Friday, 31 October 2014

 26/60 -சிறுகுடல் நுரை  -S I  1   
 ● அமைவிடம் : கை சுண்டு விரல் நகத்தின் உட்புறக் கீழ் விளிம்பிற்கு மேல் 0.1 சுன் தூரத்தில் 
 அமைந்துள்ளது. 
 ■ பயன் விளக்கம் : இதயத்தின் துணை உறுப்பு சிறுகுடல் , தன்  ஓட்டப் பாதையில் , ஆக்சிஜன் 
 எடுக்க வேண்டும். தவறினால், --
   செல்களில்  கழிவு C O 2 - கார்பன் டை ஆக்சைடு  வெளியேறாது. முதுகில் கெட்ட இரத்த 
 ஓட்டம் தேங்குவதால் , இடுப்பு வலி உண்டாகும்.
     திடீர் என வரும் வலிகளும் காரணமாகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : சுண்டு விரல் நக முனைகள் இரண்டையும் (H 9, S I  1) சேர்த்துத் 
 தூண்ட பயன். மாரடைப்பு நிலையைத் தடுக்கும் புள்ளிகள்.
  இதயம், கொழுப்பு அடைப்பினால் திணறும் போது , வலி இடது தோள்ப்  பட்டையில்  வந்து,
 இடது முழங்கையில் இறங்கி, இறுதியாக இடது சுண்டு விரல்  வலிக்கும் நிலை உருவாகும்.
      வலி தோற்றம் தெரிந்தாலே , இடது சுண்டு விரல் நக முனைகளை அக்கு பிரசர் செய்ய ,
 எதிர் ஓட்டம் சமன் செய்யும். பிறகு, வலி நிலை பொருத்து  மருத்துவர் உதவி நாடலாம்.
 ⊙ புதுமை விளக்கம் : இதயத்தின் தொலை தூண்டல் (HEART  REMOTE )
 பாடல் : சுண்டு விரல்  உள் நகத்துக் 
                         கீழ் முனையில்      சிறுகுடல் நுரை 
                மண்டிவிடும்    இடுப்பு வலி 
                          மாரடைப்பும்    தடுக்கும்மே .................           156  
 27/60 - சிறுகுடல் நீர்  - S I 2          
 ● அமைவிடம் : ஐந்தாவது  கை விரல் மூட்டிற்கு  முன்புறம், தோலின்  இரண்டு நிறங்களும் 
 சேரும் இடத்தில அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : ஆள் காட்டி விரலில் ஒரு நீர்ப் புள்ளி  - நுரை நீர்  - L I 2        
                                மோதிரவிரலில்  ஒரு நீர்ப் புள்ளி  - மூ வெப்ப  நீர்  - Tw 2   
     இரண்டிலும்  மோதிரம்  நன்கு வேலை செய்யும். 
 அது போல் சுண்டு விரலில்  ஒரு நீர்ப் புள்ளி  - சிறுகுடல் நீர்  - S I 2 
         இங்கு வலிகளுக்குக் காரணமான  மூட்டு நீர் தேங்கினால்    --
  கை விரல் வலி, தோள்ப் பட்டை வலி உண்டாகும்.
 L I 2 -மின்னல் வேகம், Tw  2 - குதிரை வேகம் , S I 2 - மாட்டு வண்டி வேகம்.
 ♥ நடை முறை விளக்கம் :  மனம், உடல் நீர்க் கட்டுப்பாடு  Tw 2 வில் உண்டு.
   உடல் நீர்க் கட்டுப்பாடு மட்டும்  S I 2 வில்  உண்டு.
 ⊙ புதுமை விளக்கம் : Tw 2 முன் S I 2 அரை மதிப்பு 
  பாடல் : சுண்டு விரல்  கை எலும்பில் 
                          ஒண்டு ஓரம்     சிறு குடல் நீர் 
                மண்டி விடும்     விரல், தோள் வலி 
                           மாய்த்திடுமே    இல்லாமலே ......................160 
 மேலும், அடுத்த நாள், ஆ . மதி யழகன். 

Wednesday, 29 October 2014

 24/60  - இதய நுரை    - H 4            
 ● அமைவிடம் : H 7 - இதய மண்ணில்  இருந்து  ஒன்றரை  சுன்  மேலே .
 ■ பயன் விளக்கம் : இதயம் தன்  ஓட்டப் பாதையில் , ஆக்சிஜன் பெறும்  இடம். பெறாவிடில்,
 கை வலி, இதயப் படபடப்பு , சுருக், சுருக் என இதயம் தைக்கும் வலி, கோபம், டென்ஷன் வரல்.
   இப்புள்ளி தூண்ட பயன் .
 ♥ நடைமுறை விளக்கம் : காப்புக் கயிறு, உலோகக் காப்பு, வளையல் அணிதல், கைப்பட்டி 
 உடைகள் உதவும்.
 ⊙ புதுமை விளக்கம் : கடிகாரம் கட்டு - கடுஞ்சொல் மட்டு.
 பாடல் : இதய மண்      தொடங்கி  
                         இரு விரல்       மேலே 
               இதய நுரை       இருக்கும் 
                          இதய வலி     தீர்க்கும்.................148   
 (இரு விரல் குறுக்கம் = ஒன்றரை சுன் )  
 25/60 - இதய நீர்  - H 3      
 ● அமைவிடம் : முழங்கையை 90 பாகை (டிகிரி ) மடக்கும் போது , முழங்கை மடிப்பு  ரேகையின்  உட்புற ஓரக் கடைசியில் அமைந்துள்ளது .
 ■ பயன் விளக்கம் : சிறுநீரகம்  ( நீர் பூதம் ) கல்லீரல் தாண்டி, இதயத்திற்கு உதவ வரும் புள்ளி.
 வருவது  மிகை ஆனால் -நீர் நெருப்பை அணைத்து விடும்.
     மாரடைப்பால்   உயிர் இழப்பு 
 ♥ H 3 -ல்  நீர், நெருப்பு சமன் ஆக வேண்டும். இந்தப் புள்ளியைத் தொடர்ந்து தூண்டி வர,
 (கை மடிப்பு  வேலை -உழைப்பு  செய்து வர ) மாரடைப்பு  வராது காக்கலாம்.
 ⊙ நடை முறை விளக்கம் : மாரடைப்பு வராது காக்கும் புள்ளி. வருமுன் காப்பு  - வாழ்க்கை  சிறப்பு . ( இடது தோள்ப் பட்டை வலியும் , H 3 -இதய நீர்ப் புள்ளி வலியும்  முன்  எச்சரிக்கை.
 பாடல் : மடக்கும்     முழங்கை  
                         மடிப்பின்    உள்  ஓரம் 
                அடங்கும்      இதய நீர் 
                          அடக்கு (ம் )   மாரடைப்பு ...............152   
 மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன். 

Tuesday, 28 October 2014

 23/60 - இதய மண்  - H 7     
 ● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் உட்பக்க ஓரத்தில்  அல்னா  எலும்பின் (அல்னா  என்பது 
 சுண்டுவிரல் ஒட்டிய முழங்கையின் நேர் கோட்டு  எலும்பு.- ரேடியஸ் எலும்பு என்பது கட்டை விரல் ஒட்டிய முழங்கை வரை  ஆரம் போல் உள்ளது.) வெளிப்பக்கத்தில் அமைந்து உள்ளது.
 H 9, H 8, H 7  நேர் கோட்டில் அமையும்.
 ■ பயன் விளக்கம் : இதயத் துடிப்பை இங்கும் உணரலாம். இதயம் முறையாக மண்ணீரல் 
 சந்தித்து ஆற்றல் தரும் இடம். இந்தப் புள்ளி தடங்கினால் ,
          இதயத்தில் படபடப்பு , நெஞ்சு வலி, பய உணர்ச்சி, அதிகம் ஆனால்  தூக்கமின்மை  
 ஏற்படும். அக்கு பிரசர், அக்கு ஊசி பயன் ஆகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : காப்புக் கயிறு, உலோகக் காப்பு  போடும் இடம். மூன்று பயன் ,
 அ . H 7 - இதய மண் - படபடப்பு  குறைக்கும் .
 ஆ . P 7 - மன மண்  - செரிமானம் தரும்.
 இ . Lu 9 - நுரை மண்  - இரத்தக் குழாய் அடைப்பு  நீக்கும்.
     மணிக்கட்டு கயிறில் அவ்வளவு பயன் !
 ⊙ புதுமை விளக்கம் :  மும்மைக் காப்பில் முதல் புள்ளி.
 பாடல் : மணிக்கட்டு     ரேகையின் 
                     அல்னா வெளி      இதய மண் 
               மன வலியும்      தீர்க்கும் 
                        மனத் துடிப்பும்      நீக்கும் .................140      
 23A /60  - இதய உடல்  - H 5 - திக்கு வாய்ப் புள்ளி.          
 ● அமைவிடம் : H 7 - இதய மண்ணில்  இருந்து  1 சுன்  மேலே .
 ■ பயன் விளக்கம் : இதயம்  மண்ணீரல் (3) தொட்டு , நுரையீரல் (4) தொடும் முன் உடல் மையம்  'ல ' தமிழ்ப் புள்ளி தொடுகிறது. இங்கு நிகழும் ஆற்றல்  தேக்கம் ,
         நாக் குழறல் , திக்கு வாய்க்குக் காரணம்  ஆகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : கல்லீரல் (1) ஆற்றல்  பெறுவதுதான்  இதயம்  (2)  .கல்லீரல்,
 குடிப்பதனால்  கெட்டு  நாக் குழறும்.. மன வலிவின்மை  இதயத்தைப் பாதித்தும் 
 நாக் குழறும்.. இப்புள்ளி தூண்டி வர சரியாகும்..குடி நிறுத்தம், மன வலிமை உதவி செய்யும்.
 ⊙ புதுமை விளக்கம் : திக்கு வாய் தீர்க்கும் புள்ளி.
 பாடல் : இதய மண்    தொடங்கி  
                       ஒரு சுன்      மேலே 
              இதய உடல்       இருக்கும் 
                        திக்கு வாய்     தீர்க்கும் ................144.
   மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.

Monday, 27 October 2014

 'ம '  ஓட்டம் - இதய ஓட்டம்                           
 இதய ஓட்டப் பாதை:  அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கைகளின் உட்பக்க கீழ்ப் பகுதியாகிய 
 முழங்கை, மணிக்கட்டு  மற்றும் உள்ளங்கை வழியாக சுண்டு விரல் 'வெளிப்புற ' நகத்தில் 
 முடியும். ---ஒரே விரலில் - சுண்டு விரலில் இரண்டு ஓட்டம்.
 இதயத் துணை உறுப்பு சிறுகுடல் ஓட்டப் பாதை: அதே சுண்டு விரலின் உட்புறக் கீழ் முனையில் 
 இருந்து தொடங்கி , உள்ளங்கைத் தோலும், புறங்கைத் தோலும் சேரும் கோட்டின் வழி ,
 முதுகேறி, கழுத்தேறி  முகமேறி காதின் முன்பக்கப் பள்ளத்தில் முடியும்.
 21/60 -  இதயங் கல்  -  H  9       
 ● அமைவிடம் : கை சுண்டு விரல் நகத்தின் (உடலின் ) வெளிப்புறக் கீழ் விளிம்புக்குக் கீழே 
 0.1 சுன் தூரத்தில் அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மண்ணீரல் உறுப்புக்கு வலுத் தரவேண்டிய  இதய ஓட்டம்  திரும்பிய 
 நிலையில் கல்லீரல் தொடும் புள்ளி. இவ்வாறு கல்லீரல் சக்தி பெறுவதால் ,
          அதனால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி தீரும். சக்தி பெறும்  கல்லீரலில்  இருந்து 
 சிறுநீரகமும் சக்தி பெறுவதால் , அதனால் ஏற்படும் இடுப்பு வலி, குதிகால் வலியும்  தீரும்.
  இப்புள்ளியை அக்கு பிரசர் மற்றும் சுஜோக் ஊசியால் தூண்டலாம்.
 ♥ நடைமுறை விளக்கம் : இதயத்தின் ஆற்றல் கல்லீரல் நோக்கித் திரும்புவதால் மன பாரம் 
 குறையும். இரத்த அழுத்தம் (B .P ) குறையும். இதயக் குறைபாடுகள் தீரும்.
        இது H 9 மாரடைப்பு தடுப்புப் புள்ளியும் கூட.
   அக்கு பிரசர் : சுண்டு விரல் நகங் கீ ழ்  இருபுறமும் (H 9, S I 9)  பிடித்து  60 முறை அழுத்தம் 
 அல்லது மேலும் தரப் பயன் கிடைக்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : சுண்டு விரல் என்பது  இதயத்தைச்  சுண்டும் விரல்.
 பாடல் : சுண்டு விரல்         வெளி நகத்து க் 
                          கீழ் முனையில்       இதயங் கல் 
               மண்டிவிடும்         இடுப்புவலி 
                           மாரடைப்பும்       தடுக்கும்மே..............132   
 22/60  - இதயத்  தீ   - H 8        
 ● அமைவிடம் : நான்காவது,ஐந்தாவது கைவிரல்களுக்கு நடுவில் வரையப் படும்  நேர்கோடு 
 இதய ரேகையில் சந்திக்கும் புள்ளி.
 ■ பயன் விளக்கம் : இதயம் தன்னையே (தீ ) சந்திக்கும்  இடம். இங்கு அதிக வேலையால் 
  தேங்கினால்,-- உள்ளங்கை வலி, உள்ளங்கை, உள்ளங்கால்  வியர்வை.
 ♥  நடைமுறை  விளக்கம் : இதய ரேகையில்  நான்கு விரல்கள் வைத்து , கட்டை விரல் 
 உயர்த்துவது ( Thumps  Up ) -- மனத் தீ  P 8, H 8 எனும் இதயத் தீ  இரண்டையும்  தூண்டி 
 பரபரப்பு, படபடப்பு  நீக்கி  இதய  வலிமை  தரும்..
 ⊙ புதுமை  விளக்கம் :  கைப் பிடி  இறுக்கு - காப்போம்  இதயம்.
 பாடல் : இதய ரேகை       சுண்டு விரல் 
                          இணையுமிடம்      இதயத் தீ 
               உதயமாம்       வலிமை நிலை 
                           ஒழியுமாம்     வேர்வைநிலை ...............136   
 மேலும், அடுத்தநாள், ஆ . மதி  யழகன்.

