின் உட்புறப் பகுதியில்  மேலே ஏற்றி  எண்ணெய் தேய்த்தல் ,
 அமுக்கி விடல் , கல், மண், நீரக ஓட்டப் புள்ளிகளைத் தூண்டி நன்மை செய்யும் .
 காலின் வலி, பிற கோளாறுகள் நீங்கும். 
⊙ புதுமை விளக்கம் : மரபு வழியின் மேல் - மனச் செயல்பாடு.
 (மரபுக் கோளாறுகள் நீங்குகின்றன என்பது ஆய்வு முடிவு.) 
 பாடல் : நீர் மண்        ஐஞ் சுன்னில் 
                      நீர் மனம்        இருக்குமே 
           சீர் செயும்         மாத விடாய் 
                     சீராக்கும்   மன நிலை.......................280.
55/60 - நீர் வலு  - K 10         
 ● அமைவிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம்.
 ■ பயன் விளக்கம் : நீரின் தன்  வலுப் புள்ளி - K 10 - தேங்கினால்,---
       --(1) சிறுநீரக ஆற்றல் கெடும்.
        (2) தலை முடி உதிரும் ( K 10 + Lu 5 தீர்வு )
       (3) பாத எரிச்சல் ( பாத ஓட்டம் தடை படுவதால் )
      (4) ஆண்மைக் குறைவு ( K 10 + Liv 8 தீர்வு )      ஏற்படும் .
 ♥ நடைமுறை விளக்கம் : முழங்கால் மடக்கும் வேலை இன்றேல் , நீர் வலு  வேலை செய்யாது.  நோய்தான்  மடக்கிப் போடும். சம்மணம்   இடு . ஆண்மை பெறு . 
 ⊙ புதுமை விளக்கம் : ஒவ்வொரு தன்வலுப் புள்ளியும் தூண்டப் படும் போது  ( அமுக்கல் ,
 ஊசி, அசைதல் ) பிரபஞ்ச ஆற்றல் பெறுகின்றன. அளவற்ற  கட்டித் தங்கம் வெட்டி எடு.
 பாடல் : முழங்கால்    மடிப்போரம் 
                          முத்தான      நீர் வலுவாம் 
               முடி உதிரல்    தடுக்கும் 
                            முழு ஆண்மை     கொடுக்கும்..............284.
  மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Wednesday, 19 November 2014

 52/60 -நீர்த்தீ  - K 2      
 ● அமைவிடம் : முன்புறக் கணுக்கால் மூட்டிற்கும் , குதிகால் எலும்பு மூட்டிற்கும்  கீழே அமைந்து  உள்ளது.
    ( பாதத்தின் உட்புற பக்கவாட்டு வளைவின் மத்தியில் உள்ளது )
 ■ பயன் விளக்கம் : தாய் கல்லீரல் தரும் ஆற்றல் , தனையன் தீ ஈரலுக்கு ப்  போதா நிலையில் 
 காப்பாற்ற ஓடோடி வரும் தாத்தா நீரின் வருகை K 2 - நீர்த்தீ . - வரா விடில் ,   
      --(1) பாத வலி  (2) மூச்சுத் திணறல்  (3) தோல் அரிப்பு 
 K 2 - ஒரு சமன் புள்ளி. நீருக்கு (K ) தீவிரம் குறையும். தீக்கு (H , P )  பற்றாக் குறை தீரும்.
 ♥ நடைமுறை விளக்கம் : மணலில் வெறுங்காலில் நடத்தல் , சடுகுடு விளையாட்டு ....
 இப்புள்ளி  தொடும். தேவையானால் அக்கு பிரசர் , அக்கு ஊசி.
 ⊙ புதுமை விளக்கம் : இரத்த ஓட்டத் தூண்டுதல் உதவி. 
 பாடல் : வளைவாகும்      பாதநடு  
                        உச்சியிலே           நீர்த் தீ  
                களை எடுக்கும்      பாத வலி 
                        களைந்திடும்      தோல் அரிப்பு ........268.
 53/60 - நீர் மண்  -K 3   
 ● அமைவிடம் : உட்பக்க கணுக்கால் மூட்டு எலும்புக்கும் , குதிகால் பாத நரம்புக்கும் 
 இடையில்  அமைந்துள்ளது . 
 ■ பயன் விளக்கம் : மண்ணீரல் (Sp ) தன் செரிமானம் முடித்து , நுரையீரல் தனக்கு அளிப்பதில் 
 சிக்கல் வரும்போது  Sp 9 - மண் நீர்  ஆக மாறலாம். -- மூட்டு வலி வரும்.
