Tuesday, 14 October 2014

       1/60-நுரை  கல் --Lu  11                              
 அக்குப் புள்ளிகளைப்  பொதுவாகத்  தூண்டும்  முறைகள்.          
 1. அக்கு பிரசர் : வேறொரு கட்டை விரல் அல்லது  நடு விரலால் 21 முறை  கடிகார சுற்றில் 
 சுழற்சி  முறையில் சுழற்றி , 60 முறை அழுத்தம் தருதல்.
 இதற்கு என்று உள்ள probe  எனும் உலோகக் குச்சியும் பயன்படுத்தலாம் .
 2. அக்கு பங் சர் : புள்ளி, இடம், நோயாளி நிலை  அறிந்து பயிற்சி  பெற்றவர்களே  சுஜோக் ஊசி ,
 உடல் அக்கு பங் சர்  ஊசிகளைப் பயன்படுத்தலாம்.
 3. வர்மம் முறையில்  அழுத்தம் , முன்பின் தேய்த்தல் , சுற்றிவிடுதல் ,.....எனப் பல வழி முறைகள்   உண்டு.
4. மின் தூண்டல்.   5. யோக ஆசனங்கள் .6.  உடற்பயிற்சி .7. பழக்கங்கள் .
 8. நெருங்கித்  தொடல் (உடல் மின் காந்த  முறையில்  தொடு  சிகிச்சை .)
 9. அந்தப் புள்ளிகளை மனத்தால்  எண்ணித் தூண்டுதல்.
          எனப் பல  வழிகள் உண்டு.
                             நுரை    கல்    Lu 11                  
 ● அமைவிடம் : கை கட்டை விரல் நகத்தின் வெளிப் புற க்  கீழ்  விளிம்பில்  இருந்து  0.1 சுன் 
 தூரத்தில் மேலே அமைகிறது.
■ பயன் விளக்கம் : கல்லீரல் சரியாகச்  செயல்படாமல் ,
           மயக்கம், அதிர்ச்சி, குழப்ப மனநிலை , தலைவலி, காட்டும் போது  இப்புள்ளி தூண்டுக.
♥ நடைமுறை : சித்தர்கள் இந்தப் புள்ளியைத் தூண்டினால் , கல்லீரல் ஆற்றல் பெறுகிறது 
 என்று அறிந்து , கீழ்க் கண்டவற்றை  நடைமுறைப் படுத்தினார்கள்.
       தீபம் திரி முறுக்கி ஏற்றுதல் , கோல மாவுப் புள்ளிகள் இடுதல், ஜப மாலை உருட்டுதல் ..
   இன்ன  பிற.
⊙ புதுமை விளக்கம்.: இந்தப் புள்ளியில்  ஒன்று தாண்டி ஓடும்  ஓட்டம் -பெரு நோய்  தோற்றம் -
 முளையிலே  கிள்ளி  எறியப் படுகிறது.
       நுரை  தனது  பாதையில் கல்லீரலில் (வங்கி போல ) சேமிப்பு (savings ) செய்கிறது.
                       பாடல்    Lu 11                           
        கட்டை விரல்     வெளிநகத்து க் 
                கீழ் முனையில்  நுரைகல்லாம் 
         மட்டையாய் த்     தீர்க்கலாம் 
                 மயக்கம்       அதிர்ச்சி.........................40
      மேலும்  அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment