Wednesday, 30 December 2015
Monday, 28 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.5 pictures
( அவ் புள்ளி -முதல் படம்.
(2) கல் வலு 'அ '
(3) பித்தப்பை வலு 'ஆ '
(4)தீ (இதயம் +மனம் ) வலு 'இ '
(2) கல் வலு 'அ '
(3) பித்தப்பை வலு 'ஆ '
(4)தீ (இதயம் +மனம் ) வலு 'இ '
12 தன் வலுப் புள்ளிகள் தரப் பட்டு உள்ளன.
அன்புடன், ஆ. மதி யழகன்.
Thursday, 24 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.5 contd.
சிறுநீரகம் வலுப் பெற கூடுதல் வழிகள் - நீர் வளம்.
காட்சி : நீலப் பொருள்களைப் பார்த்தல், (கருப்பு, வயலட், இண்டிகோ -வும் சிறுநீரக நிறங்களே )
மேலும் பயன்பாட்டில் கொண்டுவருதல் ( எ. கா. உடை ) , சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்க. வெப்பமான இடங்களில் வேலை செய்வோர் , நீல உடை அணிவது குளிர்ச்சி தரும், நீலப் பச்சை (bluish green ) இன்னும் சிறப்பு. குளிர்ச்சியை வெப்பமானக் கல்லீரலுக்கு கொண்டு செலுத்தும்.
உணவு : நீல நிறத்தில் உள்ள திராட்சை ( கருப்பு, வயலட், இண்டிகோ -வும் சரியே.
கருப்பு எள் , கருப்பு நாகப் பழம், கறுப்புப் பேரீச்சை , கருஞ் சீரகம் , கடுகு, மிளகு, கரும் பச்சைத் தர்பூசணி , நீர்ச் சத்தை உள்ளடக்கிய வெள்ளரி, சுரை, தேவையானபோது நீரும் அடங்கும்.
சுவை : உவர்ப்பு . அளவான உப்பு, சுவையோடு சிறுநீரகமும் தூண்டும். அவசர காலத்தில் தரப்படும் சலைன் பாட்டில் , சிறுநீரகத்தைத் தூண்டிப் பயன் தருகிறது. அதிகம் பயன்படுத்த வேண்டாம், சிறுநீரக மின்கலன் ஆயுள் குறையும்.
குணம் : அச்சத்தால் அழியும் சிறுநீரகம் என்பது பாட்டு . அச்சம் வந்தால் சிறுநீரக இயக்கம் தடைப் பட்டு , அடுத்துள்ள கல்லீரல் வலு கிடைக்காது. துணிவைக் கைகொள்வது வெற்றி பெற
ஆற்றல் தரும். அச்சம் தவிர்க்க உடலின் பிரபஞ்ச ஆற்றல் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
மூச்சை இழுத்து அடக்கி பின் வெளியிடு. பிரபஞ்ச ஆற்றல் உள் வந்து உதவும்.
நம்பிக்கையால் சிறுநீரகம் செயல்படும். அதன் தலையில் உள்ள தொப்பி போன்ற சுரப்பி அட்ரீனலின் சுரக்கும். இது கல்லீரலுக்கு ஆற்றல் தந்து , அதன் வழி, மனம் இதயம் செயல்படும் .
செயல் இல்லாத பரபரப்பு , இதயத்துக்கு வேண்டாத இரத்த அழுத்தம் தருவதோடு, சிறுநீரகத்தை
காலி (வெறுமை ) செய்து கொண்டிருக்கும். அத்தகைய சூழ்நிலை தவிர்.
செயல் :
(1) சம்மணம் இட்டு அமர்ந்தால் , 'ஒ ' -K 10 என்ற புள்ளி - உள்ள முழங்கால் ரேகை மடிப்பில்
அழுத்தம் விழும். அடுத்து , 'ஓ ' - UB 66 என்ற கால் சுண்டுவிரல் கீழ் உள்ள புள்ளி மண் தொட்டு
அழுந்தும். ஆகா ! கிடைத்து விட்டதே சிறுநீரக வலு ! செயல் படுத்துவீர்களா ?
(2) பெண்கள் தரைச் சமையல் செய்யும்போது, ஒருகால் குத்துக் காலிட்டு, மறுகால் சம்மணமிடும் முறையில் மண் தொடும். சிறுநீரக முழு சுற்றும் உள்ளங்காலில் ஏறி சுண்டுவிரலில் முடியும். சிறுநீரகக் கோளாறு அண்டவே அண்டாது.
கால் சுண்டு விரல் சிறுநீரகத்தை சுண்டும் விரல் . கைச்சுண்டு விரல் இதயத்தை சுண்டும் விரல்
நோய்கள் :
'ஒ ' 'ஓ ' புள்ளிகள் தூண்டப் படாத நிலையில், உடலில் உள்ள உப்பு நீர்க் கழிவு UB சிறுநீர்ப் பை மூலம் வெளியேறாமல் கழிவுத் தேக்கம் ஏற்படும் . அதனால் வரும் நோய்கள் :-
(1) அரிப்பு (2) பாத எரிச்சல் (3) அதிக வியர்வை (4) குதிகால் வலி (5) விந்தணுக்கள் குறைவு
(6) முழங்கால் மூட்டு வலிகள் (7) மூட்டுப் பிடிப்பு (8) முதுகு வலி (9) சிறுநீர்ப் பிரச்சினைகள்
(10 கீழ் இடுப்பு வலி (11) பின்பக்கத் தலை வலி (12) வெள்ளைப் படுத்தல்.....
தன் வலுப் புள்ளிகள் 12 நிறைவு.
அன்புடன், ஆ. மதி யழகன் .
Wednesday, 23 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.5
5.5 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் நீர் வளம் K 10 , UB 66
K 10 - நீர் தன் வலு - உயிர் 'ஒ '
இருப்பிடம் : முழங்கால் மடிப்பு ரேகை உட்பக்க ஓரம்.
துடிப்பு : கால்களை தொங்கப் போடுவதால் 'ஒ ' புள்ளி வலுக் குறைவு ஏற்படும். ஒரு காலேனும் மடித்தால் போதும். துடிப்புகள் ஒழுங்காகி நீர் வலு கிடைக்கும்.
மனம் வழி :
(1) உடலில் இப்புள்ளி வலு குன்றினாலும், அச்சம் வரும். ஆண்மைக் குறைவுகள் போன்ற நோய்கள் உள்புகும். உடல் -> மனம்.
(2) மனதில் அச்சம் வரினும் இப்புள்ளி உடலில் தடங்கல் செய்யும். மனம் -> உடல்.
ஆக, உடலின் பழக்க வழக்கங்களும் முக்கியம். மனதின் வலிமையும் முக்கியம்.
ஆழ் மனமாக விளங்கும் சிறுநீரகம் மரபு விருப்பங்களைக் கொண்டுள்ளது.
எ. கா. பாலுணர்வு , மரபு விருப்பச் சாதனைகள் ,
திரும்பத் திரும்ப பார்ப்பதாலும், கேட்பதாலும் மேல் மனதில் P தோன்றி, அடிமனம் Liv இறங்கி
உட்காரும் சூழல் விருப்பங்களையும் கொண்டுள்ளது. இவை பிரபஞ்ச செய்திகளாக வெளியேறி
உங்களை அறியாமலே முயற்சிகள் நடக்கும். நிறைவேறாத , முடிவுக்குக் கொண்டு வர முடியாத ஆசைகளின் படிவு , உடல்த் துன்பங்களின் முடிவு என மாறும்.
உடல் வலிகள், பாலுணர்வுக் குறைவு, கால் இயக்க க் குறைவு , வாதம், சிறுநீரக சிக்கல்களில் தெரியும். பிறகு கல், தீ, மண், நுரை என விரியும்.
பயன் : 'ஒ ' தூண்ட சிறுநீரக ஆற்றல் கிடைக்கும். பாத எரிச்சல் நீங்கும் . தலை முடி உதிரல் நிற்கும். ஆண்மைக் குறைவு அகலும்.
UB 66- நீர்ப் பை தன் வலு - உயிர் 'ஓ '
இருப்பிடம் : காலின் ஐந்தாவது எலும்பு, ஐந்தாவது விரல் எலும்பும் சேரும் இடத்தில் . ( சுண்டு விரல் முடியும் வெளிப் புறம் உள்ளது )
துடிப்பு : சுண்டு விரல் மண் பட சம்மணமிட்டு அமர 'ஓ ' துடிப்பு இயல்பான நிலையில் இருக்கும்.