        சில நேரங்களில்  சிலருக்கு  இது  நிகழாமல் , நீரே (K ) மண்ணிலிருந்து  ஆற்றலைத் 
 தொடர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கும். ஒரு சமநிலைத் தானே நிகழும். அப்போது ,
    -- குதிகால் வலி ஏற்படும்  ----- கணுக்கால் ( K 3 -யால் ) வலி  உண்டாகும்  ----
   K -யின்  ஒன்று தாண்டி ஈர்ப்பினால்  பிறப்புறுப்பில் அலர்ஜி , அரிப்பு  ஏற்படும் .
 ♥ நடைமுறை விளக்கம் : K 3, UB 60 இரண்டும் தொடர்ந்து தூண்ட குதிகால் வலி போகும்.
  K   நுரையீரல் வழியாக வலுப் படுத்த வேண்டும். அதற்கு  நீலப் புள்ளி Lu 5 - நுரை நீர்  உதவும்.
   Sp 5 வழி ஓட்டமும் சரி செய்ய வேண்டும்.
⊙ புதுமை விளக்கம் : நீரகத்தின் அவசரகால உதவி ( EMERGENCY  Request ) தானே  நிகழ்கிறது.
 பாடல் : குதிகால்     நரம்பின்  
                          முன் கணுக்கால்       மூட்டின் 
               கோட்டிடை     நீர் மண் 
                          குறுக்கும்   குதிகால் வலி..................272.
  மேலும், அடுத்த நாள் , அன்புடன், ஆ . மதி  யழகன்..

Tuesday, 18 November 2014

 'நி ' ஓட்டம்  - நீர் ஓட்டம்  - சிறுநீரக ஓட்டம் .    
 சிறுநீரக ஓட்டப் பாதை : உள்ளங்காலில் மேற் பகுதி நடு விரலுக்குக் கீழ்க் கோட்டில் உள்ள பள்ளத்தில் ( பாத முன்கால் மையம் ) தொடங்கி, கணுக்கால் ஏறி , காலின் உட்புறமாகச் சென்று 
 முழங்கால் ஏறி, தொடை ஏறி, வயிறு ஏறி ( முன் மத்தியக் கோட்டில் 0.5 சுன்  பக்க வாட்டில் )
 பிறகு நெஞ்சு ஏறி ( முன் மத்தியக் கோட்டில்  2 சுன்  பக்க வாட்டில் ) காலர் எலும்பின்  கீழ்  வந்து  முடிவடைகிறது.
             ( கழுத்தில் அணியும் உலோகம் மற்றும் உணர்வு கடத்தும் அணிகலன்கள் , சிறுநீரகம் முடியும் புள்ளிகளையும் , பின்கழுத்தில் உள்ள சிறுநீர்ப் பை ஓட்ட இறங்கு புள்ளிகளையும் 
 இணைத்து 'சிறுநீரக ' வலு கிடைக்கிறது. பூமாலையும் நன்று ; பொன்மாலையும் நன்று.)
 சிறுநீரகத் துணை உறுப்பு  - சிறுநீர்ப் பை  பாதை ஓட்டம் : 
      இதுவே நிறையப் புள்ளிகளோடு முதுகை நான்கு வரிசைகளில் தொட்டபடி இறங்குகிறது .
 கண்ணின் உட்புற விளிம்பில் தொடங்கி , நெற்றி வழியாக ஏறி, தலையைக் கடந்து  பின் 
 தலை அடிபாகத்தில் (UB 10) இரண்டாகப் பிரிகிறது . 
       ஒரு பிரிவு முதுகின் மத்தியக் கோட்டிற்கு (Du அல்லது Gv ) இடைவெளி  1.5 சுன்னில் 
 ஒரு இறக்கமாகவும், மற்றொரு பிரிவு  3 சுன்  இடைவெளியில்  இன்னொரு  இறக்கமாகவும் ,
         முதுகு இறங்கி, பிட்டம்  இறங்கி, பிட்ட மடிப்பு  இறங்கி, தொடையின் பின்பக்கம்  இறங்கி ,
 முழங்கால் உட்புற மடிப்பு மத்தியில் (UB 40 ) சேருகின்றன .
    பிறகு  கோடாக மாறி கெண்டைக்கால் தசையின் மத்திய  பாகத்தில்  இறங்கி , கணுக்காலின் 
 வெளிப்புற மூட்டருகே சென்று , காலின்  இருநிறங் களும்  சேரும் பாதத்தின் சுண்டுவிரல் 
 பக்கவாட்டுப் பகுதியில் சென்று, சுண்டு விரல் நக வெளிப்புறம் கீழ்  முடிவடைகிறது.