Sunday, 26 October 2014




படம் 1-மன ஓட்டம்.- நடு  விரல் முனையில் இருந்து,
 P 9- மனம் கல், P 8- மனத் தீ, P 7- மன மண் , (P 6-மன உடல் அமைதி )
 P 5- மன நுரை , ( P 4 - மன வலு ), P 3 -மன நீர் .
படம் 2 - மூ வெப்ப மண்டல ஓட்டம் , மோதிர விரல் முனையில் இருந்து ,
 Tw 1 - மூ வெப்ப நுரை, Tw 2 - மூ வெப்ப நீர், Tw 3 -மூ வெப்ப கல் ,
 Tw  6 -மூ வெப்பத் தீ , Tw 10 - மூ வெப்ப மண் .
  மறுபடி, அடுத்த நாள் , அன்புடன் ஆ . மதி  யழகன்.
 19/60 - மூ வெப்ப த் தீ   - Tw 6                 
 ● அமைவிடம் : புறங்கை மணிக்கட்டு ரேகையின் மூட்டிலிருந்து , முட்டியை ஒட்டி 3 சுன்  மேலே .
 ■ பயன் விளக்கம் : தீ ஆற்றல் பெற்று இரத்த ஓட்டம் தூண்டப் பட வேண்டும். இன்றேல் ,
 சிறு நீரகம்  அதிகம்  தூண்டப் பட்டு 
     குளிர்க் காய்ச்சல், மூட்டு நீர் தேக்கத்தால்  தோள்ப் பட்டை வலி 
 ♥ நடைமுறை விளக்கம் : Tw 6 அசையாத பணிகளால் (கணினி வேலை, கடை வேலை ...)
 தோள்ப் பட்டை வலி பெரும் பாலோருக்கு  இருக்கும்.
   இப்புள்ளி தூண்டப் பயன்.
                 சம்மணமிட்டு  சின் முத்திரை கொண்டு  முன்னங்கை ,
 (அ ) உள்ளங்கை க்கவிழ்ந்த நிலையில் கால் மூட்டு தொட, P 4 தொடும் - மன உடல் அமைதி.
 (ஆ ) உள்ளங்கை  மேலாகக்  கை புரட்டி கால் மூட்டு தொட , Tw 6 தொடும் - தோள்ப்  பட்டை 
 வலி நீங்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : தீ அழைப்பு. (Fire  Request )   
 பாடல் : மணிக்கட்டு ப்      புறக்கோட்டில் 
                         மூட்டொட்டி    மூன்று சுன் 
                இருக்கட்டும்     மூ வெப்பத் தீ 
                          நொறுக்கட்டும்    தோளின் வலி..............    124
 20/60 - மூ வெப்ப மண்   - Tw 10         
 ● அமைவிடம் : முழங்கை  மடக்கும் போது , பின்புறம் முழங்கை மூட்டின்  மத்தியில் , மேற்கை 
 எலும்பும்  சேரும் இடத்தில்  உள்ள பள்ளத்தில் உள்ளது.
  ( கை நீட்டி மடக்கும் போது , அந்த அடிப் பள்ளம்  உணரலாம்.)
■  பயன் விளக்கம் :  மூ வெப்ப மண்டலம் , மண்ணீர லுக்கு ஆற்றல் தந்து வலுச் செய்ய வேண்டிய இடம் . (P 7-மன மண்  போல ) தடங்கல் வந்தால் ,
         முழங்கை வலி, மேற்கை வலி, மண்ணீரல் கட்டுப்பாட்டில் உள்ள சிறுநீரகம் வலுக் குன்ற 
 காதிரைச்சல் , மன ஓட்டம் கெடுவதால் , ஒற்றைத் தலை வலி. (மைகிரேன் )
♥ நடைமுறை  விளக்கம் : Tw 10 அழுந்துமாறு அடுத்த கை  நடு விரல் அழுத்த , 10 முறை 
 கை நீட்டி மடக்கினால்  பயன் தெரியும்.
⊙ புதுமை விளக்கம் :  எவ்வளவு நேரம் வேலை பார்ப்பாய் ? கை மடக்கு !
 பாடல் : முழங்கையும்    மேற்கையும் 
                         மூட்டசைக்கும்     மத்தியிலே 
               மூ வெப்ப     மண்   இருக்கும் 
                          முழுக் கை   வலி தீர்க்கும். ...........................128  
  மீண்டும்  அடுத்து, ஆ . மதி  யழகன்.
 17/60 -மூவெப்ப  நீர்   - Tw  2                      
 ● அமைவிடம்  :  மோதிர விரலின் சுண்டு விரல் பக்கமாக  மோதிர விரலும், நான்காவது 
 விரல் எலும்பும்  சேரும் மூட்டின்  முன்புறம் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மனதின் துணை ஓட்டம் மூவெப்ப  மண்டலம் , இவ்விடத்தில்  நீர்க் 
 கழிவுகள்  நீக்க வேண்டும், மன வலியின்றி  வாழ.
        மீற , காய்ச்சல் , காதடைப்பு .
♥ நடை முறை விளக்கம் : இந்த இடத்தில்  உள்ள சிறுநீரக இயக்கத்தைத் தூண்ட , உலோகப் 
 பொருளாக மோதிரம் அணிவது பழங்கால வழக்கம். அதனால் விரலே மோதிர விரல்  என 
 அழைக்கப் படுகிறது. திருமணமானவர்களுக்கு  கண்டிப்பாய் அணிவிப்பதன்  காரணம் , மன 
 எழுச்சி  தணிக்கவே.
 ⊙ புதுமை விளக்கம் : மன பளு  குறைத்தல் . ( Mental Load Decreasing )   
 பாடல் : மோதிர விரல் ,    கை எலும்பில் 
                          முட்டுமிடம்       மூவெப்ப நீர் 
                மோதிரம்         மாட்டிடு 
                           முழு மனம்     காத்திடு.                    .......116.
18/60  - மூ வெப்ப  கல்  - Tw 3       
 ● அமைவிடம் : மோதிர விரல் சுண்டு விரல் பக்கமாக , மோதிர விரலும் , நான்காம்  விரல் 
 கை எலும்பும் சேரும் மூட்டின்  பின்புறம் அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மூ வெப்ப ஓட்டம் , கல்லீரல் ஆற்றல் எடுக்கும் இடம். இது இன்றேல் 
       கை விரல் வலி, கை வாதம், மனதின் கழுத்து, தலைத் தொடர்பு  துண்டிக்கப் பட்டு 
 கழுத்துப் பிடிப்பு , திடீர்த் தலை வலி, சக்தி ஓட்டம் முன் உள்ள நீர்ப் புள்ளி தேக்கத்தால் ,
 காதில் இரைச்சல்  இப்புள்ளி Tw 3 தூண்ட பயன்.
 ♥ நடைமுறை  விளக்கம் : கை மடக்கி விரித்தால் தான் , இந்த நான்காம் மூட்டு அசையும்.
 இது ஒதுக்கி ப்  பிற வேலைகள்  பார்த்தால் , கைவலி , கழுத்துப் பிடிப்பு உறுதி.
    அக்கு பிரசர் செய்யலாம் . வளையல்  கழட்டி மாட்டும் போது  தூண்டல் உண்டு.
 ⊙ புதுமை விளக்கம் : புத்துணர்ச்சி  வேண்டும் இடம்.
 பாடல் : மோதிர விரல்     கை எலும்பில் 
                          மூட்டு மேல்         மூ வெப்ப கல் 
                ஓட்டி விடும்         கை வாதம்   
                          ஒடுக்கும்      கழுத்துப் பிடி .........................120
   மேலும் அடுத்து, அன்புடன் ஆ . மதி  யழகன்.

Saturday, 25 October 2014

 15/60 -மன நீர்  -  P 3                       
 ●  அமைவிடம் : முழங்கையின் இருதலைத் தசை நாரை ஒட்டி  உட்பக்கம் அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : மனத் தீ P 8, அதிகம் தாக்கப் பட்டுக் கொண்டு  இருந்து மன மண்  P 7,
 முதலில் (செரிமானம் ) குறைவு படும். P 6, P 5, P 4 முறையே   மன உடல் அமைதி, மன 
 நுரை, மன வலு  குன்றி , இறுதியாக  மன நீர் P 3, அடையாது , தீ தணியாது ஏற்படும் 
 விளைவுகள் --முழங்கை வலி, தொண்டை மற்றும் நாக்கு வறட்சி , இருதயப் படபடப்பு ,
 நெஞ்சு வலி  --P 3 தூண்ட பயன்.
 ♥ நடைமுறை விளக்கம் : வெளித்தோற்றம் முழங்கை வலி . உண்மை  மன வலி. உடல் 
 வலி தோற்றம்  இங்கு தீர்த்தாலும் , மன எண்ணம் கண்டு  அவர்தான் தெளிவு  பெற வேண்டும்.
             கை மடங்கும் வேலைகளில்  மனம் அமைதி பெறும் . துக்கத்தின் போது கைகளை 
 விரைவாக நெஞ்சில் அடித்துக் கொள்ளுதல் , நெஞ்சின் நுரையீரலையும் தூண்டும், மனமும் 
 அமைதி பெறும் . மனத் தீ எரிபவர் பொருள் எறிவார் , அல்லது எதிரில் உள்ளவரை அறைவார் .
 பந்தாட்டம்  போன்ற விளையாட்டுக்கள் அமைதி தரும்.
 ⊙ புதுமை விளக்கம் : தீ அணைப்புக் கருவி இடம். (Place of fire extiniguiser )
 பாடல் : இருதலைத்     தசைநாரின் 
                      முதற் பள்ளம்    கை மடிப்பில் 
               இருக்கும்         மன நீர்    
                         ஒடுக்கும்     மன வலி ............   108.
(மனம் =நெஞ்சம் )               
 16/60 - மூவெப்ப  மண்டல  நுரை  - மூவெப்ப  நுரை  - Tw 1 
  மூவெப்ப  மண்டலம் என்பது சுவாச மண்டலம், ஜீரன மண்டலம் , கழிவு மண்டலம்  மூன்றையும்  இரண்டாகப் பிரிக்கும் உறை  ( உதர  விதானம் ) கொரியர்கள் முதுகுத் 
 தண்டு  ( spinal cord ) இயக்கம் என்பார் . இது நுரையீரலைச் சந்திக்கும் புள்ளி.
● அமைவிடம் : மோதிர விரல் நகத்தின்  உட்புறக் கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சுன்  தூரத்தில் 
 சுண்டு விரல் நோக்கி அமைந்துள்ளது 
     ( ஓர்  ஆள் உள்ளங்கை தெரியுமாறு கையை உடல் ஒட்டி வைத்து  நிற்றல் )
■ பயன் விளக்கம் : மனம் ஓட்டத்தின் சுற்று முழுமை அடைவது மூவெப்ப  மண்டலம் ஓட்டம் 
 மோதிர விரலில்  தொடங்கி , கண்ணிமையின் இறுதியில் முடிவதைப் பொறுத்தது .
        தொடக்கத்திலேயே  Tw 1, ஆக்சிஜன்  பெறத் தடங்கினால் 
    --காய்ச்சல், அதனால் வரும் உடல் சோர்வு  உண்டாகும்.
 ♥ நடை முறை விளக்கம் : மன அதிர்ச்சி, மன உடல் போராட்டம், மன, உடல்  வலிகளுக்குக் 
 காரணமான  கழிவுப் பொருட்கள் நீக்கவும், காய்ச்சல் உண்டாகும்.
 ⊙ புதுமை விளக்கம் : மன -உடல்  ஆளுமைத் தடங்கல். ( உள் / வெளிக்  காரணம் )
 பாடல் : மோதிரவிரல்     உள் நகத்து 
                          கீழ் முனையில்       மூ வெப்ப நுரை 
               மூண்டிடும்         காய்ச்சலை 
                         முடித்து       வைக்கும்.......................112.    
 மீண்டும்  அடுத்த நாள், அன்புடன் , ஆ . மதி  யழகன்.

Friday, 24 October 2014

  14/60 -மன நுரை  - P 5           
 ● அமைவிடம் : மணிக்கட்டு  ரேகையின் மத்தியில்  இருந்து 3 சுன் ( நான்கு விரல் குறுக்கம் )
 தொலைவில் (மேலே ) உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மனம் ஆற்றல் பெற்று நுரையீரலுக்கு வந்து விட்டது . ஆக்சிஜன் தொடர்ந்து 
 பெற்றால்தான் கல்லீரலில் எடுத்த சக்தியைத் தொடர்ந்து பயன் படுத்த முடியும்.
      இப்புள்ளி  P 5 - மன நுரை  தடங்கினால் ,
              கை வலி, கை வாதம், கை நரம்புகளின்  இயக்கத்தின் முக்கிய  புள்ளி  பாதிப்புக்கு 
 உள்ளாகும் .இப்புள்ளி தூண்ட குணமாகும்.
 ♥ நடை முறை விளக்கம் : டெர்மினேட்டர் படத்தில்  அர்னால்டு இப்புள்ளியை  அமுக்கியவாறு 
 யந்திர உள்ளங்கையைத் திறந்து மூடுவார்.
      கத்திச் சண்டையின் போது  இப்புள்ளியில் கீறல் படாதவாறு ஒரு தடுப்பு மூடி வாளின் 
 கைப்  பிடியில்  இருக்கும் . கையில் காப்புக் கவசமும்  இருக்கும்.
       பணம் கொடுக்கும் போது இப்புள்ளி அழுத்தியவாறு  கொடுத்தால்  கை தடுமாறாது .
⊙ மனம் வலுவானால் ஆக்சிஜன் நிறைவு -கை உறுதி.
    மனம் தடுமாறினால்  ஆக்சிஜன்  குறைவு - கை தளரும்.
  மனதின் எரிபொருள்  எரித்தல்  (Fuel  burning )
 பாடல் : மன மண்     தொடங்கி 
                      முச்சுன்     தொலைவில் 
               மன நுரை      இருக்கும் 
                       மலர்க் கை    காக்கும் ......................100
 14A /60 -மன வலு - P 4  -தவப் புள்ளி            
 ● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் இருந்து  5 சுன்  (4+3 விரல் குறுக்கம் ) தொலைவில்  உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மனம் தன ஓட்டப் பாதையில்  நுரையீரல் தொட்ட பின் மீண்டும் பெரி கார்டிய  உறையை 'ஐ ' தமிழ்ப் புள்ளியில் சந்திக்கிறது. இங்கு மனம் வேகமானால் ,
         நீரழிவு  நோய் (சர்க்கரை ), உடல் சோர்வு, கர்ப்பப் பை தொடர்பான நோய்கள்,
 மண்ணீரல் (வயிறு ) தொடர்பான தீவிர நோய்கள்.   
  ஓட்டம் சீரானால் , வாழ் நாள்  அதிகரிக்கும்  புள்ளி.
♥ நடைமுறை  விளக்கம் : இந்தப் புள்ளியில்  வளையல்  ஏற்றினால் பயன் மிக .
 ஆண்கள்  வளையமும்  பயன் தரும்..
         துறவி  ஒரு கையால்  இந்தப் புள்ளியில்  தபசுக் கட்டை  பிடித்து  மறு கையால் 
 ஜப மாலை  உருட்டுவார் . -- நோய் தடுப்பு , சுறுசுறுப்பு , வாழ் நாள்  அதிகரிப்பு .
           சம்மணமிட்டு  இரு கைகள்  இரு கால் மூட்டுக்களின்  மேல் படுமாறு  நீட்டி வைத்து 
 அமர்ந்தால் , இந்தப் புள்ளி P 4 சரியாக மூட்டு மேல் மோதும்.. இதுவும்  ஒரு அமைதி 
 யோகாசனம் . தவக் கோலம்..
⊙ புதுமை விளக்கம் : மன வேகத் தடுப்பு.-Speed  braker  for  the  mind 
 பாடல் : மன மண்     தொடங்கி 
                       ஐஞ் சுன்    தொலைவில் 
                மன வலு    இருக்கும் 
                        மனித நாள்     கூட்டும் .......................104.
 மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.