இதன் வழி தடைப் பட்டால் , வலிகள் பல.
மனம் வழி :
ஆழ் மனக் குறைபாடு , வாழ்வில் ஈடுபாடு குறைவு, விரக்தி, சிறுநீர்ப் பை செயல் பாட்டில் குறைவு, கூடுதல் காட்டும். 'ஓம் ' என இறைவழி நாடும் கால கட்டம். 'ஓ ' ஒலி உச்சரிப்பே மன நிறைவு தரும். பல் வலி, எலும்பு வலிகள் அடையாளம் காட்டும்.
பயன் விளக்கம் :
'ஓ ' புள்ளி தூண்ட பாத வலி குறையும். சிறுநீர் போவதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறையும். அதனால் சர்க்கரை நோய்த் தீர்வுக்கு வழி வகுக்கும். கழுத்தில் இருந்து முதுகில் இறங்கி ஓடும் சிறுநீர்ப் பையின் 4 ஓட்டத்தில் உண்டாகும் தேக்கம் - கழுத்து இறுக்கம் நீங்கும்.
தொடரும்.
Tuesday, 22 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.4 contd
சுவை :
காரச்சுவை. மோரில் ஊறி வறுத்த மிளகாய், மிளகாய்ப் பொடி , மிளகு, மிளகுப்பொடி .. இவற்றை நாள்தோறும் பயன் படுத்த வேண்டும்.
குணம் : துக்க உணர்ச்சி நுரையீரல் வலு குறைக்கும். துக்கம் நெஞ்சை அடைக்கும் என்பார்கள். துக்க வீட்டில் நெஞ்சை அடித்துக் கொள்வது , நுரையீரல் காற்றுக் குறைவால் மாரடைப்பு வராமல் இருக்க. துக்கத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வது 'உயிர்ப்பு ' என்கிறோம். என்றும் மகிழ்ச்சியாய் இருப்பது, நுரையீரல் வளம்.
செயல் :
(1) விடியல் காலை 3 மணி முதல் 7 மணி வரை யோகப் பயிற்சி செய்ய அரை மணி முதல் முக்கால் மணி ஒதுக்க வேண்டும். நுரை நோய் தடுப்பு.
(2) சுற்றுப்புறத் தூய்மை இன்றியமையாதது. தூசுகள் வரும் இடத்தில் படுத்துத் தூங்கி விட்டு அல்லது பணி புரிந்து விட்டு சளி பிடிக்கிறது என்று சொன்னால் , தன் குறை அல்லது சூழல் கேடு.
பஞ்சாலையில் பணி புரிவோர்கள் வேலை விட்டு வெளியேறும்போது 'அச்சு வெல்லம் ' தருவது வழக்கம். இது சளி பிடித்தல் தடுக்கவே. வெல்லம் மண் பூதம் தூண்டி நுரை வளமாக்கும். தாய் மகன் உறவு . புள்ளி வடிவில் Sp 5 - நுரை வழங்கும் மண் - பூண்டுப் புள்ளி.
மிதி வண்டி மிதிக்க அசையும் புள்ளி. இதன் எதிர்ப் புள்ளி Lu 9 - நுரை கேட்கும் மண் - இரத்தக் குழாய் அடைப்பு நீக்கி - நுரை ஊற்று ( source point ) - மனிதன், பிரபஞ்ச இணைப்பு புள்ளி -
வெள்ளை அணுக்கள் உற்பத்தி - ஆக நுரை வளம் கிட்டும். எல்லா மதங்களிலும் , பழக்க வழக்கங்களிலும் கயிறு, காப்பு உண்டு.
(3) நிறைய காற்று வரும்படி சன்னல்கள் உள்ள வீடு, படுக்கை அறை , முற்றம் பயன் படுத்த வேண்டும். தூய காற்று உள்ள இடங்களில் நடை பழக வேண்டும். விளையாட வேண்டும். ஆழ்ந்த மூச்சு இழுத்து பழக வேண்டும்.
(4) மூச்சின் மூலம் அக்குப் புள்ளி தூண்டல் :
எந்த அக்குப் புள்ளியைத் தூண்ட வேண்டுமோ , அந்தப் புள்ளியைக் கட்டை அல்லது சுட்டு விரல், அல்லது நடுவிரல் அழுத்தி, மூச்சு இழுத்து, சற்று நேரம் வைத்திருந்து, பின் மூச்சு விடும்போது விரலை மேலே தூக்கி விட வேண்டும். இதுபோல் எட்டு முறை செய்ய வேண்டும். புள்ளி தூண்டப்பட்டு பயன் கிடைக்கும்.
(5) நோய்கள் :
நுரையீரல் வலு 'எ ', 'ஏ ' குன்ற கீழ்க் காணும் நோய்கள் :-
(1) இருமல் (2) தும்மல் (3) மூச்சிறைப்பு (4) மலச்சிக்கல் (5) மயக்கம்
(6) தோல் நோய்கள் (7) ஆண்மைக் குறைவு (8) பேதி (9) தோள்ப்பட்டை வலி (10) தசைகளில் வலி (11) ஆஸ்துமா.....
அடுத்து நீர் வளம்
அன்புடன், ஆ. மதி யழகன்...
Tamil muraiyil acupuncture -2/5.4
5.4 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் நுரை வளம் Lu 8 , LI 1
Lu 8 -நுரை தன் வலு - அடர் வெள்ளை - உயிர் 'எ '
இருப்பிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் (Lu 9) இருந்து ஒரு சுன் மேலே அமைந்துள்ளது.
துடிப்பு : பிரபஞ்சத்தில் இருந்து காற்றை ( ஆக்சிஜனை ) கொண்டு வரும் வேலை அதிகம் ஆகும்போதும், வலுக் குன்றியபோதும் வலி காட்டும். ஊசிமுறை உதவாது. தொடல், அக்கு பிரசர் , PROBE சுற்றி அழுத்தல் உதவும்.
மனம் வழி : இதுவே பிரபஞ்ச மனம், வெளித் தொடர்பு உள்ளது. சோகத்தால் அல்லது கவலையால் மூச்சு குறைந்து Lu 8 - உயிர் 'எ ' மெலிவுத் துடிப்பில் இருக்கும், தொடர்ந்த கவலை, இழப்பு எண்ணம் மார்புக் கூட்டின் அளவைக் குறைக்கும். நுரைத் துடிப்பு மனம் வழி மெலிவான பிறகு , வெளியே இருக்கும் நோய்க் கூறுகள் எளிதில் வந்து உட்காரும். பிறகே நோய்கள். இன்ப எண்ணங்களால் மார்பு விரிவடையும். துக்கம், வெறுப்பு , துன்ப எண்ணங்களால் மார்பு சுருங்கும், தூய இன்பம், சிரிப்பு மனம் வழி சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி.
உடல் வழி : சுற்றுப் புறத் தூய்மை பேண வேண்டும் .
பயன் : யோகப் பயிற்சி ( மூச்சுப் பயிற்சி + உடல் ஆசனங்கள் ) செயும்போதும் , விளையாட்டில்
ஏற்படும் கை அசைவுகளினாலும் தூண்டப் படும், இருமல், ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு , மேல் மார்பு எலும்பு வலிகள் தொடக்க நிலையில் தடுக்கப் படும்.
LI 1 - குடல் வலு - அடர் வெள்ளை - உயிர் 'ஏ '
இருப்பிடம் : ஆட் காட்டி விரல் நகத்தின் வெளிப்புறக் கீழ் விளிம்பில் இருந்து 0.1 சுன் தூரத்தில்
உள்ளது.
துடிப்பு : மிகத் தெளிவான துடிப்பு பெரும்பாலும் இருக்கும் .
மனம் வழி விளக்கம் மற்றும் பயன் :
மனம் என்பது பாம்பு ஆனால் தலை P - மேல் மனம், உடல் கல்லும், நீரகமும். வால் நுரை + குடல். மேல் மன பாதிப்பு வால் LI 1 - ல் தடை உண்டாக்கும். மயக்கம், அதிர்ச்சி , திடீர் வயிற்றுப் போக்கு ஏற்படும் . மேலும் இதன் கழுத்து ஓட்டம் Lu 17, 18 - ல் தடையாகி கீழ்த் தாடை வீக்கம் உண்டாக்கும்.
ஆட் காட்டி விரல் தொடல் - ஒரு விளக்கம் :-
(1) ஒரு பொருளைத் தொட நினைப்பது , ஐம்பூதச் சுற்றில் மேல் மனம் P தொடங்கி கல், நீர், நுரை என 4 பூத சுற்று.
(2) தொட்டு , பிறகு மேல் மன உணர்வு வருவது 4 பூத எதிர்ச் சுற்று.
(3) வாயில் வைப்பது 5 பூத மண் சுற்று. வாயில் 'குழந்தை ' எனின் உமிழ்நீர் வடியும்.
(4) அனுபவக் குழந்தை எனின் (இது மேல் மனம் அல்ல ) கல்லீரல் - அனுபவக் கிடங்கில் இருந்து - அதன் அடிப்படையில் உமிழ் நீர் ஊறும் .
(5) சுட்டு விரல் , சுட்டும் விரல் மட்டும் அல்ல. அனுபவ விரல் கூட. அதனால்தான் உணவைச் சுவைக்க, பிற உணர சுட்டு விரல் பயன் படுத்துகிறோம்.
(6) நடு விரல் தொடல் நேரடி அனுபவம். ஆனால் ஒரு பூதம், சுட்டு விரல் தொடுவது 5 பூத அனுபவம்.
நுரை வளம் பெறக் கூடுதல் வழிகள் :
காட்சி : வெள்ளைப் பொருள்கள் பார்த்தல், ஆடை அணிகள் உட்படப் பயன் படுத்துதல், சுற்றிலும் காட்சி அமைப்பை உருவாக்கல், தமிழர்கள் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிதலும் இதில் சேரும். வெள்ளை உயிர் காக்கும் நிறம். தூய்மை காட்டுவதும் கூட,
உணவு : வெள்ளை நிறத்தில் உள்ள பூண்டு, வெங்காயம், ( உட்பகுதி ) வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி , அவல் , தானியங்கள் ( உட்பரப்பு வெள்ளை ) தேங்காய், தேங்காய்ப்பால் ....
தொடரும்.
Monday, 21 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.3 contd.
குணம் :
கவலை உணர்ச்சி செரிமானம் கெடுக்கும். அழிக்கும் உணர்ச்சி நீக்கி, ஆக்கும் உணர்ச்சி கொள்ள வேண்டும். இதை நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு எனக் கூறுகிறோம். இதை செழுமை உணர்வு எனவும் கூறலாம்.
எ. கா. (1) உறவினர் இறந்தார் என் செய்வேன் ?
விடை : இருக்கும் உறவினர் காப்பேன். மேலும் இறந்த தாய் தந்தை தன் உடலில் உள்ளபோது அதைக் காத்து, பெயரும் காக்க வேண்டும்.
(2) தேர்வில் தவறினேன் . என் செய்வேன் ?
விடை : வரும் தேர்வுக்கு உழைப்பேன் .
எந்த தோல்வியும், இழப்பும், மனதில் சுற்றி சுழன்று விடையற்று நின்றால் , மனம் சிக்கிக் கொண்டது என்று பொருள். அது பயிரில் களை . உடன் நீக்க வேண்டும்.
செயல் :
(1) உணவின் மூலமே உடல் கட்டுமானம் நடை பெறுகிறது. அற்றது போற்றி உண்க .
பசித்துப் புசி கைக் கொள்க.
(2) எந்த உணவையும் ஒதுக்காது , அறுசுவை வரும்படியும் , ஏழு நிறங்கள் வரும்படியும், தேர்ந்து உண்க . இதுவே சத்துணவு.
கால்சியம், மகனீசியம் . ... எதுவானாலும் உணவின் வழி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
அவசரம் எனில், ரசாயன மருந்துகள் வேண்டும் காலம் மட்டுமே.
(3) நடைமுறை : காலைத் தொங்கப் போட்டு வாழும் முறை முடிந்தவரை தவிர்க்கவும்.
சம்மணம் இட்டு உண்ணுங்கள். மேசையில் உண்ண நேர்ந்தால் , முழங்கை கீழ்ப் பகுதி (மண் மூலகம் ) ஊன்றவும்.
இயல்பாகத் தரையில் சம்மணம் இட்டு அமர்வதால் , Sp 3, St 36 இணை அழுத்தம் பெறுவதால் , செரிமானம் எளிதில் நடை பெறுகிறது. நாற்காலி, சோபா இவற்றை எப்போதாவது பயன் படுத்துங்கள் . அவ்வாறு அமர்ந்துதான் படிக்க நேர்ந்தால் , இரண்டு கால்களையும் தூக்கி வைக்க வழி செய்து கொள்ளுங்கள். செங்குத்து சாய்மான நாற்காலிகள் சிறப்பு. முதுகு வலி வராது.
தரையில் பாய் அல்லது சமுக்காளம் இட்டு , சுவரில் சாய்ந்து கால் நீட்டியவாறு அல்லது மடக்கி அமர்ந்து பணி செய்வது பல நோய்கள் தடுப்பு ஆகும்.
(4) நோய்கள் : மனம் வழி மேலும் விளக்கம் :-
(P ) மேல் மனம் நாகத்தின் தலை. அதன் உடல்
(Liv ) அடி மனம் கல்லீரல்
(K ) ஆழ் மனம் நீர் ஈரல்
(Lu ) சூழல் மனம் நுரை ஈரல் - வால்
வாலிலிருந்து உடல் நோய் கிளம்பும், நுரையீரல் நோய்கள் இருமல், தும்மல், சளி பிறகு நீர் ஈரல் நோய்கள் - வலி உடல் பகுதிகளில்.. பிறகு கல்லீரல் நோய்கள் - தலை வலி, இரத்த அழுத்தம் .. பிறகு மேல் மனம் , இதயக் கோளாறு , பசியின்மை , சுளுக்கு , தூக்கமின்மை இதற்குப் பிறகு மண்ணில் வந்து தீவிரமாக முடியும். நாகத் தலையில் இருந்து 'மன நோய் ' கிளம்பி அறிகுறிகள் காட்டி, காட்டி மறையும், ஆக, நுண் மனப் புள்ளிகள் 'உ ' , 'ஊ ' தூண்ட உடல் நோயும் தீரும் ; மன நோயும் தீரும்.
செரிமானம் கெடுவதால் வரும் நோய்ப் பட்டியல் :
(1) வயிற்று வலி (2) வாயுத் தொல்லை (3) அஜீரணம் (4) தலை வலி / பொட்டுத் தலைவலி
(5) பசியின்மை (6) அதிகப் பசி, சர்க்கரை (7) மூக்கு அடைப்பு (8) தோல் நோய்கள் (9) கால் மூட்டு வலி , முழங்கால் வலிகள் (10) மாத விடாய்க் கோளாறுகள் (11) நீர் வீக்கம் / நீர்க் கட்டு ... என விரிவு.
தொடரும்.
அன்புடன், ஆ. மதி யழகன்..
Tamil muraiyil acupuncture - 2/5.3
5.3 தன் வலுப் புள்ளிகள் 12 - ல் மண் வளம் Sp 3 , St 36
Sp 3- மண் தன் வலு - அடர் மஞ்சள் - உயிர் 'உ '
இருப்பிடம் : கால் பாத கட்டை விரல் எலும்பும் , கட்டை விரலும் சேரும் மூட்டின் பின்புறம் உள்ள பள்ளம். ( Sp 2 தொட்டு மேல் நகர மேடு தாண்டி வரும் முதல் பள்ளம் )
துடிப்பு : மரபு உலோகக் குச்சி 'probe ' கொண்டு Sp 3 தொட வலி இருப்பின் ஹீமோ குளோபின்
குறைவு காட்டும் . பெண்களுக்கு பெரும்பாலும் வலி இருக்கும்.
பயன் : உடல் வழி, இரத்த சோகை நீக்கும். தலை பாரம் குறைக்கும், கால் வலி தீர்க்கும்.