      ( பழைய  - முன் - காலத்தில்  பெண்கள் அமர்ந்து சமையல் செய்யும்போது  இடக்காலை 
 நேராக ஊன்றி ( K 1 தரை படும் ) , வலக் காலை சாய்த்து  சுண்டு விரல் முழுதும் பக்கவாட்டில் 
 தரையில் (மண் ) ஊன்றுமாறு வைத்திருப்பார்கள். இதனால்,
         நிலமகள் ஆசி குலமகளுக்கு குறைவிலாது கிடைக்கும். நீர் ஓட்ட முழுமையால்  நீரகம் 
 வலுவாகும்  - மாத விலக்கு , கர்ப்பப்பை , குழந்தை பிறப்பு , எலும்பு , பல் குறைபாடு .... போன்ற 
  எதுவும் தொல்லை தராது.
          கழுத்தணியும், கால் மண் தொடலும்  கட்டாயம்  வேண்டும்.
 51/60 - நீர்க் கல்  - K 1   
 ● அமைவிடம் : உள்ளங்காலில் , காலின் 2 வது , 3 வது  விரலிடைக் குத்துக்  கோடும் , 
பாதத்தின்  3 - ல்  ஒரு பகுதியான மேல் புற குறுக்குக் கோடும்  சந்திக்கும் பள்ளம்  K 1 . 
 ( பாதத்தின் முன்னங்கால் மையம் என்பது தோராயம் )
■ பயன் விளக்கம் : நீரகம் தன்  ஓட்டப் பாதை தொடக்கத்தில் கல்லீரலை சந்தித்து  ஆற்றல் 
  பரிமாற்றம்  செய்கிறது . கல்லீரலுக்கான  ஆற்றல் அதன் தாய் ஆகிய சிறுநீரகத்தி டம் 
 இருந்து  இங்குதான் முழுமையாகக் கிடைக்கிறது.
  K 1 - நீர் கல்  என்பது நிலையான மின்கலம், மின்னூட்ட  மின்கலத் திற்கு  ஆற்றல் ( CHARGE )
 தரும்  இடம். கல்லீரல் தான் சுய நினைவு . கல்லீரல் தான் ' நீங்கள் ' . உங்கள் சிந்தனைப் பரப்பு .
 அடிமனம் . --- இது தடங்கினால் , முடங்கினால், வலுவிழந்தால்  ------
   (1) திடீர் மயக்கம்  (2) கோமா (3) உள்ளங்கால் வலி, பாத வலி . 
 ♥ நடைமுறை விளக்கம் : ஒருவர் குடித்தால் கல்லீரல் இயக்கம் கெட்டு  நடை தள்ளாடும் .
 K 1 கொடுக்கிறவன் கொடுத்தாலும்  LIVER  கல்லீரல்  வாங்க முடியாது.
     ஒவ்வொரு நடையையும் அழுத்தமாக அடிப்பாதம் ,  கட்டை விரல் நன்கு படியுமாறு ( K 1, Sp 1, Liv 1)  மனதை K 1 -ல் செலுத்தி செய்யவும் 
    மாடிப்படி இறங்கும் போது  உங்கள் முழு எடையும் முன்னங்கால் நீட்டி K 1 படுமாறு 
 இறங்கிச் செல்லவும் . 'கல் ' வளம் .
 கையின் இரண்டு பக்கங்களிலும் சம எடை கொண்டு நடத்தல் , கல்லீரல் வலுவாகும்.
   நடையைத் தவற விடாதீர்கள் . அது நீங்கள் வலுவாதல்.
 ⊙ புதுமை விளக்கம் : நீர் கல் -K 1- பச்சைப் புள்ளி ( கல்லீரல் வலுவாக்குவது )
     பிற           கல் தீ -  Liv 2 - சிவப்புப் புள்ளி  ( தீ ஈரல்  வலுவாக்குவது )
             தீ மண் - H 7, P 7 - மஞ்சள் புள்ளி  ( மண்ணீரல் வலுவாக்குவது )
              மண் நுரை - Sp 5 - வெள்ளைப் புள்ளி  ( நுரையீரல் வலுவாக்குவது )
              நுரை நீர்  - Lu 5 - நீலப் புள்ளி  ( நீர் ஈரல்  வலுவாக்குவது )
 பாடல் : உள்ளங்கால்    முன்புறத்து  
                        மைய வெட்டுப்        பள்ளத்தில் 
               உள்ளது        நீர்க் கல்லாம் 
                        ஓட்டும்     மயக்கந்தான் ....................264.
   மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Monday, 17 November 2014


 படம் 1 - காற்  பெரு விரல் உட்பக்க முனையில்  இருந்து  ஆறு புள்ளிகள் 
 Sp 1 - மண் கல், Sp 2 - மண் தீ , Sp 3 - மண் வலு, Sp 5 - மண் நுரை , Sp 6 - மண் மனம் 
 Sp 9 - மண் நீர் . 