Tuesday, 21 October 2014

 13/60 -மன மண்  - P 7            
 ● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் உள்ளது.    
 ■ பயன் விளக்கம் :மனம் தன்  எண்ண  மீட்சியில்  P 9 - மனம் கல்லில்  தேங்கலாம் . (சுடும் நினைவுகள் ). மனம் தீவிர எண்ணச்சுழலில் P 8 -மனத் தீயில்  தேங்கலாம் . (கற்பனைகள் )
        இங்கு , P 7- மன மண்ணில் - மண்ணீரல் செரிமானத்திற்கு  ஆற்றல் தரும் வேலை கெடும்.
 கெட்டுவிடுவதனால் ,-மணிக்கட்டு வலி , செரிமானக் கோளாறு, வயிறு மந்தம், சீரண  மண்டலத்தில்  அனைத்து ப்  பிரச்சனைகளும் உருவாகும்.
        இங்கு  P 7 -இல் அக்கு பிரசர் , அல்லது ஓர் அக்கு ஊசியில்  ஒரே நாளில் பயன் தெரியும்.
 ♥ நடை முறை விளக்கம் : மணிக்கட்டு வலி வந்தவர் மற்ற வேலைகளை நிறுத்தி விடுவதால் 
 மனப் பிரச்சனைகள் , சீரண  மண்டலப் பிரச்சனைகளாக மாறி விடும். சீரணம் 
 ஏற்ற இறக்கத்தில் ஓடிக் கொண்டு இருக்கும்.
        நோய்க்கும் பார், பேய்க்கும் பார் -என்பது பழமொழி . வெளி அறிகுறி நோய் உடலில் 
 பார்த்து சரி செய்தாலும், உள்  அறிகுறி நோய் மனதில் (பேய் ) பார்த்து சரி செய்ய வேண்டும்.
 இப்புள்ளி (மணிக்கட்டு சுற்றி ) படுமாறு  கயிறு கட்டுதல், உலோகக் காப்பு நலம் தரும்.
 ⊙ புதுமை விளக்கம் : மனக் குதிரைக்கு கடிவாளம் இடு . உணவு பார்த்து சுவைத்து  உண்க .
 மன அமைதி செய்து  பிறகு உண்க .
 பாடல் : மணிக்கட்டு   ரேகையின் 
                         மத்தியில்   மன மண் 
               மணிக்கட்டு  வலிபோம் 
                          மணி வயிறும்      நலமாம்.........,..........92  
 13A /60 -மன உடல் அமைதி -உறக்கப் புள்ளி -P 6    
 ● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் மத்தியில் P 7 இருந்து  2 சுன்  (மூன்று  விரல் குறுக்கம்) தொலைவில் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மன ஓட்டம் மண்ணீரல் (3) தொட்டு  நுரையீரல் (4) போகும் முன் 
 உடல் மையம் 'ல ' தமிழ்ப்  புள்ளி தொடுகிறது.
             மன மைய   ஓட்டத்தில்  உடல் மையம் கலக்கும்  இடம் . இது  தூண்ட,
        நோய் எதிர்ப்பு சக்தி  கிடைக்கும்.  தூக்கமின்மை  அகலும். உடலையும் 
 மனதையும்  சமப் படுத்தும் .அமைதி கிடைக்கும் .
 ♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கித் தலையில் வைத்தால் தூக்கம் எளிது.
 தலையணை கட்டிப் பிடித்துப் படுத்தாலும் தூக்கம் வரும்.
 வளையல் அணி விழா  கையில் உள்ள புள்ளிகளைத் தூண்டவே.
 முழுக் கை சட்டையின் அகன்ற கைப் பட்டி , அமைதி தரும்.
  நண்பரின் கை பிடிக்க ஆறுதல் .
 தாவாங்கட்டை  வளை கோடும் அமைதி, தூக்கம் தரும்..
  ஒருவர் கையின் P 6 -இல் , அடுத்தவர் தாவாங்கட்டை வைத்துப் படுக்க , இருவர் உறக்கம் 
 இனிதே நடக்கும் .
 ⊙ புதுமை விளக்கம் :  அமைதி மற்றும்  உறக்கப்  புள்ளி . ( மாத்திரை இல்லாமல் )
 பாடல் : மன மண்     தொடங்கி 
                   இரு சுன்     தொலைவில் 
                மன உடல்     அமைதி 
                      உறங்கல்    உறுதி...................................96
   மேலும் அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி  யழகன்.
        விளக்கணி  விழா  நாள்  வாழ்த்துக்கள் .    21-10-2014.

Monday, 20 October 2014

 12/60 -மனத் தீ  -P 8           
 ● அமைவிடம் : நடு  விரலும், இருதய ரேகையும் சந்திக்கும் இடத்தில்  உள்ளது.
 (உள்ளங்கையில்  நான்கு விரல்கள் இறுக்க  நடு விரல் , சுண்டு விரல் தொடும்  ரேகை 
 இதய ரேகை -தமிழ்ப் பெயர் .)
 ■ பயன் விளக்கம் : மனம் தன்  தன்மை (தீ ) யை சந்திக்கிறது. மனத் தீ .இது தேங்கினால் ,
       கை விரல் வலி. துடிப்பு அதிகம் ஆவதால் இதயத்தின் நீர்ப் பகுதி  வெளியேற்றம் 
 ஆகிய வியர்வை , உள்ளங்கை, உள்ளங்காலில்  நனை படும்.
   உடல் முழுக்க வெப்பம் ஏற்றும் புள்ளி .
 ♥ நடை முறை விளக்கம் : உள்ளங்கை சூடு ஏற்றல்  வெப்பத்திற்கு .  சூடம் ஏற்றல் மனம் 
 தூண்ட. குறத்தி உலோகப்  பூண் கொண்ட தடி தட்டி குறி சொல்வது, கேட்போர் மனக் கவலை 
 தணித்து , கவனம் மாற்ற . கூட்டத்தில்  கை தட்டச் சொல்வது, மனம்  சூடேறி சுறுசுறுப்பாக 
(மற்றவர்கள் ஓசையில் விழித்துக் கொள்வது கூடுதல் பயன்.) ஆற்றல் மிக்க P 8 தூண்டப் 
 படுவதால்  இரத்த ஓட்டம்  சுறுசுறுப்பாகும் .
           மட்டை பந்தாட்டத்தில்  பந்து பிடித்தபின் , கை தட்டிக் கொள்வது, பந்து பிடித்தவர்  கை 
 இரத்த ஓட்ட மீட்சிக்கு வழி வகுக்கும்.
          திரு நங்கையர் கை தட்டித்  தட்டி  தம் நோய் நீக்கிக்  கொள்வர்.
           கும்மி அடித்தலும் , கோல்  பிடித்து அடித்தலும்  (கோலாட்டம் ) கொள்ளை நலம்.
           மண  மக்களுக்கு  செண்டு பிடிக்கத் தருவதும், மன்னர் செங்கோல் பிடிப்பதும்  P 8
  மனத் தீ  தூண்ட, சுறுசுறுப்பாக .
 ⊙ முழு மன சுறுசுறுப்பு -FULL ACTIVATION  OF  MIND 
 பாடல் : இதய ரேகை , நடு விரல் 
                       இணை விடம்  மனத் தீ 
              உதயமாம்        வெப்பம் 
                           ஒழிபடும்    சோம்பல் ...................88
 மேலும் , அடுத்த நாள்,  அன்புடன்,  ஆ . மதி  யழகன்.
க ஓட்டம் - இதய உறை எனும் பெரி கார்டியம் -மனம்.   
  ஓட்டப் பாதை : மார்க் காம்பின் ஒரு சுன் வெளிப்பக்கம் தொடங்கி  தோளின் சிவந்த கைப் பகுதி 
 வழியாக நடுவிரல் முனை P 9 அடைகிறது.
                பெரி கார்டியம் துணை உறுப்பு  மூவெப்ப மண்டலம்  நான்காம் விரல் ( மோதிரவிரல் )
 வெளிப்புற நக முனை கீழ் Tw 1 தொடங்கி , புறங்கை வழி முகம் ஏறி கண் புருவக் கீழ் முனை 
Tw 23 முடியும்.
 11/60 -மனங் கல் -P 9           
 ● அமைவிடம் : மனம் கல்லீரலை சந்திக்கும் புள்ளி P 9. இது நடு  விரலின் மேல் நுனி 
 முனையில் .
  ■ பயன் விளக்கம் : கல்லீரல் (1) -க்கும் , தீ ஈரல் (2) இதயத்திற்கும் இடையில் காற்று மண்டலக்  கதிர் வீச்சாக எண்ணங்கள் அலை வீசிக் கொண்டிரிருக் கின்றன .கண்ணுக்குத் 
 தெரிவது பெரி கார்டியம்  மட்டுமே..இந்த உரு, அரு, இரண்டையும் சேர்த்து மனம்  என்கிறோம் .
 கொரியர்கள்  மூளை ஓட்டம் (BRAIN  MERIDIAN ) என்றே கூறுகிறார்கள்.
     (ஆக , P   பெரி கார்டியம்  மேல் மனம், LIV  கல்லீரல் அடி மனம், K  சிறுநீரகம்  பிரபஞ்ச  ஆழ் 
மனம் -என்  முடிவு.)
      மனம்  தீ ஈரலின் தீவிரத் தூண்டல் காரன் தன்  ஓட்டப் பாதையில் , மண்ணீரல்  செரிமானத்திற்கு செல்ல வேண்டியவன், எதிர்த் திசையில் கல்லீரலை சந்திக்கும்  P 9
 ஈர்ப்புப் புள்ளி தூண்டுதலால்,
      நினைவு சக்தி தூண்டல் (ஞாபக மறதி  நீங்கும்) கல்லீரல் ஆற்றல் பெறுவதால் திடீர் 
 மயக்கம் நீங்கும்..அவசர கால உதவியாகும். (மன விழிப்பு )
 ♥ நடைமுறை விளக்கம் : பல்லாங்குழி  விளையாட்டு - விரல் நுனிகள் படுவதால் -
 நுரையீரல் இயக்கத்தோடு  ஞாபக மறதி  வராது தடுக்கலாம்.
        கருமாதிக் கரையில் 1, 3, 5 விரல் நுனிகள் இணைப்பு -மதி  மயக்கம் , கலக்கம்  நீங்க -
 விழிப்பு வர.
 ⊙ புதுமை விளக்கம் : கல்லீரல் சேமிப்பு (savings ) கை கொடுக்கும் புள்ளி.
  வயதானவர்க்கும் , பரபரப்பு உள்ளவர்க்கும்  உதவும்.
 பாடல் : மேல் நுனி    நடு விரல் 
                           முனையது    மனங் கல் 
                மீட்பது        நினைவாம் 
                            மாய்ப்பது     மயக்கம் .......................84
    தொடர்ச்சி   அடுத்து 