St 36- இரைப்பை தன் வலு - அடர் மஞ்சள் - உயிர் ' ஊ '
இருப்பிடம் : டிபியா எலும்பின் (முழங் கால் முன் எலும்பு )தலைப் பகுதியில் துருத்தி இருக்கும்
பகுதியில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் உள்ளது. (கண்டு பிடித்தல் : முழங்கால் கீழ்ப் பகுதி நடுவே நான்கு விரல்கள் வைக்கும்போது சிறுவிரல் தொடும் இடத்தில் இருந்து 1 சுன் வெளிப் பக்கம் உள்ளது . )
துடிப்பு : செரிமானம் கெடும் நிலையில் வலி இருக்கும்.
பயன் : அனைத்து நோய்கட்கும் செரிமானம் முதல் என்பதால் , இப்புள்ளி முதலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். இப்புள்ளி தூண்ட வயிறு தொடர்பான நோய்கள் தீரும். எத்தனையோ வருடங்கள் தாண்டி வரும் கால் மூட்டு வலிக்கு முதல் கட்டும் புள்ளி. முழங்கால் வலிக்கு தீர்வில் முதற்புள்ளி .
மனம் வழி : இருபுள்ளிகளும் நுண் மனம் ஆகும். மேல் மனம் P வேறு வழியில் பாதிக்கப் பட்ட நிலையில் , மனம் / இதயம் ஆற்றல் தூண்டும் வலு வாக தாயிடம் இருந்து கிட்டாத நிலையில்,
அதாவது மனம் துன்ப நிலையிலும் , இதயம் அதிக வேலையிலும் இருத்தல், உணவில் ஈடுபாடு
அற்ற உணர்வோடு அல்லது வருத்த உணர்வோடு உண்ணும் நிலை யில் , உணவை அரைத்து , மென்று இன்சுலின் ஊற நேரம் தராது விழுங்கும் நிலையில், செரிமானம் கெடும். மண் வளம் கெடும். மனம் அமைதிக்கு வழிபாடு செய்து உண்பது , உணவு உடம்பில் ஒட்டவே.
மண்ணீரல் தன் வலுப் பெற கூடுதல் வழிகள் :
காட்சி : மஞ்சள் பொருள்களைப் பார்த்தல். பயன் படுத்தல். சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்ளுதல்.
உணவு : மஞ்சள் நிறத்தில் உள்ள வாழைப் பழம், பப்பாளி, மாம்பழம், அன்னாசி, கறி மஞ்சள் பயன்பாடு, பொட்டுக்கடலை உணவில் சேர்த்தல்.
சுவை : இனிப்பு சுவையை உணர்ந்து மூளை இன்சுலின் தருகிறது. மரபு இனிப்பு உணவுகள் காலை, நண்பகல் உணவில் அளவோடு சேர்த்து உண்ணத் தொடங்குங்கள். வெல்லம் , தேன் , பனங் கற்கண்டு, கருப்பட்டி கலந்த உணவுகள்.
துவர்ப்பும் மண் வளமே. தாம்பூலத்தில் உள்ள பாக்கு துவர்ப்பு என்பது நினைக்க.
துவர்ப்பு சுவையை சேர்ப்பதன் மூலம் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகி , வாய்ப்புண் , அல்சர், மூலம், குணமாக்கும். வாழைப் பூ எந்த வகையிலும் உணவில் சேர்க்க.
தொடரும்.
Monday, 14 December 2015
Tamil muraiyil acupuncture - 2/5.2 contd.
குணம் :
பெருமை, மகிழ்ச்சி இரத்த ஓட்டத்தை கூடுதலாக்கி , படபடப் பாக்கி தொடரும் போது இதய நோய்க்கு வித்திடும். திருமணம் ஆகும் வேளையில் கட்டாய மோதிரம் அணிவது, மூ வெப்ப மண்டலத்தை ( நான்காம் விரல் Tw ஓட்டம், - மோதிர விரல் ) சிறு நீரகத் தோடு (வலி நீக்கம் )
இணைக்கும் புள்ளியைத் தூண்டவே. [ Tw 2 - மூ வெப்ப ம் கவரும் நீர் ] என்ன ஒரு பாதுகாப்பு ? அதுவும் முன் கூட்டியே.
மகிழ்ச்சி வரும் போது தெளிவு உணர்ச்சி கொள்க. பணம், பொருள்கள், பிறர் பாராட்டு இவற்றில்
எச்சரிக்கை , தெளிவு கொள்க. நீங்களும் , ' பெரியோரை வியத்தலும் இலமே ! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ! ' என உணர்வுத் தெளிவில் இருக்க வேண்டும். இதுவே இதயம் காக்கும் ; மனம் பொங்காது. B . P மாத்திரை தேவைப் படாது.
செயல் :
(1) பரபரப்பு வாழ்க்கை முறை சீர் செய்யப் பட வேண்டும். உங்கள் நோக்கில் முதல் படி ( First Step ) எடுங்கள்.
(2) உடற் பயிற்சி செய்க. மூட்டுகள் அசையும் வழி உடற் பயிற்சி செய்வது. இரண்டாவது இரத்த ஓட்டம் என அழைக்கப் படுவது நிணநீர் ஓட்டம் ஆகும். முதுகுத் தண்டு வடம் முழுவதும்நிணநீர் அடிப்படையில் ' குளுகோஸ் , ஆக்சிஜன் ' பெறுகின்றன. உடற் பயிற்சி இல்லாது , பின் முதுகு, இடுப்பு வலி தீராது.
(3) 'Thumps up ' அடிக்கடி செய்க.
(4) நிறைய எண்ணங்கள், நினைவுகளின் வெப்பம் இதயத் துடிப்பை ஏற்றி விடுகிறது. பின் விளைவு பித்த நீர் தேக்கம். உணர்ச்சி எண்ணங்கள் செயல் உருவத்திற்கு வராததால் ஏகப் பட்ட ஆற்றல் தேங்கி கீழ்க் கண்ட நோய்கள் வருகின்றன,
இதயத்தால் வருவன :
(1) இதய வலி
(2) ஒற்றைத் தலை வலி
(3) தொண்டை வறட்சி
(4) கழுத்து வலி (5) வாயுத் தொல்லை (6) வயிறு உப்புசம்
(7) தோள்ப் பட்டை வலி (8) எலும்பு வலி (9) பசியின்மை - வயிற்றுக்கு ஆற்றல் போகாதது .
(10) இருதயப் படபடப்பு (11) சுளுக்கு
மனத்தால் வருவன :
(1) தூக்கமின்மை (2) உள்ளங்கை வியர்வை (3) அஜீரணம் (4) ஞாபக மறதி ((5) கர்ப்பப் பை நோய்கள் (6) காய்ச்சல் (7) காது வலி (8) முழங்கை வலி (9) மலச் சிக்கல் (10) காது இரைச்சல்
ஆக மேல் மனம் மனத் தீ , இதயத் தீயாக மாறுவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது, இதய நோய்கள் வருகின்றன.
அடுத்து மண் வலு.
அன்புடன், ஆ, மதி யழகன்.
Tamil muraiyil acuouncture -2/5.2
5.2 தன் வலுப் புள்ளிகள் 12 -ல் தீ வளம் P 8, H 8, Tw 6, S I 5
தீ தன் வலு = மனம் தன் வலு + இதயம் தன் வலு. - அடர் சிவப்பு - உயிர் 'இ '
இருப்பிடம் : இதய ரேகையில் நடு விரல் மற்றும் சுண்டு விரல் அழுத்தும்போது முறையே P 8, H 8 ரேகை மேல் படியும்.
துடிப்பு : இதயம் வேகமாகத் துடிக்கும்போது வியர்வை வரும் . இது கைகளிலும் தெரியும்.
மனம் வழி : மனத்தின் எண்ணங்கள் குவிந்து மீண்டும் மீண்டும் திரும்ப வரும்போது உண்டாகும்
மன அழுத்தம் இங்கு வலிப் புள்ளிகளாக மாறும். [ குறத்தி உலோகப் பூண் தடி தட்டி மன அழுத்தம் நீக்கும் இடம். ]
பயன் பாடு : கை விரல் வலி நீக்கும். வியர்வை மறையும். 'Thums up ' செய்க. [கை முட்டி மடக்கி கட்டை விரல் உயர்த்துக ] கடைத்தெரு செல்லும்போது கம்புப் பை எடுத்து செல்க, கையில் விசிறி பிடித்து வீசுக. கைப் பணிகள் எது வேண்டுமானாலும் செய்யவும். இதய ரேகை அழுத்தப் பட வேண்டும். தீ ( இதயம் + மனம் ) வலு கிட்டும்.