 படம் 2 - கால்  இரண்டாம் விரல்  வெளிப்புற நக முனையில்  இருந்து  ஐந்து புள்ளிகள் 
 St 45 - இரைப்பை நுரை, St  -44  இரைப்பை நீர், St 43 - இரைப்பை  கல், St 41 - இரைப்பை த் தீ , St 36 - இரைப்பை  வலு.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Sunday, 16 November 2014

 49/60 -இரைப்பை த் தீ  - St 41    
 ● அமைவிடம் : பாதம் கீழ்க் காலுடன் சேரும் கணுக்கால் பகுதியில்  2 வது 3 வது விரல்களுக்கு 
 நேர் மேலே உள்ளது. ( கணுக்காலில் தெரிகின்ற இருதலைத் தசை நாரின் நடுவில் உள்ள பள்ளம்  - குதிகால் உயர்த்தும் போது கொலுசு தொடும் புள்ளி.)
 ■ பயன் விளக்கம் : மண் உறுப்பு இரைப்பை , தாயுறுப்பு  தீயிடம் ஆற்றல் கேட்டுப் பெற்று ,
 இரத்த ஓட்டத்தை வேகப் படுத்தும் இடம். செரிமானமும் உடன் நடைபெறும்.
   இப்புள்ளி  தேங்கினால்,  ---(1) இரத்தக் குழாய் ஓட்டங்களின் சீர்மை கெடும்.
    (2) இரத்தக் குழாய் தொடர்பான நோய்கள் வரும்.
    இரத்த ஓட்டம் சீராக உதவும் மூன்று : St 41 - இரைப்பை த் தீ, Sp 5 - மண் நுரை ,
 Lu 9 - நுரை மண்.
 ♥ நடைமுறை விளக்கம் : நடன மங்கையரின் சலங்கைகளும் , வீட்டு மகளிரின் கனமான 
 கொலுசுகளும்  இரத்த ஓட்ட சீரமைக்கு உதவுகின்றன.
 ⊙ புதுமை விளக்கம் : Sp 2, St 41 இரண்டும் தாய்ப் பயன் கேட்டுப் பெறுபவை.
 பாடல் : எழும் ஒரு      பாதத்து 
                      எழும் நரம்பின்       வெளிப் பள்ளம் 
               விழும் இரைப்       பை த் தீ 
                       விரைவாக்கும்         ரத்த ஓட்டம்...............256......
 50/60 - இரைப்பை மண் - இரைப்பை வலு - St 36          
 ● அமைவிடம் : டிபியா எலும்பின் தலைப் பகுதியில் துருத்தி இருக்கும் பகுதியில் இருந்து 
 1 சுன்  வெளிப் பக்கம் அமைந்துள்ளது. ( கண்டு பிடித்தல் : முழங்கால்  கீழ்ப் பகுதி நடுவே 
 நான்கு விரல்கள் வைக்கும் போது , சிறுவிரல் தொடும் இடத்தில்  இருந்து  1 சுன்  வெளிப் பக்கம் ) 
 ■ பயன் விளக்கம் : இரைப்பையின் தன வலுப் புள்ளி. இரைப்பைக்கு  சக்தி தரும் புள்ளி.
 இது  தடங்கினால் , -----(1) வயிறு  சம்பந்தமான நோய்கள் 
   (2) முழங்கால்  சம்மந்தப் பட்ட நோய்கள் 
 (3) நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு. ( ஒப்பிடு : LI 11, Sp 6 )
 ♥  நடைமுறை  விளக்கம் : சம்மணம்   இட்டு  அமர்ந்தால் , இரண்டு கால்களிலும்  உள்ள 
 St 36 , பாதத்தால்  அழுத்தப் படும். செரிமானம் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 பரம்பரைப் பழக்கம்  கை விடப் பட்டதால் , பல வயிறு தொடர்பான  நோய்கள் இன்று.
                       மண்ணில் விளைந்ததை உண்ணுகிறோம். செரிக்கிறோம். மண் தொட்டவாறு 
 நடத்தல் , அமர்தல்  தவறென எண்ணுகிறோம். கோவில் போன்ற சில இடங்களே , நம் 
 பண்பாட்டை, நோயற்ற வாழ்வு முறையைக் காப்பாற்றி வருகின்றன. தூய்மையான 
 இடத்தில நடத்தல், வீட்டில் தரை அமர்ந்து உண்ணுதல் , இவற்றை இனியேனும்  நடை 
 முறைப் படுத்துவோம்.
 ⊙ புதுமை விளக்கம் :  செரிமானச்  செம்புள்ளி  St  36.
 பாடல் :  முழங்காலின்         முச்சுன் கீழ் 
                            முன்னல்ல      பின்னொரு சுன் 
                 இலங்கும்         இரைப்பை வலு 
                             எடுக்கும்       நோயின் வலு..................260..
 மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..