Sunday, 19 October 2014



கட்டை விரல் முனையில் இருந்து  நுரையீரல் பாதை புள்ளிகள். முறையே
படம் 1--Lu 11, Lu 10, Lu 9, Lu 8, Lu 5
              நுரை கல், நுரைத் தீ,நுரை மண், நுரை வலு ,நுரை நீர்.
ஆட்காட்டி விரல் முனையில் இருந்து பெருங்குடல் பாதைப் புள்ளிகள் முறையே
 படம் -2----L I 1, LI 2, LI 3, LI 5, LI 11
                   குடல் நுரை, குடல் நீர், குடல் கல், குடல் தீ , குடல் மண்.
படம் -3   LI 4-குடல் மனம் .
உடல் தொட்டு உள்ளம் கொள்ளவும். அன்புடன்  ஆ . மதி  யழகன்.
  9A /60 -சிறப்புப் புள்ளி  -குடல் மனம் - L I 4       I         
 ● அமைவிடம் : கட்டை விரலையும் , ஆட்காட்டி விரலையும் இணைக்கும்போது  ஏற்படக் 
 கூடிய தசைத் திரட்சியின் உயர்ந்த இடத்தில அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : பெருங்குடல், நுரையீரல் (4) ஆற்றல்  எடுத்து, சிறுநீரகம் (5) கடந்து ,
 கல்லீரல் (1) கடந்து, தீ ஈரல் (2) நெருங்குமுன் ,
                கல்லீரல் -தீ ஈரல் இடையே உள்ள பெரிகார்டியம் ( மனம், அதை சுற்றி உள்ள 
 அனலாகிய எண்ணங்கள் ) பகுதியை க்  கடக்கும்  இடம் -குடல் மனம் -L I 4  
                 இது ஐம் பூதப் புள்ளியே என்பது என் முடிவு. (ஆசிரியர் ,  ஆ . மதி யழகன்.)
  சீனர்கள் சிறப்புப் புள்ளி  ஆக்கி  உள்ளனர் .
     மனச்சிக்கல் மலச்சிக்கல் தரும். மனவலி உடல் வலி தரும். L I 4 தடை நீக்க,
            இடுப்புக்கு மேலே உள்ள வலிகள், மாத விடாய்  வலிகள் -வலி தீர்வுப் புள்ளியாகும்.
 ♥ நடைமுறை விளக்கம் : ஆட்காட்டி விரல், கட்டை விரல்  L  வடிவில் விரித்து  இணைப்புப் 
 புள்ளியில் L I 4 முன்று முறை மேலும் மேலும் என அழுத்த  எவருக்கும் வலி தெரியும்.
 இங்கு அக்கு பிரசர் செய்ய உடல் மேல் உள்ள பல வலிகள் நீங்கும்.
  வர்மத்தில்  இப்புள்ளி கைக் கவுளி .மூச்சுப் பயிற்சியின் போது  இப்புள்ளி அழுந்துமாறு 
 இடுப்பில் கை வைப்பர் .
⊙ புதுமை விளக்கம் : வலி நீக்கும் வலுப் புள்ளி. ( PAIN KILLER )
 பாடல் : கட்டை விரல்,   சுட்டு விரல் 
                          ஒட்டு மேடு     குடல் மனம் 
                ஓட்டி விடும்      வலியெலாம் 
                           ஒடுக்கும்    துயரெலாம் ..................76    
 10 /60 -பெருங்குடல் மண்  -குடல் மண் - L I    11      
  ● அமைவிடம் : முழங்கை  மடிப்பு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : மண் உறுப்பின் செரிமானப் பணி  இங்குதான் முடிந்து, பெருங்குடல் 
 இறுதியில் திடக் கழிவு நீங்குகிறது. செரிமானம் எங்கு தடைப் பட்டாலும் ,
           தோல் வியாதிகள், நாட்பட்ட வியாதிகள் , முழங்கை வலி, மேற்கை வலி 
  வந்து சேரும்..உண்டது அற்றது என்பது உறுதி செய்யும் புள்ளி. அதாவது,
                   நோய் எதிர்ப்பு சக்தி ப் புள்ளி.      மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 
 அருந்தியது அற்றது போற்றி உணின்.......திருக்குறள் 
 ♥ நடை முறை விளக்கம் : முழங்கை மடிக்கும் பணிகள் .மாவு அரைத்தல் , அம்மி அரைத்தல் ,
 கைப் பந்தாட்டம் , மட்டை எடுத்து விளையாடுதல் ......நோய் எதிர்ப்பு சக்தி.
 ⊙  புதுமை விளக்கம் : தேவை யற்றதை நீக்கல் . தூய்மைப் பணி .
  பாடல் : மடக்கும்   முழங்கை 
                           மடிப்பின்    வெளி ஓரம் 
                அடங்கும்    குடல் மண் 
                            அடக்கும்    வருநோய்.......................80 
  மேலும், அடுத்த நாள். அன்புடன்  ஆ . மதி  யழகன்.

