Saturday, 11 October 2014

 உடலின்  ஏழு  ஓட்டங்கள் பாடல் - பொருள் விரிவு  2           
               ரென்  (Ren )   ஓட்டம் .                            
   ஆசனவாயின்  முன்புறம் எழுந்து வயிறு, நாபி, நெஞ்சு  வழிகீழ்  உதட்டுக்கு வந்து  நிற்பது.
   ஏழு சக்கர குண்டலினி  ஓட்டத்தில்  ஐந்து சக்கரம் வரும் ஓட்டப்பாதை   ரென்  ஓட்டம் .
                சில முக்கிய  ரென்  புள்ளிகள் .                   
 ரென்  8-    நாபிப் புள்ளி - இதன்  வழி  கைலியை  இறுக்கிக் கட்டினாலும் , பாவாடை  நாடாவை 
 இறுக்கிக் கட்டினாலும்  St  25 (நாபியின்  இருபக்கமும்  இரு சுன் -மூன்று விரற்கடை  தொலைவு ) தூண்டப் படுவதால்  தொப்பை   குறையும்.
 ரென்  6 - நாபிக்கு  இரண்டு  விரல் (ஒன்றரை  சுன் ) கீழே  பாவாடை நாடாவை  இறுக்கி க் 
 கட்டுவதால் , மாத விலக்கு , வயிற்று  வலிகள்  தீரும்.
 ரென் 3 - நாபிக்கு  நான்கு சுன்  ( நான்கு  விரல் குறுக்கம் + கட்டை விரல் குறுக்கம் ) கீழே 
  இறுக்கம்  தர  மாத விலக்கு  ஒழுங்கு  படும். மகாப் பிராணயாமம்  மூன்று  முறை  செய்வது 
  பயன் தரும்.
ரென் 12 - நாபிக்கு  நான்கு சுன்  மேலே அக்கு பிரசர்  செய்ய பெப்டிக் அல்சர் , வாந்தி தீரும்.
ரென்  17 - நாபிக்கு  ஒன்பது  சுன்  மேலே - இரண்டு  மார்புக் காம்புக் கோட்டுக்கு  மத்தி .
 சுவாசப் பிரச்சனைகள் , ஆஸ்துமா  தீர  உதவும்.
 ரென்  24 - இறுதிப் புள்ளி - தாவங்கட்டை   பள்ளத்திற்கு சற்று மேலே .  உ ஷ்  எனும்  சைகையில்  வரும். இரத்தக் கசிவு  நிற்கும். முக வாதம் , ஈறு வலி  கேட்கும்.
         டி யூ , ரென்  என்கிற  முதன்மை (ச ) ஓட்டம்  முற்றியது.         
              ஓட்ட அமைப்பு  யின், யாங்.                              
   ஓர் ஆள்  உள்ளங்கைகள்  உயர்த்தி நிற்கும் போது  முன் பக்கம் ஓடுவன  யின்  ஓட்டங்கள்.
 கால்களில்  இருந்து கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்  எழுந்து முண்டத்தில்  முடியும்.
 முண்டத்தின்  மேல் இருந்து கைகளுக்கு ஓடுவன நுரையீரல், மனம், இதயம்.
        இவை யின் (முதல் உறுப்பு )  ஓட்டங்கள்.
  கையின் பின்புறத்தில் இருந்து பெருங்குடல், மூவெப்பமண்டலம் , சிறுகுடல்  ஓட்டப்பாதைகள் 
 முகத்தில்  முடிய, கண்  கீழ் விளிம்பில்  இருந்து பித்தப்பை, இரைப்பை, சிறுநீர்ப்பை  ஓட்டப் 
 பாதைகள்  தலைக்கு  ஏறி  முதுகிலும் பக்க வாட்டிலும்  பயணித்து , கால்களின் 
 பின்னாலும், பக்க வாட்டிலும்  இறங்கி  நான்கு சிறு  விரல்கள் வழி மண்ணிறங்கும் .
        இவை  யாங் ( துணை  உறுப்பு ) ஓட்டங்கள்.
   முண்டத்தில்  உயிர்  ஓட்டம்  முடிந்து  மறுபடி எழுவதால்  தமிழர்கள் இரண்டு  மையம் 
   வைத்தார்கள். ஒன்று  நாபி. (  உயிருக்கு  ஒ ள  மெய் வ ) மற்றது  மன மையம் -ரென்  17-
(உயிருக்கு ஐ , ய  வின் மெய்.)   
    ஐ  உம் , ஒ ள  வும்  கூட்டு  எழுத்து  எனினும், உயிர் எழுத்து  என்பது தமிழர்  கொடை .
குறிப்பு : அக்கு பங் சரில்  எந்த தமிழ்ப் புத்தகம் கிடைத்தாலும்  வாங்கிப் பார்க்கவும் . படம் ,
பாட முறை விளக்கம்  கிடைக்கும். இணையத்தில்  அக்கு பங் சர் மெரிடியன் pdf  files  
 எனத் தேடினாலும்  கிடைக்கும்.
      மற்ற ஓட்டங்கள்  புதிய கோணத்தில் அடுத்த நாள்.
                   அன்புடன், ஆ. மதி  யழகன்.

No comments:

Post a Comment