 47/60 - இரைப்பை நீர்  - St 44    
 ● அமைவிடம் : காலின் இரண்டாவது, மூன்றாவது  விரல்கள் சேரும் இடம்.
 ■ பயன் விளக்கம் : கண் கீழ் முகம், கழுத்து, மார்பு, வயிறு, என முன் பக்கமாகவே இரைப்பை ஓட்டம் நடைபெறுகிறது. காலின் முன் எலும்பு முகடு ஒட்டியே இரண்டாம் விரல் முனையில் 
 ஓட்டமானது நிலம் தொட நிற்கும்.
                  கடந்து செல்லும் பல மூட்டுகள் , இடங்களில் உள்ள செல்களின்  தேவையற்ற 
 செரிமானம் தொடர்பான நீர்  St 44-ல் இறங்குகிறது . தேங்குமானால் ,---
                --உடலின் முன் பக்க வலிகள் அனைத்துக்கும் காரணம் ஆகிறது .
ஒப்பிடு : St 44 - இரைப்பை நீர் - முன்பக்க வலிகள்.
              GB 43 -பித்தப்பை நீர் - பக்கவாட்டு வலிகள் 
          UB 40 - நீர்ப் பை மண் , UB 60 - நீர்ப் பைத் தீ  இரண்டும் பின் பக்க வலிகள்.
        LI 4 -குடல் மனம்  - அனைத்து வலிகள்.
 ♥ நடைமுறை விளக்கம் : St 44 ஒரு முதன்மையான வலி நீக்கி. கால் வலி இருந்தால் 
 இப்புள்ளி தூண்ட வேண்டும். எண்ணெய் தேய்க்கும் போது  மேலிருந்து St 44 -க்கு  அழுத்தி 
 இறக்க வேண்டும். இவ்வாறு, காலின் 3, 4, 5 ஆம் விரல் இடுக்கு களிலும்  அழுத்தி தேய்த்து 
 இறக்கவும். காற் பெரு விரல் இடுக்கில் மட்டும் ஓட்டம் மேல் ஏற வேண்டும்.
 ⊙ புதுமை விளக்கம் : வலி நீக்கி St 44
 பாடல் :  இரண்டாம்      மூன்றாம் 
                           விரலிடை இரைப்      பை நீர் 
                திரண்ட     வலியெலாம் 
                            தீர்ப்பது     முன்பக்கம் ......................248.
48/60 - இரைப்பை கல்  - St 43   
 ● அமைவிடம் : காலின் இரண்டாவது, மூன்றாவது  விரல் எலும்புகள் சேரும் மூட்டின்  
 முன்புறம்  அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : இரைப்பை செரிமானம் முடித்து தொடர்ந்து நீர்ச் சத்தை  தனயன் 
 நுரையீரலுக்கு த் தர  வேண்டும். நுரையீரல்  தன்  வேலையில்  தடங்க ( சளி பிடித்தல் )
 மண்ணீரல் மேலும் நீர்ச் சத்தை த்  தருவது , மேலும் சளி சேர உதவும்.
     St 43 -ல்  இரைப்பை , கல்லீரல் பகிர்மானம் ( பாதிப் பாதி ) ஆவதால் , இது  தூண்ட , 
 நுரையீரல் சேர்ந்த சளி வெளியேற ஏதுவாகும். - ஆக நெஞ்சு சளி  கரைக்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் : எண்ணெய் தேய்ப்பதும், இடம் பார்த்து, வலி  பார்த்து த் 
 தூண்டுவதும்  பயன் தரும்..
 ⊙  புதுமை  விளக்கம் :  சளி நீக்க  சரி  புள்ளி..
 பாடல் :  இரண்டாம்      மூன்றாம்  
                         விரல் எலும்பு       சந்திப்பில் 
                 பார் இரைப்     பை கல் 
                          சேர் சளி     நீக்கல் .....
  மேலும் அடுத்து , அன்புடன் , ஆ . மதி  யழகன்.

Saturday, 15 November 2014

 45/60 -மண் நீர் - Sp 9         
 ● அமைவிடம் : டிபியா எலும்பின் உட்பக்கத் தலை பாகத்திற்குக் கீழே அமைந்து  உள்ளது.
 (கணுக்கால் மூட்டிற்கு நேர் மேலே , முழங்கால் முன் எலும்பு டிபியா ஒட்டி நேர் மேலே சென்று 
 முட்டித்  தடங்கலில் முடியும் பள்ளம்-Sp 9.)
 ■ பயன் விளக்கம் : இந்தப் புள்ளியில் வலியுள்ளமை காட்டுவது, மண் நுரை -Sp 5 நேர் ஓட்டம் 
 வேலை செய்யாததால் , ஒன்று தாண்டி (நுரை) ஓடும் ஓட்டம் , Sp9 இயங்குவதை .