Saturday, 18 October 2014

  8/60 -பெருங்குடல் கல் -குடல் கல்  -L I  3           
 ● அமைவிடம் : இரண்டாவது  கைவிரல் மூட்டில் , இரண்டாவது  கை விரல்  எலும்பின் 
 மேல் பக்கம்  அமைந்துள்ளது.
 ■ பயன் விளக்கம் : பெருங்குடல் தன்  இயக்கத்திற்கு கல்லீரல் (மின்கலம் ) ஆற்றலைப் 
 பெற்று , பித்தநீரை முழுமையாகப் பயன் படுத்தி , மூட்டுக்களை  மறு பயன் பாட்டிற்கு 
 தயார்  செய்கிறது. இவ்வுதவி  இன்றேல் ,
                   கை விரல் வலி, கை விரல் எலும்புகள்  வலி.
 ♥ நடை முறை விளக்கம் : கை அசைவின் போது  இயங்கும். புறங்கைத் தாளமிடல்,
 புறங்கை முத்தம் பெறலின் போது  வேலை செய்யும்.
 ⊙ புதுமை  விளக்கம் : சிறு நீரக ஓட்டம் தடைப் படின் , கறுப்புத் திட்டுக்கள் ஏற்படும்.
 எனவே, சிறு நீரகத்தை குடல் சந்தித்த பின் , கல்லீரல் தொட்டு வலுப் பெறுகிறது.
      நடுவில்  ஒரு புத்துணர்ச்சி .         
 பாடல் : சுட்டும் விரல்  கை எலும்பில் 
                       மூட்டு மேல்    குடல் கல் 
               ஓட்டி விடும்         கை வலி 
                        உயர்த்தும்    எலும்பு நிலை ..................68
 9/60 - பெருங்குடல் தீ  - குடல் தீ - L I 5
 ● அமைவிடம் : கட்டை விரலை உயர்த்தும் போது , கட்டை விரலுக்கும், மணிக்கட்டின் 
 பக்கவாட்டிற்கும்  ஏற்படும்  பள்ளத்தில்  அமைந்துள்ளது .
 ■ பயன் விளக்கம் : பெருங்குடல்  தீயின் ஆற்றலைப் ( இரத்த ஓட்ட வேகத்தைப் ) பெற்று 
 இயக்கத் தூண்டல் பெற வேண்டும். தேங்கினால் ,
               மலச்சிக்கல் , நுரையீரல் இயக்கம் முழுமை இன்மையால்  தூசி அலர்ஜி , மணிக்கட்டில் 
( மண் தேக்கம் ) வலி.
 ♥ நடை முறை  விளக்கம் : மணிக்கட்டு  இயக்கப் பணிகளில்  தூண்டப் படும்.
          வயதானவர்க்கும் , நோயாளிக்கும்  இப்புள்ளியை அக்குப் பிரசரில்  தூண்டப் பயன்.
 ⊙ புதுமை  விளக்கம் : திடக் கழிவு  மேலாண்மை  
 பாடல் : பள்ளமது  மணிக்கட்டு  பக்கத்தில் 
                           பாங்காய்   கட்டை விரல்     உயர்த்த 
               உள்ளங்கொள்   அதுவே   குடல் தீ 
                           ஒழிக்கும்   மலச்சிக்கல்   அலர்ஜி .............72
 மேலும், அடுத்த நாள். ஆ . மதி  யழகன்.

Friday, 17 October 2014

 6/60  -பெருங்குடல்  வலு -அல்லது குடல் வலு - L I  1      
  ● அமைவிடம் : ஆள் காட்டி விரல் நகத்தின்   வெளிப்புறக்  கீழ் விளிம்பில் இருந்து0.1
 சுன்  தூரத்தில் உள்ளது.
 ■ பயன் விளக்கம் : பெருங்குடல் தன்  பாதையில்  தன்  தலைமை உறுப்பு நுரையீரலை 
 சந்திக்கிறது. பெருங்குடல் நுரை  அல்லது குடல் நுரை  அல்லது குடல் வலு எனலாம்.
     இறக்கப் புள்ளிகளில் (யாங் ) கழிவு நீக்கமே  முதன்மை  வேலை. இந்தப் புள்ளியில் 
 காற்றுக்  கழிவு C O 2, கார்பன் டை ஆக்சைடு   நீக்கப் பட வேண்டும். இன்றேல்  போதிய 
 ஆக்சிஜன் வரவுத் தடை படுவதால் ,
            மயக்கம், அதிர்ச்சி, தீடிர் வயிற்றுப்  போக்கு , கீழ்த் தாடை  வீக்கம் , ஏற்படும் .
♥ நடைமுறை விளக்கம் : ஆள் காட்டி விரல் , கட்டை விரலோடு  சேர்வது  சின் முத்திரை.
 சின் முத்திரை வருமாறு உள்ள பணிகள் ( எழுதுதல், ஊசியால் தையல் வேலை,...)
  குடல் வலு  சிறப்பாகும்.
 ⊙ புதுமை விளக்கம் : காற்றுக் கழிவு மேலாண்மை -C O 2  நீக்கம்.
 பாடல் : சுட்டும் விரல்    வெளி நகத்து க் 
                           கீழ் முனையில்     குடல் வலுவாம் 
               பட்டு விடும்        வயிற்று ஓட்டம் 
                            பாங்காய்    மயக்கமும் ...........................60
 7/60 -பெருங்குடல் நீர்  அல்லது  குடல் நீர்  - L I  2                
 ● அமைவிடம் : இரண்டாவது  விரலும் , அதன் கைவிரல் எலும்பும்  சேரும் மூட்டிற்கு க் 
  கீழே உள்ளது.
  ■ பயன் விளக்கம் : ஒவ்வொரு மூட்டிலும் ( எலும்புகள் சந்திக்கும்  இடம் ) 'சிறு ' நீர் தேங்கும்.
 இது  போகாவிடில்  வலி தோன்றும். அதுதான் மூட்டுக்கு  மூட்டுக்கு  வலி என்பது. சிறுநீரகம் 
  'சிறு ' நீர்  நீக்காமை. 
     # நீர் உறிஞ்சுதல்  அல்லது ஆவியாகும்  மேலாண்மை  இந்தப் புள்ளியில்தான்  தொடங்குகிறது . இங்கு சிறுநீரக வேலை கெடின்,
                 விந்தணுக்கள் குறைவு, விரல் மற்றும் விரல் எலும்பு  வலிகள், கலங்கல் பார்வை 
 ஏற்படும் .
♥ நடை முறை விளக்கம் : கை விரல்களுக்கு அதிக வேலை கொடுக்கும்  கணினிப்  பணி 
 செய்வோர் , பேனா  பிடிக்கும் ஆசிரியர்கள் , விரைவு கருதி  வேலை செய்யும்போது  விரல் 
 வலிக்கு  ஆளாவார்கள்.
    ஆட்காட்டி  விரலில்  ஓர் உலோக மோதிரம்  வலி நீக்கும் வழியாகும்.
⊙ புதுமை விளக்கம் : நீர்க் கழிவு  மேலாண்மை 
  பாடல் : சுட்டும் விரல், கை எலும்பில் 
                           முட்டுமிடம்     குடல் நீர் 
                 கூட்டி விடும்     விந்தணுக்கள் 
                          குறைக்கும்      விரல் வலிகள் .....................64
   மேலும், அடுத்த நாள். அன்புடன், ஆ . மதி யழகன்.