Tw 6 -மூ வெப்பத் தன் வலு , S I 5 - சிறுகுடல் தன் வலு - அடர் சிவப்பு - உயிர் 'ஈ '
இருப்பிடம் : Tw 6, புறங்கை மணிக்கட்டு ரேகையின் மூட்டிலிருந்து முட்டி ஒட்டி 3 சுன் மேலே. (படம்) S I 5 , உள்ளங்கை உள்நோக்கி சாய்க்கும்போது , மணிக்கட்டு தொடக்கத்தில் உள்ள பள்ளம்.
துடிப்பு : மிகினும் குறையினும் வலிப் புள்ளியாகி அடையாளம் காட்டும்.
மனம் வழி : மனதின் ஆற்றல் சரிவரப் பாயாததால் அல்லது வேகமாக உள்ளதால் மூ வெப்ப மண்டலம் ( சுவாச, ஜீரண , கழிவு மண்டலம் பிரிக்கும் இரட்டை உறை அதாவது உதர விதானம் ) இயக்கங்கள் சீர் கெட்டு வெப்ப மாறுபாட்டால் காய்ச்சல். எ. கா. பேய் படம் பார்த்து சிறுவர்களுக்கு வரும் காய்ச்சல்,
இதயம் வழி : அதிக எடை தூக்கல், இரத்த ஓட்டம் தேங்கல் ( கழிவு நீங்க வில்லை ) இவற்றால்
சிறு குடலுக்கு ஆற்றல் வரவில்லை, S I 5 அதிக வலிப் புள்ளியாக மாறும். இதனால் மணிக் கட்டு வலி , தோள் பட்டை வலி, பெருங் குடலில் வாயு ஓட்டம்.
பயன் பாடு : மணிக் கட்டு சுழலும் பணிகள் (1) கம்பு சுற்றல். (2) கத்தி , வாள் சுழற்றும் பயிற்சி
(3) மட்டை பிடித்து ஆடும் விளையாட்டுகள் தீ வலு தருபவை.
தீ வலுப் பெற கூடுதல் வழிகள்.
காட்சி : சிவப்பு (இதயம் ), இளஞ் சிவப்பு - ரோஸ் (மனம் ) பொருள்களைப் பார்த்தல், பயன்படுத்தல், சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்க.
உணவு : சிவப்பு நிறத்தில் உள்ள காய், கனிகள் உண்பது. எ. கா. பீட்ருட், ஆப்பிள், தக்காளி, காரட்,தோலோடு நிலக் கடலை , வெல்லம் , வெல்ல சருக்கரை, கருப்பட்டி, பனங் கல்கண்டு . . .
சுவை : கசப்பு சுவையான பாகற்காய் , பச்சை சுண்டைக்காய் ( அல்லது வற்றல் ) அகதிக் கீரை,
மாதுளம் பழத்தில் உள்ள கசப்புக் குருத்து, மஞ்சள் தோல். (சிவப்பு மணிகள் கூடுதல் பயன் )
தொடரும்.
Sunday, 13 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.1 contd
குணம் :
குடி கல்லீரலைக் கெடுப்பது போல , சினம், வெறுப்பு மனம் வழி
கல்லீரலைத் தின்று விடும். கத்தும் குணத்தைக் கை விட்டு சிக்கலைப் பேசித் தீர்க்க வேண்டும். இளையவர்கள் எனில் இரக்க சிந்தனையோடு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், கல்லீரல் கெட்டுப் போவதில்லை. கல்லீரல் தன் வலு காப்பாற்றப் படும்.
செயல் :
(1) உழைப்பதற்கு ஏற்ப ஓய்வு தேவை. ஒரு மணி நேரத்திற்கு 5 நி மேனி. இது உடல் வழித் தேவை ஆகும். வேலை மாற்றமும் ஓய்வாகக் கொள்ளலாம். எ. கா. உடற் பயிற்சியில் இருந்து
புத்தகப் படிப்பு . அல்லது புத்தகப் படிப்பில் இருந்து தோட்ட வேலை.
(2) இரவு 11 - 3 மணி வரை நான்கு மணி நேரம் கல்லீரல் சிறப்பாகப் பணி புரியும் நேரத்தில்
நன்கு உறக்கம் தேவை.
(3) கண் ஓய்வு : கல்லீரல் வெளி உறுப்பு கண் அதிக நேரம் பெரியதிரை (சினிமா ) , சின்னத் திரை, கணினித் திரை, கை பேசித் திரை இவற்றில் செலவிடுவதும் கல்லீரல், பித்தப் பை பாதிக்கும் . நேர அளவீடு கண் பணிக்குத் தேவை. கண் பயிற்சிகள் கை கொடுக்கும்.
(4) கண் வெப்பம், உடல் ஓய்வின்றி வேலை செய்வதால் ஏற்படும் வெப்பம் அனைத்தும்
கல்லீரலைப் பாதித்து கீழ்க் காணும் நோய்கள் உருவாகும்.
(1) தலை வலி
(2) மூச்சுத் திணறல்
(3) ஆண்மைக் குறைவு
(4) இரத்த அழுத்தம்
(5) தொடை நரம்பு வாதம்
(6) ஞாபக மறதி
(7) கட்டிகள்
(8) கண் எரிச்சல்
(9) அசதி அல்லது உடல் சோர்வு
(10) மயக்கம்
(11) மஞ்சள் காமாலை
(12) கோமா
என நோய்கள் உருவாகின்றன. இந்நோய்கள் வராது இருக்க , முன்னதாக த் தடுக்க கண் கழுவுதல் செய்ய வேண்டும்..
(5) கண் கழுவுதல் செய்யும் முறை :
ஒரு வாளி முழுவதும் ( அல்லது சிறு அமர் பலகையின் மேல் அகல ஏனத்தில் ) தண்ணீர்
வைத்துக் கொண்டு , மூச்சை உள்ளடக்கி , முகம் முழுவதும் நீரில் மூழ்கும்படி வைத்துக் கொண்டு கண்களை நன்றாகத் திறந்து பார்க்க வேண்டும்.
அதே சமயத்தில் வாயைத் திறந்து நாக்கு நன்றாக நனையும்படி செய்யவும், பிறகு தலையை உயர்த்திக் கொள்ளவும், மீண்டும் மூச்சை உள்ளடக்கி நீரில் கண்களை நன்றாகத் திறந்து பார்க்கவும். நாக்கும் தொங்க விடுக . இதயச் சூடும் குறையும்.
இதைத் தொடர்ந்து 8 முறை காலை குளிப்பதற்கு முன்னும், மாலை முகம் கழுவும் முன்னும் இருவேளை செய்ய கல்லீரல் குளிர்ச்சி அடையும். புத்துணர்ச்சி வரும். பெரும்பாலான நோய்கள் தடுக்கப் படும்.
அடுத்து தீ வளம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.
Tamil muraiyil acupuncture - 2/5.1
5.1 தன் வலுப் புள்ளிகள் 12-ல் கல்லீரல் வளம் Liv 1, G B 41
கல்லீரல் தன் வலு - உயிர் 'அ ' - அடர் பச்சை - Liv 1
இருப்பிடம் : கால் கட்டை விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கும் , எலும்புகள் சேரும் மூட்டிற்கு இடையில் அமைந்துள்ளது.
துடிப்பு : இந்தப் புள்ளியில் கல்லீரல் தனக்கு இயல்பான பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறது. வலி இல்லை. ஏதேனும் புதிய வேலை சேரும்போது சற்று மிகையாகத் துடிக்கும், மேலும் மேலும் வேலை சேரும் போது துடிப்பு வலி தரும் புள்ளியாக மாறும். மெலிவு அடைந்தாலும் பழைய நிலை (RESTORE ) அடைய வலிப்புள்ளியாக மாறும்.
வலியின்மை நலம். இந்த சோதனை காலில் இரத்த ஓட்டம் இல்லாது சூம்பிய நிலையில் செல்லுபடி ஆகாது.
பயன்கள் : கல்லீரல் வலிகள், செரிமானத் துக்குப் பின் வரும் தலை வலி, நச்சு நீக்கல்.
மனம் : அடி மன பாதிப்பிலும் வலி வரும். நோய் முற்றிய நிலையில் கல்லீரல் டானிக் இதுதான் . வாரம் ஒருமுறை தூண்ட வேண்டும்.