      மண்ணீரல் தன் பளுவை ( நுரையீரல் தனக்கு தள்ள முடியாதலால் ) சிறுநீரகத்திற்கு 
 நேரடியாகத் தருதல். இது தடங்கினால் , --
                 காலில் வீக்கம், முழங்கால் சம்பந்தப் பட்ட வலிகள், மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் 
( 4, 5 நாட்கள் அக்கு ஊசி போட வேண்டும்.)
   Sp 9 தூண்ட மூட்டு வலி தீரும் . நீர்க் கோர்வையும் தீரும்.
 ♥ நடைமுறை விளக்கம் : Sp 5 -மண் நுரை (கணுக் கால் மூட்டசைவுப் புள்ளி ) தூண்ட,
  Sp 9 இயல்பாகும் . மூட்டு வலி வராத முன் தடுப்பு.
           வந்த பின், Sp 9 தூண்ட வலி தவிர்ப்பு.
 மூட்டு வலி தவிர்க்க, எளிதான செரிமான உணவுகளும் (மண் ), மூச்சுப் பயிற்சியும் (நுரை )
 அவசியம். நோய் வந்த போது , புளிப்பு உணவுகள் தவிர்க்கவும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் 
 1, 3, 5 தூண்டலில் மூட்டு வலி அதிகமாகும். மழை, பனிக் காலங்களிலும் நோய் மிகும்.
 ⊙ புதுமை விளக்கம் : கருமேகம் ஓடி , கடலில் வீண் மழை.
 பாடல் : முழங்கால்      முன்னெலும்பில் 
                            முன்னேற     முட்டி தட்டும் 
              இடங் காணின்        மண் நீராம் 
                       இது தீர்க்கும்       மூட்டு வலி....................240.
 46/60 - இரைப்பை  நுரை  - St  45     
 ● அமைவிடம் : காலின் இரண்டாவது விரல் நகத்தின்  வெளிப்புற விளிம்பில்  இருந்து 
 0.1 சுன்  மேலே அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : மண்ணீரல் துணை உறுப்பு இரைப்பை . இதன் ஓட்டம் எண்  முறைப்படி 
  இரண்டாம் விரலில் St 45 என   முடிகிறது. இவ்விரல் மண் தொட வேண்டும். நுரை 
 தூண்டப் பட்டு  செரிமானம் முழுமை.. இது  தடங்கினால் , 
       கால்  விரல் வலிகள் , திடீர் என வரும் நோய்கள் 
 ♥ நடைமுறை விளக்கம் : வீட்டில், மண் தரை, சிமென்ட், மொசைக் தரைகள்  மின் கடத்தும் 
 ஆற்றல் அதிகம் உள்ளவை . காலின் 2, 4, 5 - ம்  விரல்கள் உடல் ஓட்டச் சுற்றுகளை முடித்து 
 வைத்து , நோய்களைத் தடுப்பவை.
           கூட்டிய , தூய்மையான தரை அல்லது மாடிப் பகுதியில்  வெறுங்காலில் , முன்னங்கால் 
 நன்கு ஊன்ற , நடை பயில வேண்டும். தரைத் தளம் சரியானால் மிக நன்று.
        மொசைக் தரையை ஊக்குவிக்க வேண்டும். நடை அரிதான இடங்களில் , அழகு ஊட்ட 
 மார்பிள்  பயன் ஆகட்டும்.
 ⊙ புதுமை விளக்கம் : மண் இறங்கிகள் மூன்று. ( St 45, GB 44, UB 67 )
 கால் த் தடம் பதிய நடந்தால் , நுரையீரல் ஆற்றல் எழும்புமே !
 பாடல் : இரண்டாம் விரல்         வெளி நகத்துக் 
                           கீழாம்          இரைப்பை நுரை 
               திரண்ட           வலியெலாம்  
                          தீர்க்குமே        மண் பட......................244.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்..

Friday, 14 November 2014

 44/60 - மண் நுரை - Sp 5     
 ● அமைவிடம் : உட்புறக் கணுக்கால்  மூட்டின் , முன்புறம் உள்ள பள்ளத்தில் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : முறையாக மண்ணீரல் செரிமானம் முடித்தபின் , தன் நீர்ச் சத்து  ஆற்றலை , 
 வறட்சி இயல்பான  தன்  தனயன் நுரையீரலுக்கு அளிக்க வேண்டிய இடம்.
    Sp 5 -மண் நுரை  - இது ஒரு முக்கிய  கண்ணி 
 (இதை வெள்ளைப் புள்ளி - பூண்டுப் புள்ளி - என செல்லப் பெயர்  இடலாம்.)