Thursday, 16 October 2014

     4/60     -நுரை வலு   - Lu 8             
 ● அமைவிடம் : மணிக்கட்டு  ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் (Lu 9)  இருந்து ஒரு சுன் 
 மேலே அமைந்துள்ளது.
      (மேலே என்பது ஓர் ஆள் உள்ளங்கை தெரிய  உடல் ஒட்டி கை தொங்கிய  நிலை  காட்சிப் 
 படுத்த வேண்டும்.) புள்ளி விளக்கம் தெளிவாகும்.
 ■பயன் விளக்கம் :  நுரை வலு என்பதனால்  இதில்  ஏற்படும் அசைவுகள், தூண்டல்கள்  சக்தி 
 ஊட்டும் . தடை ஏற்படின்,
                நுரையீரல் தொடர்பான இருமல்,  ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு , மேல் மார்பு எலும்பு 
 வலிகள்  போன்றவை ஏற்படும். அக்கு  ஊசி  கூடாது. அழுத்தம் மட்டும்.
 ♥  நடை முறை 
 விளக்கம் : கையின் முட்டிப் பகுதி அசையும்  உடற்பயிற்சிகள் , விளையாட்டுக்கள் ,
 மூச்சுப் பயிற்சிகள்  நுரைவலு  ஊட்டும்.  இந்த இடத்திலும்  கயிறு காப்பு , உலோகக் காப்பு 
  போடலாம். காலை 3 am  முதல் 7 am  வரை  சிறப்பாக வேலை செய்யும்.
⊙ புதுமை விளக்கம் : தன்  ஊதியம் (salary ) பெறும்  புள்ளி. முயற்சிக்கு ஏற்ப  எவ்வளவு  வேண்டுமானாலும் பெறலாம். ( ஆக்சிஜன் கட்டுப்பாடு  இப்போது இல்லை அல்லவா ?)
      நுரையீரல் பயிற்சி உயிர் காக்கும் முயற்சி.
    பெரும்பாலும்  Lu 8, Lu 5  சேர்ந்தே இயங்கும்.
  பாடல் : நுரை மண்       மேலே 
                        ஒரு சுன்      தொலைவில் 
                நுரைவலு       இருக்கும் 
                         நுரையீரல்     காக்கும்......................52 
   5/60  - நுரை நீர்  - Lu  5                                    
  ● அமைவிடம் : முழங்கை மடிப்பு  ரேகையின்  இருதலைத்  தசை நாரின்  வெளிப்புறம் உள்ள பள்ளத்தில்   அமைந்து  உள்ளது.
  ■ பயன் விளக்கம் :  நுரையீரல் தன் ஓட்டப் பாதையில்  ஆற்றல்  சேர்த்தபின் , அது அடுத்த நிலையில்  உள்ள  சிறுநீரகத்திற்கு (சேய் ) கண்டிப்பாகக் கொடுக்க வேண்டிய புள்ளி  இது 
  தவறினால்,
     முதலில்  முழங்கை  வலி, பிறகு விட்டு விட்டு சிறுநீர் கழித்தல் , நுரையீரல்  இயங்க 
முடியாத  சூழலில் அலர்ஜி , அதன் காரணத்தால்  தோல் நோய்கள், சிறுநீரக  குளிர்ச்சி 
 சீராக  இல்லாது மாலை நேரக் காய்ச்சல் (வெப்ப நிலை மாறுபாடு ) தெரியும்.
     இப்புள்ளி  தூண்டத் தீர்வு.
 ♥ நடைமுறை  விளக்கம் :  நுரையீரல் ஒன்றை  யோகாசணம் , மூச்சுப் பயிற்சி மூலம்  வலு 
செய்தால் , மற்ற  உறுப்புகள்  எல்லாம் பயன்  பெறும் . உயிர்த்தன்மை  கூடுவதால்  வாழ்நாள் 
  உயரும்.
⊙ புதுமை விளக்கம் : தாய்  தந்தை  ஆற்றல்  ஆகிய  சிறுநீரகம் (வங்கியில் ) இடத்தில  சேமிப்பு .
       Lu  8, Lu  5 தூண்டப் படும்  பழக்கங்கள்  சில :
  குடைகல்லில்  மாவு    அரைத்தல் , அம்மியில்  சட்னி   அரைத்தல் , கம்பு, வாள்  சுழற்றுதல் ,
 கயிறு தாண்டுதல் , துடுப்பு  போடுதல்,  குத்துசண்டை போடுவது .....இதுபோல்  பிற.
  பாடல் :  இருதலைத்  தசை நார் 
                       வெளிப்பள்ளம்   கை மடிப்பில் 
                 இருக்கும்     நுரை நீர் 
                         ஒடுக்கும்   தோல் நோய் ....................56
   மேலும், அடுத்தநாள்.. அன்புடன், ஆ. மதி யழகன்.

Wednesday, 15 October 2014

    2/60    நுரை த் தீ     - Lu 10                          
 ● அமைவிடம் : முதலாவது கை எலும்பின் மத்தியில் , தோலின்  இரு நிறங்களும் சேரும் 
 இடத்தில்  அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : உயிர்ப்பான நுரையீரலுக்கு , ஒன்று விட்டு தாண்டி , உதவிக்கு வந்த 
 தீ ஈரல் உட்கார்ந்து விட்டது. அந்த தீ  ஏற்றக் கடனினால் ,
                 வறட்டு இருமல், தொண்டை வறட்சி , கை கட்டை விரல் வீக்கம், விரல்களில் 
 வலி, உண்டாகிறது.
                  இவை நீங்க   இப்புள்ளியை த்  தூண்ட வேண்டும். கை மரத்துப் போனால்  இப்புள்ளி 
 தூண்ட  உடன் இரத்த ஓட்டம்.
 ♥ நடைமுறை : கை ஊன்றி எழுதுதல் , கை ஊன்றி எழல் , கையால் மாவு பிசைதல் , கை கூப்பு .... இவை  இரத்தம்  நன்கு ஓட உதவிக்கு அழைக்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : இப்  புள்ளி  கடன் (ADVANCE ) போல . தேவையானால் வாங்கலாம் .
 மீறினால்  அடைக்கலாம் .
   பாடல் :  கட்டை விரல்    எலும்பின் 
                            மத்தியிலே      நுரை த் தீ 
                  அட்டையது       கடன் பெற 
                             அடங்குவது    வறட்டு இருமல்.   ..............44
   3/60      நுரை  மண்  - Lu  9                                
 ● அமைவிடம் : மணிக்கட்டு  ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : செரிமானம் ஆன  நீர்ச் சத்தை  தொடர்ந்து  நுரையீரலுக்குக் கொண்டு 
  வரும்  பாதை. நுரையீரல்  வேறு காரணங்களால் (துக்கம், அதிக வேலை, ஏற்கனேவே 
 அதிக உடல் உழைப்பு  இல்லாமல்  சதை திரண்ட  நிலையில் )
                மேலும் வரவால்,    படபடப்பு , பக்கவாதம் , இரத்தக் குழாய்  அடைப்பு  நோய் ,
 மணிக்கட்டில்  வலி (தேக்கம் ) போன்றவை ஏற்படும் .
       இப்புள்ளி  வலிமை  குறைக்க , அக்கு ஊசியை ஓட்டம் தடுக்குமாறு   சரித்து  ஏற்ற 
  வேண்டும்.. நெஞ்சில்  சளி மேலும் சேராது தடுக்கும்.
 ♥ நடைமுறை : நுரை மண் ஓட்டத்தை சீராக்க , மணிக்கட்டில் உலோகக் காப்பு , கயிறு 
 கட்டுதல் , கைச்சங்க்லி  அணிதல்  நடைமுறை.
         பரபரப்பு  நீக்கம், செரிமான ஆக்கம் , இரத்தக் குழாய்  சீர்  படுத்தல்  தரும்  முறையே 
  H 7, P 7, Lu  9 என  மூன்று  புள்ளிகள்  மணிக் கட்டில்  உண்டு.
⊙ புதுமை விளக்கம் : மண்ணீரல் (வங்கி ) வரவு. நிலமைக் கேற்ப  ஒழுங்கு படுத்துக .
பாடல் : மணிக்கட்டு  வெளி ஓரம் 
                       மண் புள்ளி   நுரை மண் 
             இறுக்கட்டும்  காப்பு ஒன்று 
                       இரத்தக் குழாய்  அடைக்காது ............................48
   மேலும், அடுத்த நாள். அன்புடன், ஆ . மதி  யழகன்.