பித்தப்பை தன் வலு - உயிர் 'ஆ ' - அடர் பச்சை - G B 41
இருப்பிடம் : காலின் நான்காவது, ஐந்தாவது கால் விரல் எலும்புகள் சேரும் இடத்தில் உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது .
துடிப்பு : பித்தப்பை மெலிவிலும் வேலை மிகுதியாலும் , பித்தநீர் தேக்க த் தாலும் துடிப்பு மிகும்,
மனம் : அடிமனதில் தேங்கியுள்ள சினம், வெறுப்பு மிகுதியாலும் , சிந்தனை மிகுதியாலும் , பித்தநீர் அதிகம் சுரக்கும்.
பித்தப் பை என்பது 'ஆ ' உறுப்பு . அதை வெட்டி எடுக்கக் கூடாது. எடுத்தால் கல்லீரல் வேலை இரட்டிப்பு , மற்றும் தாமதம் ஆகும்.
பயன்கள் : பாத வலி , குதி கால் வலி, இடுப்பு வலி தீரும்.
கல்லீரல் தன் வலுப்பெற கூடுதல் வழிகள் :
காட்சி : பச்சை, பசுமை, வெண் பச்சை பொருள்களைப் பார்த்தல், பயன் படுத்தல் , சுற்றிலும் காட்சி அமைப்பை அமைத்துக் கொள்ளல்.
உணவு : பச்சை நிறத்தில் உள்ள காய் கனிகள் உண்பது.
சுவை : இயற்கையில் புளிப்பான எலுமிச்சை , நார்த்தம் பழம், மாங்காய் போன்றவை .
புளியை விட கோக்கம் புளி (குடம் புளி ) நன்று.
தொடரும் .
Thursday, 10 December 2015
Tamil muraiyil acupuncture -2/5.0
5.0 தன் வலு - இணை புள்ளிகள் .
இணை புள்ளி விளக்கம் :
ஒரு படித்தான தன்மையுள்ள ஏறு புள்ளி ஒன்றையும் , அதே ஓட்டத்தில் இறங்கு புள்ளி ஒன்றையும் இணைத்தவாறு கூறல்.
எ. கா. ( Lu 8, LI 1)
அதாவது ( நுரை தன் வலு , குடல் தன் வலு )
இதுபோல் உள்ள தன் வலுப் புள்ளிகளை தமிழ் உயிர் எழுத்துக்களால் குறிக்கலாம். ஏனெனில் அந்த உயிர் ஓசைகள் , அந்தந்த உறுப்பை அதிர்வுகளால் அசைத்துப் பார்க்கின்றன.
(1) Liv 1 - கல் தன் வலு - உயிர் 'அ '
(2) GB 41 - பித்தப்பை தன் வலு - உயிர் 'ஆ '
(3) P 8 - மனம் தன் வலு - தீ தன் வலு - 'இ '
H 8 - இதயம் தன் வலு - தீ தன் வலு - 'இ '
(4) Tw 6 -மூ வெப்ப த் தன் வலு - 'ஈ '
S I 5 -சிறு குடல் தன் வலு - 'ஈ '
(5) Sp 3 - மண் தன் வலு - 'உ '
(6) St 36 - இரைப்பை தன் வலு - 'ஊ '
(7) Lu 8 - நுரை தன் வலு - 'எ '
(8) LI 1 - குடல் தன் வலு - 'ஏ '
(9) K 10 - நீர் தன் வலு -'ஒ '
(10) UB 66 - நீர்ப் பை தன் வலு - 'ஓ '
[ ஓ வடிவத்தில் மேல் இரட்டை சுழி சிறுநீரகத்தையும் , கீழ் சுழி நீர்ப்பை அமைப்பையும்
குறிக்கும். தமிழ்க் குறியீட்டில் சித்தர்களின் செயல். ]
இப்போது இணைப் புள்ளிகள் ( அ , ஆ ) , ( இ , ஈ ) , ( உ , ஊ ) , (எ , ஏ ) , (ஒ , ஓ ) ஆகும்.
குறில் எல்லாம் ஏறு புள்ளிகள். ( யின் ) . நெடில் எல்லாம் இறங்கு புள்ளிகள் ( யாங் ) .
மேலே உள்ள இணையாக உள்ள புள்ளிகள் முதன்மை வலு அல்லது தன் வலுப் புள்ளிகள் .
இணைப் புள்ளிகளின் வகைகள் :
பஞ்ச பூதப் புள்ளிகள் 60 - ஐ ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கலாம்.
தன் வலுப் புள்ளிகள் = 12
தூண்டும் வலுப் புள்ளிகள் = 12
கேட்கும் வலுப் புள்ளிகள் = 12
க ட்டும் வலுப் புள்ளிகள் = 12
கவரும் வலுப் புள்ளிகள் = 12
கூடுதல் = 60
தன் வலுப் புள்ளிகளில் அக்கு பிரசர் , அக்கு பங் சர் , அல்லது தொடு சிகிச்சை செய்வதன் மூலம் அறிகுறி நோய்களைத் தீர்க்கலாம்.
மற்ற எந்த நோய்த் தீர்வுக்கும் தன் வலுப் புள்ளிகள் அடிப்படையான 'டானிக் ' . ஊட்டச் சத்து பயன் உடையவை.
சுற்றுப் படம் காண்க.
அடுத்து புள்ளிகள் விரிவாக.
அன்புடன், ஆ. மதி யழகன் .
Wednesday, 9 December 2015
Tamil muraiyil acupuncture -2/4.3 &4.4
(4) கவரும் சுற்று - கவரும் வண்ணங்கள் - விரைவு பின்வீச்சு - உழைப்பு தற்காப்பு
இது ஒரு அபூர்வ நிகழ்வு அல்லது இயல்புக்கு மாறான நிகழ்ச்சி அறிவிப்பு மற்றும் நடப்பு.
மூடிய திரை அரங்கில் திரைப்படம் ஓடும்போது தீப் பிடித்தால் , கூட்டம் தப்பி ஓட அவசர வழி இருக்கும் அல்லவா ? அது போல இங்கு.
எ. கா. சிறு நீரகத் திற்கு தாய் உதவி இல்லை. (No Lu 5)
கேட்டும் உதவி இல்லை ( No K 7)
தாயின் தாயும் வந்து உதவி செய்யவில்லை (No S p 9 )
ஆனால் சிறு நீரகத் தின் வேலையோ அதிகம். நெருக்கடி நிலைமை. எனவே தானே
(in advance ) ஒன்றுக்கு முன் தாண்டி தாயின் தாயிடம் ஆற்றல் பெறல் K 3 = நீர் மண் -->
நீர் கவரும் மண் - குதி கால் வலி ( நோயா ? நிலைமையா ! )
ஆக எதிர்க் கட்டுப்பாடு சுற்றுதான் கவரும் சுற்று. இதனால் தான் பாடம் நடத்தும் போது K 7
வேலை செய்யாத போது K 3 தூண்டுக என்பர். கட்டுப் பாட்டு சுற்றில் Sp 9 - மண் கட்டும் நீர் -
மூட்டு வலி - மண் பூதம் சுமையில் முடிவு எடுக்கிறது. K 3 - ல் சிறு நீரகம் மெலிவில் . ஒவ்வொரு சுற்றையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் முப் பரிமாணப் பெயர்கள் அட்டவணை தருகிறேன்.
ஆக எதிர்க் கட்டுப்பாடு சுற்றுதான் கவரும் சுற்று. இதனால் தான் பாடம் நடத்தும் போது K 7
வேலை செய்யாத போது K 3 தூண்டுக என்பர். கட்டுப் பாட்டு சுற்றில் Sp 9 - மண் கட்டும் நீர் -
மூட்டு வலி - மண் பூதம் சுமையில் முடிவு எடுக்கிறது. K 3 - ல் சிறு நீரகம் மெலிவில் . ஒவ்வொரு சுற்றையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் முப் பரிமாணப் பெயர்கள் அட்டவணை தருகிறேன்.
4.4 நுரை புள்ளிகள் அட்டவணை.