              1 (கல் ), 2 (தீ ), 3 (மண் ), 4 (நுரை ), 5 (நீர் ) மறுபடி 1, 2, 3, 4, 5,.....இந்த சுற்றில் 1-2 ஓட்டத்திற்கு எண்ணம் போதும். 2 -3 ஓட்டத்திற்கு சுவை போதும்.
       3 -4 ஓட்டத்திற்கு Sp 5 வேலை செய்தல் வேண்டும். (கணுக்கால் மூட்டு மிதிவண்டி ஓட்டுவது  போல அசைய வேண்டும்.) இது நம்மில் பெரும்பாலோர் செய்வது இல்லை.
      4-5 ஓட்டத்திற்கு Lu 5 -நுரை நீர் வேலை செய்தல் வேண்டும் . (கை மடக்கி வேலை )
   இதுவும் நம்மில் பெரும்பாலோர்  முழு அழுத்தத்துடன் செய்வது இல்லை.
      இந்த இரண்டு அசைந்தால் உடலால் வரும் நோய் எதுவும்  இல்லை.
      எனவே, மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த உடல் சிக்கல்கள் நிறைய.
   மன உளைச்சலினால் , கல்லீரல், இதயம், பெரி கார்டியம் சிக்கல்கள் நிறைய.
  மனம் பாதிக்க, உடலும் பாதிக்க, அனைத்தும் சிக்கல். வயிறு சரியில்லை எனத் தொடங்கி,
இருமல், சளி, காய்ச்சல் என்று வளருமே!
       இங்கு, Sp 5 -மண் நுரை தடை பட,------உடலின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் 
 ஓட்டத் தடை உண்டாகலாம். கொழுப்பு நகரல், சக்தி நகரல், நரம்புச் செய்தி நகர்தல்,
 இரத்த ஓட்டம் நகர்தல், சிரைக் குழாய் ஓட்டம் .......முடிவு அடைப்புகள் !
 எரிபொருள்  இன்றி  ஆக்சிஜன் இருந்து  என்ன  பயன் ?
 ♥ நடைமுறை விளக்கம் : உதை பந்து, மண்ணில் கால் புதையும் சடுகுடு, விளையாடல்,
 மிதிவண்டி ஓட்டல், ஓட்டம், கால் எக்கி  இறக்கல், .......செய்யுங்கள்.
⊙ புதுமை விளக்கம் : கருமேகமாதல் புள்ளி Sp 5 ; மழை பொழியும் புள்ளி Lu 5.
 பாடல் : முன் உள்     கணுக்காலின் 
                         மூட்டினது     முன்புறம் 
                உள்ளது       மண் நுரை 
                       உடைக்கும்      அடைப்பை................232.
44A /60 - மண் மனம்  - Sp 6 - பெண் மனம் 
 ● அமைவிடம் : உட்புறக் கணுக்கால் எலும்பில் இருந்து 3 சுன் மேலே. ( முழங்கால் முன் 
 எலும்பு - டிபியா வின் உட்புறமாக )
 ■ பயன் விளக்கம் : மண்ணீரல் தன் பாதையில்  நுரையீரல் தாண்டி, சிறுநீரகம்  சேரும் முன் 
 'ஐ ' தமிழ்ப் புள்ளி  மன மையம் (பெரி கார்டியம் ) தொடும் புள்ளி - மண் மனம் Sp 6
     கருமேகம் சென்றாலும்  மழையாக  மனம் வேண்டும் . இப்புள்ளி தடங்க,
       (1) ஒழுங்கற்ற மாத விலக்கு 
     (2) மாத விலக்கால் ஏற்படும் ஒழுங்கற்ற கட்டிகள்.
    (3) பால் உறுப்பில் அரிப்பு, புண் 
   (4) சர்க்கரை நோய், தூக்கமின்மை, கர்ப்பப்பை வெளித் தள்ளுதல், பெண்களின் மலட்டுத் 
 தன்மை 
  (5) தசைப் பிடிப்பு, முதுகு வலி, டிஸ்க் தொல்லை, பக்க வாதம், இரத்த சோகை  .....
  பல மனம் + உடல் சார்ந்த சிக்கல்கள் 
  கல், மண், நீரக  (Liv , Sp , K ) மூன்று சந்திப்பு புள்ளி.
♥ நடைமுறை விளக்கம் : பெண்களுக்கான சிறப்புப் புள்ளி 
          மாத விடாய்  உதிரப் போக்கு  அதிகமானால் , இப்புள்ளியில் எதிர்க்கடிகார சுற்றில் 
 எட்டு முறை சுற்றி  அழுத்தம் தரலாம். உதிரப் போக்கு குறைவானால்  இப்புள்ளியில் 
 நேர்க்கடிகார சுற்றில்  எட்டுமுறை சுற்றி அழுத்தம் தரலாம். மாத விடாய் தொடர்பான 
 அனைத்து க்  கோளாறுகளும் சரியாகும்.