குறியீடு -----இரு பரிமாணம் ------- முப் பரிமாணம் -3 D பெயர்
Lu 11 நுரை கல் நுரை கட்டும் கல்
Lu 10 நுரைத் தீ நுரை கவரும் தீ
Lu 9 நுரை மண் நுரை கேட்கும் மண்
Lu 8 நுரை வலு நுரை தன் வலு
Lu 5 நுரை நீர் நுரை வழங்கும் நீர்
துணை உறுப்பு குடல் புள்ளிகள் .
LI 3 குடல் கல் குடல் கட்டும் கல்
LI 5 குடல் தீ குடல் கவரும் தீ
LI 11 குடல் மண் குடல் கேட்கும் மண்
LI 1 குடல் வலு குடல் தன் வலு
LI 2 குடல் நீர் குடல் வழங்கும் நீர்
குறிப்பு : இறங்கு ஓட்டத்தில் (YANG ) மூன்றாவது புள்ளியே 'கல் ' புள்ளியாகும். 'கல்' தீ, மண் என மண்ணில் முடியும். எப்போதும் இறங்கு ஓட்டம் அழுக்குகளைக் களைவதற்காக
நுரை என்பதில் முதலில் தொடங்கி, நீர் என்பதில் இரண்டாவதாக முடியும்.
இது போல் பிற பட்டியல்கள் எழுதிப் பார்க்கவும்.
தேவைப் படும்போது அங்கங்கே பிற பெயர்கள் கூறப்படும்.
இனி, இணைப் புள்ளிகளைப் பார்ப்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.
துணை உறுப்பு குடல் புள்ளிகள் .
LI 3 குடல் கல் குடல் கட்டும் கல்
LI 5 குடல் தீ குடல் கவரும் தீ
LI 11 குடல் மண் குடல் கேட்கும் மண்
LI 1 குடல் வலு குடல் தன் வலு
LI 2 குடல் நீர் குடல் வழங்கும் நீர்
குறிப்பு : இறங்கு ஓட்டத்தில் (YANG ) மூன்றாவது புள்ளியே 'கல் ' புள்ளியாகும். 'கல்' தீ, மண் என மண்ணில் முடியும். எப்போதும் இறங்கு ஓட்டம் அழுக்குகளைக் களைவதற்காக
நுரை என்பதில் முதலில் தொடங்கி, நீர் என்பதில் இரண்டாவதாக முடியும்.
இது போல் பிற பட்டியல்கள் எழுதிப் பார்க்கவும்.
தேவைப் படும்போது அங்கங்கே பிற பெயர்கள் கூறப்படும்.
இனி, இணைப் புள்ளிகளைப் பார்ப்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.
Tamil muraiyil acupuncture -2/4.3
4.3 நான்கு சுற்றுக்கள்
ஐந்து தனிமங்கள் (பூதங்கள் ) தன் வலுப் பெறும் வகை நீக்கி விட , உயிர் ஆற்றல் சுற்றும் நிலைகளை நான்காகப் பிரிக்கலாம். அவை (1) வழங்கல் சுற்று (2) கேட்கும் சுற்று (3) கட்டும் சுற்று (4) கவரும் சுற்று . தன் வலுப் புள்ளிகளை அடர் வண்ணப் புள்ளிகள் அல்லது உயிர்ப் புள்ளிகள் எனலாம். பிற நான்கு முறையே வண்ணப் புள்ளிகள், கேட்பு வண்ணப் புள்ளிகள், கட்டும் வண்ணப் புள்ளிகள், கவரும் வண்ணப் புள்ளிகள். (படங்கள் )
(1) வழங்கல் சுற்று - வண்ணங்கள் - தூண்டும் வலு - உடல் அசைவில் தீர்வு
கல்லீரல் (1) , தீ (2) , மண் (3) , நுரை (4) , நீர் (5) என இயல்பாக ஓடும் முறை ஆக்க சுற்று. இந்த சுற்றில் கல்லீரல் தாய் தீக்கு, தீ தாய் ஆகும் மண்ணுக்கு , . . .
எனவே இந்த சுற்றில் தாய் இயங்கி தனயனுக்கு வழங்குவதால் இது வழங்கும் சுற்று.
எ. கா. நுரை, நீருக்கு ஆற்றல் வழங்கும் இடம் Lu 5 = நுரை நீர் --> நுரை வழங்கும் நீர்.
முழங்கை மடிப்பில் உள்ள இந்த புள்ளி , அசைவதன் மூலம் சீறுநீரக வலு கிடைக்கும்.
(பயன் வழிப் பெயர் திராட்சைப் புள்ளி. )
(2) கேட்கும் சுற்று - கேட்பு வண்ணங்கள் - கேட்கும் வலு - விளையாட்டு
ஓட்டம் 1, 2, 3, 4, 5 எனில் ஆக்க சுற்று. (படத்தில் அம்பு ) எதிர்த் திசையில் இயங்கினால் கோடரி போல் செயல் நடந்து பிடி பாக பூதம் பயன் அடைகிறது. வழங்குவது தேங்கினால்
கேட்டு வாங்குவது, கடன் வசூலிப்பு போல.
எ. கா. மேல் எடுத்துக் காட்டில் வழங்கல் முறையில் சிறுநீரகத்திற்கு ஆற்றல் வராத போது (Lu 5 இயங்கவில்லை) , சிறு நீரகம் , சிறு நீரகக் கற்களைக் கரைக்க ஆற்றல் நுரையிடம் கேட்பது K 7 புள்ளி = நீர் நுரை புள்ளி . இது கேட்கும் சுற்றில் உள்ள புள்ளி. இதை நீர் கேட்கும் நுரை எனலாம். இடம் : காலில் முன் கணுக்கால் எலும்பு, குதி கால் நரம்பு கோட்டின் மையத்தில் இருந்து 2 சுன் மேலே. ( பயன் வழிப் பெயர் கல் நீக்கி )
(3) கட்டும் சுற்று - கட்டும் வண்ணங்கள் - விரைவு முன் வீச்சு - பரபரப்பு தற்காப்பு
ஒன்று தாண்டி முன் ஓடல் கட்டும் சுற்று.
எ. கா. கல்லீரல் - தீக்கு ஆற்றல் தந்து , தீ - மண்ணுக்கு ஆற்றல் (செரிமான உதவி ) தராது போனால், கல், மண்ணுக்கு ஒன்று தாண்டி உதவ வந்து கட்டுப் பாடு செய்தல் Liv 3 =
கல் மண் --> கல் கட்டும் மண் . இது இரத்த அழுத்த நோய்.
எ. கா. 2 மண்ணீரல் - நுரைக்கு ஆற்றல் தந்து - நுரை நீருக்கு ஆற்றல் தந்தால்சிறுநீரகம் வளம் பெறும் . இது ஆக்க சுற்று .
நுரை துக்கத்தால் தேங்குகிறது. மண் கவலை அப்பிய நிலை அல்லது சுமை மிகுதியால் ஒன்று விட்டுத் தாண்டி சிறுநீரகத்திற்கு ஆற்றல் தருவது S P 9 - மண் நீர் --> மண் கட்டும் நீர். சிறு நீராக வேலை தடைப் பட்டு வலிகள் உருவாகும். இது கால் மூட்டு வலி நோய்.
அடுத்து 4 -வது சுற்று .
அன்புடன், ஆ. மதி யழகன்.
Tuesday, 8 December 2015
Tamil muraiyil acupuncture -2/4.1
4. நான்கு சுற்றுக்கள் - முப் பரிமாணப் பெயர்கள்.
4.1 காரணப் பெயராக்கல் :
சென்ற புத்தகத்தில் ஐம்பூதங்களின் ஐந்து மின் காந்த ஓட்டங்களையும் , தீ பூதத்தில் கூடுதலான பெரி கார்டியம் அல்லது மனம் என ஒரு ஓட்டத்தோடு சேர்த்து ஆறு ஓட்டங்களைப் பார்த்தோம். ஒவ்வொன்றிலும் பஞ்ச பூதப் புள்ளிகள் ஐந்து. மொத்தம் ஏறும் 6 ஓட்டங்களிலும் , இறங்கும் 6 ஓட்டங்களிலும் சேர்த்து 12 × 5 =60 அறுபது எனப் பார்த்தோம்.
ஒவ்வொரு பஞ்ச பூதப் புள்ளியிலும் என்ன நடக்கிறது? அதைப் பெயரில் கொண்டு வர முடியுமா ? கொண்டு வந்தால் என்ன பயன்? அதன் மூலம் நோய்த் தன்மை அறிதல் இயலுமா ?
நோய் தீர்க்கும் வழி அறிய இயலுமா ? புள்ளிகள் பெயரிலேயே ப் பேசுமா ? மறைந்த பல உண்மைகள் அதன் மூலம் நமக்குக் கிடைக்குமா ? என்பதற்கான ஒரு முயற்சியாக , நான்கு சுற்றுக்களை முழுக்க ஆராய எடுத்துக் கொண்டேன். சுற்று அடிப்படையில் பெயரிலும் கொண்டு வந்தேன்.
4.2 பெயரிடல் - முப் பரிமாணப் பெயர்
எடுத்துக் காட்டு விளக்கம் : Lu 11 - நுரை கல் (பழைய பெயர் )
இருப்பிடம் : கைக் கட்டை விரலில் வெளி நகத்து 0 . 1 சுன் அளவில் மேலாக உள்ள புள்ளி நுரை கல் Lu 11 . இது நுரை ஓட்டத்தில் கல்லீரலை ச் சந்திக்கிறது. [ பயன் வழிப் பெயர் - தலை வலி நீக்கி ] (படம் )
முறையான நுரையீரலின் ஓட்டம் 4, 5, 1 எனச் செல்ல வேண்டும். அதாவது சிறுநீரகம் (5) தொட்டு பின் கல்லீரல் (1) தொடுவதே. ஆனால் ஒன்று தாண்டி ஓடி சாதிப்பது என்ன ?
கல்லீரல் ஒரு குழப்ப நிலை, ஒரு சிறு மயக்கம், மற்றும் சோர்வில் இருத்தலால் உதவ வந்து ஆனால் கட்டுப்பாடு செய்து விடுகிறது. குறைவை நீக்கும் ; கூட இருந்தாலும் குறைக்கும்.
குறை, கூடுதல் அளவாக்கும்.
தீர்க்கும் நோய் : தலை வலி நீங்கும். மயக்கம் தீரும். சோர்வு அகலும்.
சினம் தவிர்க்கவும் இயலும் என்பதால் துறவிகள் ஜப மாலை உருட்டுகிறார்கள்.
இந்த புள்ளி Lu 11 - ஐ ஏன் மூன்று பரிமாணச் சொல்லால் குறிக்கக் கூடாது ? அதாவது நுரை கட்டும் கல் . இவ்வாறு பெயர்களைக் குறிக்க, பயன்கள் வருமாறு :
(1) எந்த ஓட்டத்தில் எந்த மூலகம் வருகிறது.
(2) அந்நிகழ்வு எந்த ஒரு சுற்று அடிப்படையில் பயன் தருகிறது.
(3) அது எந்த மூலகத்தின் நோய்த் தன்மையை எந்தவிதத்தில் தீர்க்கிறது.
(4) மறைந்துள்ள நோயையும் தெரிந்து கொள்ளலாம்.
(5) தீர்க்கும் நிகழ்வையும் புரிந்து கொள்ளலாம்.
பெயர்ப் புரிதல் இங்கு :
(1) நுரை ஓட்டத்தில் 'கல்' வருகிறது.
(2) அது 'கல் ' லுக்கு கட்டுப்பாடு அடிப்படையில் பயன் தருகிறது.
(3) 'கல் ' தன சக்தியில் குறைவு பட்டதால் ( தூக்கமின்மை , அசதி, அதிக சிந்தனை , அடி மனக் குழப்பங்கள் ) வந்த தலை வலி தீர்க்கிறது.
(4) மறைந்திருக்கும் கோளாறு ஓய்வு, உறக்கமின்மை அறிகுறி.
(5) கல்லீரல் கூடுதல், குறைவை, நுரையீரல் (ஆக்ஸிஜன் தந்து ) சரி செய்கிறது. தாயின் தாய் தீர்வு செய்கிறது.
ஆக நுரை கட்டும் கல் எனக் குறிப்பதன் மூலம், மூன்று நிலைகள் (Three Dimention ) புரியும்.
முதல் சொல் -------- ஓட்டப் பாதை
இரண்டாம் சொல் ------ சுற்று நிலை
மூன்றாம் சொல் -------- பயன் பெறும் அல்லது தரும் அடுத்த ஓட்டப் பாதை.
இனி நான்கு சுற்றுக்கள் .
அன்புடன், ஆ, மதி யழகன்.
Monday, 7 December 2015
Tamil muraiyil acupuncture -2/3.2
3.2 நோய் தீர்வு முறைகள்.
உயிர் -> மனம் -> ஐந்து பூதங்கள் -> உடல் (+மனம் ) வழி 1, 2, 3, 4, 5.
(1) உயிர் ஓட்டத்தை உடலின் ஏழு சக்கரங்களில் ஆரா மூலம் அறிந்து , உச்சந்தலை மற்றும் உள்ளங்கை மையத்தில் (P 8 ) பெற்று தன் குணம், மற்றும் அடுத்தவரையும் குணப்படுத்து கின்றனர். வான் வழிப் பெறும் ஆற்றல் காஸ்மிக் கதிர்கள் என்பர். ஜப்பானில் இம்முறை ரெய்கி என அழைக்கப் படுகிறது. லெமூரியாக் கண்டத்தில் உயிர் வழி (ஆரா ) முறை
வழக்கில் இருந்தது , தற்போது சிலரால் மீட்டு எடுக்கப் படுகிறது.
(2) மனதை ஆராய்ந்து தீர்வு காண்பது. நோயாளி பேச மாட்டார். ஆழ்மன வசியம் செய்ய வேண்டும். ஆழ் மனம் வேற்றாள் திறப்பது சரியல்ல.
(3) ஆக அக்கு பங் சர் வழி ஐம்பூதத் தீர்வு காண்பதே சிறப்பானதாகும். இதிலேயே பல முறைகள் உண்டு. அவை தொடு சிகிச்சை , அக்கு பிரசர், அக்கு பங் சர் ...என.
உயிர் தாண்டி, மனம் மாய்ந்திட , வரும் சிறுநோய்கள் , உங்கள் பாதுகாப்புக் கோடு உடைந்து போய் விட்டது என்பதைக் காட்டுகின்றன. நோய் வருடக் கணக்கில் நீடிக்கும் போது , வெளிப் பாடானது உணவு ஏற்கும் தன்மை, இயக்கத்திற்கான தன்மை இவற்றை பாதித்து பெரு நோய்
ஆகிறது. எ . கா . மூட்டு வலி , வாதம், இரத்த அழுத்தம், ...
அக்கு பங் சர் தீர்வு :
நோய் என்பது பெரும்பாலும் உள - உடல் கோளாறுகள் தான். மருத்துவம் என்பதும் அதே வழியில் இருக்க வேண்டும் என்றால் , அது அக்கு பங் சரே . ஐம்பூதங்கள் அனைத்துமே உள ரீதியிலும் வேலை செய்கிறது ; உடல் ரீதியிலும் வேலை செய்கிறது. மற்றும், உள நலம் என சிறப்புப் புள்ளிகளையும் கொண்டு உள்ளது.
உடலில் தோன்றும் ஓட்டத் தடைகளை நீக்கினால் முதலில் குணம் வரும். பிறகு அல்லது சேர்ந்தார்ப் போல் மன ஓட்டத் தடைகளை நீக்க வேண்டும். அவற்றின் அடையாளங்கள் ஐந்து பாதையிலும் உண்டு. நோயாளி யோடு பேச வேண்டும். தொழில், சூழல், மன ஓட்டம் அறிய வேண்டும். யோகா முறைகள், உடற் பயிற்சி எடுத்துக் கூற வேண்டும் . மனம் வலுவாகும்.
உயிர் வலுவாக இன்னும் ஆழமாய்ப் போக வேண்டும். அது இப்புத்தகத்தின் எல்லை அல்ல. மனப் புள்ளிகள் வரை செல்வோம். அதற்கு முன் ஐம்பூதப் புள்ளிகள் 60- ஐ ஐம் பெரும் பிரிவாக சுற்று வழி பிரித்து நோய் விளக்கம் அறிவோம்.
அடுத்து நான்கு சுற்றுக்கள் -முப் பரிமாணப் பெயர்கள்.
அன்புடன், ஆ. மதி யழகன்.. ..
Subscribe to:
Posts (Atom)