      உடலின் எந்தவொரு வீக்கத்திற்கும்  இப்புள்ளி தூண்டலாம்.
 ⊙ புதுமை விளக்கம் : பெண் மனம் - பெண் புள்ளி.
 பாடல் : முன் உள்          கணுக்காலின் 
                        மூட்டின் மேல்           முச்சுன்னில் 
               உள்ளது       மண் மனம் 
                          உணர்த்தும்      பெண்மனம் .............236.
    மேலும், அடுத்த நாள், ஆ . மதி  யழகன்..

Wednesday, 12 November 2014

 42/60 - மண் தீ  - Sp 2 - ஈர்ப்பு செரிமானம்    
 ● அமைவிடம் : காற்  கட்டை விரலை மடக்கும் போது  ஏற்படும் மடிப்பு , 
 முடியும்  இடத்தில்  உள்ளது.
 ■ பயன் விளக்கம் : தீயில்  இருந்து (தாய் ) செரிமான ஆற்றல் வரும்  இடப் புள்ளிகள் 
 P 7 - மன மண் , H 7 - இதய மண் . தீ = மனம் + இதயம் .  
            சுருக்கமாக , தீ மண்  வரா நிலையில்  தானே கேட்கும் நிலை மண் தீ -Sp 2
           கேட்கும் நிலை நீடித்தால் --- சர்க்கரை நோய்.
 வலியின் தன்மை நோயின் தன்மை பொறுத்தது . இது தூண்ட,
   (1) சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அதிகப் பசி கட்டுப் படுத்தப் படும்.
 (2) குழந்தைகளுக்குப் பசி உண்டாகும். 
 (3) உடலில் உள்ள  அனைத்து கட்டிகளையும்  (உள்ளே / வெளியே ) கர்ப்பப் பை கட்டிகள் உட்பட கரைக்கும்.
 (4) தீயின் ஆற்றலை வாங்குவதால் , காய்ச்சல் குறைக்கும்.
 ♥நடைமுறை விளக்கம் : சர்க்கரைக் கான அறிகுறி மற்றும் தீர்வுப் புள்ளி. நோயின் நெடு நாள்  தன்மை  ஒட்டி 
 தீர்வும் தள்ளிப் போகும். வாயை மூடி உண்ணுதல், உணவு நேரம், பசி நேரம் அறிந்து உண்ணுதல் , ஈடுபாட்டுடன் உண்ணுதல், மன உளைச்சல் இன்றி இருத்தல், இனிப்பு , புளிப்பு 
 போன்ற உணவுப் பொருட்களை அளவறிந்து உண்ணுதல், ....... போன்ற பின்பற்றல்கள் 
 அவசியமானவை.
 ⊙ பயன் விளக்கம் : P 7 - செரிமானப் புள்ளி பயன் இன்றேல் , Sp 2 - ஈர்ப்பு செரிமானம் . 
 பாடல் : காற் பெரு விரல்        கை மடக்க 
                              கூர் மடிப்பில்           மண் தீயாம் 
               சர்க்கரை நோய்     வந்ததென 
                               சாற்றிவிடும்    இவ்விடத்தே .................224.
 43/60  - மண் வலு  - Sp 3   
 ● அமைவிடம் : கால் கட்டை விரல் எலும்பும் , கட்டை விரலும் சேரும் மூட்டின் பின்புறம் 
 உள்ள பள்ளம் . (Sp 2 தொட்டு மேல் நகர , மேடு தாண்டி வரும் முதல் பள்ளம்.)
■ பயன் விளக்கம் : மண்ணீரல் தன் வலு பெறும் இடம். HB - ஹீமோ குளோபின்  உற்பத்தி 
 தூண்டும் இடம். இங்கு வலி இருந்தால்,
   --இரத்த சோகை இருக்கும், கால் விரல் வலி இருக்கும். தலை பாரம் இருக்கும்.
 ♥ நடைமுறை விளக்கம் : இரும்புச் சத்துக் குறைவை உணவின் மூலம் ஈடு செய்வது 
 நல்லது . கறுப்புப் பேரீச்சை , முருங்கைக் கீரை, நிலக்கடலை,........உண்ணல்  தொடர் 
 நடவடிக்கை ஆக்குங்கள். சிவப்பு நிறக் காய்கனிகள்  சிறப்பு.
⊙ புதுமை விளக்கம் : ஹீமோ குளோபின்  இருப்பு அறிய , எளிய சோதனை.
 பாடல் : மண் தீ        முகடு தாண்டி 
                        முதல் பள்ளம்         மண் வலுவாம் 
               முன்னுரைக்கும்     சோகைநோயை 
                        முதலாக்கும்       செவ்வணுக்கள் ............228.
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.